ஜான் ஹார்ட்டுங்
இறுதியில் எல்லாம் வெளிவந்துவிடுகின்றன
பவுலின் வரலாற்று ரீதியான திருத்தல் வாதத்தை ஒதுக்கிவிட்டாலும், இயேசுவின் திட்டம், அவரது செய்தி, அவரது தீர்க்கதரிசனம் எல்லாம் மறுபடியும் ஜானின் வெளிப்படுத்தின விஷேசத்தில் (Revelation to John) மறுபடியும் வெளிவருகின்றன.
He who conquers and who keeps my works until the end, I [Jesus] will give him power over the nations and he shall rule them with a rod of iron, as when earthen pots are broken in pieces, even as I myself have received power from my Father (2:26-27) …
26. ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு, நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன்.
27. அவன் இருப்புக்கோலால் அவர்களை ஆளுவான்; அவர்கள் மண்பாண்டங்களைப்போல நொறுக்கப்படுவார்கள்.
And I [John] heard the number of the sealed, a hundred and forty-four thousand sealed, out of every tribe of the sons of Israel (7:4) …
4. முத்திரைபோடப்பட்டவர்களின் தொகையைச் சொல்லக்கேட்டேன்; இஸ்ரவேல் புத்திரருடைய சகல கோத்திரங்களிலும் முத்திரைபோடப்பட்டவர்கள் இலட்சத்துநாற்பத்து நாலாயிரம்பேர்.
they were told not to harm the grass of the earth or any green growth or any tree, but only those of mankind who have not the seal of God upon their foreheads; they were allowed to torture them for five months, but not to kill them (9:4-5).
4. பூமியின் புல்லையும் பசுமையான எந்தப் பூண்டையும் எந்த மரத்தையும் சேதப்படுத்தாமல், தங்கள் நெற்றிகளில் தேவனுடைய முத்திரையைத் தரித்திராத மனுஷரைமாத்திரம் சேதப்படுத்த அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது. 5. மேலும் அவர்களைக் கொலைசெய்யும்படிக்கு அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்படாமல், ஐந்துமாதமளவும் அவர்களை வேதனைப்படுத்தும்படிக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது; அவைகள் செய்யும்வேதனை தேளானது மனுஷரைக் கொட்டும்போது உண்டாகும் வேதனையையைப்போலிருக்கும்.
இயேசுவின் தேவதைகள் கோயிம்மை (யூதரல்லாதவர்களை) கொல்ல முடியாது. ஏனெனில் டேவிடின் ராஜ்யம் மீண்டும் இஸ்ரேலில் ஸ்தாபிக்கப்பட்டபின்னால், இந்த கோயிம்கள்தான் மற்ற நாடுகளை ஆக்கிரமித்து அந்த நாடுகள் இஸ்ரேலுக்கு கப்பம் கட்டும்படி செய்வார்கள். ஆனால், முழந்தாளிட்டு தனது மகளை காப்பாற்ற கெஞ்சிய கானானிய பெண்ணைப்போல இவர்கள் ஆகவேண்டுமென்றால், இவர்களை கொஞ்சம் அடித்து மென்மையாக்க வேண்டும்.
இயேசுவிடம் சொந்தமாக ஒரு இரும்புத்தடி இருக்கும். அவரது கைகள் வேறு வேலை பார்த்துகொண்டிருப்பதால், இது ஒரு கத்தி மாதிரி அவரது வாயிலிருந்து வெளியே வந்திருக்கும் (19:14-16):
From his mouth issues a sharp sword with which to smite the nations, and he will rule them with a rod of iron; he will tread the wine press of the fury of the wrath of God the Almighty. On his robe and on his thigh he has a name inscribed, King of kings and Lord of lords.
15. புறஜாதிகளை வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்து கூர்மையான பட்டயம் புறப்படுகிறது; இருப்புக்கோலால் அவர்களை அரசாளுவார்; அவர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய உக்கிரகோபமாகிய மதுவுள்ள ஆலையை மிதிக்கிறார்.
புனித திரித்துவத்தின் அற்புதம் – இயேசு ஒரே நேரத்தில் தெய்வமாகவும் மனிதனாகவும் – இருப்பதால், ஒரே நேரத்தில் டேவிடின் வாரிசாக பூமியின் (அரசர்களுக்கெல்லாம் அரசராக) இருப்பார். அதே நேரத்தில் சொர்க்கத்திலும் (தேவர்களுக்கெல்லாம் தேவனாகவும் ) இருப்பார். அவரது தந்தையாரை என்ன செய்வது என்ற சிக்கலுக்கு விடையாக அது நம்பிக்கைக்குரிய ஒரு விஷயமாகி அவரும் அவரது தந்தையாரும் ஒரே ஆள்தான் என்று விடைசொல்லப்படுகிறது.
இந்த வெளிப்படுத்தின விஷெசத்தை மற்றவர்களது விளக்க் உரை இல்லாமல் படிக்கும்படிக்கு பாதிரியார்களை பல சாதாரண கிறிஸ்துவர்கள் கேட்டிருக்கிறார்கள். 144000 பேர்கள் என்பது 2000 வருடங்களுக்கு முன்னால் பெரிய நம்பராகத்தான் இருந்திருக்கும். இப்போது அந்த இடமெல்லாம் நிறைந்துவிட்டதா? வரப்போகும் டேவிடின் ராஜ்ஜியத்தில் இன்னும் இடம் இருக்கிறதா? துரதிர்ஷ்டவசமாக இந்த கேள்வி இயேசுவின் செய்தியை முழுக்க தவறாக புரிந்துகொண்டு எழுப்பப்பட்டுள்ளது. தேவனின் ராஜ்ஜியத்தில் யூதரல்லாத கிறிஸ்துவர்களுக்கோ அல்லது யூதராக இருக்கும் யூதர்களுக்கோ எந்த இடமும் இல்லை. ஒரிஜினல் உள்குழு உறுப்பினர்களுக்கு மட்டுமே இந்த ரிசர்வேஷன். அதாவது இஸ்ரேலில் இருந்து இயேசுவை நம்பிய யூதர்கள் மாத்திரமே. ஆகவே இன்னும் இந்த லிஸ்டில் இடம் இருக்கிறது என்பது ஒரு நல்ல செய்தி. அதாவது இன்னும் 143000 இடங்கள் இருக்கும்.
ஒரிஜினல் ஒப்பந்தம்(பழைய ஏற்பாடு) ஒரு தனித்த ஒப்பந்தம். சரியாக தன்னை கும்பிடவில்லை என்றால் அவர்களை அழிக்கப்போகிறேன் என்று அவ்வப்போது மிரட்டினாலும், யூதர்கள்தான் தனது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் என்ற உறுதிப்பாட்டிலிருந்து ஒரு போதும் விலகியதில்லை. புதிய ஒப்பந்தம்( புதிய ஏற்பாடு) என்பது ஒரிஜினல் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களான யூதர்களுக்கு அவர்களது பேரரசை நிர்மாணிக்க வந்த மெஸையாவை பின்பற்றும் யூதர்களுக்குத்தான். பவுல் தனது திட்டத்தை பன்றிகளிடம் கொண்டுசெல்கிறார் என்று தெரிந்திருந்தால், இயேசு தன் கல்லறையில் புரண்டிருப்பார்.
இயேசுவின் செய்தியாக பவுல் சொன்னது எல்விஸ் பிரஸ்லி கார்ல் பெர்கின்ஸின் பாடிய ”புளூ ஸ்வேட் ஷூஸ்” தான் பாடி புகழ்பெற்றது போன்றது. (கார்ல் பெர்கின்ஸ் பாடிய புளூ ஸ்வேட் ஷூஸ் என்ற பாட்டு எல்விஸ் பிரஸ்லி பாடியதால்தான் புகழ்பெற்றது) பவுல் குறி வைத்த யூதரல்லாத கிறிஸ்துவர்கள் வெகுவிரைவில் சக்தி வாய்ந்த புதிய உள்குழுவாக ஆனார்கள். யூத மதத்தை போலன்றி, வெளிக்குழு உறுப்பினர்கள் உள்ளே வர ஊக்குவிக்கப்பட்டார்கள். அல்லது உள்ளே வர கட்டாயப்படுத்தப்பட்டார்கள். சட்டதிட்டங்களை பின்பற்றுவதன் பயன் சொர்க்கத்தில் கிடைக்கும். வானத்தில் கிடைக்கும் அல்வா என்பதுதான் பவுலின் கொக்கி. அதே நேரத்தில் இந்த வாழ்வில், போரிலும் தசமபாகங்களிலும் கிடைக்கும் பங்கு பாரபட்சத்துடன் மிக அதிகமாக அரசாங்க அதிகாரிகளிடமும் சர்ச் அதிகாரிகளிடமும் சேரும். பெரும்பாலும் இந்த இருவரும் ஒருவரே. கீத்( Keith 1947, p. 65; cf Alexander 1987:175): இதனை அழகாக விளக்குகிறார். “சமாதானப்பிரபு மேலாதிக்கம் செலுத்தும் உலகப்பகுதி தேசியவாதத்தின் விளைநிலமாக இருந்தது. இங்குதான் கடுமையான போர்கள் தீராவியாதியாக இருந்தன. கிறிஸ்துவம் தேசியவாதத்தை அடக்கவில்லை. மாறாக, தேசியவாதம் கிறிஸ்துவத்தை தனக்கு ஒரு கருவியாக ஆக்கிக்கொண்டது”
முரணாக, நல்ல கிறிஸ்துவராக இருந்த கீத், கிறிஸ்துவத்தின் ஒரிஜினல் சிற்பியே தேசியவாதத்திற்காகத்தான் கிறிஸ்துவத்தையே உருவாக்கினார் என்பதை புரிந்துகொள்ளவில்லை. தற்போதைய கிறிஸ்துவர்கள், சிலுவைப்போர்களிலும், ஸ்பானிஷ் மதவிசாரணை(Inquisition)களிலும் கிறிஸ்துவம் ஒரு கருவியாகத்தான் செயல்பட்டது என்பதை புரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், அமெரிக்கர்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு உருவாக்கம் கொடுத்த மூத்த தலைவர்கள் அமெரிக்காவை கடவுளின் புது இஸ்ரேலாகத்தான் கருதினார்கள் என்பதை மறந்துவிடுகிறார்கள். (Cherry 1971)
அமெரிக்கா மற்றெந்த நாட்டை விடவும், புராதனமான இஸ்ரேலுக்கு அருகே ஒப்பிடத்தகுந்தது என்பதை பலரும் குறித்திருக்கிறார்கள். ஆகவே ”நமது அமெரிக்க இஸ்ரேல்” அடிக்கடி உபயோகப்படுத்தப்பட்டது, இது பொதுவாகவும், சரியானதாகவும் இருக்கிறது. (Abiel Abbot, Thanksgiving sermon, 1799).(10)
ரெவரண்ட் அப்பாட்டின் உவமை ஒரு காலனியாதிக்க உச்சக்கட்டத்தின் உள்குழு ஒழுக்கத்தின் உதாரணமாக இருக்கும் அமெரிக்காவுக்கு மிகவும் சரியானதும், பொருந்தக்கூடியதுமாகும். செகோயவாதா (“Red Jacket,” என்று அழைக்கப்பட செனகா செவ்விந்திய பழங்குடியினரின் தலைவர்) ரெவரண்ட் கிராம் என்ற பாஸ்டன் மிஷனரி சொசைட்டி பாதிரியாரிடம் 1805இல் சொன்னதை பாருங்கள்.
பரமாத்மா (great sprit) ஒப்புக்கொள்ளும் வகையில் எப்படி அதனை வணங்குவது என்பதை எங்களுக்கு சொல்லித்தர நீங்கள் வந்துள்ளீர்கள் என்று சொல்கிறீர்கள். வெள்ளைக்காரர்களான உங்களது மதத்தை நீங்கள் சொல்லித்தருவதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் நாங்கள் வருந்துவோம் என்று சொல்கிறீர்கள். நீங்கள்தான் சரி என்றும் நாங்கள் தொலைந்துபோனவர்கள் என்றும் சொல்கிறீர்கள். இது உண்மை என்று எங்களுக்கு எப்படி தெரியும்? உங்களது மதம் ஒரு புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது என்று நாங்கள் புரிந்துகொள்கிறோம். உங்களைப்போலவே எங்களுக்கும் இதுதான் புத்தகம் என்று நீங்கள் சொல்வது உண்மையென்றால், பரமாத்மா ஏன் எங்களுக்கு இதனை கொடுக்கவில்லை? எங்களுக்கு மட்டுமல்ல, எங்கள் மூதாதையருக்கும் இந்த புத்தகத்தின் அறிவு எப்படி புரிந்துகொள்ளப்படவேண்டுமோ அது போல புரிந்துகொள்ளும்படி கொடுக்கப்படவில்லை? நீங்கள் அதனை பற்றி எங்களிடம் என்ன சொல்லுகிறீர்களோ அதனை மட்டுமே அறிவோம். அடிக்கடி வெள்ளைக்காரர்களால் ஏமாற்றப்பட்டிருக்கும் நாங்கள் எதனை நம்புவது என்று நாங்கள் எப்படி அறிவோம்?
சகோதரரே, பரமாத்மாவை வணங்கவும், அதற்கு சேவகம் செய்யவும் ஒரே ஒரு வழிதான் இருக்கிறது என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஒரே ஒரு மதம்தான் இருக்கிறது என்றால், வெள்ளைக்காரர்களான நீங்களே ஏன் அதில் இத்தனை வித்தியாசங்களை வைத்துகொண்டிருக்கிறீர்கள்? உங்கள் எல்லோராலும் ஒரே புத்தகத்தை படிக்க முடிகிறபோது நீங்கள் ஏன் ஒத்துப்போகக்கூடாது?
சகோதரரே, பரமாத்மா(Great Spirit ) நம் எல்லோரையும் படைத்தது. நாங்கள் உங்களது மதத்தை அழிக்க விரும்பவில்லை. அதனை உங்களிடமிருந்து எடுக்கவும் விரும்பவில்லை. நாங்கள் எங்களது மதத்தை அனுபவிக்கவே விரும்புகிறோம். எங்களது நிலத்தை பறித்துக்கொள்ளவோ அல்லது எங்களது சொத்தை அபகரிக்கவோ வரவில்லை என்றும் எங்களுக்கு அறிவூட்டவே நீங்கள் வந்துள்ளதாகவும் நீங்கள் சொல்கிறீர்கள். இந்த இடத்தில் இருக்கும் வெள்ளைக்காரர்களிடம் நீங்கள் போதித்துகொண்டிருக்கிறீர்கல். இந்த மக்கள் எங்களுடைய அண்டைவீட்டுக்காரர்கள். எங்களுக்கு அவர்களை நன்றாக தெரியும். இன்னும் சிறிது நேரம் காத்திருந்து உங்களது போதனை அவர்களிடம் என்ன மாறுதலை உருவாக்குகிறது என்று பார்க்கப்போகிறோம். உங்களுடைய போதனை அவர்களுக்கு நல்லது செய்யுமானால், அவர்களை நேர்மையானவர்களாக ஆக்குமானால், இந்தியர்களை அவர்கள் ஏமாற்றுவதை குறைக்குமானால், அப்போது நீங்கள் சொன்னதை நாங்கள் கூர்ந்து யோசிப்போம்.
சகோதரரே, உங்களுடைய பேச்சுக்கு எங்களது பதிலை கேட்டீர்கள். இதுதான் உங்களிடம் சொல்ல எங்களிடம் இருப்பது. நாம் இப்போது பிரியப்போகிறோம். நாங்கள் உங்களது கரங்களை பற்றி பரமாத்மா உங்களை பாதுகாக்கவும், உங்களது பயணங்களில் துணை இருக்கவும், உங்களை உங்களது நண்பர்களிடம் கொண்டு சேர்க்கவும் நம்பிக்கை வைக்கிறோம்.
ஸ்டெட்மன், ஹட்சின்சன் ஆகியோர் அடுத்து நடந்தது என்ன என்று விவரிக்கிறார்கள்:
இந்தியர்கள் மிஷனரியை அணுகவும், மிஷனரி அவசரமாக தன் இருக்கையிலிருந்து எழுந்து, அவர்களது கரங்களை பற்றமுடியாது என்று பதிலிறுத்தார். கடவுளின் மதத்துக்கும் பிசாசின் வேலைகளுக்கும் இடையே ஒருபோதும் சகோதரத்துவம் இருக்கமுடியாது என்றார்.
இது இந்தியர்களிடம் அவர்களது மொழியில் விளக்கப்பட்டது. அவர்கள் புன்னகைத்தார்கள். பிறகு அமைதியாக வெளியேறினார்கள்.
Deuteronomic Deja Vu
திரும்பவும் வரும் உபாகமம் (Deuteronomy)
இங்கே இருக்கும் பழங்குடியினரை கொன்றபின்னர், தூர தேசங்களிலிருந்து அடிமைகளை கொண்டுவரும் நடைமுறை கடவுளின் புதிய இஸ்ரவேலர்களிடம் இல்லாமலில்லை. ஏற்கெனவே இங்கே இருந்ததால், செவ்விந்தியர்களை ஆப்பிரிக்கர்களை செய்தது போல, வேர்களிலிருந்து பிடுங்கி உலகத்தின் இன்னொரு பகுதிக்கு கொண்டு சென்று அங்கு அவர்களை அடக்குமுறை மூலம் அடிமைகளாக்கமுடியவில்லை. மறுபடியும், குழு ஒழுக்கம் தனது மேஜிக்கை செய்தது. ஆப்பிரிக்க அடிமைகளை மதம் மாற்றுவதற்கு முன்னால், அவர்களை சரியாக சமாளித்து வேலை வாங்கமுடியவில்லை. அவர்கள் ஒளியை பார்த்தபின்னால், குழுவின் அடித்தளதட்டில் சங்கிலி போட்டு கட்டி வைத்து நன்றாக வேலை வாங்கமுடிந்தது (Maier, 1993):
அமெரிக்காவில் பிறந்த எஜமானர்கள், ஆப்பிரிக்காவில் பிறந்தவர்களை விட அமெரிக்காவில் பிறந்த அடிமைகளிடமே அதிக ஆர்வம் கொண்டார்கள். ஆப்பிரிக்காவில் பிறந்த அடிமைகள் கட்டுப்படுத்தமுடியாதவர்களாகவும் கடுமையான தண்டனைக்கு மட்டுமே ஒழுங்குக்கு வருபவர்களாகவும் இருந்தார்கள். மெதுவாக, “எஜமானர்களிடம் அடிமைகளுடனான தொடர்பு மாறுபாடு அடைய ஆரம்பித்தது. அடிமைகளின் வாழ்வுக்கு அக்கறைப்பட ஆரம்பித்தார்கள். முன்பு அடிமைகள் கிறிஸ்துவர்களாக ஆகக்கூடாது என்று இருந்த எதிர்ப்பு குறைந்தது. வேறு அடிமை முறைகளில் இல்லாத அளவுக்கு எஜமானர்கள் அடிமைகளின் வாழ்வில் குறுக்கிட்டார்கள். அதே நேரத்தில் தங்களது அடிமை “குழந்தைகள்” சுதந்திர எண்ணம் வராமல் இருக்கவும், அப்படி வந்தால் அதனை கடுமையாக எதிர்க்கவும் எஜமானர்கள் முனைந்தார்கள்.
நவீன இஸ்ரேலின் கடுமையான விமர்சகரான பாட்ரிக் புகானன் (என்ற அமெரிக்க அரசியல்வாதி) “நமது அமெரிக்க இஸ்ரேல்”இடம் எந்த விதமான விமர்சனமும் இன்றி சந்தோஷமாக இருப்பார். அடிமைகளை வைத்திருந்த எஜமானர்களிடமிருந்து ரெவரெண்ட் க்ராம் வரைக்கும் பாட்ரிக் புக்கானனின் நேரடியான வார்த்தைகள் பாராட்டப்பட்டிருக்கும்.: “நமது கலாச்சாரம் மேன்மையானது. ஏனெனில் நமது மதம் கிறிஸ்துவம். அதுதான் உண்மையானது. அந்த உண்மையே மனிதர்களை சுதந்திரமானவர்களாக ஆக்குகிறது”
Freedom, Fidelity, and Evil
சுதந்திரம், விசுவாசம், தீமை
மத சுதந்திரத்தை பற்றி விவாதித்த நகைச்சுவை பேச்சாளரும், மத ஆராய்ச்சியாளருமான ஸ்டீவ் ஆலன்(Steve Allen (1990, p. xxix)) சொன்னார், “என்னுடைய கரங்களை வீசுவதற்கான சுதந்திரம் அடுத்தவரின் மூக்கு வரைக்கும்தான்” ஆலன் சரியாகத்தான் சொன்னார். ஆனால், மதசுதந்திரத்தின் அப்பாவி ஆதரவாளர்கள் “ஒழுக்கரீதியில் தீய பகுதியை”(Keith, 1947, p. 10) கண்டுகொள்வதில்லை. ஒழுக்கரீதியில் தவறான போதனைகள் இல்லை என்றும், மத நம்பிக்கையாளர்கள் கெட்டவற்றை ஒதுக்கி நல்லவற்றை மட்டுமே எடுத்துகொள்வார்கள் என்றும் நினைக்கிறார்கள். இதுவும் தவறானதுதான். யூத கிரிஸ்துவத்தின் அடித்தளமான தன்னைத்தானே ஏமாற்றிகொள்வதை இது உள்ளே வைத்துள்ளது. இதனைத்தான் தாமஸ் பெயின் எச்சரிக்கிறார்.
விசுவாசமின்மை என்பது நம்புவதோ நம்பாமல் இருப்பதிலோ இல்லை. எதனை நம்பவில்லையோ அத்னை நம்புவதாக கூறிக்கொள்வதில் இருக்கிறது. இப்படிப்பட்ட மனப்பொய் உலகில் உருவாக்கிய ஒழுக்கரீதியிலான பிரச்னைகளை கணக்கிட முடியாது. தன்னுடைய மனத்தையே விபச்சாரம் செய்து, தன்னைத்தானே ஏமாற்றிகொண்டு தான் நம்பாதவற்றையே தான் நம்புவதாகவும், மற்றவர்களும் நம்பவேண்டும் என்றும் பேசிய்தால், உலகத்தில் உள்ள எல்லா குற்றங்களுக்கும் தன்னைத்தானே தயாராக்கிகொண்டுவிட்டான்.
”தாங்கள் நம்பாததையே நம்புவதாக கருதிகொள்ளுவதாலும்”, “எதை நம்புகிறார்களோ அதனை விளக்க்கக்கூட தெரியாமல் இருந்தாலும் அதனை மிகவும் ஆழமாக நம்புவதாலும்” (Williams, 1994), தற்காலத்திய கிறிஸ்துவர்களும் யூதர்களும், தங்களை அறியாமலேயே உள்குழு ஒழுக்கத்தை ஆதரிக்கிறார்கள். அவர்களே சரியாக படிக்காமல் இருந்தாலும், விவிலியத்தை உலகப்பொதுமறையாகவும் ஒழுக்கத்தின் ஒரே ஊற்றுக்கண்ணாகவும் அவர்கள் கருதுவதன் மூலம் அப்படிப்பட்ட உள்குழு ஒழுக்கத்தை பேணுகிறார்கள். அவர்கள் படித்து ஆராயந்து அதன் மூலம் இது உலகத்தின் ஒழுக்கத்தின் ஊற்றுக்கண் என்று கருதியிருந்தால் பரவாயில்லை. இது தலைகீழாக இருக்கிறது. விவிலியத்தை நம்புபவர்கள் மிகக்குறைவானவர்களே விவிலியத்தை ப்டித்திருக்கிறார்கள். உண்மையான யூத மதமும் உண்மையான கிறிஸ்துவமும் விவிலியத்தில் உள்ளதற்கு வெளியே இருக்கிறது என்று வாதிடுவது போன்றது.
இனப்படுகொலையை வெறுப்பதற்கும், இனப்படுகொலை செய்யும்படி தன்னை பின்பற்றுபவர்களை தூண்டும் தெய்வத்தை வணங்குவதற்கும் பெரும் முரண்பாடு இருக்கிறது. ஒரு மதத்தை பின்பற்றுகிறார்கள் என்பதற்காக அவர்களை பாரபட்சமாக நடத்துவதை எதிர்த்து பெரும் கூக்குரல் இடுவதற்கும், அதே நேரத்தில் , சொந்த மதப்புத்தகத்தில் மற்ற மதங்களை பின்பற்றுபவர்களை கொல்லவேண்டும் என்றும், அவர்களுக்கு நரகம் என்று கூறுவதையும் நம்புவதும் பெருத்த முரண்பாடு இருக்கிறது. ஆனால், மனிதர்களுக்கு தீமை செய்ய தனித்த திறமை இருக்கிறது. தீமையை நல்லது என்று காட்டினால், தவறை சரியென்று காட்டினால், அநீதியை நீதி என்று காட்டினால், வெறுப்பை அன்பு என்று காட்டினால், பிறகு உள்குழு ஒழுக்கத்தை பேணும் மதங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் (அவர்கள் சரிதான் ஆனால் அவர்களை திருமணம் செய்யவேண்டாம்) என்று போதிக்கும் மதங்கள் அனைத்தும் தீமைகளே. தங்களை புராடஸ்டாண்டாகவும், கத்தோலிக்கர்களாகவும், சீர்திருத்த கிறிஸ்துவமாகவும், பெந்தகொஸ்தேவாகவும், சுய அடையாளத்தை பேணும் இவர்கள் அனைவரும் உள்குழு ஒழுக்கத்தை பேணி மற்றவர்களை தீயவர்களாகவே சித்தரிக்கின்றனர்.
உள்குழு ஒழுக்கத்தின் வரைபடமே பைபிள். குழுவுக்கு வெளியே இருப்பவர்களை இனப்படுகொலை செய்யவும், அவர்களை அடிமைப்படுத்தவும், உலகத்தை அடக்கி ஆளவுமான ஒரு முழு செய்முறைகளும் கொண்ட புத்தகம். அதின் உள்ளே இருக்கும் கொடூரம், கொலை செய்வதை பாராட்டுவது, கற்பழிப்பை விதந்தோதுவது ஆகியவற்றினாலும் அதன் வெளிப்படையான நோக்கங்களாலும் பைபிளை ஒரு தீய புத்தகம் என்று சொல்லமுடியாது. ஏனெனில் பழங்காலத்திய பல புத்தகங்கள் இதனைத்தான் செய்கின்றன. இலியத், ஐஸ்லாந்தின் வீரதீரக்கதைகள், சிரியாவின் பழங்காலக்கதைகள், தென் அமெரிக்க மாயாக்களின் கல்வெட்டுகள் ஆகியவையும் இதனைத்தான் சொல்கின்றன. ஆனால், யாரும் ஐஸ்லாந்தின் வீரதீரக்கதைகளையோ அல்லது இலியத்தையோ ஒழுக்கத்தின் அடித்தளம் என்று விற்பதில்லை. ஒரு ஓநாய் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் சிறியதாக இருந்தாலும் தீயதல்ல. மாறாக, ஆட்டின் தோலை போர்த்திகொண்ட ஓநாய் பரிசுத்தமான தீயது. இங்கேதான் பிரச்னை உள்ளது. உலக மககள் எப்படி வாழவேண்டும் என்பதற்கான கையேடாக பைபிள் விற்கப்படுகிறது; வாங்கப்படுகிறது. உலகத்தில் மிக அதிகமாக விற்கப்பட்ட புத்தகம் அதுதான். ஆனால், பைபிளை உலகளாவிய பொது ஒழுக்க கையேடாக ஆகும் முயற்சி நடக்கமுடியாதது. ஏனெனில் வாய்வழியாக சொல்லப்பட்ட கதைகளும், தலைகீழாக மாறும் ஒழுக்கங்களும், பல தலைமுறைகள் கடந்த பின்னர் தலைகீழாக மாறும் கதைகளும், பழங்காலத்தியது என்ற ஒரே காரணத்தால் அதிகாரப்பூர்வமானது என்ற அந்தஸ்தை கோரும் கதைகளும், வக்கிரங்களும், சிக்கலானவற்றை உதறிவிட்டு போகும் கதைகளும், அதிகபட்சமாக அதிகமான மக்களை அதிகமான காலத்துக்கு ஏமாற்றத்தான் முடியும்.
Where Will It End?
எப்போது இது முடியும்?
இன்னொருவர் மீது அட்டை போல ஒட்டிக்கொள்ளவோ எதிர்த்து நிற்கவோ எதிரிகள் இல்லை என்றால் இப்படிப்பட்ட உள்குழுக்கள் சிதறி காணாமல் போய்விடுகின்றன என்பதற்கான ஏராளமான உதாரணங்களை வரலாறு காட்டுகிறது. பலூனுக்குள் காற்றடித்து அதனை காற்றழுத்தம் இல்லாத வேக்குவம் அறையில் வைத்தால் வெடித்துவிடும். யூத ஏஜென்ஸி (Jewish Agency) யின் தலைவரான அவ்ரஹம் பர்க் இந்த பிரச்னையை கண்டறிந்து வெளிப்படையாகவே கூறினார் (Haberman, 1995): “உண்மையான சமாதானம் இஸ்ரேலுக்கு வந்துவிட்டால், அப்போது நாம் கேட்கவேண்டிய கேள்வி இதுதான்: வெளியில் எதிரி இல்லாமல் நாம் வாழமுடியுமா? எப்படி வாழ்வது?”
பரிணாமவியலாளர்கள் உள்குழு ஒழுக்கத்தை பொது ஒழுக்கமாக மாற்றகூடிய மாதிரியை கண்டறியமுடியவில்லை. ஏனெனில், உள்குழு ஒழுக்கம் குழு தேர்வின் மூலம் பரிணாமவியல்ரீதியாக உருவாவதல்ல. அதில் சுயலாபம் இல்லாத பரோபகாரம் இல்லை. அய்ர்ன்ஸ் (Irons 1991) சொல்வது போல, “பரிணாமவியல் ரீதியில் உருவான பரோபகாரம் அனைத்தும் அதில் லாபம், பிரயோசனம் ஆகியவற்றை கொண்டே அளவிடமுடியும். அதற்கு எவ்வளவு விலை கொடுக்கிறதோ அதனை விட பலன் அதிகமாக இருக்கவேண்டும். அது பரோபகார ஜீன்கள் அதிகரிக்கவேண்டும்” ஒரு குழு இன்னொரு குழுவோடு போட்டியில் தோற்றுவிட்டால், உள்குழு ஒழுக்கத்தை பேணுவதன் பிரயோசனத்தை அந்த குழு உறுப்பினர்கள் இழக்கிறார்கள். அதே போல, முரண்நகையாக, ஒரு குழு எல்லா எதிர்க்குழுக்களையும் வெற்றிகொண்டுவிட்டாலும், தொடர்ந்து உள்குழு ஒழுக்கத்தை பேணுவத்ன் பிரயோசனத்தை இழக்கிறார்கள். ஏனெனில் உள்குழு ஒழுக்கத்தை பேணுவது குழுவுக்கு வெளியே இருப்பவர்களது விலையில்தான் நடக்கிறது. இதனை அலெக்ஸாந்தர் (Alexander (1987, p. 261) விவரிக்கிறார்:
மனிதர்களில் மட்டுமே, குழுக்களுக்கு இடையேயான போட்டி, போர்கள் ஆகியவை சமூக இருப்பின் ஆக்க சக்திகளாகவும் மைய கருதுகோள்களாகவும் இருக்கின்றன. மனிதர்கள் மட்டுமே எதிரெதிர் பக்கத்தில் இருக்கும் பல மில்லியன் மக்களது கூட்டுழைப்பின் மூலம் தடைசெய்யப்படாத ஆயுதப்போட்டியில் இறங்கினார்கள்.
இந்த உண்மைகளே, தனிப்பட்ட மக்கள் ஏன் சகோதர மனிதர்களை எதிரிகளாகவும் போட்டியாளர்களாகவும் அவர்களை ஏமாற்றவும் உபயோகப்படுத்திகொள்ளவுமான மனிதர்களாக கருதுகிறார்கள் என்பதை விளக்குகின்றன என்று கருதுகிறேன். இந்த விஷயங்களே, ஏன் மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் ஒத்துழைக்கிறார்கள் அதுவும் பெரிதாகும் சமூக அளவிலும் சிக்கலான அமைப்புகளிலும், அதுவும் தங்க்ளைத்தாங்களே ஏமாற்றிகொள்ளவும் முனைகிறார்கள் என்பதை விளக்கமுடியும்.
எப்ப்டியானாலும் இழப்பை தரும் இந்த சிக்கலான அமைப்பை, வெளிக்கிரகமொன்றிலிருந்து வரும் ஆக்கிரமிப்பு மட்டுமே தடுக்கமுடியும். ஏனெனில் இது மக்களை ஒரே தரப்பில் நிறுத்தி வெளிக்கிரகவாசிகளை பொதுவான எதிர்குழுவாக ஆக்கும். அது நடைபெறாத பட்சத்தில் நாம் பொது ஒழுக்கத்துக்கு செயற்கையான அடித்தளங்களை அமைக்க வேண்டும்.
நம்மை நாமே அணு ஆயுதப்போரிலோ அல்லது சுற்றுச்சூழல் நசிவிலோ தற்கொலை செய்துகொள்ளும் திறமை ஏறத்தாழ வெளிக்கிரகத்திலிருந்து வரும் ஆக்கிரமிப்புக்கு ஒத்ததுதான். நம்மால் இந்த பிரச்னைகளை உணர்ந்து நம்மை ஒற்றுமைப்படுத்தி நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ளமுடியுமா என்பது வரலாற்றாளர்களும், சுற்றுச்சூழல் ஆய்வாளர்களும் ஆராயவேண்டிய விஷயம். இருப்பினும், மனிதர்கள் மட்டுமே தங்களது அழிவைப்பற்றி சிந்திக்கக்கூடியவர்களாகவும், அதற்கு எது காரணமாக இருக்கும் என்றும் சிந்திக்கக்கூடிய முதல் இனம் என்பது உண்மைதான். அதே போல இதுவரை பிறந்தவர்களையும் இனிமேல் பிறக்க்கூடியவர்களையும், நமது அண்டைவீட்டுக்காரர்களாக சிந்திக்கவும் கூடிய முதல் இனம் என்பதும் உண்மைதான். ஆகையால் நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கை முழுக்க பகுத்தறிவற்ற ஆசை மட்டுமல்ல. மோஸஸிலிருந்து, இயேசுவிலிருந்து ஜிம் ஜோன்ஸ் வரைக்கும், மதம் என்ற அமைப்பு, பகுத்தறிவற்ற சிந்தனைகள் அடிப்படையில் கூட மனிதர்களை ஒருங்கிணைக்கும் என்று காட்டுகிறது. அப்படிப்பட்ட பகுத்தறிவற்ற கருத்துக்களின் இடத்தில் பகுத்தறிவு கருத்துக்களை வைப்பதன் மூலம் நமது ஒருங்கிணைப்பை அதிக சக்தியுள்ளதாக ஆக்கலாம்.
—
மொழிபெயர்ப்பு முற்றும்
(மொழிபெயர்ப்பாளர் குறிப்பு)
இந்த கட்டுரை இந்த இணையப்பக்கத்திலுள்ள கட்டுரையின் மொழிபெயர்ப்பு
http://strugglesforexistence.com/?p=article_p&id=13
டாக்டர் ஜான் ஹார்டுங் அவர்களது அனுமதியுடன் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது
1996 இல் வெளிவந்த இந்த கட்டுரை, விவிலியத்தை பற்றிய புதிய ஆய்வு ரீதியிலான பார்வையை அளித்துள்ளது
இது பற்றி 1996இலேயே நடந்த விவாதங்களும் அந்த இணையபக்கத்தின் கீழேயே உள்ளன..)
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -11
- ஜான் ஹார்ட்டுங் கட்டுரை பற்றி
- அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 10 – இறுதியில்
- ஆதலினால் காதல் செய்வோம்.. கவிதைத் தொகுதி.. எனது பார்வையில்..
- கெண்டை மீன்குஞ்சும் குர்ஆன் தேவதையும், திறனாய்வியல் நோக்கு
- தருணங்கள்
- இவர்களது எழுத்துமுறை – 22 நாஞ்சில்நாடன்
- சிறுகதைச் சிற்பி கு.ப.ராஜகோபாலன்
- நினைக்க இனிக்கும் நெடுநல்வாடை!
- தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் நூல் வெளியீட்டு விழா
- காலச்சுவடு நூல் வெளியீட்டு நிகழ்வு
- சாயல்கள்
- யாசகம்
- ஷங்கர நாராயணனன் காட்டும் ”வேற்றூர் வானம்”
- ஓயாத காற்று
- அது எது..!
- எப்படியும்… ப்ரியம் எனக்கு!
- சில மழை இரவுகள்…
- தோற்றம் எங்கே
- வியாபாரம்
- வலியதுகள் வாழ்கின்றன
- கொடுமைக்குக்குறைவில்லை!
- பிரதீபா கவிதைகள்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதன் விதிக்குப் பலியானவர் ! (கவிதை -39 பாகம் -1)
- ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
- ஒப்பந்த மரணம்
- அர்ச்சனை
- கல்விக்குக் கொடுப்பவர்கள் காலத்தை வென்றவர்கள்
- அவரவர் பார்வையில்
- நினைவுகளின் சுவட்டில் – (59)
- தரமிழந்த கல்வி நிலையிலிருந்து தலை நிமிருமா தமிழகம்?
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) முத்தெடுப்போன் உடை காலியானது (கவிதை -28)
- தமிழினம் போற்றும் தமிழ்மனம்
- M.ராஜா கவிதைகள்
- திரை கடல்
- இன்னொருவன்
- போதனை…
- அன்புக்கவி
- கோநா கவிதைகள்
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- பிரபஞ்ச விஞ்ஞான மேதை டாக்டர் ஸ்டீஃபன் ஹாக்கிங்