சம்பந்தமில்லை என்றாலும் 12 : தீண்டப்படாதவர் வரலாறு-டாக்டர் அம்பேத்கர்

This entry is part of 41 in the series 20080508_Issue

எஸ்ஸார்சி


சம்பந்தமில்லை என்றாலும் தீண்டப்படாதவர் வரலாறு-டாக்டர் அம்பேத்கர்
தமிழில் எ. பொன்னுசாமி
வெளியீடு: அ ஆ பதிப்பகம், தி. நகர் சென்னை 17. முதல்பதிப்பு டிசம்பர்-1992. விலை ரூ.25

———————————————————————————————————————-
மதச்சார்பின்மைக்கு உழைப்பதாக வேஷம் போடும் அரசியல் தலைவர்கள் இரகசியமாக ஜாதி முறையை ஆதரிக்கும் வரை கடவுளே வந்தாலும் ஜாதியை ஒழிக்கமுடியாது. தமிழாக்கியவன் -கருத்து.
———————————————————————————————————————-
பிராமணர்களில் ஏன் ஒரு வால்டேரை உருவாக்க முடியவில்லை. . பிராமணர்கள் படித்தவர்கள் தானே தவிர அறிவாளிகள் அல்ல என்பதைப் புரிந்துகொண்டால் இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இருக்காது. படிப்பிற்கும் அறிவிற்கும் உலகளவு வித்தியாசமுண்டு.
பக்கம் 2
——————————————————————————————————————-
நேர்மையும் நாணயமும் கொண்ட அறிவார்ந்த உத்தமகுணத்தை வளர்த்துக்கொள்ள பிராமணன் தவறிவிட்டான்.
பக்கம் 3
———————————————————————————————————————-
தமிழ் அல்லது திராவிடா என்பது தென்னிந்தியாவில் மட்டும் பேசும் ஒரு பாஷை. ஆரியர்கள் வருமுன் இது இந்தியா முழுவதும்
பேசப்பட்ட மொழி. காஷ்மீரத்திலிருந்து குமரி முனை வரை பேசப்பட்ட மொழி இது. உண்மையில் இந்தியா முழுவதும் நாகர்களால்
பேசப்பட்ட மொழியாகும் என்பதே.
பக்கம் 64
———————————————————————————————————————-வட இந்தியாவில் வாழ்ந்த நாகர்கள் தங்கள் தாய்மொழியான தமிழை விட்டு அதற்கு பதில் சமசுகிருதத்தைப்பேசினர். தென்னிந்திய
நாகர்கள் தங்கள் தய்மொழியை வைத்துக்கொண்டு ஆர்ய பாஷையான சமசுகிருதத்தை நிராகரித்துவிட்டார்கள்.
பக்கம் 65
———————————————————————————————————————
நாகர் என்பது தென்னிந்திய மக்களின் இனம் அல்லது கலாசாரப்பெயர்.
திராவிடர் என்பது இவர்களின் மொழிவழிப்பெயர்.
பக்கம் 65
———————————————————————————————————————-
தஞ்சை ஜில்லாவின் பறையன், பள்ளன், சக்கிலியன் ஆகிய ஜாதிகளை சேர்ந்தவர்கள் பிராமணன் தங்கள் உறைவிடம் வந்துபோனால்
நல்லதில்லை என்று நம்பி மிகக்கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
-ஹெமில்வே தஞ்சை கெசட்டில்.
———————————————————————————————————————-
புத்த மதத்தினருக்கு எதிராக பிராமணர்கள் உண்டாக்கிய அவமதிப்பும் வெறுப்புமே தீண்டாமையின் தோற்றத்திற்கான ஆணிவேர்
என்று கூறமுடியும்.
பக்கம் 86
———————————————————————————————————————-
தீண்டாமைக்கும் இறந்த பசுவை உபயோகப்படுத்தியதற்குமான தொடர்பு அத்தனை பெரியதாக அத்தனை நெருங்கியதாக இருப்பதால் தீண்டாமைக்கு இதுவே மூலகாரணம் என்பது மாற்றமுடியாததாகத்தெரிகிறது.
பக்கம் 90
———————————————————————————————————————-
ரிக் வேத ஆரியர்கள் உணவிற்காக பசுவைக்கொன்று உன்டார்கள் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன.
அக்னிக்காக குதிரைகள் காளைகள் எருதுகள் மலட்டுப்பசுக்கள் செம்மறியாடுகள் பலியிடப்பட்டன என்று ரிக்வேதம் கூறுகிறது
(எக்சு 91.14) ரிக்வேதத்தின்படி பசுக்கள் வாளாலும் கோடரியாலும் கொல்லப்பட்டன.( 72.6)
பக்கம் 94
———————————————————————————————————-

விஷ்ணுவிற்கு குள்ளமான எருதும், வளமான கொம்புள்ள காளையை விரித்ராவை அழித்த இந்திரனுக்கும், கறுப்பு பசுவை புஷனுக்கும்,செம்பசுவை ருத்ரனுக்கும் பலியிடவேண்டும். (தைத்திரிய பிராமணா)
பக்கம் 95.
———————————————————————————————————————-
மதம் என்ற பெயரால் பிராமணர்கள் கொன்ற பசுக்களின் மொத்த எண்ணிக்கையைச் சொல்லி மாளாது.
பக்கம் 101
———————————————————————————————————————-
பிராமணன் மாட்டிறைச்சி உண்பதை நிறுத்தியது தங்களுக்கு மேல் அந்தசுத்தைப் பெற்றிருந்த புத்தபிட்சுக்களிடமிருந்த அந்த உயர் தானத்தைப்பறிக்கவே.
இழந்த இடத்தைப்பிடிக்க பிராமணர் என்ன செய்ய வேண்டும்? .,, ஒரு படி அதிகம் போய் மாமிசம் உண்பதை விடுவதோடு, மரக்கறி
உண்பவர்களாகவும் மாறத்தான் முடியும் அதைத்தான் செய்தார்கள்
பக்க 128
———————————————————————————————————————-
அசோகர் பசுவதையை ஒரு குற்றமாகக் கருதவில்லை. பக்க 131
———————————————————————————————————————-
பசு புனிதமானதாகி ஊருக்கு வெளியில் இருந்தவர்கள் தொடர்ந்து மாட்டிறைச்சி உண்பதால் தொடக்கூடாதவர்கள் ஆகி ப்பின்
தீண்டப்படாதவர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். பக்கம் 138
———————————————————————————————————————-
வேத காலங்களில் தீண்டாமை இல்லை. அசுத்தமானவர்கள் தானிருந்தார்கள். மனு காலத்தில் தீண்டாமை இல்லை. அசுத்தமானது என்பது மட்டுமே இருந்தது. மனுவால் வெறுக்க மட்டுமே செய்யப்பட்ட சண்டாளர்கள் கூட அசுத்தமானவர்களே தவிர தீண்டப்படாதவர்களல்ல. பக்க 159
———————————————————————————————————————-
கி. பி. 200 ல் தீண்டாமை இல்லை. கி. பி. 600 ல் பிறந்தது என்று முடிவு செய்ய முடியும். மனு மாட்டிறைச்சி உண்பதை தடுக்கவில்லை.
குப்த மன்னர்க:ளால் தான் பசுவதை ஒரு குற்றமாக்கருதப்பட்டது.,,,,, தீன்டாமை இங்கு புத்தமதத்தினரும் பிராமணர்களும் தங்களுக்குள் உயர்ந்தது யார் என்ற போட்டி போட்டதால் ஏற்பட்டது.
பக்கம் 168


essarci@yahoo.com

Series Navigation