அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 4 The Evolution of Cooperation கூட்டுறவின் பரிணாமம்.

This entry is part of 36 in the series 20101101_Issue

ஜான் ஹார்ட்டுங்


The Evolution of Cooperation கூட்டுறவின் பரிணாமம்.

வானத்தில் ஒருவரோடு ஒருவர் மோதாமல், மேகம்போல குவியலாக பறந்துகொண்டு, சடக்கென்று ஒன்றே போல திரும்பக்கூடிய பறவைக்கூட்டத்தை பார்த்திருக்கிறீர்களா? 1960க்கு முன்னாலேயே நமக்கு இந்த பறவைக்கூட்டம் என்ன செய்கிறது என்று தெரியும். அவை தாங்கள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்க தகுந்த உணவு ரீதியில் வளமையான இடத்தை தேடுகின்றன. அந்த வழியில், பெண் பறவைகள் எவ்வளவு முட்டைகள் இடலாம் என்று கணக்கிட்டுக்கொள்ளும். அந்த பறவையின் நோக்கம் ஒரு இடத்தின் வளமையை சீரழித்துவிடாமல் இருக்க தகுந்த எண்ணிக்கையுள்ள முட்டைகளை இடும். ஒழுக்க ரீதியின் மிகச்சிறப்பான முடிவை எடுக்க தேவையான அமைப்பை எப்படி இயற்கை தேர்வு உருவாக்குகிறது? எளிய கருத்துதான். அதன் பெயர் குழு தேர்வு(group selection). ஒரு இடத்தை மிக அதிகமாக சுரண்டும் பறவைகள், அந்த இடம் மறு உற்பத்தி செய்யமுடியாத அளவுக்கு நாசமாக ஆகும்போது தானே கூட்டம் கூட்டமாக அழிந்துவிடுகின்றன. ஆகையால் சுற்றுச்சூழல் பற்றிய உணர்வுள்ள குழுக்களே மிஞ்சியிருக்கின்றன. இதற்கு மாறாக வீட்டில் வளர்க்கப்படும் ஆடுகள் எதிர்தரப்பு உதாரணம். இந்த ஆடுகளை சரியாக வளர்க்கவில்லை என்றால், சுற்றி இருக்கக்கூடிய எல்லா தாவரங்களையும் தின்று அழித்துவிடும். ஆகையால்தான் ஆட்டிடையோர்களுக்கு வேலை இருக்கிறது. ஏனெனில், ஆடுகளின் முடிவுக்கு விட்டுவிட்டால், மறு உற்பத்தி செய்யமுடியாத அளவுக்கு நிலத்தையும் தாவரங்களையும் ஆடுகள் அழித்துவிடும்.

உயிரினங்கள் இவ்வாறு குழு தேர்வின் மூலம் பரிணாமம் அடைகின்றன என்ற கருத்தை கொண்ட குழு தேர்வு கொள்கைக்கு சமாதி கட்டும் வேலையை 1966இல் ஜார்ஜ் வில்லியம்ஸ் எழுதிய புத்தகம் துவக்கி வைத்தது. இந்த குழு தேர்வில் மூன்று முக்கிய பிரச்னைகளை கண்டார்.

முதலாவது
சுற்றுச்சூழல் பற்றிய அறிவுள்ள ஒரு குழுவின் உள்ளே ஒரு ம்யூட்டேஷன் உருவாகி அந்த பறவை ஏராளமான முட்டைகளையும் குஞ்சுகளையும் பெற ஆரம்பித்தால் என்ன ஆகும்? விடை, அந்த ம்யூட்டேஷன் பெருகும்.

இரண்டாவது
சுற்றுச்சூழல் அறிவுள்ள குழுவுக்கும் சுற்றுச்சூழல் அறிவற்ற குழுவுக்கும் இடையே பறவைகள் இடப்பெயற்சி செய்தால் என்ன ஆகும்? விடை: சுற்றுச்சூழல் அறிவுள்ள பறவைகள் குழு குறையும்.

மூன்றாவது.
ம்யூட்டேஷனும், இடமாற்று பிரச்னையும் தீர்த்துவிட்டாலும், மிகச்சிறிய அளவு இருக்கும் ஒரு ஜீன் குழு தேர்வின் மூலம் அதிகமாக ஆவதற்கு எத்தனை ஆண்டுகள் பிடிக்கும்? இவற்றுக்கான பரிணாமவியல் மாதிரிகள் மூலம் கணக்கிட்டால், ஒரு பறவை பிறந்து இறக்கும் அதே காலத்துக்குள் இந்த குழுத்தேர்வு நடந்துவிட வேண்டும். முழு குழுவுக்கும் இந்த ஜீன் மாறுதல் நடக்க நடைமுறைக்கு ஒவ்வாத கால இடைவெளி பிடிக்கும்.

இருப்பினும் மக்களுக்கு இந்த குழுத்தேர்வு பிடித்திருக்கிறது. இது வேலை செய்தால், இயற்கையிலேயே ஒத்திசைவு கொண்ட அமைப்பை உருவாக்கலாம். மனிதர்களும் தங்களது இயற்கையான நிலையில், இயற்கையிலேயே கூட்டுறவாக வேலை செய்வார்கள். தங்களுடைய சுயநலத்தை குழுவின் நலத்துக்காக விட்டுக்கொடுப்பார்கள். இதனால், வில்லியம்ஸ் இந்த குழு தேர்வு கொள்கை தவறானது என்று கண்டுபிடித்த நாளிலிருந்து, இந்த குழு தேர்வை எப்படியாவது காப்பாற்றிவிடவேண்டும் என்று குழு தேர்வு மாதிரிகளை அங்கங்கு ஒட்டி வைத்து சரி செய்யமுடியுமா என்று பலர் முயற்சிக்கிறார்கள்.(e.g., Wilson and Sober 1994). ஆனால், குழு தேர்வு நடக்கமுடியாதது என்று லாஜிக்கலாகவும், பரிசோதனை முடிவுகளிலும் தனி தேர்வுதான் நடக்கிறது individual selection என்று காட்டியும் பல ஆய்வாளர்கள் நிரூபித்துவிட்டனர்.(cf Alroy & Levine, 1994; Cronk, 1994; Dawkins,

பறவை ஆய்வாளர்களிடமிருந்தே பரிசோதனை முடிவுகள் இதற்கு வலு சேர்க்கின்றன. பறவைகள் எவை தனது முட்டைகள் எவை மற்றவற்றின் முட்டைகள் என்று அறிய இயலாதவை. (குயில் போன்ற பறவைகள் மற்ற பறவைகளின் கூட்டில்முட்டையிட்டு ஒட்டுண்ணிகள் போல வாழ்கின்றன) இதன் பொருள் என்னவென்றால், ஒரு கூட்டில் ஐந்து முட்டையும் வைக்கலாம். பெரும்பாலும் பறவை ஐந்தையும் அடைகாத்து அவற்றுக்கு உணவு கொடுக்கும். பொதுவாக மூன்று முட்டைகள் குஞ்சுகளைத்தான் பார்க்கும். நாலாவது முட்டை இருந்தால் நான்கையும் கவனித்துகொள்ளும். மேலே கூட்டாக பறப்பது தவிர்த்து, பொதுவாக பறவைகள் தனது முட்டைகளைத்தான் அதிகமாக பெற்று அவற்றை வளர்க்க முனையும். (for a review see Trivers, 1985).

ஆகவே, குழு தேர்வு இல்லை என்றால், ஏன் தனி உயிர்கள் கூட்டுறவாக வாழ்கின்றன? இதற்கு இரண்டு விடைகள் உண்டு. இந்த இரண்டு விடைகளும், நவீன பரிணாமவியலின் அடிப்படைகளாக ஆகியுள்ளன. அவை, சேர்த்துகொள்ளும் inclusive fitness (Hamilton, 1964) and பதில் பொதுநலம் reciprocal altruism (Trivers, 1971).

பதில் பொதுநலம் என்பது, “நீ என் முதுகை சொறிந்துவிட்டால், நான் உன் முதுகை சொறிந்துவிடுவேன்” என்பது. மனிதர்களில் இது இரண்டு பேர்கள் ஒரு சுமையை தூக்கிச் செல்வதிலிருந்து, குழுவாக சேர்ந்து யானையை வேட்டையாடுவது, ஒரு குழுவைச் சேர்ந்தவர்கள் மற்றொரு குழுவைச் சேர்ந்த மனிதர்களை கொல்ல செல்வதுவரை விளக்குகிறது. இதில் முக்கியமான பகுதி, கிடைக்கும் பயன். ஒத்துழையாமல் இருப்பதன் மூலம் ஒருவர் பெறும் பயனை விட ஒத்துழைப்பதன் மூலம் பெறும் பயன் அதிகமாக இருக்கவேண்டும். இந்த பதில்- பொதுநலம் என்பது உண்மையான் பொதுநலம் அல்ல என்று பெரிய கூச்சல் எழுந்தது. அது சரியானதுதான். ட்ரிவர்ஸ்(Trivers (1971, p. 1): சொன்னது போல, “பொதுநலத்தை விளக்க முயற்சி செய்யும் மாதிரிகள் எல்லாமே பொதுநலத்தை பொதுநலத்திலிருந்து எடுக்கும் அமைப்புகள்தான்”

துரதிர்ஷ்டவசமாக, உறவு தேர்வினால் உருவாகும் கூட்டுறவையும், பதில் பொதுநலத்தால் உருவாகும் கூட்டுறவையும் குழு தேர்வினால் உருவாகும் கூட்டுறவை பிரித்து பார்ப்பது கடினம். ஆனால், இதில் சில தடயங்கள் இருக்கின்றன. பெரிய அளவில் நடக்கும் பதில்-பொதுநலத்தில் படிநிலை அமைப்புகள் (hierarchies (pecking orders, dominance ranks) இருக்க வேண்டும். இவை யாருக்கு எந்த அளவில் பயன் கிடைக்கும் என்பதை இந்த படி நிலை அமைப்புகள் தீர்மானிக்க வேண்டும். இவ்வாறு கிடைக்கும் பயன்கள் எல்லோருக்கும் சமமாக இருக்காது. அவரவர் இருக்கும் அந்தஸ்து, படிநிலையில் அவரது இடம், வரிசை ஆகியவையே ஒருவர் பெறும் பயனை நிர்ணயிக்கும். அதே போல மனிதர்களில் சட்டங்களும், நீதிகளுமே கூட்டுறவை நிர்பந்திக்கும். உண்மையில் மனித அமைப்புகளில் பதில்-பொதுநலத்தில் அடிமைகள் போன்றவர்கள் இருப்பார்கள். இவர்கள் தாங்களாக சுதந்திரமாக விடப்பட்டால் நல்ல நிலைமையில் இருப்பார்கள். ஆனால் அதற்கு அவர்களுக்கு சுதந்திரம் இருக்காது.

புராதன காலத்திய மக்கள் எல்லோரையும் போலவே இஸ்ரவேல் யூதர்களிடமும் கடுமையான படிநிலை அமைப்புகள் இருந்தன. இது ஒரு சிலரிடம் சொத்து குவிந்திருப்பதையும் பலர் பஞ்சை பராரிகளாக இருப்பதையும் உறுதி செய்தது. அடிமைகள் இருந்தார்கள். அவர்கள் சட்டரீதியாக துன்புறுத்தப்பட்டு வேலை வாங்கப்பட்டார்கள். சில சட்டங்கள் கூட்டுறவை உறுதி செய்வதை விட, விசுவாசத்தை உறுதி செய்யும் சட்டங்கள். ஆனால் மிக கடுமையாக நிறைவேற்றப்பட்ட சட்டங்கள். உதாரணமாக சனிக்கிழமை வேலை செய்வதற்கு தண்டனையைப் பார்க்கலாம் (Numbers 15:32-36):

இஸ்ரவேல் புத்திரர் வனாந்தரத்தில் இருக்கையில், ஓய்வுநாளில் விறகுகளைப் பொறுக்கிக்கொண்டிருந்த ஒரு மனிதனைக் கண்டுபிடித்தார்கள். விறகுகளைப் பொறுக்கின அந்த மனிதனைக் கண்டுபிடித்தவர்கள், அவனை மோசே ஆரோன் என்பவர்களிடத்துக்கும் சபையார் அனைவரிடத்துக்கும் கொண்டுவந்தார்கள். அவனுக்குச் செய்யவேண்டியது இன்னதென்று தீர்க்கமான உத்தரவு இல்லாதபடியினால், அவனைக் காவலில் வைத்தார்கள். கர்த்தர் மோசேயை நோக்கி: இந்த மனிதன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படவேண்டும்; சபையார் எல்லாரும் அவனைப் பாளயத்திற்குப் புறம்பே கல்லெறியக்கடவர்கள் என்றார். அப்பொழுது சபையார் எல்லாரும் கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, அவனைப் பாளயத்திற்குப் புறம்பே கொண்டுபோய்க் கல்லெறிந்தார்கள்; அவன் செத்தான்.

படிநிலை அமைப்பில் கீழ் நிலையில் உள்ள ஒருவர் அவருக்கு பங்கிட்டு தரப்பட்டதைவிட அதிகமாக எடுத்துகொண்டால், அவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவதும் இப்படிப்பட்ட வலுக்கட்டாய கூட்டுறவின் அங்கமாகும். முக்கியமாக அந்த பங்கு படிநிலை அமைப்பில் மேல் தட்டில் உள்ள ஆணுக்கு கொடுக்கபட்ட பங்காக இருந்தால், கீழ் நிலையிலுள்ளவருக்கு கடுமையாகவே தண்டனை வழங்கப்படும்.Joshua 7:24-25 இல் வரும் நிகழ்ச்சி இதற்கு ஒரு உதாரணம். அசென் என்ற ஜோஷுவாவின் போர்வீரன் , பொது உண்டியலில் போடாமல், 50 ஷாகெல் தங்கக்கட்டியை தனது கூடாரத்துக்குள்ளேயே வைத்துகொண்ட போது,

“24. அப்பொழுது யோசுவாவும் இஸ்ரவேலரெல்லாருங்கூடச் சேராகின் புத்திரனாகிய ஆகானையும், அந்த வெள்ளியையும் சால்வையையும் பொன்பாளத்தையும், அவன் குமாரரையும் குமாரத்திகளையும், அவன் மாடுகளையும் கழுதைகளையும் ஆடுகளையும், அவன் கூடாரத்தையும், அவனுக்குள்ள யாவையும் எடுத்து, ஆகோர் பள்ளத்தாக்குக்குக் கொண்டுபோனார்கள்.25. அங்கே யோசுவா: நீ எங்களைக் கலங்கப்பண்ணினது என்ன? இன்று கர்த்தர் உன்னைக் கலங்கப்பண்ணுவார் என்றான்; அப்பொழுது இஸ்ரவேலரெல்லாரும் அவன்மேல் கல்லெறிந்து, அவைகளை அக்கினியில் சுட்டெரித்து, கற்களினால் மூடி;26. அவன்மேல் இந்நாள்வரைக்கும் இருக்கிற பெரிய கற்குவியலைக் குவித்தார்கள்; இப்படியே கர்த்தர் தமது கோபத்தின் உக்கிரத்தைவிட்டு மாறினார்”

இது ஒரு குழு தேர்வின் மூலம் கூட்டுறவு அடைந்த குழுவின் அறிகுறிகளல்ல.

தொடரும்

Series Navigation