பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 12(அத்தியாயம் 18)

This entry is part [part not set] of 40 in the series 20071101_Issue

எஸ் மெய்யப்பன்


அத்தியாயம் பதினெட்டு

மோட்ச சந்நியாச யோகம்
சந்நியாசம் என்றாலும் தியாகம் என்றாலும் ஒன்றுதான். செயல்களைத் துறப்பது சந்நியாசம் செயல்களால் கிடைக்கும் பலன்களைத் துறப்பது தியாகம்.
இதில் 78 சுலோகங்கள் அடங்கியுள்ளன.

அர்ஜுனன்: 1கேசி என்ற அரக்கனை அழித்த 2நீண்ட கைகளையுடைய கண்ணா, சந்நியாசம், தியாகம் ஆகியவற்றின் உண்மைப் பொருளைத் தனித்தனியே அறிந்து கொள்ள விரும்புகிறேன்.
கண்ணன்: பலன் 3கருதிச்செய்யும் செயல்களைத் துறப்பது சந்நியாசம் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். அந்தச் செயல்களால் கிடைக்கும் பலன்களைத் துறப்பது தியாகம் என்று பண்டிதர்கள் சொல்லுகின்றனர். ஆசை முதலியவற்றை விட்டுவிடுவதைப் போல், செயல்களையும் துறந்துவிடவேண்டும் என்று சில அறிஞர்கள் கருதுகின்றனர். வேறு சிலர் வேள்வி, தானம், தவம் ஆகிய செயல்களை விடக்கூடாது என்கின்றனர்.
வேள்வி, தானம், தவம் ஆகிய மூன்று செயல்களையும் விடாமல் செய்தே தீர வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்தும். விதிக்கப்பட்ட செயலை விட்டுவிடுவது முறையற்றது. ஏனெனில் இச்செயல்கள் தான் அறிஞர்களைத் தெளிய வைத்துத் தூய்மைப்படுத்துகின்றன. ஆனால் அவர்கள் அவற்றைச் செய்யும்போது பலன்களில் பற்றைத் துறந்து செய்யவேண்டும்.
பாரதச் செல்வனே, இந்தத் தியாகத்தைப் பற்றிய எனது கொள்கை என்ன என்பதைக் கேள். தியாகம் மூன்று வகையானது. விதிக்கப்பட்ட செயலை மதிமயக்கத்தால் துறப்பது4 தாமசத் தியாகமாகும். உடல் வருந்தப் பணி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தாலும், அதனால் உண்டாகப்போவது துன்பமே என்ற விரக்தியாலும் ஒருவன் செயலிழந்து நின்றால், அது ராஜசத் தியாகமாகும். அதற்கான பலன் அவனுக்குக் கிட்டாது. செய்யுந் தொழிலே கடமை என்றெண்ணிச் செயல்படும்போது பலன்களின் மேல் பற்றைத் துறந்துவிடுவது சாத்விக தியாகமாகும். சத்வகுணம் நிறைந்து புத்தியில் சிறந்தவன், ஒரு தொழில் நல்லது என்று அதை நாடுவதும் 5இல்லை.. தீயது என்று அதைவிட்டு ஓடுவதும் இல்லை. உடலெடுத்தவன் எவனும் செயல்களை அறவே விட்டுவிட முடியாது. ஆனால்.. அதனால் வரும் பலாபலன்களைத் துறந்துவிட முடியும். அத்தகையவனே உண்மையான தியாகி. இத்தகைய தியாகிகள் அல்லாதவர்கள் இறந்த பிறகு 6இனியது, இன்னாதது, இரண்டும் கலந்தது என்ற பலன்களை அடைவார்கள். ஆனால்.. உண்மைத் தியாகிகளுக்கு அது இல்லை. இனி சந்நியாசத்தைப் பற்றி விளக்குவேன் அர்ஜுனா.
சந்நியாசம் பூண்டு எதிலும் பற்றினை நீக்கி, ஆசையைப் போக்கி மனத்தை வெற்றி கொண்டவன், இனி எதுவும் செய்ய வேண்டியதில்லை என்ற 7நிஷ்காமிய கருமா எனும் உயர்ந்த நிலையடைகிறான். இவ்விதம் உயர்நிலை அடைந்தவன் ஞானத்தின் கொடுமுடியாகிய பிரம்மத்துடன் எவ்வாறு இணைகிறான் என்பதைச் சுருக்கமாகச் சொல்கிறேன்.
அவன் அறிவின் தூய்மையாலும், மனத்தின்மையாலும் தன்னையே அடக்கிவிடுகிறான். ஒலி, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் எனும் ஐம்புலன் சுகங்களையும் ஒடுக்கி விடுகிறான்‚ விருப்பு வெறுப்புகளைக் கடந்துவிடுகிறான், தனிமையில் இருக்கிறான், கொஞ்சமாய் உண்கிறான்‚ மனம், மொழி, மெய்யினை அடக்கி தியானத்தில் திளைக்கிறான், வைராக்கியம் என்ற வாளை எடுத்து அபிமானம், அகந்தை, ஆணவம், காமம், மோகம், கோபம் ஆகியவற்றை வெட்டிச் சாய்க்கிறான்‚ தனது என்ற எண்ணம் நீங்கி 8அமைதியில் பாய்கிறான். முடிவில் பிரம்மத்தில் தோய்கிறான். இத்தகைய உத்தமனின் உள்ளம் தெளிந்து விடுகிறது. கவலை மறைந்துவிடுகிறது. ஆசை அழிந்து விடுகிறது. எல்லா உயிர்களும் சமமே என்ற எண்ணம் தோன்றி விடுகிறது‚ அவனுடைய உயர்ந்த பக்தி என்மேலேயே ஊன்றிவிடுகிறது‚ இதனால் „நான் யார்.. எவ்வளவு பெரியவன்?… என்பதைப் பூரணமாய் அறிந்து கொள்ளுகிறான்‚ இவ்விதம் உள்ளது உள்ளபடி 9என்னை அறிந்து கொண்ட பிறகு என்னுடனேயே கலந்து விடுகிறான்‚
நன்கு சித்தாந்தம் செய்யப்பட்டுள்ள சாங்கிய10 சாத்திரத்தின்படி, ஒரு செயல் நிகழ்வதற்கு ஐந்து காரணங்கள் இருந்தாக வேண்டும். இடம், இயங்கும் மனிதன், அவனது செயல்கள், செயலுறும் கருவிகள், அதற்கும் மேல் ஐந்தாவதாக இறையருள் தேவை. மனம், வாக்கு, காயங்களால் மனிதன் நல்லது கெட்டது எது தொடங்கினாலும் இவ்வைந்துமே அதற்குக் காரணங்களாகும். அறிவு, அறியும் பொருள், அறிபவன் என்ற மூன்றும் செயல் செய்யத் தூண்டுகின்றன. கருவி, செயல், அதைச் செய்பவன் என்ற மூன்றும் செயலை முடித்து வைக்கின்றன. இதையறியாமல் எதையும் „நானே செய்தேன்‚… என்பவன் பக்குவமடையாத மூடனாவான். ஆகவே அர்ஜுனா‚ அகந்தையை மறந்தவன், பற்றினைத் துறந்தவன் எத்தனை பேரைக் கொன்று குவித்தாலும் பாவம் அவனைப் பற்றாது என்பதை அறிவாயாக, அறிவு, செயல், அதைச் செய்பவன் என்ற மூன்றும் கூட குணவேறுபாடுகளால் மூன்று வகைப்படும் என்று சாங்க்கிய11 சாஸ்திரம் விளக்குவதையும் இப்போது சொல்லுகிறேன் கேள்.
வேறு வேறாய்ப் பிரிந்து நிற்கும் அனைத்து உயிர்களிலும் பிரிவற்றதும், அழிவற்றதுமான ஒரே ஆத்மாவைக் கண்டு கொள்ளும் அறிவு சாத்விக அறிவு. அனைத்து உயிர்களையும் வேறு வேறாகப் கண்டு அவற்றில் உறையும் ஆத்மாக்களும் வேறு வேறானவை என்று கருதும் அறிவு ராஜச அறிவு. நிகழ்த்தும் செயலே எல்லாப் பலன்களையும் கொடுத்துவிடும் என்றெண்ணி அதுவே கதியெனக் கிடப்பதும், காரணமற்றதும், கடுகிலும் சிறியதும், உண்மையில் வறியதுமான அறிவு தாமச அறிவு.
நித்தியமென்று விதிக்கப்பட்ட சத்தியச் செயலை, பலன்களைவிட்டு, பற்றினைச் சுட்டு, விருப்பு வெறுப்பின்றிச் செய்தால் அது சாத்விகச் செயல். அகங்காரச் சித்தனாலும் பலன் கருதும் பித்தனாலும் மிகுந்த ஆயாசத்துடன் செய்யப்படும் செயல், ராஜசச் செயல். வினையின் விளைவையும், வீண் பொருட் செலவையும், செய்பவன் பலத்தையும், மற்றவர் நலத்தையும் எண்ணிப் பார்க்காமல் செய்யும் செயல் தாமசச் செயல்.
பக்குவ மனத்துடன் பற்றினை வென்றவன், உறுதியின் உச்சியில் ஊக்கமாய் நின்றவன், உற்சாகத்தை உடமையாய்ப் பெற்றவன், வெற்றி தோல்வியில் வேறுபாடற்றவன் சாத்விகன் எனப்படுவான். பலாபலன்களில் பற்றினை வைத்தவன், பணம் என்னும் பேயைப் பற்றிப் பிடித்தவன், தொல்லைகள் பிறர்க்குக் கொடுக்கத் துடிப்பவன், சுத்தமென்பதை அறவே துடைத்தவன், அழுகையும் சிரிப்பும் ஒருங்கே படைத்தவன் ராஜகன் எனப்படுவான். பரபரப்பானவன், பக்குவமற்றவன், முரடன், திருடன், மோசக்காரன், துக்கம் நிறைந்தவன், சோம்பலில் உறைந்தவன் தாமசன் எனப்படுவான்.
இது போலவே அர்ஜுனா12.. சத்வம் முதலிய குணவேறுபாடுகளுக்கு ஏற்ப புத்தியும், துணிவும் மூன்று வகைப்படும். மேலும் துக்கத்தை வீழ்த்தி மகிழ்ச்சியில் ஆழ்த்தும் பயிற்சியால் கிடைக்கும் சுகமும் கூட மூன்று வகைப்படும். இவை பற்றி இப்போது விளக்கிக் கூறுவேன், செய்யத்தக்கது, செய்யத் தகாதது.. அஞ்சத்தக்கது, அஞ்சத்தகாதது.. நாடத்தக்கது நாடத்தகாதது.. கூடத்தக்கது, கூடத்தகாதது.. பந்தத்தில் சிக்க வைப்பது, சொர்க்கத்தில் சொக்க வைப்பது என்பவற்றை பகுத்தறியக் கூடியது சாத்விக புத்தியாகும். தர்மத்தையும் தாறுமாறாகப் புரிந்து கொள்வது ராஜச புத்தியாகும். அதர்மத்தையும்.. தக்கதையும், தகாததையும் அறியாமைச் சேற்றில் சிக்கி, தர்மத்தையே அதர்மமாகவும், அதர்மத்தையே தர்மமாகவும் ஏறுமாறாகப் புரிந்து கொள்ளுவது தாமச புத்தியாகும்.
யோகத்தினால் கைகூடி வந்த எந்தத் துணிவால் உயிரையும், புலன்களையும் மனமானது அடக்கியாள்கிறதோ, அதற்குச் சாத்விகத் துணிவு என்று பெயர். பற்று மிகுதியால் பலனை எதிர்பார்த்து எந்தத் துணிவு அறம், பொருள், இன்பங்களைப் பேணிக்காக்கிறதோ அதற்கு ராஜசத் துணிவு என்று பெயர். தூக்கத்தையும், ஏக்கத்தையும்.. தொல்லை கொடுக்கும் துயரத்தையும்.. 13அச்சத்தையும் ஆணவத்தையும் விடாமல் பிடிக்கும் மூடனின் துணிவுக்கு தாமசத் துணிவு என்று பெயர்.
முதலில் நஞ்சுபோல் கசக்கும். முடிவில் அமுதம்போல் இனிக்கும். புத்தித் தெளிவினால் கிடைக்கும் இந்தச் சுகமே சாத்விக சுகமாகும். பொறி புலன்களின் பொருத்தத்தால் முதலில் அமுதமாய் இனித்து முடிவில் கசக்கும் சுகமே ராஜச சுகமாகும். முதலிலும் முடிவிலும் மயங்கச் செய்து.. மறதியிலும், சோம்பலிலும், தூக்கத்திலும் பிறக்கும் சுகமே தாமச சுகமாகும்.
இதுவரை நான் விளக்கிக் கூறியதுபோல் இயற்கையான இம்முக்குணங்கள் இல்லாத உயிர்கள், மண்ணுலக மனிதர்களிலும் சரி.. விண்ணுலக தேவர்களிலும் சரி.. இல்லவே இல்லை. இவ்விதம் அவரவரிடம் இயல்பாய்த் தோன்றும் குணங்களுக்கு ஏற்றபடி தான் பிராமணர், ஷத்ரியர், வைசியர். சூத்திரர் என்ற செயற் பாகுபாடுகள் 14வகுக்கப்பட்டுள்ளன.
மனத்தை அடக்குதல், புலன்களை மடக்குதல்.. தவப்பணி ஆற்றுதல், ஆத்திகம் போற்றுதல், தூய்மை, பொறுமை, நேர்மை முதலிய குணங்களைப் பூணுதல்.. அனுபவம், ஞானம் ஆகியவை காணுதல்;15 பிராமணருக்கு இயல்பான தொழில்கள். ஆண்மையும், வீரமும், உறுதியும், துணிவும்.. ஈகையும், திறமையும்.. ஆளும் தன்மையும்.. போரினில் புறங் கொடா வீரியத் திண்மையும் 16~த்ரியர்களுக்கு இயல்பான தொழில்கள். பயிர்த்தொழில் செய்தல், பசுக்களைக் காத்தல், வாணிபம் புரிதல் ஆகியவை வைசியர்களுக்கு இயல்பான தொழில்கள். மற்றவர் தேவைக்கேற்ப சேவை புரிவதே சூத்திரனுக்கு இயல்பான தொழில்.
தனக்கு இயல்பான தொழிலைக் களிப்புடன் செய்பவன் சித்தியடைகிறான். கர்மத்தில் கருத்து வைக்கும் அவன் எவ்விதம் சித்தியடைகிறான் என்பதைச் சொல்லுகிறேன் கேள்‚
அவன் தன் கடமையைச் செய்கிறான் அதுவே எங்கும் நிறைந்த பரம்பொருளுக்கு செய்யும் பூiஐ. அது பரம்பொருளை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. அதனால் அவன் சித்தியடைகிறான். அடுத்தவர் கடமையைச் சிறப்புற முடிப்பதைக் காட்டிலும், தனக்கென அமைந்த தகவுறு கடமையை அரை குறையாக விடுப்பதும் நல்லதே‚ அப்படித் தனக்கென அமைந்த தொழிலைச் செய்பவன் பாவத்தை அடைய மாட்டான். எனவே இயல்பாய் அமைந்த தொழில் இழிவானதென்றாலும் அதை விட்டுவிடக் கூடாது. ஏனெனில் நெருப்பைப் புகையானது சுற்றிக் கொண்டருப்பதைப் போல், எந்தத் தொழிலையும் ஏதேனும் ஒரு குறை பற்றிக் கொண்டுதான் இருக்கிறது.
எந்தத் தொழிலை எங்கே செய்து கொண்டருந்தாலும் என்னையே சரணடைந்தவன் என்னருளால் அழிவற்ற நிலையை அடைகிறான். அதனால் அர்ஜுனா, காரியங்கள் அனைத்தையும் எனக்கே காணிக்கையாக்கி விடு, உனது குறிக்கோளாய் என்னையே கருதி விடு‚ அடைய வேண்டிய அறிவாய் என்னையே நினைத்து விடு, என்றும் எப்பொழுதும் என்னையே எண்ணத்தில் கொண்டு விடு‚ அப்படிச் செய்தால் உனக்கு வரும் இடையூறுகள் தூள் தூளாகும்‚ நான் சொன்னதைக் கேட்காவிட்டால் நீயே தூள் தூளாவாய்.
அர்ஜுனா, நான் போர் செய்ய மாட்டேன்‚… என்று ஆணவத்தால் நீ முடிவு செய்தாலும், அந்த முயற்சியும் நிச்சயம் பலிக்காது. ஏனென்றால் பிறவிக்குணம் உன்னைப் போர் செய்யத் தூண்டிவிடும். மதி மயக்கத்தால்தான் போர் செய்ய மறுக்கிறாய், இயல்பான உன் தொழிலுக்குக் கட்டுப்பட்டு, உன்னையே மறந்து நீ போர் செய்யத்தான் போகிறாய்‚ ராட்டினத்தில் பூட்டிய பாவைகளைப்போல் இறைவன் தன் மாயா சக்தியால் அனைத்து17 உயிர்களையும் ஆட்டிப்படைக்கிறான். அவற்றின் உள்ளங்களில் நின்று பொங்கி வழிகிறான். அதனால் உடலாலும் உள்ளத்தாலும் அவனையேச் சரணடைந்து விடு‚ அவனுடைய அருளால் உனக்கு அமைதி கிடைக்கும். அழிவற்ற உயர்ந்த நிலை சித்திக்கும். புரம ரகசியமான இந்த ஞானத்தைப் பற்றி விரிவாக விளக்கிச் சொல்லி விட்டேன். இதை நன்றாக ஆராய்ந்து பார்‚ பிறகு எப்படித் தோன்றுகிறதோ.. அப்படிச் செய்‚
அர்ஜுனா‚ இன்னும் ஒரு முறை இரகசியங்களுக்குள் இரகசியமான என் பரம வசனத்தைக் கேள்‚ நீ எனக்கு 18நண்பன் என்பதால்தான் நன்மை தரும் இந்த இரகசியத்தைச் சொல்லுகிறேன்‚ மனத்தை என்னிடமே வை‚ எனக்கே பக்தனாயிரு‚ எனக்கே பூஜை செய்‚ என்னையே வணங்கு‚ இப்படியெல்லாம் செய்தால் என்னையே நீ அடைவாய்‚ என் இனிய நண்பனே‚ ஆணையிட்டுச் சொல்லுகிறேன்.. இது சத்தியம்‚ எல்லாவற்றையும் துறந்துவிட்டு என்னையே சரணடைந்து விடு. வருந்தாதே நண்பனே‚ எல்லாப் பாவங்களிலிருந்தும் உன்னை நான் விடுவிக்கிறேன்.
ஆனால் ஒன்று நண்பா‚ இந்த உண்மைகளையெல்லாம் தவமில்லாதவனிடமும், பக்தியற்றவனிடமும், கேட்டும் விருப்ப மில்லாதவனிடமும், என்னை வெறுப்பவனிடமும் எப்பொழுதும் சொல்லாதே‚ இந்தப் பரம ரகசியத்தை என் பக்தர்களிடம் பரப்புபவன் நிச்சயம் என்னையே வந்தடைவான்‚ நான் விரும்பியதைச் செய்வதில் அவனை விடச் சிறந்தவர் வேறு யாருமில்லை. அவனை விடச் சிறந்த அன்பனும் எனக்கு இப்பூவுலகில் இருக்க முடியாது.
நமக்கிடையே இங்கு நடந்த இந்த உன்னதமான உரையாடலை யார் படித்தாலும் சரி.. ஞான வேள்வியால் அவர்கள் என்னை வணங்கியதாகவே நினைப்பேன். அருவருப்பில்லாமல் அக்கரையுடன் ஒருவன் இதைக் காதால் கேட்டால் கூடப் போதும்.. எல்லாப் பாவங்களும் நீங்கி.. அவன் அமரநிலை அடைவான் என்பது உறுதி.
பார்த்தா‚ உன் மனத்தை ஒருமுகப் படுத்தி என் உபதேசத்தைக் கேட்டாயா? தனஞ்சயா‚ அறியாமை என்ற உன் மயக்கம் நீங்கியதா?
அர்ஜுனன்: அச்சுதா‚ உன் அருளால் மயக்கம்19 நீங்கியது‚ இழந்த நினைவு திரும்பவும் வந்தது‚ ஐயம் அகன்றது‚ நன்னிலை அடைந்தேன்‚ நீ செய்யச் சொன்னதை இப்போது செய்யப் போகிறேன்‚ இதோ.. எடுப்பேன் காண்டீபத்தை.. தொடுப்பேன் பகைவர் மீது பாணங்களை‚
(இப்போது காட்சி அரண்மனை முற்றத்திற்கு மாறுகிறதுƒ திருதராஷ்டிரனுக்குப் பக்கத்தில் இருக்கும் அமைச்சன் சஞ்சயன் ஞானதிருஷ்டி மூலம் கண்டு விளக்கியதைத் தொடர்ந்து முடிவுரை கூறுகிறான்)
சஞ்சயன்: இவ்விதம் கண்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த மயிர்க்கூச்செறியும் அற்புதமான உரையாடலை நான் கேட்டேன். வேதவியாசர் அருளால் இரகசியங்களுக்குள் சிறந்த இரகசியமான இந்த யோகத்தைக் கண்ணன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே நான் கேட்டேன். வேந்தே‚ இந்த அதியற்புதமான உரையாடலை நினைத்து நினைத்து நான் மீண்டும் மீண்டும் மகிழ்ச்சி அடைகிறேன்‚ அந்த கண்ணனின் அற்புத வடிவத்தை எண்ண எண்ண எனக்குத் திகைப்புண்டாகிறது. மீண்டும் மீண்டும் மகிழ்ச்சியடைகிறேன்‚ உலக நாதனாம் கண்ணன் இருக்குமிடத்தில்.. காண்டீபம் தாங்கிய அர்ஜுனன் இருக்கும் இடத்தில் செல்வம் கொழிக்கும். வெற்றி செழிக்கும்.. நீதியும் நியாயமும் தழைக்கும் என்பது என் துணிவு.
(பதினெட்டாம் அத்தியாயம் நிறைவு பெற்றது)
1.கண்ணனை விழுங்குவதற்காக கேசி என்ற அசுரன் குதிரை வடிவத்தில் வாயைத் திறந்து கொண்டு வர, கண்ணன் அதன் வாயில் தன் கையை வைத்து, பிறகு வயிற்றுக்குள் செலுத்திக் குடலைக் கசக்கிக் கொன்றான். இதனால் அவனுக்குக் கேசி நிஷீதனன் என்று பெயர் வந்தது.
2.முழங்கால் வரை நீண்டு தொங்கும் கைகளின் அமைப்பு மகாத்மாக்களுக்கு உண்டு.
3.இம்மையில் செல்வம், புகழ், பட்டம், புத்திர பாக்கியம், ஆரோக்கியம், தீர்க்காயுள் முதலியனவும் மறுமையில் சொர்க்கம் முதலிய பதவிகள் வேண்டும் என்று விரும்புவது.
4.பணக்காரனைப் போன்று தானும் சுக ஜீவனம் செய்யவேண்டும் என்று கூலியாள் தன் வேலையை நிறுத்தினால் அவன் வருந்துவான். தமோ குணத்தினின்று உதித்த நித்திய கர்மத் தியாகம் இது போன்றதே. – சுவாமி சித்பவானந்தர்.
5.அழகான வடிவம் எதிரில் வருவதால் கண்ணாடிக்குப் புதிய பெருமையொன்றும் வருவதில்லை. கோணலானதும் அழுக்குப் படிந்ததுமான வடிவம் எதிரில் வருவதால் கண்ணாடிக்குக் குறையொன்றுமில்லை. பொருள்களை உள்ளபடி பிரதிபிம்பத்திற்கிடையில் கண்ணாடி யாண்டும் தன்மயமாயிருக்கிறது. ஆத்ம சாகறியின் முன்னிலையில் நிகழும் பிரகிருதியின் செயல் எதுவானாலும் தன் எதார்த்த சொரூபத்தைப் பற்றிப் பேரறிஞனுக்குச் சந்தேகம் ஒன்றும் உண்டாவதில்லை.
– சுவாமி சித்பவானந்தர்
6.சொர்க்கப் பிராப்தியும் தேவகணப் பிறப்பும் இனியது. நரகப் பிராப்தியும் விலங்குகளாகப் பிறப்பதும் இன்னாதது. பூவுலகப் பிராப்தியும் மனிதராகப் பிறத்தலும் இரண்டும் கலந்தது.
7.கருத்தனுக் காக்கிய நிஷ்காமிய கருமம் கருத்தைத் திருத்திய . ;;.துந் தீ பற கதிவழி காட்டு மென்றுந்தீ பற. – ஸ்ரீ ரமணமகரிஷி
8.இரவுக்கு அழகு நிலவுƒ பகலுக்கு ஆதவன். பக்தனுக்கு அழகு பக்திƒ பக்திக்கு அழகு ஆதவன். அறிவுக்கு அழகு தியானம ;ƒ தியானத்துக்கு அழகு துறவு. துறவுக்கு அழகு சாந்தி‚ அமைதி‚ – துளசி தாசர்.
9.பொருளை அறிவது எனும் போது, அந்தப் பொருளை அந்தப் பொருளாகக் காணும் குண அமைப்பைப் பற்றிய வேறுபாட்டுணர்வும் அதில் அடங்கியிருக்கிறது. இது ஜாடி, இது துணி எனும்போது ஜாடியைத் துணியினின்றும் வேறுபட்டதாகக் காணும் அநுபவத்தையும் அது சொல்கிறது. இந்த வேறுபாட்டுணர்விற்கு இடமில்லை என்றால், குதிரையைத் தேடிச் செல்பவன், எருமையைக் கண்டு ஏன் சமாதானப் படக்கூடாது? – ஸ்ரீ இராமநுஜர்.
10.சாங்கிய சாஸ்திரம் என்பது வேதாந்த சாஸ்திரம். இந்த உலகில் எல்லாவற்றிக்கும் மேலாக ஒரு பரமாத்மா உள்ளது என்பதை விவரிக்கிறது சாங்க்கிய சாஸ்திரம் எனப்படும் வேதாந்த சாஸ்திரம். பிரம்மத்தை அறிவதற்கு இதுவே பிரமாணம்.
11. சாங்கிய சாஸ்திரம் என்று இங்கு கூறப்படுவது கபில முனிவர் இயற்றியது. ஆறு சாஸ்திரங்களுள் இது நான்காவது இடம் பெறுகிறது. பிரபஞ்ச அமைப்பின் கோட்பாடுகளைப் பற்றி இது விளக்குகிறது. பிரபஞ்ச அமைப்பை விளக்க இது முடிவான பிரமாணமாகும். எனவே குணங்களின் பாகுபாடுகளை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு பரமாத்மா உள்ளது என்பதை கபில சாங்கியம் சொல்லுவதில்லை.
12. அர்ஜுனன் என்ற சொல்லுக்கு வெள்ளையானவன் அல்லது தூயவன் என்று பொருள்.
13. நம் வாழ்வில் அச்சம் பூஜ்யமாவது தான் நாம் அடைய வேண்டிய வெற்றிகளில் எல்லாம் மிகப்பெரிய வெற்றியாகும்.
– சுவாமி சச்சிதானந்தா
14. வர்ணாசிரமம் என்பது மனிதனுடைய தொழிலை முன்கூட்டியே நிர்ணயிப்பதாகும். வர்ணாசிரம விதிப்படி ஒரு மனிதன் வாழ்க்கைக்கு வேண்டியதைச் சம்பாதிக்கத் தன் முன்னோர் செய்த தொழிலையே செய்ய வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் தன் தகப்பனின் வர்ணத்தையே அல்லது பரம்பரைத் தொழிலையே இயற்கையாகவே பின்பற்றுகிறது. எனவே வர்ணாசிரமம் என்பது ஒரு வகையில் பரம்பரைச் சட்டமாகும். வர்ணாசிரமம் என்பது இந்துக்களின் மேல் வலிந்து புகுத்தப்பட்ட ஒன்றல்லƒ அது இந்துக்களின் நலனுக்காக நம்பகமானவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சட்டமாகும்ƒ இது மனிதனின் புதுமைக் கண்டுபிடிப்பல்லƒ ஆனால் இயற்கையின் மாற்ற முடியாத சட்டம்ƒ நியூட்டனின் புவி ஈர்ப்பு விதியைப் போல, என்றுமே நிலைத்துச் செயல்படும் ஒரு சட்டம்ƒ புவி ஈர்ப்பு விதி என்பது அது கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பும் இருந்ததைப் போலத்தான் வர்ணாசிரம தர்மமும்ƒ வர்ணாசிரமச் சட்டத்தைக் கண்டுபிடிக்கும் பாக்கியம் இந்துக்களுக்குக் கிடைத்தது. இயற்கையின் சில சட்டங்களைக் கண்டுபிடித்து அவற்றைச் செயல் படுத்தியதன் மூலம் மேற்கத்திய நாட்டார் பொருட் செல்வங்களைப் பெருக்கிக் கொண்டார்கள். அது போலவே இந்துக்கள் எதிர்க்க முடியாத இந்தச் சமுதாயத் தன்மையைக் கண்டுபிடித்து, ஆன்மீகத் துறையில் வேறு எந்த நாடும் சாதிக்க முடியாததைச் சாதித்துக் காட்டியுள்ளனர். – யங் இந்தியா: நவம்பர் 17, 1927.
15.பிராமண கர்மங்கள் அத்யயனம், அத்யாபனம், யஜனம், யாஜனம், தானம், பிரதிக்கிரகம் என ஆறு வகைப்படும். அத்யயனம், யஜனம், தானம் எனும் மூன்றும் ஏனைய வருணத்தாருக்கும் பொதுƒ முதல் மூன்றும் பிராமணருடைய விசேஷ கர்மங்கள் எனப்படும்.
16.~த்ரியன் என்ற சொல்லுக்கு உடலில் காயம்பட்டவன் என்று பொருள்.
17. வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க் கோனாகி யான் எனதென்றவரைக் கூத்தாட்டு வானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே. – திருவாசகம்.
18.அவன் கடாட்சம் எல்லாருக்கும் உண்டு. அவன் அருள் அவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவனுக்கே உண்டு. – குருநானக்
19.மரத்தை மறைத்தது மாமத யானை மரத்தில் மறைந்தது மாமத யானை பரத்தை மறைத்தது பார்முதல் பூதம் பரத்தில் மறைந்தது பார்முதல் பூதமே


Series Navigation

எஸ் மெய்யப்பன்

எஸ் மெய்யப்பன்

பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 11(அத்தியாயம் 14,15)

This entry is part [part not set] of 38 in the series 20071018_Issue

எஸ் மெய்யப்பன்


அத்தியாயம் பதினான்கு

குணத்ரய விபாக யோகம்
குணத்ரய என்பது குணங்கள் விபாகம் என்பது பாகுபாடு. குணங்களின் பாகுபாடுகள் என்பது பொருள்.
சத்வகுணம், ரஜோ குணம், தமோகுணம் ஆகிய மூன்றின் தன்மைகளும் இதில் விளக்கப்படுகின்றன.
இதில் 27 சுலோகங்கள் அடங்கியுள்ளன.

கண்ணன்: தடந்தோள் தனஞ்சயா, ஞானங்களில் உன்னதமான மற்றோரு ஞானத்தைப் பற்றி இப்போது உனக்குச் சொல்வேன், பல முனிவர்கள் இதைப் பின்பற்றி நற்கதி அடைந்துள்ளனர். இதைக் கடைப்பிடிப்பவர்கள் எனக்கே சமமானவர்கள் ஆகின்றனர். அவர்கள் மீண்டும் பிறப்பதில்லை. ஊழிக்காலத்தில் அழிவதும் இல்லை.
மகா இயற்கையே எனது கர்பப்பை. அதில் நான் விதைகளை விதைக்கிறேன். அதிலிருந்து உயிர்களெல்லாம் உற்பத்தியாகின்றன. கர்ப்பத்தில் தோன்றும் அனைத்து வடிவங்களுக்கும் மகா இயற்கையே தாய். நான்தான் விதையைத் தூவும் தந்தை. இந்த இயற்கையிலிருந்து தோன்றியவைதான் சத்துவம், ரஜசம், தமசம், என்னும் மூன்று குணங்கள். இந்த குணங்கள்தான் அழிவற்ற ஆத்மாவை அழியும் உடம்புடன் இறுகப் பிணைத்து விடுகின்றன. இதில் சத்துவகுணம் என்பது பரிசுத்தமானது. ஒளி மிகுந்தது. இடர்ப்பாடற்றது. இது ஆத்மாவுக்குச் சுகத்திலும் ஞானத்திலும் பற்றுதலை உண்டாக்கும். ரஜோகுணம் என்பது ஆசை வடிவானது. இது ஆத்மாவுக்குக் காரியங்களின் மேல் பற்றுதலை உண்டாக்கும். தமோகுணம் என்பது அறியாமையால் தோன்றுவது. எல்லா உயிர்களையும் மயங்கச் செய்வது. இது அசட்டை, சோம்பல், உறக்கம் ஆகியவற்றுடன் ஆத்மாவைப் பிணைக்கும். சுருங்கச் சொன்னால், சத்துவ குணம் சுகத்தில் சேர்க்கும். ரஜோகுணம் செயலைத் தூண்டும். தமோகுணம் கவனமின்மையால் தள்ளும். சிலநேரங்களில், சத்வகுணம் ரஜசையும் தமசையும் அமுக்கி மேலோங்கி நிற்கும். சில சமயங்களில் ரஜோகுணம் சத்துவம், தமஸ் இரண்டையும் அமுக்கித் தலைதூக்கி நிற்கும். இன்னும் சில நேரங்களில் தமோகுணம், சத்துவம், ரஜஸ் இவைகளை அமுக்கி உச்சத்தில் நிற்கும். உடம்பின் ஒன்பது வாயில்களிலும் ஞானி ஒளி வீசும்போது சத்துவ குணம் ஓங்கியுள்ளது என்பதை அறியலாம். பேராசை, பிறன்பொருள் விரும்பல், வினை விருப்பம், வினைப் பெருக்கம், துடிதுடிப்பு, பரபரப்பு இவை ரஜோகுணம் மேலெழும்போது உண்டாகின்றன. விவேகமின்மை, முயற்சியின்மை, அசட்டை, மதிமயக்கம் ஆகியவை தமோகுணம் மேலிடும்போது உண்டாகின்றன.
சத்துவகுணம் ஓங்கி நிற்கும்போது உயிர்விடுபவன், உத்தம ஞானிகள் வாழும் உலகத்தை அடைகிறான். ரஜோகுணம் ஓங்கி நிற்கும் போது இறப்பவன், தொழிற்பற்று கொண்டவர் குலத்தில் பிறக்கிறான். தமோகுணம் ஓங்கி நிற்கும் போது மரிப்பவன், மூடர்களிடையில் பிறக்கிறான்.
சாத்துவிகத்தின் பலன் நன்மைƒ இதிலிருந்து ஞானம் பிறக்கிறது. ரஜசின் பலன் துன்பம். இதிலிருந்து பேராசை தோன்றுகிறது. தமசின் பலன் மடமைƒ இதிலிருந்து சோம்பல், மயக்கம், அறியாமை உண்டாகிறது.
சத்வ குணத்தார்; மேலெழுந்து சொர்க்கமடைகின்றனர். ரஜோகுண மனிதர்கள் மீண்டும் மனிதர்களாகவே மண்ணில் பிறக்கிறார்கள். தாமச மூடர்கள் பறவை மற்றும் பிற ஜந்துக்களாகப் பிறந்து தாழ்நிலை அடைகிறார்கள். இம்மூன்று குணங்களையும் கடந்தவன் பிறப்பு, மூப்பு, துக்கம், இறப்பு இவற்றிலிருந்து விடுபட்டு மரணமிலாப் பெருவாழ்வு பெறுகிறான். அத்தனை செயல்களையும் குணங்களே இயக்குகின்றன என்பதையும் அவற்றைத் தவிர வேறொரு கர்த்தா இல்லை என்பதையும், குணங்கள் வேறு.. தான் வேறு என்பதையும் கண்டு கொண்டவன் என் சொரூபமாகவே மாறிவிடுகிறான்.
அர்ஜுனன்: பிரபோ, ஒருவன் இந்த முக்குணங்களையும் கடந்துவிட்டான் என்பதற்கு அடையாளம் என்ன? அவன் எப்படி நடந்து கொள்வான்? அவன் எவ்விதம் இந்த முக்குணங்களையும் கடக்கிறான்?
கண்ணன்: பாண்டவனே, முக்குணங்களைக் கடந்தவன் தெளிவு, செயல், மயக்கம், ஆகியவை தோன்றும்போது அவற்றை வெறுக்கவும் மாட்டான். தோன்றாத போது தேடித்திரியவும் மாட்டான். எல்லாம் குணங்களின் இயக்கமே என்பதை உணர்ந்து எதிலும் அக்கரை இல்லாதவன் போல் காட்சியளிப்பான். குணங்களின் தாக்குதலுக்கு அசைந்து கொடுக்கமாட்டான். தன்னிலை தவறமாட்டான். இன்ப துன்பங்களைச் சமமாகக் கருதுவான். இகழ்ச்சியும் புகழ்ச்சியும் இன்முகத்துடன் ஏற்பான். மான அவமானங்களை நிகராக நினைப்பான். நண்பன் பகைவன், பிடித்தவன் பிடிக்காதவன் இவர்களை இணையாகக் காண்பான். பொன்னையும் மண்ணையும் ஒன்றுபோல் பார்ப்பான். தனக்கென வேண்டிய தொழில் எதும் செய்யான். இத்தகையவனே1 குணங்களைக் கடந்தவன் என்று கூறப்படுகிறான்.
அர்ஜுனா, ஒப்பற்ற சுகத்திற்கும் அழிவற்ற தர்மத்திற்கும் நானே இருப்பிடம். அப்படிப்பட்ட என்னைச் சலனமிலா பக்தியோகத்தால் வழிபடுகிறவன், முக்குணங்களையும் கடந்து2, பிரம்மம் ஆவதற்குத் தகுதியடைகிறான்.
(பதினான்காம் அத்தியாயம் நிறைவு பெற்றது)
1. உதாரணம் சுகர், ஜடபரதர் முதலியவர்கள்.
2. பிருஹத் என்ற சொல்லினின்றும் பெறப்படும் பிரம்மம் என்றால், நிறையுள்ள, பரிபூரணமான குணங்களுடன் கூடிய அரும்பொருள் என்று பொருள்படும். -ஸ்ரீ இராமாநுஜர்



அத்தியாயம் பதினைந்து
புருஷோத்தம யோகம்
புருஷர்களில் உத்தமமானவன் என்பது பொருள். இயற்கை, ஆத்மா இரண்டையும் தன்வசப்படுத்திக் கொண்டு நிற்கும் இறைவன், அவற்றிலும் மேலானவர். அதனால் புருஷோத்தமன் எனும் பெயர் பெறுகிறான். சம்சாரம் என்பது அசுவத்த மரம் போன்றது. பற்றைத் துறப்பது என்ற வாளால் தான் அதை வெட்டிச் சாய்க்க முடியும்.
இதில் 20 சுலோகங்கள்அடங்கியுள்ளன.

கண்ணன்: சம்சாரம் என்ற 1அசுவத்த மரம் மேலே 2வேரும் கீழே கிளைகளும் கொண்டது, அது அழிவில்லாதது. வேதங்களே அதன் இலைகள். கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து உற்றறியும் நலன்களின் செயல்களே அதன் தளிர்கள். சத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களால் செழித்து வளர்ந்த அதன் கிளைகள் கீழ்நோக்கிப் பரவியுள்ளன. மனித உலகில் பரவலாய்க் காணும் தொழிலின் தொகுப்புகள் தான் பல்கிப் பெருகும் அதன் வேர்கள். இவ்வாறு வேதங்களே கூறுகின்றன. இதை அறிந்தவனே வேதத்தை அறிந்தவன்.
ஆதியும் அந்தமும் இல்லாத இந்த அசுவத்த மரம் கண்ணுக்குத் தெரிவதில்லை. இதற்கு அடியுமில்லை.. முடிவுமில்லை.. இருப்புமில்லை. வேரூன்றிய இந்த அசுவத்த மரத்தைக் கூரூன்றிய பற்றிலாமை எனும் உறுதியான 3வாளால் வெட்டித் துணிந்திட வேண்டும். பிறகு அடைந்தவர் திரும்பாத இனிய உலகைத் தேடத் துணிந்திட வேண்டும். முடிவில் அந்த மரத்தையே உண்டு பண்ணிய ஆதிபுருஷனை அடைந்து பணிந்திட வேண்டும். பற்றுதல் என்னும் குற்றத்தைப் போக்கி.. இன்ப துன்ப இரட்டைகளை நீக்கி.. கர்வம், மோகம், காமம் இவற்றை விலக்கி.. ஆத்மஞானத்தைத் துலக்கி ஆத்மாவின் உண்மை வடிவத்தை அறிந்தவர்கள் அந்த அழிவிலா இடத்தை அடைகின்றனர். அந்த அற்புத இடத்தைச் சூரியனோ சந்திரனோ அல்லது பெரு நெருப்போ பிரகாசிக்கச் செய்வதில்லை. அது தானாகவே பிரகாசிக்கிறது. அதுவே எனது பரமபதம்.
அநாதியான என்னுடைய அம்சங்களில் ஒன்றான ஆத்மாதான் உலகெங்கும் உலாவிக் கொண்டிருக்கிறது. அதுவே உடம்பிலுள்ள மனம் முதலான 4ஆறு புலன்களுக்கும் தலைமை தாங்கி இங்குமங்கும் இழுத்துச் செல்லுகிறது. மலர்களின் மணத்தைக் காற்று எடுத்துச் செல்லுவதைப் போல், அந்த ஆத்மா உடல் எடுக்கும் போதும் அதை விடுக்கும் போதும் புலன்களைத் தன்னுடனே எடுத்துச் செல்லுகிறது. அது உடம்பிலுள்ள கண்ணால் பார்க்கிறது. காதால் கேட்கிறது. நாவால் சுவைக்கிறதுƒ நாசியால் நுகர்கிறது. சதையால் உணர்கிறது. மனத்தால் நினைக்கிறது. அந்த ஆத்மா உடலை விடுவதையும் உடலில் படுவதையும், புலன்கள் மூலம் அனுபவிப்பதையும், குணங்களுடன் கூடி மிளிர்வதையும் மூடர்கள் அறிய மாட்டார்கள். ஞானக்கண் கொண்டவர்களே அறிவார்கள். அந்த ஞானிகள் ஆத்மாவைத் தங்களுக்குள்ளாகவே காண்பார்கள். மூடர்கள் எவ்வளவு தான் முயன்றாலும் அந்த ஆத்மாவை காண மாட்டார்கள்.
சூரியனின் ஒளியும், சந்திரனின் கிரணமும், நெருப்பின் ஜுவாலையும் என்னுடைய பிரகாசம் தான். நான் தான் சந்திரனாக அமுத மழை பொழிந்து பயிர் பச்சைகளையெல்லாம் வளர்க்கிறேன். என் பலத்தினால் பூமிக்குள் புகுந்து எல்லா உயிர்களையும் தாங்குகிறேன். மேலும், உயிருக்கு ஆதாரமான உள்மூச்சு, வெளி மூச்சு, ஆகியவற்றின் துணை கொண்டு, உதரக் கனலாக மாறி, 5நான்கு வகை உணவுகளையும் ஜீரணிக்கிறேன். அனைவரது இதயங்களிலும் நிறைந்து, நான் தான் நினைக்கவும் செய்கிறேன்… மறக்கவும் செய்கிறேன். அறிவை ஆக்கவும் செய்கிறேன்.. பிறகு நீக்கவும் செய்கிறேன். வேதங்கள் விளக்கும் உட்பொருள் நான் தான்ƒ வேதாந்தத்தைச் செய்தவனும் நான் தான். முற்றும் அதை அறிந்தவனும் நான் தான்.
ஆத்மாவில் இரண்டு வகையுண்டு. ஒன்று அழியக் கூடியது, மற்றொன்று அழிவில்லாதது. எல்லா உயிர்களும் அழியக் கூடிய ஆத்மாவின் வடிவங்களே ஆகும். வடிவத்தில் உறைவதே அழியாத ஆத்மாவாகும். இவை இரண்டையும் விட மேலான மற்றொரு ஆத்மா இருக்கிறது. அது அழிவற்ற ஈசனாய் மிளிர்ந்து, மூன்று உலகிலும் பரிணமித்து, அவற்றைத் தாங்குகிறதுƒ அது தான் பரமாத்மா. அந்த பரமாத்மா நான் தான். அதனால் தான் 6புருஷோத்தமன் என்று எல்லோரும் என்னைப் போற்றுகிறார்கள். அப்படிப்பட்ட என்னை உள்ளபடி அறிந்தவன், எப்பொழுதும் என்னையே தொழுவான்.
குற்றமற்ற அர்ஜுனா, குவலயத்தில் இரகசியமான சாஸ்திரத்தை இது வரை உனக்குச் சொன்னேன். இதை அறிந்தவனே அறிஞன். அவனே செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டிய முறைப்படி செய்தவனாவான்.
(பதினைந்தாம் அத்தியாயம் நிறைவு பெற்றது)
1. அசுவத்த மரம்: அச்வத்தம் என்றால் இன்றிலிருந்து நாளை இல்லாதது என்று பொருள்.
2. படைப்புக் கடவுளான நான்முகனே மேற்புறம் உள்ள வேர். பூவுலக மானிடர் முதலியவர் கிளைகள். மனிதர்கள் செய்யும் செயல்களால் உண்டாகக் கூடியவை கீழ் நோக்கிப் பரவிய கிளைகள். – ஸ்ரீ ராமாநுஜர்
அசுவத்தம் என்பது அரச மரம். அரசமரம், ஆலமரம் இரண்டும் ஒரே இனத்தைச் சேர்ந்தவை. ஆலம் விழுது மற்ற வேர்களுக்கு நேர் மாறாக வேலை செய்கிறது. வேர் கீழே பூமியில் சத்தை வாங்கி, மேலே எடுத்துச் செல்கிறது. ஆலம் விழுதோ மேலே கிளையில் சத்தை வாங்கிக் கொண்டு கீழ் நோக்கி வருகிறது. மாயப் பிரபஞ்சம் மேலே பரமபொருளிடத்தில் இருந்து சத்தை வாங்கிக் கொண்டு கீழே பிரகிருதியாக பரிணமித்து வருகிறது.
3.வந்த வரவை மறந்துமிக்க மாதர் மயக்கத்தி லாழும் இந்த மயக்கத்தை அறுக்க – எனக் கெந்தை எழில்வாள் கொடுத்தான். – தாயுமானவர்
4.ஐம்புலன்களுடன் மனமும் சேர்ந்து ஆறு புலன்கள் ஆயிற்று.
5.ப~;யம் – கடித்து உண்பவை, போஜ்யம் – கடிக்காமல் விழுங்குபவை, லேஹ்யம் – நாக்கால் நக்குபவை, சோஷ்யம் – வாயல் உறிஞ்சக் கூடியவை என்று உணவு நால் வகைப்படும்.
6.புஷ்பேசு ஜாதி புரு ஷேசு விஷ்ணு நாரீசு ரம்பா நகரேசு காஞ்சி. – காளிதாசர்.


Series Navigation

எஸ் மெய்யப்பன்

எஸ் மெய்யப்பன்

பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 11(அத்தியாயம் 16,17)

This entry is part [part not set] of 37 in the series 20071025_Issue

எஸ் மெய்யப்பன்


அத்தியாயம் பதினாறு
தெய்வாசுர சம்பத் விபாக யோகம்

தெய்வ குணங்களும் அசுர குணங்களும் என்று பொருள். தெய்வீக குணங்கள் யாவை… அசுர குணங்கள் யாவை என்பவை இதில் விளக்கப் பெற்றுள்ளன.
இதில் 24 சுலோகங்கள் அடங்கியுள்ளன.

அர்ஜுனன்: தாமரைக் கண்ணா‚ தெய்வ குணங்கள் யாவை?
கண்ணன்: அகத்தூய்மை, புறத்தூய்மை, அஞ்சாமை, ஆசையில்லாமை, ஆத்திரமில்லாமை, தற்பெருமையில்லாமை, வஞ்சகமில்லாமை, சபலமில்லாமை, பழிசொல்லாமை, சினங் கொள்ளாமை, செருக்கில்லாமை, தருக்கி நில்லாமை, வாய்மை, நேர்மை, வலிமை, பொறுமை, மென்மை, இனிமை, உறுதி, துணிவு, அடக்கம், இரக்கம், தியாகம், அகிம்சை, வெட்கம், புகழ், தயை, ஈகை, வேதம் ஓதுதல், வேள்வியைச் செய்தல், ஞானயோகத்தில் நிலையாய் நிற்றல் ஆகியவை தெய்வ சம்பத்துடன் பிறந்தவனுக்கு இயல்பான குணங்கள்.
அர்ஜுனன்: அப்படியானால் அசுர குணங்கள் யாவை?
கண்ணன்: பகட்டு, இறுமாப்பு, தற்பெருமை, 1கோபம், கடுஞ்சொல் அறியாமை ஆகியவை அசுர சம்பத்துடன் தோன்றியவனின் பிறவிக் குணங்கள்.
அர்ஜுனன்: அசுர குணத்துடன் பிறந்தவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள்?
கண்ணன்: அசுர குணத்துடன் பிறந்தவர்களுக்கு சரி எது.. தவறு எது என்பதே தெரியாது. வாய்மையும் தூய்மையும் அவர்களிடம் இருக்காதுƒ உண்மையே உலகில் இல்லை என்பார்கள்ƒ தர்மமே இல்லை என்று கதையளப்பார்கள்ƒ இறைவனே இல்லை என்று குதி குதிப்பார்கள். ஆண் பெண் உறவு தான் உலகின் அடித்தளம் என்று துணிந்துரைப்பார்கள். அவர்களின் பார்வை குறுகலானது. ஆத்ம குணமும் அருமை விவேகமும் அவர்களிடம் துளியும் இருக்காது. அடுத்துக் கெடுப்பார்கள்ƒ அனைவருக்கும் துன்பமே கொடுப்பார்கள். அடங்காத ஆசையுடன் ஆடம்பரமாய் நடிப்பார்கள்ƒ ஆணவம் அகந்தையுடன் வெறி பிடித்துத் துடிப்பார்கள்ƒ அநியாய வரும்படிக்குப் பாடுபடுவார்கள்ƒ ஒழுக்கமற்ற வாழ்க்கையில் ஈடுபடுவார்கள். காம நுகர்ச்சிகளில் ஈடுபடுவதே இவர்களின் வாழ்க்கைக் குறிக்கோள். இவர்களைப் பிணைத்திருக்கும் ஆசைக் கயிறுகள் நூறு நூறு‚ காம சுகங்களில் ஊறு ஊறு‚ அதற்காகக் காசு பணங்களைச் சேரு சேரு‚ என்றவாறு தாறுமாறாய்த் துள்ளுவார்கள். 2உலகத்தை அழிவு நோக்;கித் தள்ளுவார்கள்.
அர்ஜுனன்: அவர்கள் எப்படிப் பேசுவார்கள்?
கண்ணன்: „இது என்னால் வந்தது‚ என் திறமையே தந்தது‚ இதோ.. என் ஆசை நிறைவேறுகிறது‚ அலை அலையாய்ப் பெருஞ்செல்வம் சேர்கின்றது‚ மலை மலையாய் இன்னும் அது குவியப் போகிறது‚… என்பான் ஒருவன்.
„பகைவனைக் கொன்று விட்டேன்.. எதிரிப்படைகளை வென்று விட்டேன்‚ நானே கொற்றவன்‚ அனைத்தும் பெற்றவன்‚ வலிமையில் சிறந்தவன்‚ இன்பத்தில் மிதப்பவன்‚… என்பான் மற்றொருவன்.
„நான் பணம்; படைத்தவன்‚ உயர் குலத்தில் பிறந்தவன்‚ எனக்கு நிகர் எவனுமே இல்லை‚ யாகங்கள் செய்வேன்.. தானங்கள் செய்வேன்.. மகிழ்ச்சிப் பெருக்கிலே நீந்தித் திளைப்பேன்‚… என்பான் இன்னொருவன்.
இவர்கள் எல்லாம் அறியாமையில் கட்டுண்டவர்கள்‚ தறி கெட்ட எண்ணங்களால் மொத்துண்டவர்கள்‚ மோக வலை தன்னில் வசமாகச் சிக்குண்டவர்கள்‚ 3காமக்களியாட்டங்களில் ஈடுபட்டு ஆழ் நரகில் விழ்வதற்கென்றே தம்மை விற்றுக்கொண்டவர்கள்‚ பணத்திமிர், குலத்திமிர், பிடிவாதம், தற்பெருமை ஆகியவற்றைப் பெற்றுக் கொண்டவர்கள்‚ சாத்திர முறை மீறி ஆடம்பரப் பகட்டுடன் யாகங்கள் செய்வதைப் பற்றிக் கொண்டவர்கள்‚ இதன் மூலம் பூரணத்துவமிழந்து மண்ணுலச்சுகமிழந்து விண்ணுலகப் பலனிழந்து பாவத்தைச் சுற்றிக் கொண்டவர்கள்‚ ஆணவம், பலம், காமம், குரோதம், இறுமாப்பு ஆகியவற்றை மேற்கொண்டு, அவர்கள் உள்ளிட்ட அனைவர் மேனியிலும் உறைபவனாகிய என்னை அவமதிக்க கற்றுக் கொண்டவர்கள்‚ இத்தகைய இழிகுணம் கொண்டவர்களை கடை நிலை கண்டவர்களை, அடிக்கடி நான் 4அசுரப் பிறவியிலேயே தள்ளுகிறேன். இந்த மூடப்பதர்கள் ஒவ்வொரு பிறவியிலும் என்னை அடைய முடியாமல் முன்னிலும் தாழ்ந்த நிலைக்கே தள்ளப் படுகிறார்கள்.
அர்ஜுனன்: அப்படியா கண்ணா?
கண்ணன்: அஞ்சற்க பாண்டவா‚ நீ தெய்வ குணங்களுடன் பிறந்தவன்ƒ தெய்வ குணங்கள் சொர்க்கத்தைக் கொடுக்கும், அசுர குணங்கள் பந்தப் படுத்தும்.
நரகத்திற்கு மூன்று வாயில்கள் உண்டு அர்ஜுனா‚ காமம், குரோதம், லோபம் என்பவைதான் அவை. தமோகுண வாயில்களான இம்மூன்றும் ஆத்மாவை அழிப்பவைƒ ஆகவே அவற்றை விலக்கி விட வேண்டும். இதன் மூலமாகத் தான் ஒருவன் தனக்கே நன்மை செய்து கொள்ளுகிறான்ƒ நற்கதியடைகிறான்.
(பதினாறாம் அத்தியாயம் நிறைவு பெற்றது)
1. கோபம் வந்தவுடனே முகத்தைக் கண்ணாடியில் பாருங்கள.; அப்போது நம் முகத்தைப் பார்த்து நாமே வெட்கப்படுவோம். அது அவ்வளவு கோரமாக இருக்கும். கோபம் வந்தால் உடனே ஒரு குவளை குளிர்ந்த நீர் பருகலாம். அல்லது குளிர்ந்த நீரில் குளிக்கலாம்ƒ இதற்கெல்லாம் வாய்ப்பில்லாவிட்டால் ஒன்று, இரண்டு, மூன்று, என்று நூறு வரையில் எண்ணலாம். இதற்குள் நம் கோபம் தணிந்து விடும். கோபத்தின் மூலமாக நன்மையைப் பெறும் திறமையை நாம் அடையும் வரையில் கோபத்திற்கு நாம் ஆளாகக் கூடாது. – சுவாமி சச்சிதானந்தா.
2. கொடிகட்டிக் கொண்டெழு கோடி-தனம் குவித்து அந்த மகிழ்ச்சியால் கூத்துக்கள் ஆடி கெடு புத்தி உடையோரைக் கூடி – யானும் கெட்டு அலையாமலே கெதி பெற நாடி மாளிகைமேல் வீடுகட்டி-மனை வாழ்வைச் சதமென்று வாழ்கின்ற மட்டி நாளை எமன் வந்து அதட்டிக்-கொண்டு நடப்பான் என்று அறியானை அருப்பதை வெட்டி இரக்கத் துணிந்து கொண்டேனே எனக்கு இருக்கும் குறைமுழுதும் நிகழ்த்திக் கொண்டேனே‚ – குணங்குடி மஸ்தான்
3. நொங்கும் நுரையுமாகப் பொங்கும் -காமக்கடலுள் முங்கும் பாவி உடலைச் சொங்கும்-சொரி சிறங்கும் வங்கும் நமநமென்று திங்கும்-நரம்புந்தோலும் தொங்கும் மினுமினுப்பு மங்கும்- இல்லந் துறந்த சிங்கங்கட்கு இல்லை காணும் பங்கம்-மேனி உயர்ந்த தங்க மயமாய் நின்று இலங்கும்-அவர்கட் கன்றோ தங்கும் சாயுச்ய பதம் தங்கும் – நமக்கும் அதில் பங்கும் தந்து உதவி, பராபரம் அருள் இறங்கும். – குணங்குடி மஸ்தான்
அத்தியாயம் பதினேழு

சித்ராத்ரய விபாக யோகம்
சித்ராத்ரயம் என்றால் நம்பிக்கை என்று பொருள். சாத்விக, ராஜச, தமச குணபேதங்களுக்கு ஏற்றபடி, நம்பிக்கையும் மூன்று வகைப்படும்.

இதில் 28 சுலோகங்கள் அடங்கியுள்ளன.

அர்ஜுனன்: ஒரு சந்தேகம் கண்ணா‚ சாத்திர முறை மீறி யாகம் செய்வது தவறு என்றாய்‚ அவ்விதம் செய்பவன் உண்மையான நம்பிக்கையுடன் செய்கிறான் என்று வைத்துக் கொள். அவனுக்கு எந்த நிலை கிட்டும்? சத்துவ நிலையா? ரஜோ நிலையா? தமோ நிலையா?
கண்ணன்: ஆசையும் பற்றும் வலுத்தவர்களாய்.. அகங்காரமும் பகட்டும் கொண்டவர்களாய், சில அறிவிலிகள் தங்கள் உடலையும் அதற்குள் உறையும் என்னையும் 1வருத்திக் கொண்டு, சாத்திரத்திற்கு உட்படாத கொடுந்தவம் புரிகிறார்கள்ƒ அவர்கள் அசுரகுணம் படைத்தவர்கள்.
அர்ஜுனா‚ இயல்பாகவே மனிதன் நம்பிக்கை மயமானவன். அந்த நம்பிக்கை சாத்விகி, ராஜசி, தாமசி என்று மூன்று வகைப்படும்ƒ அவரவர் மனப்பாங்குக்கு ஏற்றபடிதான் இந்த நம்பிகைகள் அமைகின்றன. சாத்விக நம்பிக்கை கொண்டவர்கள் தேவர்களை வணங்குகிறார்கள்ƒ ராஜச நம்பிக்கை கொண்டவர்கள் அரக்கர்களை வழிபடுகிறார்கள். தாமச நம்பிக்கை கொண்டவர்கள் மூதாதயர்களையும் பூதகணங்களையும் வணங்குகிறார்கள்.
இது போல் அனைவருக்கும் விருப்பமான 2உணவும் மூன்று வகைப்படும். அவற்றின் பேதா பேதங்களைப் பற்றிக் கூறுகிறேன் கேள்‚
ஆயுள், அறிவு, வலிமை, ஆரோக்கியம், சுகம், இன்பம், இவை வளர்ப்பவை, சாறுள்ளவை, பசைக் கூறுள்ளவை, மனதுக்கு இதம் அளிப்பவை போன்ற மதுர உணவுகள் சாத்விகர்களுக்கு விருப்பமானவை. கசப்பானது, புளிப்பானது, உவர்ப்பானது, மிதச்சூடானது, காய்ந்து போனது, காரம் மிகுந்தது, எரிச்சல் தருவது, பசி எடுக்காமல் தடுப்பது, துக்கம் துயரம் நோய் இவற்றைக் கொடுப்பது என்ற வகையான உணவுகள் ரஜோ குணத்தினருக்குப் பிடித்தது. நாளுற்றது, வற்றிச் சுவையற்றது, பழையது, எச்சிலானது, கெட்டுப்போனது, நாற்றமடிப்பது இந்த வகை உணவுகள் தாமச குணத்தார் விரும்பி உண்பது.
இது போல் யாகமும் மூன்று வகைப்படும். பலன் கருதாமல், „யாகம் செய்வது கடமை… என்ற ஒரே எண்ணத்தில் சாத்திர முறைப்படி செய்யும் யோகம் சாத்விகமானது. பலன் கருதிப் பகட்டாகச் செய்யப்படும் யாகம் ராஜசமானது. அன்னதானம் செய்யாமலும், தட்சனை வைக்காமலும், மந்திரங்கள் ஓதாமலும், அக்கறை இல்லாமலும் வேதநெறி தவறி செய்யப்படும் யாகம் தாமசமானதாகும்.
இது போல் தவமும் மூன்று வகைப்படும். மனம் தெளிந்திருத்தல், மவுனமாய் இருத்தல், மனத்தை அடக்குதல், சாதுவாய் இருத்தல், ஆத்மா ஒன்றையே சிந்தனையில் நிறுத்தல் என்ற மனத்தவமும்… இனிமையாய்ப் பேசுதல், உண்மையே உரைத்தல், நயம்பட நன்மையே பகர்தல், வேதம் ஓதுதல் என்ற வாக்கு தவமும்.. தேவர், பிராமணர், ஆசாரியர் மற்றும் ஞானியரை வழிபடல், புனித நீராடல், அஹிம்சை, நேர்மை, பிரம்மச்சரியம் மேற்கொள்ளல் என்ற சரீரதவம் என்ற மூன்றையும் பலன் கருதாமல் பக்தியுடனும் அக்கரையுடனும் செய்யும் போது, அது சாத்விக தவம் எனப்படும். பாராட்டும் பெருமையும் போற்றுதலும் பெறப் பகட்டாகச் செய்யப்படும் தவம் ராஜச தவம் எனப்படும். மற்றவர்களை அழிப்பதற்கென்றே உடம்பை வருத்திச் செய்யப்படும் மூடத்தனமான தவம் தாமசத்தவம் எனப்படும்.
இது போல் தானங்களும் மூன்று வகைப்படும். தனக்கு எந்த உதவியும் செய்யாதவனுக்கு பலன் கருதாமல் காலம், இடம், நடத்தை அறிந்து கொடுப்பது சாத்விக தானம். கைம்மாறு கருதியும், 3பலன் எதிர் நோக்கியும், மனம் வருத்தியும் கொடுப்பது ராஜச தானம். தகாத நேரத்தில், தகாத இடத்தில் தகாதவர்களுக்கு மரியாதையின்றி அலட்சியமாக செய்யப்படும் தானம் தாமச தானம்.
அர்ஜுனன்: அவ்விதமானால் கண்ணா.. இப்போது சொன்ன தானம், தவம், வேள்வி இம்மூன்றையும் எவ்விதம் தொடங்கவேண்டும்?
கண்ணன்: பரம்பொருளான பிரம்மத்திற்கு 4ஓம், தத், சத் என்று மூன்று பெயர்கள் உண்டு. இதைக் கொண்டுதான் முன்பு பிராமணர்களையும், வேதங்களையும், வேள்விகளையும் நான் தோற்றுவித்தேன். ஆகவே வேதம் அறிந்தவர்களால் வேத முறைப்படி செய்யப்படும் வேள்வி, தவம், தானம் ஆகிய மூன்றும் ஓம் என்று சொன்ன பிறகே தொடங்குகின்றன. பலன் கருதாமல் சொர்க்கத்தை நாடும் உத்தமர்கள் தத் என்று சொன்ன பிறகே அந்த முச்செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். நன்மை, உண்மை என்று இருபொருள் கொண்ட சத் என்ற சொல் எல்லா மங்கள நிகழ்ச்சிகளிலும் பயன்படுத்தப்படுகிறது. வேள்வி, தவம், தானம், இவற்றில் நிலைத்திருக்கும் சொல் சத் எனப்படும்ƒ அது தொடர்பான மற்ற செயல்களும் கூட சத் என்றே சொல்லப்படும். அக்கரை இன்றி செய்யப்படும் வேள்வியும், தவமும், தானமும் அசத் எனப்படும். அது இக வாழ்விலும் உதவாது, பரலோகத்திலும் பயன்படாது.
(பதினேழாம் அத்தியாயம் நிறைவு பெற்றது)
1.ஆன்மிக சாதனை என்னும் புனிதமான பெயரால் நாம் நம் உடலை வீணாக வருத்திக் கொள்ளக் கூடாது. தீ மிதித்தல், உடலில் வேல்குத்திக் கொள்ளுதல், சவுக்கால் அடித்துக் கொள்ளுதல் முதலியவற்றால் சிலர் தங்களைத் துன்புறுத்திக் கொள்ளுகிறார்கள். இறைவன் நமக்கு உடம்பைக் கொடுத்திருப்பது இவ்வாறு வருத்திக் கொள்வதற்காக அல்ல. நல்ல காரியங்களுக்கு அதைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக கொடுத்திருக்கிறார். – சுவாமி சச்சிதானந்தா
2.உணவு உடம்பை மட்டும் உருவாக்கவில்லை. மனதையும் அதுவே உருவாக்குகிறது. எனவே மக்கள் வாழ்க்கையில் உணவு மிகவும் முக்கியமானது. – சுவாமி சச்சிதானந்தா
3.விண்ணுலகப் புண்ணியம் கருதி, தானம் செய்பவர் „அறவிலை வணிகர்… என்பது தமிழ் மரபு. இம்மைச் செய்தது மறுமைக்காமெனும் அறவிலை வணிகன் ஆய் அலன். – புறநானூறு
4.ஓம் என்பது அகிலாண்ட ஓசையின் தொகை.


Series Navigation

எஸ் மெய்யப்பன்

எஸ் மெய்யப்பன்

பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 10 அத்தியாயம் பதின்மூன்று

This entry is part [part not set] of 37 in the series 20071011_Issue

எஸ் மெய்யப்பன்


(முன்னுரை

இனிய வாசகர்களுக்கு என் அன்பு வணக்கங்கள். என் தந்தை திரு. எஸ். மெய்யப்பன் அவர்கள் ஆழ்ந்த சிந்தனையாளர். எழுத்தாளர். அவர் பல புதினங்கள,; சிறுகதைகள,; கட்டுரைகள,;; நாடகங்கள,; கவிதைகள் எழுதியுள்ளார். இந்த பகவத்கீதையின் சாரம் அவரது வாழ்க்கையின் மிக முக்கிய எழுத்துச் சாதனை என்றே சொல்லலாம.

அவர் கடந்த ஆண்டு, 2006, டிசம்பர் மாதம் 29ஆம் நாள் இறைவனடி சேர்ந்தார். அவரது இறுதிச் சடங்கின் போது அதன் இரண்டு அத்தியாயங்களைப் படித்து அவருக்கு அஞ்சலி செலுத்தினேன. அப்போது உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் அது நல்ல வரவேற்பைப் பெற்றது.

காரைக்குடியில் பிறந்து சின்னாளப்பட்டியில் வளர்ந்து சென்னையில் உயர் கல்வி கற்று அரசாங்கப் பணியில் மிகச் சிறப்பான காரியங்களைச் செய்து தமிழ்ப்பணியும் ஆற்றியவர் அவா. அவர் தனது எழுத்திறனை வளர்த்ததோடல்லாமல் என்னையும் எழுதத் தூண்டி பயிற்சி அளித்தவா. அவர் இருக்கும் போதே இதை நூல் வடிவமாகக் கொண்டு வர வேண்டும் என்று விரும்பினேன. ஆனால் அதற்கு அவர் ஒப்பவில்லை. அவருக்கு பின இந்த எளிய இனிய நடையில் எழுதப்பட்ட கீதையின் சாரத்தை மக்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று எண்ண ஆரம்பித்தேன்.

அதிகமான மக்கள் படிக்கும் செய்தித்தாளிலும, எளிதில் கேட்கும் வகையில் தட்டுருக்களையும் செய்யத் தீர்மானித்து அதற்கான வேலைகளை ஆரம்பித்தேன.

அவரது நினைவு நாளுக்கு முன்பாக அதை நூல் வடிவமாகக் கொண்டு வர முயன்று வருகிறேன். அதைச் செவ்வனே செய்து முடிக்க உங்கள் ஆசிகளை வேண்டுகிறேன்.

நன்றி.

சித்ரா சிவகுமார்

ஹாங்காங்)

அத்தியாயம் பதின்மூன்று

க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்

க்ஷேத்ரம் என்பது உடல் க்ஷேத்ரக்ஞன் என்பது உயிர். உடல், இயற்கை, ஆத்மா, பரம்பொருள் ஆகியவற்றின் தன்மைகள் விளக்கப்படுகின்றன.

இதில் 35 சுலோகங்கள் அடங்கியுள்ளன.

————–

அர்ஜுனன்: கேசவா, க்ஷேத்திரம் என்பது எது? க்ஷேத்ரக்ஞன் என்பது எது?

கண்ணன்: உடல் தான் 1சேத்திரம் என்பது. அதில் இயங்கும் அந்த உயிர்தான் க்ஷேத்ரக்ஞன். எல்லா உடல்களிலும் இயங்கும் அந்த உயிர் நான்தான் என்பதை அறிக.

அர்ஜுனன்: அந்த உடல் என்பது என்ன? அது எப்படிப்பட்டது? எத்தகைய மாறுதல்களை அடையக் கூடியது? எங்கிருந்து தோன்றியது? உயிர் என்பது எது? அதன் மகிமை என்ன?

கண்ணன்: சுருக்கமாகச் சொல்லுகிறேன் கேள் அர்ஜுனா. 2மகா பூதங்கள் ஐந்து, உணர்வுகள் பத்து, மனம் ஒன்று, இந்திரிய சுகங்கள் ஐந்து, இயற்கை மூலம், அறிவு, அகங்காரம், விருப்பு, வெறுப்பு, சுகம், துக்கம், உடலின் அமைப்பு, உணர்வுகளின் கூட்டம், உறுதி இவையெல்லாம் குண வேறுபாடுகளுடன் கூடியிருப்பது தான் 3உடல் என்பது. அசையும் பொருள், அசையாப் பொருள் என்ற வகையில் எந்த உயிர் உண்டானாலும், அது உடல், உயிர் இரண்டின் சேர்க்கையால் பிறந்தது என்பதை அறிவாயாக.

அர்ஜுனன்: ஞானம் என்பது என்ன கண்ணா?

கண்ணன்: உயிரைப் பற்றிய அறிவே ஞானம் என்பது. அகிம்சை, பொறுமை, நேர்மை, தூய்மை, குருசேவை, அடக்கம், உறுதி ஆகியவற்றை மேற்கொள்ளுதல்.. அகங்காரம், ஆணவம்4, ஆரவாரம், ஆசையில் பற்றுதல், மனைவி, மக்கள் வீடு இவற்றில் ஒட்டுதல் என்பவற்றைத் துறத்தல்.. பிறப்பு, இறப்பு, நோய், மூப்பு இவற்றில் தீமை கண்டு தெளிதல்.. வருவதைக் கண்டு மகிழாமலும் போவதைக் கண்டு கலங்காமலும் சமநிலையில் இருத்தல்.. ஜனக் கூட்;டம் கண்டு வெறுத்தல்.. தனிமையில் இருத்தல்.. ஆத்ம ஞானத்தில் நிலை பெறுதல்.. தத்துவ ஞானப் பலன்களை எண்ணுதல்.. என்னையே சரணடைந்து பக்தியைப் பண்ணுதல் ஆகியவவை அனைத்துமே ஞானம் என்று சொல்லப்படும். மற்றவை எல்லாம் அஞ்ஞானமாகும்.

அர்ஜுனன்: இந்த ஞானத்தால் அறியப்பட வேண்டியது எது?

கண்ணன்: ஆதியும் அந்தமும் அற்ற பரம்பொருளே இந்த ஞானத்தால் அறியப்பட வேண்டியது, அந்தப் பரம்பொருள் உண்டு அல்லது இல்லை என்று சொல்ல முடியாதது. அதுவே உனக்கு சாகாத்தன்மை அளிப்பது. தன்னைத் தாங்குவோர் இல்லாமலே உலகனத்தையும் தாங்கி நிற்பது. அதுவே பொருளைத் தாங்குவது.. அழிப்பது.. மறுபடியும் தோற்றுவிப்பது. குணங்கள் இல்லாமலே குணங்களை அனுபவிப்பது, புலன்களில்லாமலே புலன்களின் வேலைகளைச் செய்திடும் அற்புத சக்தி வாய்ந்தது, எல்லாப் பொருள்களிலும் அது உள்ளேயும் இருக்கிறது. வெளியேயும் இருக்கிறது, அது கிட்டவும் இருக்கிறது.. எட்டவும் இருக்கிறது, அது பிளவு படாதது.. பொருள்களில் பிளவுபட்டது போல காட்சியளிப்பது. அது அசையாதது.. அசையவும் செய்வது, அது இருளைக் கடந்தது.. ஒளிகளுக்கெல்லாம் ஒளியாய்த் திகழ்வது, அனைவர் உள்ளத்திலும் எழுந்தருளியிருப்பது, தலைகளும் முகங்களும்.. கண்களும் காதுகளும்.. கைகளும் கால்களும்.. உலகம் முழுவதும் பரவி நிற்பது, நுண்மையிலும் நுண்மையானது, அழியாதது, அறிவு மயமானது, எளிதில் அறிய முடியாதது, இது தான் ஞானத்தால் அறியப்பட வேண்டியது, ஆத்மாவால் அடையப்பட வேண்டியது, இந்தப் பரம்பொருளை அறிந்தவன் அமிர்தத்தையே அருந்தியவனாவான். அழிவற்ற என் திருவடி மலர்களைப் பொருந்தியவனாவான்.

அர்ஜுனன்: இயற்கை, ஆத்மா இவற்றைப் பற்றியும் அறிய விரும்புகிறேன் கண்ணா.

கண்ணன்: இயற்கை, ஆத்மா இரண்டுமே தொடக்கமற்றவை. மனவேறுபாடுகளும் குணவேறுபாடுகளும் இயற்கையில் இருந்தே தோன்றுகின்றன. உடல் தான் அரங்கம். அதில் நடிக்கும் புலன்களின் இயக்குநர் இயற்கையே, இதன் இலாப நட்டங்களை அனுபவிப்பதற்கு மட்டும் ஆத்மா காரணமாகிறது. இந்த ஆத்மாவானது இயற்கையில் கலந்து நின்று, இயற்கையிலிருந்தே தோன்றும் நல்லது கெட்டதை அனுபவிக்கிறது. இந்த ஆத்மாவிற்கு நல்ல பிறப்பு அல்லது கெட்ட பிறப்பு கிடைப்பதற்கு ஆசைகளே காரணமாகின்றன. இவ்விதம் இயற்கையே அனைத்திற்கும் இயக்குநர் என்பதையும், ஆத்மா எதற்கும் காரணம் அல்ல என்பதையும் அறிந்து கொண்டவன் உன்னதமானவன், இவற்றைப் பற்றியெல்லாம் நன்கு புரிந்து கொண்டவன், அவன் எந்நிலையிலிருந்தாலும் மறுபிறப்பற்ற பொன் மயமானவன்.

சிலர் தியானத்தில் பக்குவமுற்ற அறிவால் ஆத்மாவைக் காண்கிறார்கள். சிலர் ஞான யோகத்தாலும் மற்றும் சிலர் கர்ம யோகத்தாலும் ஆத்மாவைப் பார்க்கிறார்கள். இது தெரியாத இன்னும் சிலர், 5பெரியோர் சொற்கேட்டு ஆத்மாவைக் காண முயற்சிக்கிறார்கள். காதால் கேட்டதை நம்பிக் காரியத்தில் ஈடுபடும் இவர்களும் கூட மறுபடியும் பிறப்பதில்லை.

இவ்விதம் உடம்பினுள் உயர்ந்து நிற்கும் ஆத்மாவைத் தான் அருகில் நின்று பார்ப்பவன் என்றும், அனுபவிப்பவன் என்றும், அன்பாகத் தாங்குபவன் என்றும், அனுமதி அளிப்பவன் என்றும், ஆள்பவன் என்றும,; அரிய பரமாத்மா என்றும,; பலவிதமாகச் சொல்கிறார்கள். இந்தப் பரமாத்மா உடலுக்குள் உறைந்தாலும் செயலற்றவன். பற்றற்றவன். இருந்தாலும் எல்லாப் பொருள்களிலும் சமமாக இருப்பவன். அழியும் பொருள்களில் அழியாமல் இருப்பவன். அவனை உள்ளது உள்ள படி கண்டு கொண்டவன் தன்னைத் தானே வருத்திக் கொள்ள மாட்டான். பூதங்கள் அனைத்தும் பரம்பொருளில் அடங்கியிருப்பதையும், அதிலிருந்தே அவை விரிவடைகின்றன என்பதையும் உணர்கின்றவன் பிரம்ம நிலை அடைகிறான்.

எனவே அர்ஜுனா, பரந்து விரிந்த ஆகாயம் எவ்விதம் எதிலும் ஒட்டிக் கொண்டிருக்கவில்லையோ, அது போல், ஆத்மாவானது தேகத்தில் பரிணமித்திருந்தாலும், அதிலே ஒட்டிக் கொள்வதில்லை. உலகத்தைச் சூரியன் ஒளி பெறச் செய்வது போல், தேகத்தை ஆத்மா ஒளி பெறச் செய்கிறது. இவ்விதம் உடல், உயிர் இரண்டுக்குமுள்ள வேறுபாடுகளை நன்கு உணர்ந்து கொண்டு, உயிரானது உடம்பிலிருந்து விடுதலை பெறுவதை ஞானக் கண்ணால் காணும் சித்தி பெற்றவர்கள் பிரம்மத்தையே அடைகிறார்கள். இத்தத்துவங்கள் மகா முனிவர்களால் பல விதமாகப் பாடப் பெற்றுள்ளன. வேதங்களிலும் பலவாறு தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. அறிவுக் களஞ்சியமான பிரம்ம சூத்திரங்களிலும் நன்கு விளக்கப்பட்டுள்ளன.

(பதின்மூன்றாம் அத்தியாயம் நிறைவு பெற்றது)

1.சேத்திரம் என்றால் வயல் என்று பொருள். வயலைப் போல் கர்மங்களாகிற விதைகள் முளைத்து வளரும் இடம். – உரையாசிரியர் அண்ணா

2.மகாபூதங்கள் ஐந்து: நிலம், நீர், நெருப்பு, வாயு, ஆகாயம். உணர்வுகள் பத்து: கண், காது, மூக்கு, நாக்கு, கவக்கு முதலிய ஞானேந்திரங்கள் ஐந்தும், வாக்கு, பாணி, பாதம், பாயு, உபஸ்தம் முதலிய கர்மேந்திரியங்கள் ஐந்தும் சேர்ந்து பத்து ஆகின்றன.

சுகங்கள் ஐந்து: ஒளி, ஓசை, சுவை, வாசனை, உணர்வு

3.பூதங்கள் ஐந்து, உணர்வுகள் பத்து, மனம் ஒன்று, இந்திரிய சுகங்கள் ஐந்து, இயற்கை மூலம், புத்தி, அகங்காரம் இந்த இருபத்து நான்கின் கூட்டத்தாலும், பிரிவாலும், விகாரத்தாலும் தோன்றுவனவெல்லாம் சேத்திரம். இருபத்து ஐந்தாம் தத்துவம் புருஷன் அல்லது சேத்ரக்ஞன் அல்லது ஆத்மா. புருஷன் இயற்கையுமன்று, காரியமுமன்று. காரணமும் அன்று. எதிலும் பற்றாமல் எல்லாவற்றையும் சாட்சியாய்ப் பார்த்து நிற்பவன். – உரையாசிரியர் அண்ணா

நம் ஒவ்வொருவருக்குமென்று ஒரு தனி நாடு இருக்கிறது. அது தான் நமது உடம்பு. – சுவாமி சச்சிதானந்தா

4.ஆணவத்தை ஆண் + அவம் என்று பிரிக்க வேண்டும். “ஆண் அவம்” என்று பலமுறை சொல்லிப் பார்த்தால் நாம் ஆண் என்பது அவமாகும். வீணாகும் என்பதை அறியலாம் நாம் ஆண் அல்ல, இறைவன் தான் ஆண் என்பதையும் உணரலாம். – சுவாமி சச்சிதானந்தா

5.சத்யகாமன் சரிதை இதற்கு உதாரணம். குருவின் உத்தரவுப்படி மாட்டுக் கூட்டம் ஓராயிரமாக வளரும் வரை மேய்த்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறொன்றையும் சிந்திக்காமல் இருந்த அவனுக்கு, அவன் சிரத்தையே காரணமாகப் பிரம்ம ஞானம் உதித்தது. குருவே அவனைப் பார்த்து “நீ ஞானியாய் விளங்குகிறாய். உனக்கு யார் உபதேசித்தது?” எனக் கேட்கிறார். – சாந்தோக்ய உபநிடதம்


Series Navigation

எஸ் மெய்யப்பன்

எஸ் மெய்யப்பன்

பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 9

This entry is part [part not set] of 32 in the series 20071004_Issue

எஸ் மெய்யப்பன்


(முன்னுரை

இனிய வாசகர்களுக்கு என் அன்பு வணக்கங்கள். என் தந்தை திரு. எஸ். மெய்யப்பன் அவர்கள் ஆழ்ந்த சிந்தனையாளர். எழுத்தாளர். அவர் பல புதினங்கள,; சிறுகதைகள,; கட்டுரைகள,;; நாடகங்கள,; கவிதைகள் எழுதியுள்ளார். இந்த பகவத்கீதையின் சாரம் அவரது வாழ்க்கையின் மிக முக்கிய எழுத்துச் சாதனை என்றே சொல்லலாம.

அவர் கடந்த ஆண்டு, 2006, டிசம்பர் மாதம் 29ஆம் நாள் இறைவனடி சேர்ந்தாh. அவரது இறுதிச் சடங்கின் போது அதன் இரண்டு அத்தியாயங்களைப் படித்து அவருக்கு அஞ்சலி செலுத்தினேன. அப்போது உறவினர்கள,; நண்பர்கள் மத்தியில் அது நல்ல வரவேற்பைப் பெற்றது.

காரைக்குடியில் பிறந்து சின்னாளப்பட்டியில் வளர்ந்து சென்னையில் உயர் கல்வி கற்று அரசாங்கப் பணியில் மிகச் சிறப்பான காரியங்களைச் செய்து தமிழ்ப்பணியும் ஆற்றியவர் அவா. அவர் தனது எழுத்திறனை வளர்த்ததோடல்லாமல் என்னையும் எழுதத் தூண்டி பயிற்சி அளித்தவா. அவர் இருக்கும் போதே இதை நூல் வடிவமாகக் கொண்டு வர வேண்டும் என்று விரும்பினேன. ஆனால் அதற்கு அவர் ஒப்பவில்லை. அவருக்கு பின இந்த எளிய இனிய நடையில் எழுதப்பட்ட கீதையின் சாரத்தை மக்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று எண்ண ஆரம்பித்தேன்.

அதிகமான மக்கள் படிக்கும் செய்தித்தாளிலும, எளிதில் கேட்கும் வகையில் தட்டுருக்களையும் செய்யத் தீர்மானித்து அதற்கான வேலைகளை ஆரம்பித்தேன.

அவரது நினைவு நாளுக்கு முன்பாக அதை நூல் வடிவமாகக் கொண்டு வர முயன்று வருகிறேன். அதைச் செவ்வனே செய்து முடிக்க உங்கள் ஆசிகளை வேண்டுகிறேன்.

நன்றி.

சித்ரா சிவகுமார்
ஹாங்காங்)


.
அத்தியாயம் பன்னிரண்டு
பக்தியோகம்
பக்தி என்பது வணங்குவது.

உருவமற்ற பரம்பொருளில் மனத்தைச் செலுத்துவது கடினமானதுƒ கண்ணனின் திருவடிகளில் பக்தி செய்வது சுலபமானதுƒ விரைவில் பலனளிப்பது. கண்ணனின் கல்யாண குணங்களை நினைக்கப் பழக வேண்டும். இது முடியாவிட்டால் இறைத் திருப்பணிகளில் ஈடுபடவேண்டும். இல்லையேல் ஆத்ம தியானம் செய்யவேண்டும்.
இதில் 20 சுலோகங்கள் அடங்கியுள்ளன.
———-
அர்ஜுனன்: கண்ணா, இப்போது நீ சொன்னதுபோல் உன்னையே பக்தி செய்பவர்கள் அல்லது கண்ணுக்குத் தெரியாத பிரம்மத்தை வணங்குபவர்கள் இவர்களில் யார் யோகத்தை நன்கு அறிந்தவர்கள்?
கண்ணன்: அர்ஜுனா, இதயக்கமலத்தில் என்னையே இருத்தி, எண்ணங்கள் அனைத்தையும் யோகத்தில் நிறுத்தி, அக்கரையினை தியானத்தில் பொருத்தி என்னைத் தொழுபவர்கள் மேம்பட்டவர்கள் என்பது என் கருத்து. கருமங்களனைத்தையும் எனக்கே அர்ப்பிக்கும் அவர்கள், பிறப்பு இறப்பென்னும் பெருங்கடலை விரைவில் நீந்திக் கடக்கிறார்கள். ஆனாலும், நிலையானதும் நினைவிற்கு எட்டாததும், அசையாததும் அழிவே இல்லாததும், எங்கும் நிறைந்ததும் எல்லோர்க்கும் பொதுவானதும், சொல்லில் அடங்காததும், சொரூபம் வெளியில் தெரியாததுமான பரம்பொருளை, புலன்களை அடக்கி வணங்கக் கூடியவர்களும் முடிவில் என்னைத்தான் அடைகிறார்கள். வடிவமற்றதை வணங்குகிறவர்களுக்கு வழியில் குறுக்கிடும் தொல்லைகள் அதிகம். உடலபிமானன் உள்ளவர்க்கு உருவமற்ற ஒன்றின் மேல் உன்னத எண்ணம் தோன்றுவது கடினமானதுƒ வடிவத்துடன் இருக்கும் என்னை வணங்குவது சுலபமானது.
எனவே அர்ஜுனா, என்னிடமே உன் மனத்தை வைத்து விடு, உன் புத்தியினால் என் உடம்பையே தைத்து விடு, பிறகு நீ என்னிடமே தங்கி விடுவாய். இது உறுதி, இது உனக்கு முடியவில்லை என்றால், பயிற்சி முறையினால் பக்தியில் கனிந்து என்னை அடைவதற்கு முயற்சி செய். இதுவும் முடியவில்லை என்றால், எந்தக் காரியத்தையும் எனக்காகவே செய்யத் தொடங்கு, இதுவும் முடியாவிட்டால், கர்மயோக முறையைப் பின்பற்றி, பலாபலன்களைத் தியாகம் செய்துவிடு. பயிற்சி முறை பக்தியைக் காட்டிலும் ஞானம் சிறந்தது. ஞானத்தைக் காட்டிலும் தியானம் சிறந்தது. தியானத்தைக் காட்டிலும் தியாகம் சிறந்தது. கரும பலனைத் துறக்கும் இத்தியாகத்தினால் அருமைமிக்க சாந்தி உண்டாகும்.
அனைத்து உயிர்கள் மேலும் அன்பும் கருணையும் கொண்டவனாய், இன்ப துன்ப விருந்தை ஒன்றுபோல் உண்டவனாய், அகந்தையும் மமதையும் ஓடிடக் கண்டவனாய், அடக்கத்துடனும் அசையாத உறுதியுடனும், பொறுமையுடனும் பொங்கும் மகிழ்ச்சியுடனும், புத்தியை என்மேல் நாட்டிய பக்தியுடனும் இருப்பவன் எனக்கு இனித்துக் கிடப்பவன், தான் இடர்ப்பட்டாலும் தாங்கும் உலகுக்கு இடர் உண்டாக்காமல்.. களிப்பு, கலக்கம், அச்சம், கோபம் இவைகளிலிருந்து விடுபட்டவன் எனது மனதிற்குகந்தவன், ஆசைகளற்றவன் கவலைகள் விட்டவன், திறமைகள் மிக்கவன் தூய்மையில் சிறந்தவன், கருமம் துறந்தவன் நடுநிலைப்பட்டவன், நல்லது கெட்டதை நாடாது விட்டவன் எனது நட்பிற்குரியவன். சுகமும் துக்கமும்.. நட்பும் பகையும்.. குளிரும் வெப்பமும்.. மகிழ்ச்சியும் இகழ்ச்சியும், மானமும் ஈனமும் எல்லாம் சமம் எனும் தெளிவு பெற்றவனாய், இருப்பதைக் கொண்டே திருப்தி கொள்பவனாய், தனக்கென இல்லம் தயார் செய்யாதவனாய், என்னிடம் மாறாத பக்தி செலுத்துபவன் எனக்குப் பிரியமானவன், அமிர்தம் போன்ற இவ்வற்புத தர்மத்தை, நான் சொன்னபடியே அக்கறையுடன் பின்பற்றி என்னை வணங்கும் பக்தர்கள் அனைவருமே எனக்கு மிக மிகப் பிரியமானவர்கள்.
(பன்னிரண்டாம் அத்தியாயம் நிறைவு பெற்றது)

Series Navigation

எஸ் மெய்யப்பன்

எஸ் மெய்யப்பன்

பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 8

This entry is part [part not set] of 35 in the series 20070927_Issue

எஸ் மெய்யப்பன்


அத்தியாயம் 11

அத்தியாயம் பதினொன்று
விசுவரூப தரிசன யோகம்

விசுவரூபம் என்பது நெடிது பரந்த தோற்றம். கண்ணனின் அருளால் ஞானக்கண் பெறும் அர்ஜுனன், அந்தக் கண்ணனின் விசுவரூபத்தைத் தரிசிக்கிறான். பிறகு அர்ஜுனனே அதை விளக்கியுரைக்கிறான். கண்ணனின் விசுவ ரூபத்தில் உலகங்கள் அனைத்தும் அடங்கியுள்ள தன்மை இதில் விவரிக்கப் பெற்றுள்ளன.

இதில் 55 சுலோகங்கள் அடங்கியுள்ளன.
————-
அர்ஜுனன்: தாமரைக் கண்ணா, ஆத்மாவைப் பற்றிய உன் அற்புதமான விளக்கத்தால் என் மனமயக்கம் மறைந்து விட்டது. உன் அழிவற்ற மகிமைகள் பற்றியும் உலகின் தகைமைகள் பற்றியும் விரிவான உன் விளக்கம் கேட்டேன். அனைத்தும் உண்மையே, இப்போது உன் விசுவரூப1 வடிவத்தைக் காண விரும்புகிறேன். அதை நான் காணக் கூடும் என்று நீ கருதுவாயானால், அழிவில்லாத அந்த வடிவத்தைக் காட்டியருள்க.
கண்ணன்: அப்படியே ஆகட்டும் அர்ஜுனா, ஆனால், உனது ஊனக் கண்ணால் அதைக் காண முடியாது. ஆகையால் உனக்கு ஞானக்கண் தருகிறேன். எனது யோகக் காட்சியைப் பார், தொகை தொகையாகப் பெருகும் என் வடிவங்களைப் பார், வகை வகையான வண்ணங்களுடன் ஒளி வீசி நிற்கும் என் உருவங்களைப் பார், ஆதித்யர்களையும்2, அஷ்ட வசுக்களையும், அசுவினி தேவதைகளையும்3, பதினொரு ருத்ரர்களையும், ஏழு மருத்துக்களையும் அத்துடன் இதுவரை நீ பார்த்திராத பல அற்புதங்களையும் பார், இன்னும், உலகமெனும் அரங்கில் எந்நெந்தக் காட்சிகளைப் பார்க்க விரும்புகிறாயோ, அவை அனைத்தையுமே என் மேனியிலே பார்.
(இவ்விதம் உரைத்த கண்ணன் தன் மேலான விசுவரூபத்தை அர்ஜுனனுக்குக் காட்டினான். அடடா, முகங்கள் தான் எத்தனை, விழிகள் தான் எத்தனை, அற்புதக் காட்சிகள் தான் எத்தனை, அணிந்த ஆபரணங்கள் தான் எத்தனை, அலங்கார ஆடைகள் தான் எத்தனை‚ தெய்வீக மாலைகள் தான் எத்தனை, தாங்கிய ஆயுதங்கள் தான் எத்தனை, இது மட்டுமா, சந்தனப் பூச்சுடன், ஒளிக்கதிர் வீச்சுடன் அதிசயமானதும், காலத்தைக் கடந்ததும், எல்லாத் திசைகளிலும் முகங்கள் கொண்டதுமான தன் அற்புத வடிவத்தைக் காட்டினான் கண்ணன்.
அது 4ஓராயிரம் சூரியர்கள் வானில் ஒரே நேரத்தில் உதித்தது போல் இருந்தது. பலவிதமாய்ப் பிரிந்துள்ள உலகின் காட்சிகள் அந்தத் தெய்வத் திருமகனின் மேனியில் ஒன்று கூடியிருந்ததை அர்ஜுனன் கண்டான். பிறகு அவன் வியப்பு மேலிட, மெய்சிலிர்த்தவனாய் தலையால் வணங்கினான், கை கூப்பிக் கூறத் தொடங்கினான்.)
அர்ஜுனன்: தேவா, உன் தெய்வீக மேனியில் தேவர்கள் அனைவரையும் காண்கிறேன். ஜீவராசிகளின் கூட்டங்களையும் காண்கிறேன். தெய்வ நாகங்களையும், திவ்ய முனிவர்களையும், கமலாசனக் கடவுள் பிரம்மாவையும் காண்கிறேன்.
உலகநாதா, கணக்கிலாக் கைகளையும், வயிறுகளையும், முகங்களையும், கண்களையும் கொண்ட உன் முடிவிலா உருவத்தை எங்கும் காண்கிறேன். உன் வடிவத்தின் அடியையோ, முடியையோ, நடுவையோ நான் காண முடியவில்லை. சந்திர சூரியர்களைக் கண்களாகவும், செந்தழல் நெருப்பை முகமாவும் கொண்டு, ஒளி வெள்ளத்தால் இந்த உலகையே எரிப்பவனாய்க் காட்சியளிக்கிறாய். தலைக்கு மகுடம் தரித்து, கதையும் சக்கரமும் கைகளில் தாங்கி, எட்டுத்திசையும் ஒளியுமிழும் உன் உருவத்தை எங்கும் காண்கிறேன்.
உலகிற்கே உயர்ந்த ஆதாரம் நீ, உத்தம தர்மத்தின் ரட்சகன் நீ, அறிந்திட வேண்டிய அழிந்திடாப் பரம்பொருள் நீ, பழமைக்கும் பழமையான பழம் பொருள் நீ, எல்லாவற்றையும் நான் நேரில் காண்கிறேன்.
அற்புதம்மிக்க உன் வடிவம் விண்ணையும் மண்ணையும் அடைந்து நிற்கிறது, உக்கிரம் மிக்க உன் உருவம் திக்குகள் அனைத்திலும் பரவி நிற்கிறது, மூவுலகும் இது கண்டு நடுங்கி நிற்கிறது.

இதோ வானவர் பல்லோர் உன்னுள் நுழைகின்றனர், பயத்தால் அதில் சிலர்5 கைகூப்பித் தொழுகின்றனர், மகா முனிவர்களும் சித்தர்களும் “வாழ்க, வாழ்க” என்று பாடிப் புகழ்ந்து பரவுகின்றனர். உருத்திரர், ஆதித்யர், சாத்தியர்6, 7வசுவதேவர், அசுவினி தேவர், வசுக்கள், மருத்துக்கள், ஊஷ்மபர், கந்தர்வர், ய~ர், அசரர், சித்தர் என்ற வித்தகர் அத்தனை பேருமே வியப்புடன் உன்னையே பார்க்கிறார்கள்.

பலப்பல முகங்களும், கண்களும், கைகளும் தொடைகளும், பாதங்களும் வயிறுகளும், பயமுறுத்தும் வளைந்த பற்களும் கூடியவுடன் நெடிய உருவங்கண்டு மூவுலகங்களும் நடுங்குகின்றன. வான்வரை நீட்டி, வண்ணங்கள் தீட்டி, பிரகாசம் கூட்டி, திறந்த வாயினைக் காட்டி, அகன்ற கண்களில் ஒளியினை நாட்டியுள்ள உன்னைக்காணும் போது என் அமைதியும் வீரமும் ஒடுங்குகின்றன. கோர பயங்கரப் பற்களுடன் ஊழிக்காலத்துப் பெருந்தீ போன்ற உன் முகத்தைப் பார்த்ததுமே எனக்குத் திக்குத் திசை தெரியவில்லை, ஒன்றும் புரியவில்லை.
நீ எனக்கு அருள் புரிக.
திருத்ராஷ்டிரன் மைந்தர்களும், பாராளும் வேந்தர்களும், பீஷ்மர், துரோணர், கர்ணன் ஆகியவர்கள் மட்டுமல்ல… நம் பக்கத்துப் படைத் தலைவர்களும் கூட, பயங்கரமான உன்னுடைய வாய்களில் நுழைகின்றனர். சிலர் பொடிபட்ட தலைகளோடு உனது பல்லிடுக்குகளில் அடிப்பட்டுச் சிக்கியிருப்பதைக் காண்கிறேன். கடலை நோக்கி ஓடும் நதிகளின் வெள்ளங்களைப் போல், இந்த மானிட வீரர்கள் சுடர் விட்டு எரியும் உன் வாய்க்குள்ளே ஓடுகிறார்கள். விட்டிற் பூச்சிகள் கொழுந்து விடும் நெருப்பில் வேகமாக வந்து விழுவதைப் போல் நாசமடைவதற்காகவே இந்த ஜனங்கள் அதிவேகத்துடன் உன் வாய்க்குள்ளே நுழைகிறார்கள். வெந்தழல் வாய்களால் சகல உலகங்களையும் சாப்பிட்டு முடித்து, நாக்கைச் சுழல விட்டு நக்கிச் சுவைக்கிறாய். உனது கொடுஞ் சுடர்களால் உலகையே எரிக்கிறாய். தேவ தேவனே, உன்னை வணங்குகிறேன். உன்னைப் பற்றி அறிய விரும்புகிறேன். உன் செயலை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. பயங்கர மூர்த்தியாகிய நீ யார் என்று கூறுயருள்க.
உலகை அழிக்கவல்ல காலன் நான். அழிக்கும் அந்தக் காரியத்தைத்தான் தொடங்கியுள்ளேன். இதோ.. களத்திலே அணிவகுத்து நிற்கும் வீரர்கள், நீயில்லாவிட்டாலும் அழியத்தான் போகிறார்கள். இவர்களெல்லாம் ஏற்கனவே என்னால் கொல்லப்பட்டவர்கள், துரோணரும், பீஷ்மரும், கர்ணனும், கெயத்ரதனும் கூட ஏற்கனவே கொல்லப்பட்டவர்களே, இப்போது என் பொருட்டு நீ 8கருவியாக மட்டும்தான் இருக்கப் போகிறாய். எனவே இணையிலா இடது கை வீரா, கவலையை விட்டுப் போரிடு, எதிரிகளை வென்று புகழுடன் வாழ்வாயாக, இணையிலாத இந்த நாட்டை ஆள்வாயாக.

(இந்த வார்த்தைகளைக் கேட்ட அர்ஜுனன் கை கூப்பி, நடுநடுங்கி வணங்கி எழுந்து, மீண்டும் நடுக்கத்துடன் வணங்கி, நாக்குழறக் கண்ணனிடம் நவில்கிறான்)
அர்ஜுனன்: ஹிருஷீகேசனே, உன் புகழ் பாடுவதில் உலகம் மகிழ்ச்சி அடைகிறது. அரக்கர்கள் எல்லாம் அஞ்சி நாலா பக்கமும் ஓடுகிறார்கள்ƒ சித்தர்கள் எல்லாம் வணங்கிப் பாடுகிறார்கள். இது மிகவும் சரி தான், ஏனெனில் பிரம்மாவுக்கும் பெரியவனான உன்னை எப்படி வணங்காமல் இருக்க முடியும்? மூவுலகிலும் உனக்குச் சமமானவனே இல்லை என்றால், உயர்ந்தவன் எங்கே இருக்க போகிறான். பிரபஞ்சம் அனைத்திற்கும் நீயே தந்தை, நீயே வணக்கத்திற்குரியவன், உண்மையும் பொய்யும் கடந்த உன்னதமானவன், அழிவிலாப் பரம் பொருளானவன், ஆதிதேவன், புராண புருஷன், குரு சிரேஷ்டன், உலகைத் தாங்குபவன், அறியத் தகுந்தவன். அனைத்தும் அறிந்தவன். பரம பதமானவன். எண்ணிலா வடிவம் கொண்டவன். எங்கும் நிறைந்தவன். வீரத்தில் உறைந்தவன். ஆற்றிலில் உயர்ந்தவன். காற்றும் நீயே… காலனும் நீயே, மழையும் நீயே.. தண்மதியும் நீயே, மேலும் நீயே பிரஜாபதி. நீயே பிரம்மனின் தந்தை. உன்னை ஆயிரம் தடவையும் அதற்கு மேலும் வணங்குகிறேன். முன்புறமும் வணங்குகிறேன். பின்புறமும் வணங்குகிறேன், எல்லாப் பக்கங்களிலும் வணங்குகிறேன்.
அச்சுதா, உன் பெருமையறியாமல் அன்பினாலும் அறியாத்தனத்தாலும், உன்னைத் தோழனாய்க் கருதி “அடடே கண்ணா, அடே யாதவா, அடே நண்பா” என்றெல்லாம் ஏக வசனத்தில் அழைத்திருக்கிறேன். உண்ணும் போதும், உறங்கும் போதும், உவந்து விளையாடும் போதும், ஏகாந்தமாய் இருக்கும் போதும், எத்தனையோ பேர் இருக்கும் போதும் ஏளனம் செய்து உன்னை நான் அவமதித்திருந்ததால், அருள்கூர்ந்து அவற்றையெல்லாம் மன்னித்தருள்க, நெடுஞ்சாண்கிடையாக விழுந்து நான் கேட்டுக் கொள்கிறேன். மகனுக்குத் தந்தை போலவும், தோழனுக்குத் தோழன் போலவும், காதலனுக்குக் காதலி போலவும், பிழை பொறுத்தருள்க.
தேவதேவா, இது வரை எவரும் கண்டிராத உன் தெய்வீக உருவைக் கண்டு நான் மட்டிலா மகிழ்ச்சியடைகிறேன். இருந்தாலும் என் மனம் பயத்தால் நடுங்குகிறது. மகுடம் தரித்து, 9கதையும் சக்கரமும் கையில் ஏந்திய உன் பழைய உருவத்தைப் பார்க்க விரும்புகிறேன். நான்கு கை கொண்ட அந்த நாயக உருவத்துடன் சேவை தர வேண்டுகிறேன்.
கண்ணன்: அர்ஜுனா, நான் உள்ளம் குளிர்ந்து என்னுடைய யோகத்தினால் உனக்கு இந்த விசுவரூபத்தைக் காட்டினேன். வேதம் கற்றாலும், வேள்வி நடத்தினாலும், தவம் புரிந்தாலும், தானம் செய்தாலும் எவருமே காண முடியாத என் தெய்வீக வடிவத்தை இப்போது நீ கண்டு கொண்டாய். 10உன்னைத் தவிர வேறு யாரும் இதற்கு முன் இதைக் கண்டதில்லை. இந்த கோர வடிவத்தை கண்டு நடுங்க வேண்டாம், பயப்படாதே, மறுபடியும் மகிழ்ச்சியோடு என் பழைய வடிவத்தைப் பார்.

(இவ்வாறு கூறிய கண்ணன் பயங்கரமான அந்த விசுவரூபத்தை மறைத்து, சாந்த மயமான தன் இனிய வடிவத்தை மீண்டும் காட்டினான். அச்சத்தால் நடுங்கிய அர்ஜுனனைத் தேற்றினான்)
அர்ஜுனன்: ஜனார்தனா, இப்போது தான் எனக்கு நிம்மதி. சாந்தமயமான உன் மோகன வடிவைக் கண்ட பிறகு தான் எனக்கு ஆறுதலாக இருக்கிறது.
கண்ணன்: பாண்டவா, எப்போது காண்போம் என்று ஏங்கி நிற்கும் தேவர்களும் காண முடியாத விசுவரூபத்தை நீ கண்டுவிட்டாய், வேதம் பயின்றும், தவமியற்றியும், தானம் செய்தும் காண முடியாத தெய்வீக ரூபத்தைக் கண்களால் உண்டுவிட்டாய், மாறாத பக்தி ஒன்றின் மூலமாகத்தான் இந்த நிலையில் என்னை காண முடியும், உள்ளபடி என்னை அறிய முடியும். அடைய முடியும்‚ எனக்கு பலன் வேண்டாம், எல்லா உயிர்களுக்கும் நலன் வேண்டும் என்ற எண்ணத்துடன் என்னையே நினைந்தவனாய், எனக்காகவே செயல்படும் பக்தனே என்னை அடைகிறான்.
(பதினொன்றாம் அத்தியாயம் நிறைவு பெற்றது)

1.ஆக்கல், அழித்தல், காத்தல், ஆளுதல், தாங்குதல், கல்யாண குணங்களுடன் இருத்தல், எதிலும் உயர்ந்ததாக இருத்தல், எல்லாவற்றைக் காட்டிலும் வேறாக இருத்தல் என்று எல்லா நிலைகளிலுமுள்ள உன் வடிவம். – ஸ்ரீ ராமாநுஜர்
2.ஆதித்யர்கள் 12, வசுக்கள் 8, ருத்ரர்கள் 11, மருத்துக்கள் 7, இவை முன்பே விளக்கப் பெற்றுள்ளன.
3.அசுவினி தேவதைகள் இருவர்: அசுவினி குமாரர் இரு சகோதரர். விஷ்ணு புராணத்தில் இவர்கள் சூரிய புத்திரர்களாகவும், இராமாயணத்தில் கசியபரின் புத்திரர்களாவும், வாயு புராணத்தில் பிரம்மாவின் காதில் உதித்தவர்களாகவும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு இவர்கள் வௌ;வேறு கல்பத்தில் தோன்றினர் எனக் கொள்ளுதல் வேண்டும். இவர்கள் ததீசி முனிவரிடத்தில் ஞானோபதேசம் பெற்றனர்.

– உரையாசிரியர் அண்ணா
4.ஆயிரம் கண்கள் உண்டு உனக்கு. இருப்பினும் கண்ணென்று ஏது உனக்கு. உனக்கு ஆயிரம் வடிவங்கள் உண்டு. இருப்பினும் வடிவமென்று ஏது உனக்கு? உனக்கு ஆயிரம் தாமரைப் பாதங்கள் உண்டு. இருப்பினும் பாதமென்று ஏது உனக்கு? ஆயிரம் நாசிகள் உண்டு உனக்கு. இருப்பினும் நாசி என்று உனக்கு உண்டோ? வியப்பிலும் வியப்பே, நீ எங்கும் நிறைந்துள்ளாய்.
– குரு நானக்
5.ஓடிப்போகவும் முடியாதவர்களாய் – ஸ்ரீ சங்கரர்
6.சாத்யர்: தட்ச கன்னிகையான சாத்தையிடம் பிறந்த தருமரின் புத்திரர்கள் சாத்யர்கள்.

1.விசுவதேவர்: தட்ச கன்னிகையான விசுவா தேவியிடம் தருமரின் புத்திரர்கள் பதின்மர் விசுவ தேவர்கள்.
2.வாள் தன்னை ஆக்கச் சொல்லவில்லை. தன்னைப் பயன் படுத்துபவரைத் தடுக்கவில்லை. தான் உடைந்து போனாலும் ஒதுக்கி வைக்கப்பட்டாலும் வருந்தவில்லை. ஆக்கப்படுவதிலும் ஆனந்தமுண்டு. பயன்படுத்தப்படுவதிலும் ஆனந்தமுண்டு. அந்தச் சமமான ஆனந்தத்தைக் கண்டு கொள்வாய்.
– ஸ்ரீ அரவிந்தர்.
3.இந்தப் போரில் கண்ணன் ஆயுதம் எடுப்பதில்லை என்ற விரதங்கொண்டு கையில் சவுக்கும் லகானும் பிடித்திருந்தார். திவ்ய ஆயுதங்கள் தாங்கிய வடிவையும் காண விரும்புகிறான் அர்ஜுனன்.
4. நான் அளித்த திவ்யதிருஷ்டியால் நீ கண்டவாறு என் விசுவரூபத்;தை வேறு யாரும் கண்டதில்லை. மண் திறந்த வாயில் யசோதை கண்டதும், கௌரவர் சபையில் துரியோதனதியர் கண்டதும் நீ கண்டதற்கொப்பாகாது.
– உரையாசிரியர் அண்ணா.

( திரு எஸ் மெய்யப்பன் உலக மக்கள்தொகைத் திட்டத்தின் உறுப்பினராய் தமிழ் நாட்டு அரசுப் பணியில் இருந்தவர்.சௌடீஸ்வரி மலர் என்ற மாத இதழின் ஆசிரியராய் இருந்தவர். )

Series Navigation

எஸ் மெய்யப்பன்

எஸ் மெய்யப்பன்

பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 7

This entry is part [part not set] of 39 in the series 20070920_Issue

எஸ் மெய்யப்பன்


அத்தியாயம் பத்து
விபூதி யோகம்

விபூதி என்றால் மகிமை அல்லது மகத்துவம் என்று பொருள். இறைவன் எங்கும் நிறைந்தவன். எல்லாமானவன்ƒ அளவுக்கடங்காத இவ்வுலகனைத்தும் அவனது ஆளுகைக்கு உட்பட்டிருக்கின்றன. இக்கருத்துக்கள் இதில் விளக்கப் பெற்றுள்ளன.
இதில் 42 சுலோகங்கள் அடங்கியுள்ளன.
———–
கண்ணன்: தடந்தோள் தனஞ்சயா, நீ என் அன்புக்குரியவன். நான் சொல்வதை விரும்பிக் கேட்பவன். நல்லது செய்யக் கருதி நான் உனக்குக் கூறும் உயர்ந்த தத்துவம் கேள்.

எனது பெருமையைத் தேவரும் முனிவரும் கூட அறிய மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் அனைவருக்கும் நானே மூலகாரணம்1. பிறப்பும் மூலமும் அற்றவனாய், நாயகன் எனும் பெயர் பெற்றவனாய் விளங்கும் என்னை உண்மையாக அறிந்து கொண்டவன், சகல பாவங்களில் இருந்தும் விடுபட்டவன். அறிவும் தெளிவும், பொறுமையும் வாய்மையும், அடக்கமும் அமைதியும், இன்பமும் துன்பமும், பிறப்பும் இறப்பும், அச்சமும் துணிவும், புகழ்ச்சியும் இகழ்ச்சியும், திருப்தியும் சமநிலையும், தவமும் தானமும், மனதின் மயக்கமும், மற்றும் அஹிம்சையும் என்னிடம் இருந்தே தோன்றுகின்றன. பிறகு தான் பிராணிகளின் மேல் கால் ஊன்றுகின்றன. 2மகரிஷிகள் எழுவரும், 3மனுக்கள் நால்வரும், 4மனுக்களும் என் மனத்தால் பிறப்பிக்கப்பட்டவர்கள். இவர்களின் பரம்பரை தான் இவ்வுலக மக்கள். இந்த என் பெருமையை அறிந்தவன், யோக சக்தியைப் புரிந்தவன்; அசைக்க முடியாத யோக நிலை அடைந்தவன். இதில் சந்தேகமே இல்லை. உலகின் தோற்றத்திற்கும் அதன் மாற்றத்திற்கும் நானே காரணம் என்பதை நன்கறிந்தவன் என்னைத் தொழுகிறான். என்னைப் பற்றியே பேசிப்பேசி மகிழ்கிறான் பிறருக்குப் போதனைகள் செய்கிறான். என்மேல் உயிரையே பெய்கிறான். மனம் நிறைந்து உய்கிறான்ƒ அவனுக்கு நான் புத்தியோகம் அளிக்கிறேன் உள்ளத்தில் கருணை தெளிக்கிறேன். ஞான விளக்கினால் அறியாமை அழிக்கிறேன். அதனால் அவன் எனையடைந்து செழிக்கிறான்.
அர்ஜுனன்: கேசவா‚ நீயே பரம்பொருள் நீயே நிலைத்தவன் நீயே தூயவன் நீயே நாயகன் நீயே ஒளிர்பவன். நீயே உயர்ந்தவன் நீயே மூலதேவன் எங்கும் நிறைந்தவன் பிறப்பிலாச் சிறந்தவன் இதைத்தான் எல்லா ரிஷிகளும், 5தேவரிஷி நாரதரும், அசிதர், தேவலர், வியாசர் ஆகியவர்களும் சொல்லுகிறார்கள். அதையே தான் நீயும் கூறுகிறாய். அனைத்தையும் நான் நம்புகிறேன். ஆனால் ஒன்று. அரக்கரும் தேவரும் நிச்சயம் இதை அறியமாட்டார்கள். உயிர்களின் ஈசனான உலக நாயகனே‚ உன்னை நீயே தான் அறிவாய்‚ எங்கும் நீக்கமற எந்த மகிமையால் நீ நிறைந்துள்ளாயோ அதை மிச்சம் மீதயின்றி எனக்குச் சொல்லுவாயாக‚ உன்னை எப்படி நினைப்பது? எப்படி தொழுவது? அமுதம் போன்ற உன் மகிமைகளைக் கேட்கக் கேட்க எனக்குத் திகட்டவே இல்லை‚ மீண்டும் அவற்றை எனக்கு விரிவாக விளக்கிச் சொல்‚
கண்ணன்: அப்படியே ஆகட்டும் அர்ஜுனா, மங்களகரமான என் மகிமைகளில் முக்கியமானவற்றை மட்டும் விளக்குவேன். நான்முகனாகிய படைப்புக் கடவுள் நானே‚ அனைத்து ஜீவராசிகளின் இதயத்திற்குள்ளும் இருப்பவன் நானே, அவற்றின் முதலும், முடிவும், நடுவும் நானே‚ பிராணிகளில் உள்ள உயிரும் நானே, மேலும் கேள் அர்ஜுனா,

பன்னிரண்டு 6ஆதித்தியர்களில் விஷ்ணு நான்ƒ ஒளி விடும் கிரகங்களில் சூரியன் நான். நட்சத்திரங்களில் சந்திரன் நான். காற்று 7வகைகளில் மரீசி நான் அது மட்டுமல்ல‚ 8வேதங்களில் நான் சாமவேதம். புலன்களில் நான் உயர்ந்த மனம். தேவர்களில் நான் இந்திரன். 9ருத்ரர்களில் நான் சங்கரன் 10யட்ச ராட்சசர்களில் நான் குபேரன் 11அஷ்ட வசுக்களில் நான் அக்கினி. மலைகளில் நான் மகா மேரு. புரோகிதரில் நான் 12பிருகஸ்பதி சேனாபதிகளில் நான் முருகவேள். நீர்நிலைகளில் நான் நீள்கடல். மகரிஷிகளில் நான் 13பிருகு. சொற்களில் நான் ஓங்காரம் வேள்விகளில் நான் ஐபம் உறுதியில் நான் இமயம் தேவமுனிவரில் நான் நாரதர் 14கந்தர்வரில் நான் சித்ர ரதன். 15சித்தர்களில் நான் கபில முனி பசுக்களில் நான் காமதேனு குதிரைகளில் நான் உச்சை சிரவஸ் யானைகளில் நான் ஐராவதம். மரங்களில் நான் அரச மரம் மனிதர்களில் நான் சக்கரவர்த்தி ஆயுதங்களில் நான் வஜ்ராயுதம் பாம்புகளில் நான் வாசுகி. படைப்பவர்களில் நான் மன்மதன் நாகங்களில் நான் அனந்தன் என்ற ஆதிசேஷன் நீர் தேவதைகளில் நான் வருணன். பிதிர்க்களில் நான் அரியமான். அடக்குபவரில் நான் யமன் அரக்கர்களில் நான் பிரகலாதன் கணிப்பவர்களில் நான் காலம். விலங்குகளில் நான் சிம்மம். பறவைகளில் நான் கருடன் தூய்மையிலே நான் காற்று வீரர்களில் நான் ராமன் மீன்களிலே நான் மகரம். நதிகளில் நான் ஜான்ஹவீ (கங்கை).
வித்தைகளில் நான் ஆத்ம வித்தை. தர்க்கங்களில் நான் வாதம். எழுத்துக்களில் நான் அகரம். புணர்ச்சிகளில் நான் துவந்துவம். கானங்களில் நான் பிருகத்சாமம். சந்தங்களில் நான் காயத்ரீ. மாதங்களில் நான் மார்கழி. காலங்களில் நான் வசந்தம். யாதவர்களில் நான் வாசு தேவன். பாண்டவர்களில் நான் அர்ஜுனன். புத்திக் கூர்மையில் நான் சுக்கிராச்சாரி. இரகசியங்களில் நான் மௌனம்.
மேலும் கேள் பார்த்திபா, எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ளும் மரணம் நானே, பிறக்கின்றவர்களின் பிறப்பும் நானே, ஏமாற்றுகிறவர்களின் சூதாட்டம் நானே‚ ஒளிமிக்கவர்களின் பிரகாசம் நானே‚ தண்டிப்பவர்களின் செங்கோல் நானே, வெற்றி விரும்பிகளின் நீதியும் நானே‚ துறவிகளின் ஞானம் நானே‚ உயிர்களின் வித்தும் நானே‚ முடிவில்லாத காலமும் நானே‚ முயற்சியும் நானே‚ வெற்றியும் நானே, மங்கையர் தம் புகழ், புத்தி, செல்வம், பொறுமை, நினைவு, வாக்கு, திண்மை அனைத்தும் நானே, திறமை மிக்கது, செழுமை மிக்கது, நன்மை மிக்கது, நல்லொளியும் மிக்கது. அத்தனையும் என் சாயலின் தோற்றமே, நானில்லாமல் இந்த உலகமே இல்லை, ஆம், என் மகிமைகளுக்கு ஒரு முடிவே இல்லை, அதில் ஒரு சிறு துளியே இப்போது நான் சொல்லியிருப்பது‚ பன்னிப்பன்னி இதைப் பகர்ந்திடத் தேவையில்லை. என்னிடம் மிளிர்ந்திடும் இத்தனை அம்சங்களில் ஓரே ஓர் அம்சத்தால் உலகையே தாங்கி நிற்கிறேன் என்பதை நீ அறிந்து கொண்டால் அதுவே போதும்.
(பத்தாம் அத்தியாயம் நிறைவு பெற்றது)
1.இறைவனுக்குத் தாய் இல்லை, தந்தை இல்லை, மகன் இல்லை, உறவினர் இல்லை, ஆசை இல்லை, மனைவி இல்லை. மூலம் அறியப்படாத தூய்மை வடிவான அவன், எங்கும் நிறைந்த ஒளியாவான். – குரு நானக்
2.சப்தரிஷிகள்: ஒவ்வொரு மன்வந்த்ரத்திலும் இவர்கள் வேறானவர்கள். இந்த சுவேதவ்ராக கல்பத்தில் முதல் மன்வந்த்ரமான ஸ்வாயம்புவ மன்வந்த்ரத்தில் தோன்றிய மகரிஷிகளே இங்கு முன்னவர்களாகக் கூறப் பட்டவர்கள். மரீசி, அங்கிரஸ், அத்ரி, புலஸ்தியர், புலகர், கிரது, வசிஷ்டர் எனும், எழுவர். இப்பொழுது நடக்கும் வைவஸ்தவ மன்வந்த்ரதத்திற்குரிய சப்தரிஷிகள்: அத்ரி, வசிஷ்டர், விசுவாமித்திரர், ஜமதக்னி, பரத்வாஜர், கவுதமர், காசியபர். – உரையாசிரியர் அண்ணா
3.நால்வர்கள்: சனகர், சநந்தனர், சனாதனர், சனத்குமாரர். சப்தரிஷிகள் பிரவிருத்தி மார்க்கத்தைக் காட்டியது போல், இவர்கள் நிவிருத்தி மார்க்கத்தைக் காட்டியவர்கள். இவர்களுடைய பிரஜைகள் ஞானப் புதல்வர்கள். இவர்களின் வம்சம் ஞானிகள் பரம்பரை. – உரையாசிரியர் அண்ணா
4.மனுக்கள்: பிரம்மாவின் ஒரு பகலாகிய கல்பத்தில் 14 மனுக்கள் இப்போது நடக்கும் சுவேதவராக கல்பத்தின் மனுக்கள் ஸ்வாயம்புவர், ஸ்வாரோசிஷர், உத்தமர், தாமசர், ரைவதர், சாச்சுஷர், வைவஸ்தவர், சாவர்ணி, தச்சாசாவர்ணி, பிரம்மசாவர்ணி, தர்மசாவர்ணி, ருத்ரசாவர்ணி, தேவசாவர்ணி, இந்திரசாவர்ணி எனப் பதினால்வர். இப்போது நடைபெறுவது 7-வது, அதாவது வைவஸ்த மன்வந்த்ரம். – உரையாசிரியர் அண்ணா
ஒவ்வொரு மன்வந்த்ரத்திலும் மனு, தேவர்கள், மனுபுத்திரர்கள், இந்திரன், ரிஷிகள், பகவானுடைய அம்சாவதாரம் என்று ஆறு இடங்களில் பகவானுடைய விபூதிகள் முக்கியமாய் விளங்கும். – பாகவதம்
5.தேவரிஷிகள்: தேவலோகத்தில் வசிக்கக் கூடியவராகவும், முக்கலை ஞானிகளாகவும், சத்திய விரதர்களாகவும், இயற்கையில் சம்புத்தர்களாயினும் இச்சா மாத்திரத்தால் உலகியல் சம்பந்தத்தை ஏற்பவர்களாகவும், எங்கும் தடையின்றிச் செல்லக் கூடியவர்களாகவும், உள்ளவர்கள் தேவர்களாயினும் மனிதர்களாயினும் தேவரிஷிகளாவர். இவர்களில் சிலர்: நரநாராயணர், வால்கில்யரிஷிகள், கர்த்தமர், பர்வதர், நாரதர், அசிதர், வத்சரர். இவர்கள் தேவர்களையும் அடக்கியாளக் கூடியவர்கள். – வாயு புராணம்.
6.ஆதித்யர் பன்னிருவர்: தாதா, மித்ரன், அர்யமா, இந்திரன், வருணன், அம்சன், பகன், விவஸ்வான் (சூரியன்), பூஷா, சவிதா, த்வஷ்டா, விஷ்ணு. கடைசி புதல்வனான விஷ்ணு குணத்திற் சிறந்தவன். இவர்கள் அனைவரும் கசியபருக்கு அதிதி தேவியிடம் பிறந்தவர்கள். – மகாபாரதம்.
7.மருத் கணங்கள் அல்லது காற்று தேவதைகள் காசியருக்குத் திதி தேவியிடம் பிறந்த 49 புத்திரர்கள் மருத் கணங்கள் ஆவர். திதி தேவியின் மற்ற புத்திரர்கள் அசுர குணம் உடையவர்கள். மருத்துக்கள் தேவர்களாயினர். அவர்களில் சிறந்தவன் மரீசி.
8.தேவர்கள்: முப்பத்தி மூவர்.
9.ருத்ரர்கள் பதினொருவர்: ஹரன், பகுபேன், திரியம்பகன், அபராஜிதன், விருஷாகபி, சம்பு, சங்கரன், கபர்த்தீ, ரைவதன், மருகவ்யாதன், சர்வன், கபாலி, இவர்களில் சம்புமூர்த்தியான சங்கரன் மங்களங்களை அளிப்பவன். இந்தப் பதினொருவரும் பிரம்மாவின் நெற்றிக் கண்ணில் உதித்தவர்கள். – ஹரிவம்சம்
10.யட்ச ராட்சசர்கள்: புலஸ்திய ரிஷியின் புத்திரர்கள் அகஸ்தியர், விச்ரவஸ் இவர்களில் விச்சிரவசுக்கு ஒரு மனைவியிடம் யட்சர்களுக்குத் தலைவனான குபேரனும் இன்னொரு ராட்சச மனைவியிடம் ராவணன், கும்பகர்ணன், விபீஷணன் ஆகியோர் புத்திரர்கள். – பாகவதம்
11.அஷ்ட வசுக்கள்: தரன், துருவன், சோமன், அகஸ், வாயு, அக்கினி, ப்ரத்யுஷன், ப்ரபாசன். இவர்களில் அக்கினி சிறந்தவன். இவர்கள் பிரம்மபுத்திரராகிய தர்மர், தட்சன் குமாரியாகிய வசுதேவியிடம் பெற்ற பிள்ளைகள்.
12.பிருகஸ்பதி: அக்கிரச மகரிஷியின் புத்திரர். தேவேந்திரனுடைய புரோகிதர். தேவர்களுக்கெல்லாம் குரு.
13.பிருகு: முன் ஏழு மகரிஷிகளில் முக்கியமானவர்.
14.கந்தர்வர்: தேவர்களில் ஒரு வகையினர். ஆடல் பாடல்களில் சிறந்தவர்கள்.
15.சித்தர்கள்: அஷ்டமா சித்திகளைப் பெற்றதுடன் தருமம், ஞானம், வைராக்கியம் நிறையப் பெற்றவர்கள். காமதேனு, உச்சைசிரவஸ், ஐராவதம்: பாற்கடலைக் கடைந்த போது உண்டானவை. வஜ்ரம்: ததீசி முனிவர் தேவர்களிடம் கருணை கொண்டு தபோ மயமான தன் சரீரத்தை அவர்களுக்காக தியாகம் செய்தார். அவருடைய முதுகெலும்பால் அமைந்தது இந்திரனுடைய வஜ்ராயுதம். அதனால் அது ஆயுதங்களுள் சிறந்ததாயிற்று. வாசுகி: பாற்கடலில் அமுதம் கடைந்தபோது வாசுகி நாணாக அமைந்தது. இது சர்ப்பங்களின் அரசன். வருணன்: சமுத்திர ராஜன். எட்டு திக்குப் பாலகர்களில் ஒருவன். அர்யமன்: கவ்வவாகன், அனலன், சோமன், யமன், அர்யமா, அக்னிஷ்வாத்தா, பர்கிஷத் என்பவர் ஏழு வகைப் பிதிரர்கள். யமன்: இந்த மன்வந்தரத்தில் இவர் விவஸ்வானுடைய புத்திரராகிய வைவஸ்தவர். நல்லோர்களிடம் அறக் கருணையும் தீயோர்களிடம் மறக் கருணையும் காட்டுபவர். இவர் தருமத்தை நிலை நாட்டும் லோகபாலருள் ஒருவர். ஞானத்திலும் கருமத்திலும் பக்தியிலும் சிறந்தவர். அரக்கர்கள்: கசியபருக்குத் திதிதேவியிடம் பிறந்த புத்திரர்களின் வம்சம். இரண்யகசிபு, இரண்யாட்சன் முதலிய அசுரர்கள் பரம்பரை. இவ்வம்சத்தில் சிறந்தவன் பிரகலாதன். வைனதேயன்: தட்சன் மகள் வினதைக்குப் பிறந்தவன் இதனால் வைனதேயன் என்று பெயர். பகவானுடைய வாகனம். தேவஸ்வரூபியாக வர்ணிக்கப்பட்டவர். ஜான்ஹவீ: சதீ தேவி தட்ச யாகத்தில் தன் சரீரத்தை விட்ட பின்பு, தேவர்கள் பிரார்த்தனைக்கிணங்கி மறுபடி இமவானுக்கும் மேனகைக்கும் மகளாக இரண்டு வடிவங்களில் அவதரிப்பதாய் வாக்களித்தாள். ஒரு வடிவம் சாகரமூர்த்தி பார்வதி மற்றொரு வடிவம் அருஷருவம். பிரம்மாவின் கமண்டலத்திலிருந்து நீர் வடிவம் பெற்று சொர்க்கம், அந்தரிட்சம், பூலோகம் ஆகிய மூவுலகையும் பாவனமாக்கிக் கொண்டு பாய்ந்தாள். ஜன்ஹீ மகரிஷி ஆசிரமத்தில் பாய்ந்து, அவர் ஆசமனம் செய்து பின் அவர் விட, மேலே பாய்ந்து சென்றதால் ஜான்ஹவீ என்ற காரணப் பெயர் ஏற்பட்டது. – பிருகத் தர்ம புராணம்.
ஆத்மவித்தை: ரிக் வேதம், யஜீர் வேதம், சாம வேதம், அதர்வன வேதம், சிட்சை, கல்பம், வியாகரணம், நிருக்தம், சந்தஸ், ஜோதிசம் முதலியன அபர வித்தை, அட்சரப் பொருள் எதனால் உணரப்படுமோ, அது பரவித்தை அல்லது ஆத்மவித்தை. – முண்டக உபநிடதம்
வாதம்: தர்க்கம் மூன்று வகையானது. நியாயம் பார்க்காமல் தன் கட்சியையே பேசுதல் ஜல்பம். எதிர்கட்சியைக் கண்டித்து பேசுதல் விதண்டை. கோபத்துக்கும் துவேஷத்துக்கும் இடம் கொடாமல் பாரபட்சமின்றி நியாயத்தை விசாரித்தல் வாதம்.
துவந்துவம்: சொற்களின் புணர்ச்சி சமஸ்கிருதத்தில் நான்கு வகை. (1) அவ்யயீ (2ம் அதிஹரி) (2) தத்புருவி (சீதாபதி) (3) பஹீவ்ரிகி (பீதாம்பரம்) (4) துவந்துவம் (ராம லட்சுமணன்). துவந்துவப் புணர்ச்சியில் புணரும் புதங்கள் இரண்டுக்கும் சமப்பிரதானம். – உரையாசிரியர் அண்ணா
சுக்கிராச்சாரி: பிருகு மகரிஷியின் புத்திரர்ƒ சஞ்;சீவினி வித்தையில் வஜ்ர சகீரம் படைத்தவர். யோக வித்தையில் நிபுணர்ƒ அரக்கர்களின் புரோகிதர்.
சூதாட்டம்: இங்கு சூதாட்டம் ஒரு மகிமையாகக் கூறப்பட்டதால், மனதைக் கவரும் அதன் சக்தியைக் கண்டு, சிங்கத்தினிடம் பயப்படுவது போல் பயப்பட வேண்டும் என்ற கருத்தேயன்றி, சூதாடுவது நல்லது என்பதன்று. – உரையாசிரியர் அண்ணா


(காலஞ்சென்ற திரு எஸ் மெய்யப்பன் உலக மக்கள்தொகைத் திட்டத்தின் உறுப்பினராய் தமிழ் நாட்டு அரசுப் பணியில் இருந்தவர்.சௌடீஸ்வரி மலர் என்ற மாத இதழின் ஆசிரியராய் இருந்தவர். )

Series Navigation

எஸ் மெய்யப்பன்

எஸ் மெய்யப்பன்

பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 6

This entry is part [part not set] of 34 in the series 20070906_Issue

எஸ் மெய்யப்பன்



அத்தியாயம் ஒன்பது ராஜவித்யா, ராஜகுஹ்ய யோகம்
ராஜ என்பது உயர்ந்தது வித்யா என்பது வித்தை குஹ்ய என்பது இரகசியம். வித்தைகளில் சிறந்தது என்பதும் இரகசியங்களில் உயர்ந்தது என்றும் பொருள்.

வித்தைகளில் சிறந்ததும், இரகசியங்களில் மேலானதுமான பக்தி யோகத்தின் தன்மைகளும் மேன்மைகளும் அவற்றின் பலன்களும் இதில் விளக்கப் பெற்றுள்ளன.

இதில் 34 சுலோகங்கள் அடங்கியுள்ளன.

—————-

கண்ணன்: அர்ஜுனா‚ அமங்கலத்திலிருந்து நீ விடுபடப் பயன்படும் அறிவு மற்றும் அனுபவம் பற்றிய இரகசியத்தைக் கூறுவேன். இது வித்தைகளில் ராஜா போன்றது சுத்தங்களில் உன்னதமானது இரகசியங்களில் பரமரகசியமானது, தர்மத்தை விட்டுப் பிறழாதது, கடைப்பிடிக்க மிகவும் சுலபமானது கண்கூடாகக் காணக் கூடியது. காலாகாலத்திற்கும் அழிவில்லாதது.

வெளிப்படையாய்க் கண்களுக்குப் புலப்படாத நான், மாயத்தோற்றத்தில் உலகமெல்லாம் பரவி இருக்கிறேன். என்னுள் எல்லா உயிர்களும் அடங்கியுள்ளனவே தவிர, அவற்றிற்குள் நான் அடங்கியிருக்கவில்லை. எந்தப் பொருளும் அந்தப் பொருளாக என்னிடம் இருப்பதில்லை. ஆனால் என்னுடைய ஆத்மா அவற்றைத் தாங்கி நிற்கிறது, அவற்றை உண்டு பண்ணுகிறதுƒ ஆனால் அது அந்தப் பொருட்களில் தங்குவதில்லை1.

வானத்தில் சஞ்சரிக்கும் காற்றைப் போல், பரந்து விரிந்த என்னுடைய தோற்றத்திற்குள் எல்லா உயிர்களும் சஞ்சரிக்கின்றன. பிரளய காலத்தில் உலகமும் எல்லா உயிர்களும் அழிந்து என்னோடு கலந்து விடுகின்றன. பிறகு படைப்புத் தொழிலைத் தொடங்கும் பொழுது மறுபடியும் அவற்றைத் தோற்றுவிக்கிறேன். இயற்கையில் கலந்த இவ்வுயிர்த்திரள் அனைத்தையும் நான் தான் மீண்டும் மீண்டும் உற்பத்திச் செய்கிறேன். அப்படைப்புத் தொழிலில் பற்று வைக்காமல் ஒதுங்கியே நிற்கும் என்னை அந்தக் கருமம் கட்டுப்படுத்துவதில்லை. இயற்கையில் அமைந்த இயக்கம் தான், என்னை சாட்சியாக வைத்து உலகத்தைப் படைக்கிறதுƒ உலகமும் இயங்குகிறது. இந்த என் உண்மைச் சொரூபத்தை அறியாத மூடர்கள் „இவன் மனிதன்… என்று என்னை அவமதிக்கிறார்கள்ƒ விவேகமற்ற அவர்கள் அர்த்தமற்ற கோரிக்கைகளை முன் வைக்கிறார்கள்ƒ வீணான காரியங்களில் ஈடுபடுகிறார்கள்ƒ மதியை மயக்கும் ராட்சச மற்றும் அசுர இயல்புகளையே அடைகிறார்கள்.

ஆனால் மகாத்மாக்கள் „அழிவற்ற ஆதி முதல்வன் இவனே… என்று என்னை அறிந்து கொண்டு என்னையே வழிபடுகிறார்கள். அவர்கள் எப்பொழுதும் என்னையே நினைத்து ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் இருக்கிறார்கள்ƒ கடுமையான விரதங்களால் சதா என்னைத் தேடிக் கொண்டும், யோக முறைகளால் உள்ளத்தால் என்னையே சூடிக் கொண்டும் இருக்கிறார்கள்ƒ சிலர் என்னை அறிவைக் கொண்டு தேடுகிறார்கள்ƒ மற்றும் சிலர் என்னை ஒரே வடிவத்தில் தேடுகிறார்கள்ƒ இன்னும் சிலர் பல்வேறு வடிவங்களிலும் கண்டு புகழ்ந்தேத்திப் பாடுகிறார்கள். இவ்விதம் தன்னிலிருந்து என்னை வேறாக நினைக்காமல், அல்லும் பகலும் அனவரதமும் என்னையே தொழுகின்றவர்களின் யோக N~மங்களை2 நானே கவனித்துக் கொள்ளுகிறேன்.

அர்ஜுனா‚ நானே கர்மம்‚ நானே யாகம்‚ நானே ஆகுதி‚ நானே மருந்து‚ நானே மந்திரம்‚ நானே நெய்‚ நானே நெருப்பு‚ நானே ஆவி‚

மேலும் கேள், அர்ஜுனா‚ அன்னையும் நானே‚ அப்பனும் நானே‚ பாட்டனும் நானே‚ பூட்டனும் நானே‚ அழுக்கெடுப்பவனும் நானே‚ ஆதார சுருதியும் நானே‚ „ஓம்… எனும் ஓங்காரமும் நானே‚ ரிக், யஜீர், சாம வேதமும்3 நானே‚ ஆள்பவனும் நானே.. அறியத்தக்கவனும் நானே‚ கதியும் நானே.. சாட்சியும் நானே‚ வித்தும் நானே.. சத்தும் நானே‚ தஞ்சமும் நானே.. தாங்குபவனும் நானே‚ இருப்பிடம் நானே.. பிறப்பிடம் நானே‚ பின்னிடம் நானே.. புகலிடம் நானே‚ நண்பனும் நானே.. நாயகனும் நானே‚ வெயிலும் நானே.. மழையும் நானே‚ கொடுப்பவன் நானே.. தடுப்பவன் நானே‚ இறப்பும் நானே.. இறவாமையும் நானே‚ இருப்பும் நானே.. இல்லாமையும் நானே‚ எங்கும் எதிலும்.. என்றும் இருப்பவன் .. நானே நானே‚

எல்லா உயிர்களிடமும் நான்4 சமமாய் இருக்கிறேன். எனக்கு நண்பனும் இல்லை, பகைவனும் இல்லை, என் பக்தர்கள் என்னிடம் இருக்கிறார்கள்.. நான் அவர்களிடம் இருக்கிறேன். எனக்கு நீ எதைக் கொடுத்தாலும் பக்தியுடனும் பரிசுத்த மனத்துடனும் கொடு‚ இலை கொடுத்தாலும் சரியே… மலர் கொடுத்தாலும் சரியே‚ கனி கொடுத்தாலும் சரியே.. எதுவும் இல்லையென்றால் கொஞ்சம் தண்ணீராவது கொடு‚ மகிழ்ச்சியுடன் நானதை உண்பேன்‚ நீ உண்பது, படைப்பது, தானம் செய்வது, தவம் செய்வது, எதுவாக இருந்தாலும் எல்லாவற்றையும் எனக்கே அர்ப்பணம் செய்துவிடு‚ அப்படிச் செய்தால் மங்கலம் அமங்கலம் முதலிய கரும பந்தங்களிலிருந்து விடுபடுவாய்.. என்னுடனே முடிபடுவாய்‚

சொர்க்க நாட்டம் கொண்டவர்கள் சோமபானம் செய்து, மூன்று வேதங்களையும் முறையாகக் கற்று, வேள்விகளில் வழிபட்டால் பாவநீக்கம் பெற்று, விரும்பியபடியே தேவலோகம் நுழைகிறார்கள். திகட்டாத இன்பங்களில் இழைகிறார்கள், செய்த புண்ணியம் தீர்ந்ததும், மீண்டும் உலகப் பிறப்பில் வீழ்கிறார்கள், போகப்பித்தர்களாய் வாழ்கிறார்கள், இவ்வித தர்மத்தைப் பின்பற்றுகிறவர்கள் மீண்டும் மீண்டும் பிறக்கிறார்கள்.. இறக்கிறார்கள்.

வேறு தேவதைகளிடம் பக்தி கொண்டு பூஜை செய்கிறவர்களும், தவறான முறையில் என்னையே தான் வணங்குகிறார்கள். என்னை உள்ள படி அறிந்து கொள்ளாத அவர்களின் பூசனையை நான் ஏற்றுக் கொண்டாலும், அதன் பலனை அவர்கள் அடைவதில்லை.

முன்னோரை வழிபடுவோர் அந்த முன்னோரை அடைகின்றனர். தேவர்களுக்காக விரதம் பூணுவோர் அந்தத் தேவர்களை அடைகின்றனர். பேய் பூதங்களை வணங்குவோர் அவற்றையே அடைகின்றனர். என்னைத் தொழுவோர் என்னையே அடைகின்றனர். ஒழுக்கமற்றவனும் கூட பிற தெய்வங்களை விட்டு என்னையே வணங்கினால், நல்ல முடிவுக்கு வந்த அவனை நல்லவனென்றே கருத வேண்டும். ஏனெனில் விரைவில் அவன் விவேகியாக மாறி விடுவான், அமைதி நிலையில் ஊறிவிடுவான். அது மட்டுமல்ல அர்ஜுனா‚ தாழ்ந்த பிறவி5 என்று கருதப்படுபவர்களும், மாதர்களும், வணிகர்களும், சூத்திரர்களும் கூட என்னை வணங்கினால் நற்கதி அடைவார்கள். அப்படி இருக்கும் போது அந்தணர்களைப் பற்றியும், அருந்தவர்களான ராஜரிஷிகளைப் பற்றியும் சொல்லத்தான் வேண்டுமோ? அதனால் என் பக்தனுக்கு என்றுமே அழிவில்லை என்பதை உறுதி செய்து கொள்‚ என்னையே நினைத்து.. என்னையே வணங்கி.. என் திருவடிவளையே சேர்ந்து கொள்‚

(ஒன்பதாம் அத்தியாயம் நிறைவு பெற்றது)

1.அலைகள் நுரைகளை உண்டாக்குகின்றன. ஆனால் தான் உண்டாக்கிய நுரையில் தண்ணீர் உட்காருவதில்லை. – கண்ணதாசன்

2.ஒருவன் அடைய முடியாததை விரும்பி அடைதல் யோகம். அடைந்ததைக் காப்பாற்றுதல் N~மம். பக்தன் அடைய விரும்புவது பக்தி ஒன்றே. ஆகையால் அதற்கு அவசியமான வஸ்துக்களையும் சாதனங்களையும் அடைதலே யோகம.; அதற்கேற்படும் இடையூறுகளிலிருந்து காக்கப்படுதலே N~மம். – உரையாசிரியர் அண்ணா.

3.அதர்வண வேதம் குறிக்கப்படவில்லை. ஒரு வேளை அது கீதைக்குப் பிறகு தோன்றியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

4.அக்கினியைப் போல் நான் உள்ளேன். எட்டி நிற்பவர் குளிரை அக்கினி போக்குவதில்லை. அருகில் நெருங்குவோர் குளிரை அது போக்குகிறது. இது அக்கினியின் பாரபட்ச மற்ற தன்மை. இது போலவே தான் பக்தர்கள்; என் அருள் பெறுவதும்.. மற்றவர்கள் பெறாததும். – ஆதி சங்கரர்.

5.‘விருத்ராசுரன் பிரகலாதன், விருஷபர்வா, பலி, பாணன், மயன், விபீஷணன், சுக்ரீவன், ஹனுமான், ஜாம்பவான், கஜேந்திரன், ஜடாயு, வியாதன், கோபிகைகள், யக்ஞ பத்தினிகள் என்று பலரும் அந்தந்த யுகங்களில் சாதுக்களின் சேர்க்கையால் நன்னிலை பெற்றனர். இவர்கள் வேதங்களைப் பயின்றவர்களல்லƒ பெரியோர்களை உபாசித்தவர்களல்லƒ விரதங்களை அனுஷ்டித்தவர்களல்ல, தவம் செய்தவர்களில்லைƒ சாதுக்களின் சேர்க்கையினால் மட்டுமே என்னை அடைந்தவர்கள்.” – பாகவதம்.


(காலஞ்சென்ற திரு எஸ் மெய்யப்பன் உலக மக்கள்தொகைத் திட்டத்தின் உறுப்பினராய் தமிழ் நாட்டு அரசுப் பணியில் இருந்தவர்.சௌடீஸ்வரி மலர் என்ற மாத இதழின் ஆசிரியராய் இருந்தவர். )

Series Navigation

எஸ் மெய்யப்பன்

எஸ் மெய்யப்பன்

பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 5

This entry is part [part not set] of 37 in the series 20070830_Issue

எஸ் மெய்யப்பன்


அத்தியாயம் ஏழு
விஞ்ஞான யோகம்

விஞ்ஞானம் என்பது அனுபவம். மாயை இறைவனின் உண்மைத் தன்மையை மறைக்கிறது. அதை நீங்க வல்லவன் அந்த இறைவனே‚ நான்கு வகையான பக்தர்களில் ஈசுவர தத்துவத்தை உணர்ந்த ஞானியே சிறந்தவன். தேவதைகளை வணங்கும் பக்தர்களும் இறைவன் அளிக்கும் பலன்களைப் பெறுகின்றனர்.ஆனால் அவை அழியக் கூடியவை. இக்கருத்துக்கள் இதில் விளக்கப் பெறுகின்றன.

இதில் 30 சுலோகங்கள் அடங்கியுள்ளன.

———-

கண்ணன்: மேலும் கேள் 1பார்த்தா, என்னையே மையப்படுத்தி அறியும் வழியை, ஐயத்திற்கு இடமின்றி இப்போது கூறுவேன். ஆன்மீக ஞானம், அனுபவம் காட்டும் அகண்ட 2விஞ்ஞானம் இரண்டைப் பற்றியும் முழுமையும் அறிந்தவன், உலகினில் அனைத்தும் முற்றும் கற்றவன்.

ஆயிரக்கணக்கான மக்களில் யாரோ ஒருவர் தான் சித்தியடைய முயல்கிறான்ƒ அவ்விதம் சித்தியடைய முயல்பவர்களில் எவனோ ஒருவன் தான் 3என்னை உள்ள படி அறிகிறான். எனது இயற்கையானது பூமி, நீர், நெருப்பு, காற்று, வானம், மனம், புத்தி, அகங்காரம் என்று எட்டு வகையாய்ப் பிரிந்துள்ளது. எனது இயற்கையில் இதுவே தாழ்ந்ததுƒ உயர்ந்த இயற்கையும் ஒன்றுண்டு அர்ஜுனா‚ அதுவே ஜீவன் என்பது. அதன் மூலம் தான் நான் இந்த உலகைத் தாங்குகிறேன். இவ்விரு வகை இயற்கையிலிருந்து தான் எல்லா உயிர்களும் தோன்றுகின்றன. உலகங்களின் தோற்றத்திற்குக் காரணம் நானே‚ அவற்றின் அழிவுக்கும் காரணம் நானே‚

தனஞ்ஜயனே, என்னை விட உயர்ந்தது, உலகில் வேறொன்றும் இல்லை. நூலில் கோர்த்த மணிகள் போல் உலகம் முழுவதும் என்னையே பற்றி நிற்கிறது. நீரினில் சுவையும் நானே‚ நெருப்பினின் சுடரும் நானே, சூரிய சந்திரரில் ஒளியும் நானே, 4வானிலே ஓசையும் நானே, வேதங்களில் ஓம்காரம்5 நானே, பூமியில் நறுமணம் நானே, பூதங்களின் வித்தும் நானே, உயிர்களில் உயிரும் நானே‚ முனிவர்கள் தவமும் நானே‚ அறிஞரின் அறிவும் நானே‚ மனத்தில் ஆண்மையும் நானே‚ வீரரின் வீரம் நானே‚ பலவானின் பலமும் நானே‚ தர்ம விரோதமற்ற ஆசையும் நானே‚

சாத்விகம், ராஜசம், தாமசம் என்ற குணங்களுடன் உலகில் உள்ள அனைத்துப் பொருள்களும் என்னிலிருந்து தோன்றியவை தான். அவற்றிற்கு 6நான் அடங்கியவனல்ல, அவை அனைத்துமே என்னுள் அடக்கம். இந்த மூன்று குணமக்கள், அந்தக் குணங்களுக்கு நான் அப்பாற்பட்டவன் என்பதையும், அழிவற்றவன் என்பதையும் அறிந்து கொள்வதில்லை. முக்குண மயமான இந்த தேவமாயை வெல்லற்கரியது, என்னைச் சரண் அடைந்தவர் மட்டுமே அதை வெல்ல முடியும். ஆனால் பாவிகள் 7என்னைச் சரணடைவதில்லை. அவர்கள் மூடர்கள், மானிடப் பதர்கள், அறிவிழந்தவர்கள் அரக்கத் தன்மை கொண்டவர்கள்.

நான்கு விதமானவர்கள் நாடி என்னை வழிபடுகின்றனர். துயரமடைந்தவர்கள், நற்கதியை நாடுகின்றவர்கள், ஈசுவர தத்துவம் அறிய விரும்புகிறவர்கள், ஈசுவர ஞானம் கைவரப் பெற்றவர்கள் என்ற இந்த நான்கு வகையினரும் உயர்ந்தவர்கள் தான். இவர்களில் எப்பொழுதும் என்னிடம் தொடர்பு கொண்டு, என்னை மட்டுமே வணங்குபவன் தான் உயர்ந்த ஞானி. மனத்தை அடக்கி என்னில் கலந்துவிட்டவனே என்னுடைய ஆத்மா8 பற்பல பிறவிகளின் பயனாய் ‘எல்லாம் கண்ணனே” என்ற ஞானம் பெற்றவனே மகாத்மா, அவன் கிடைத்தற்கரியவன், அவன் என்னை நேசிக்கிறான், நானும் அவனை நேசிக்கிறேன்.

அது வேண்டும் இது வேண்டும் என்று ஆசைப்படும் மக்கள் விரதங்கள் மேற்கொள்ளுகிறார்கள், தேவதைகளை வணங்குகிறார்கள். அந்த வழிபாட்டையும் நான் ஏற்றுக்கொள்ளத் தான் செய்கிறேன். அது மட்டுமல்ல.. அத்தேவதைகள் மூலமாகவே, அவர்கள் விரும்பிய பலனை நானே அவர்களுக்குத் தருகிறேன். ஆனால் அந்தப் பலன் அழித்துவிடக் கூடியது. தேவர்களை வழிபட்டால் தேவர்களை அடையலாம், என்னை வழிபட்டால் என்னையே அடையலாம். இணையற்ற, அழிவற்ற என் பரமாத்ம வடிவத்தை அறியாத மூடர்கள், பிறவியற்ற என்னை 9பிறந்தவன் என்று எண்ணுகின்றனர். மாய சக்தியால் மறை பொருளாக விளங்கும் நான் அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரிவதில்லை. ஆனால் தெளிவற்ற மக்கள், ஆதியும் அந்தமும் இல்லாதவன் நான் என்பதை அறிந்து கொள்வதில்லை. நடந்தவை, நடப்பவை, நடக்க இருப்பவை அனைத்தையும் நான் அறிவேன். ஆனால் என்னைத் தான் யாரும் அறிந்ததில்லை.

சுகம் துக்கமாகிய இருவகை உணர்வுகளால், எல்லா ஜீவராசிகளும் பிறக்கும் போதே மயங்கி விடுகின்றன. ஆனால் புண்ணியத்தால் பாவத்தை விரட்டுகிறவர்கள் இந்த இரட்டைகளின் பிடியிலிருந்து விடுபட்டு, உறுதியான விரதம் பூண்டு என்னையே வணங்குகிறார்கள். ஆத்மயோக கர்மயோகம் அனைத்தையும் அறிந்து கொண்டவர்கள், மூப்பு மரணம் ஆகியவற்றிலிருந்து பிடியிலிருந்து விடுபடுவதற்காக என்னையே சரணடைந்து வணங்குகிறார்கள். பூதங்கள் பற்றிய அறிவும், தெய்வங்கள் பற்றிய உணர்வும், கேள்விகள் பற்றிய தெளிவும் பெற்றவர்கள், அவர்கள் இறக்கும் காலத்திலாவது எனது உண்மைச் சொரூபத்தை அறிகிறார்கள்.

(ஏழாம் அத்தியாயம் நிறைவு பெற்றது)

1.பிரிதாவின் மகன்.

2.விஞ்ஞானம் என்பது ஒரு பொருளை நன்றாய் அறிவதாம். „பால்… எனும் ஒரு பொருளை எடுத்துக் கொள்வோம். அதைப் பற்றிக் காதால் மட்டும் கேட்டவன் அஞ்ஞானிƒ பார்த்தவன் ஞானிƒ ருசி கண்டவன் விஞ்ஞானி. பகவானைக் கண்டு அவனுடன் உறவு கொண்டாடுவது தான் விஞ்ஞானம்.

3.அத்தகையவன் ஒருவனுமில்லை என்பது பொருள். – ஸ்ரீ ராமாநுஜர்

4.கண்ணால் சூரியனைப் பார்க்கிறோம். கண்ணும் அவனே, ஞாயிறும் அவனே, இந்தத் தொடர்பும் அவனே. – ஸ்ரீ ராமாநுஜர்

5.எல்லா வேதங்களிலும் பீஜமந்திரமாய் இருப்பது ஓங்காரம். – சுவாமி சித்பவானந்தர்

„ஓம்… அதாவது „அவும்… என்பது ஒலிகளுக்கெல்லாம் ஆதார வார்த்தை. முதல் எழுத்து “அ” நாக்கால் வாயின் உள் பகுதியைத் தொடாமலே ஒலிப்பது. “ம” என்ற கடைசி ஒலி உதடுகளை மூடுவதால் உண்டாக்கப்படுவது. “உ” என்பது இவ்விரண்டுக்கும் இடையில் வாய் முழுவதும் உருள்வது. எனவே “ஓம்” என்பது அனைத்து ஒலிகளுக்கும் அடிப்படை நாதம். – சுவாமி விவேகானந்தர் “அ” என்ற எழுத்து எட்டு என்ற தமிழ் எண்ணைக் குறிக்கும். இந்த அகரம் எண் சாண் உடலாய்ப் புறத்தே உருவம் பெறுகிறது. “உ” என்ற எழுத்து இரண்டு என்ற தமிழ் எண்ணைக் குறிக்கும். இந்த உகரம் இருவகை மூச்சாகி நித்ய மூச்சாகவும், அநித்ய மூச்சாகவும் செயல்படுகிறது. எண் சாண் உடம்பில் நித்திய மூச்சு, அருவமாயும் அநித்ய மூச்சு உருமாயும் செயல்படுகின்றன. “ம்” என்ற மகர மெய்யே உயிருக்கு ஆதாரமாகிறது. உண்மை ஞான அனுபவத்துக்குக் காரணமாகிறது. காண்பதற்கு அரிய அருவமாய் இருந்து ஆட்சியும் செய்கிறது. – சுவாமி சரவணானந்தா

6.அலைகள் சமுத்திரத்தில் இருப்புடையனவேயன்றி சமுத்திரம் அலையில் இருப்புடையதன்று. – ஆதி சங்கரர்.

7.பாவிகள் அவர்கள் செய்யும் பாவங்களுக்கு ஏற்ப மூடர்கள்,, மானிடப் பதர்கள், அறிவிழந்தவர்கள், அரக்கத் தன்மை கொண்டவர்கள் என்று நான்கு வகையாகப் பிரிக்கப்படுவார்கள். – ஸ்ரீ ராமாநுஜர்.

8.என்னை விட்டு உயிர்வாழ முடியாத அவனைப் போலவே, அவனை விட்டு நானும் உயிர் வாழ முடியாதென்று முடிவு கொண்டுள்ளேன். – ஸ்ரீ ராமாநுஜர்

9.இறைவன் நியமிக்கப் படாதவன், சிருஷ்டிக்கப்பட்டவனும் அல்ல, தானே இயங்குபவன், நிர்மலன்.
– குருநானக்
அத்தியாயம் எட்டு

அ~ரப் பிரம்ம யோகம்

அ~ரம் என்றால் அழியாதது, பிரம்மம் என்றால் பரம்பொருள். அறிவற்ற பரம்பொருள் பிரம்மம். உடலில் இருந்து ஆத்மா விடுபடும்போது, அந்தப் பரம்பொருளையே நினைத்திருந்தால், அந்த ஆத்மா பரம்பொருளையே அடையும். அதனால் எப்பொழுதும் பரம்பொருளை நினைத்தே தொழிலில் ஈடுபடுதல் சிறந்தது. இறுதியில் ஆத்மா செல்லும் வழி இரண்டு. இருள் வழி பிறப்பில் தள்ளும். ஒளி வழி பரம்பொருளில் சேர்க்கும். இக்கருத்துக்கள் இதில் விளக்கப்பெறுகின்றன.

இதில் 28 சுலோகங்கள் அடங்கியுள்ளன.

————

அர்ஜுனன்: ஓ புருஷோத்தமா, பிரம்மம் என்பது எது?

கண்ணன்: அழிவற்ற பரம்பொருளே பிரம்மம். அது எல்லாம் வல்லது‚ பழமைக்கும் பழமையானது‚ உலகனைத்தும் படைத்தது‚ அனைத்தையும் ஆள்வது, அணுவுக்குள் அணுவானது‚ நினைவிற்கு எட்டாதது‚ நெடிய உருவம் கொண்டது‚ ஆதவன் போல் பிரகாசிப்பது‚ அஞ்ஞான இருளை அகற்றுவது‚ அதுவே பிரம்மம்‚

அர்ஜுனன்: அப்படியென்றால் ஆத்மஞானம் என்பது என்ன?

கண்ணன்: பிரம்மத்தின் இயல்பை அறிந்து கொள்ளுவதே ஆத்ம ஞானம்.

அர்ஜுனன்: கர்மம் என்பது என்ன?

கண்ணன்: அசையும் பொருள் அசையாப் பொருள் என்று உயிர்களை உண்டாக்குவதற்காகச் செய்யப்படும் அர்ப்பண ரூபமான செயலே கர்மம் எனப்படும்.

அர்ஜுனன்;: அதிபூதம் என்று எதைச் சொல்கிறார்கள்?

கண்ணன்: அழியும் தன்மை கொண்டதற்குப் பெயர் அதிபூதம்.

அர்ஜுனன்: அதி தைவம் என்று சொல்லப்படுவது எது?

கண்ணன்: உடலில் உறையும் புருஷனே அதிதைவம்.

அர்ஜுனன்: அதியக்ஞம் என்பது எது?

கண்ணன்: அந்த உடலில் இருக்கும் நானே அதியக்ஞம்.

அர்ஜுனன்: அது எவ்விதம் இந்த உடலில் அதியக்ஞம் ஆயிற்று? மனதைக் கட்டுப்படுத்தியவர்கள் அந்திமக் காலத்திலாவது பரம்பொருளை அடைவதற்கு வழி என்ன?

கண்ணன்: குந்தி மகனே, பிராணனைப் புருவங்களின் மத்தியில் நிறுத்தி, மனத்தை ஒருமுகப் படுத்தி, சிந்தனையைப் பரம்பொருள் மேல் நிலைநிறுத்துவதை அன்றாடப் பழக்கமாக்கிக் கொள்ளுகிறவன் ஒளிப் பிழம்பான பரம்பொருளையே அடைகிறான் 1மரண காலத்திலாவது இப்பழக்கத்தை மேற் கொண்டாலும் அவன் பரம்பொருளையே அடைகிறான், அதாவது அந்திமக் காலத்தில் என்னையே நினைத்தவனாய் உயிர் துறப்பவனும் நிச்சயம் என்னையே அடைகிறான். வேறு எதையாவது நினைத்துக் கொண்டே இறப்பவன், எதை நினைத்தானோ அதையே அடைகிறான்.

ஆகையால் அர்ஜுனா, நீ போரிடும் போதெல்லாம் என்னையே நினைத்துக் கொண்டு போரிடு‚ மனத்தையும் அறிவையும் எனக்கே அர்ப்பணித்து விட்டுப் போரிடு, நீ என்னையே அடைவாய், இதில் சந்தேகமில்லை.

பற்றற்ற துறவிகள் பிரம்மச்சரிய விரதம் மேற்கொண்டு எதை அடைகிறார்களோ, வேதவிற்பன்னர்கள் எதை அழிவுற்றது என்று எண்ணுகிறார்களோ அதைப்பற்றி இப்போது சுருங்கச் சொல்லுகிறேன் கேள்‚

உயிர் மூச்சை உச்சந்தலையில் வைத்து, ஒருமுகப்பட்ட மனதை இதயக்கமலத்தில் வைத்து என்னையே நினைத்து “ஓம்”என்ற பிரணவ மந்திரத்தை நாவிலே வைத்து உடலைத் துறப்பவன் உயர்கதி அடைகிறான். இத்தகைய யோகி எளிதில் என்னைக் கண்டு கொள்கிறான். அப்படி என்னைக் கண்டு கொண்ட மகாத்மா மறுபடியும் பிறப்பதில்லை. பிரம்மலோகம் வரையுள்ள அழியக் கூடிய எல்லா உலகங்களிலும் மறுபிறப்பு உண்டு. ஆனால் என்னை அடைந்தவர்களுக்கு மறுபிப்பே கிடையாது.

பார்த்தா‚ பகல் இரவு இரண்டின் நிலை குறித்து இப்போது பகர்வேன்‚

ஆயிரம் யுகங்கள் பிரம்மாவுக்கு ஒரு பகல் 2இன்னும் ஒரு ஆயிரம் யுகங்கள் ஓர் இரவு. பிரம்மாவுக்குப் பகல் வரும் போது உலகில் மறைந்திருக்கும் பொருட்களெல்லாம் காட்சிக்கு வருகின்றன. இரவு வரும் போது அவை பழைய உலகத்திலேயே மறைந்து விடுகின்றன3. மறுபடியும் பகல் வரும்போது அப்பொருட்கள் மீண்டும் பிறக்கின்றன. மறுபடியும் இரவு வரும்போது மீண்டும் மறைகின்றன. இயக்கத்திற்கெல்லாம் அப்பாற்பட்டு அழியாதது ஒன்று இருக்கிறது. அதை அடைந்து விட்டால் அங்கிருந்து திரும்புவது என்ற பேச்சுகே இடமில்லை. அது தான் என்னுடைய திருவடிகள். எங்கும் பரவி நிற்கும் பரம்பொருளான என்னிடம் எல்லாம் பொருட்களுமே அடங்கியுள்ளன. என்னையே நினைத்து என் திருவடிகளை அடைந்தவனுக்குப் பிறகு என்றுமே பிறப்பு என்பது இல்லை.

பாரதச் செல்வா, எந்தக் காலத்தில் மரணமுற்றால் யோகிகளுக்கு மறுபிறவி இல்லையோ, எந்தக் காலத்தில் மரணமுற்றால் அவர்கள் மீண்டும் பிறப்பார்களோ, அந்தக் காலங்களைப் பற்றி இப்போது சொல்லுவேன்.

நெருப்பு, வெளிச்சம், பகல், வளர்பிறைக் காலம், உத்திராயணக் காலம்4 இவற்றில் இறக்கும் ஞானிகள் பிரம்மத்தை அடைந்து பிறப்பை அறுத்துவிடுகிறார்கள். புகை, இரவு, தேய்பிறைக் காலம், தச்சிணாயனக் காலம்5 இவற்றில் மரணமுறும் ஞானிகள், சந்திரனுடைய ஜோதியை அடைந்து மீண்டும் பிறக்கின்றனர். ஒளியும் இருளும் உலகில் என்றும் நிலையானவை. ஒளி வழியில் செல்பவன் திரும்புவதில்லை. இருள் வழியில் போனவன், போன வேகத்தில் திரும்பவும் பிறக்கிறான். இந்;த இரு வழிகளையும் அறிந்து கொண்டவன் மயங்குவதில்லை. ஆகவே அர்ஜுனா, நீ எப்பொழுதும் யோகத்திலேயே நிலைத்திரு‚
( எட்டாம் அத்தியாயம் நிறைவு பெற்றது)

1.அஜாமிளன் என்பவன் பெரும் பாவங்களைச் செய்தவன். எனினும் அவன் இறக்கு முன் „நாராயணன்… என்ற தன் மகனைக் கூவி அழைத்ததால் காக்கப்பட்டான் என்பது பாகவதக் கதை.

2.கிருத, திரேதா, துவாபர, கலி ஆகியவை சேர்ந்தது சதுர் யுகம். ஆயிரம் சதுர் யுகம் கொண்டது பிரம்மாவின் ஒரு பகல். இன்னும் ஆயிரம் சதுர் யுகம் கொண்டது ஓர் இரவு. ஒரு பகலும் ஓர் இரவும் ஒரு நாள். 365 நாள் ஓர் ஆண்டு. இத்தகைய நூறு ஆண்டுகள் பிரம்மாவின் பூரண ஆயுள் என்பது மரபு.

முந்தையோர் கூரிய காலவரையறை: 15 நாள் (சுக்லப~ம்) வளர்பிறைƒ 15 நாள் (கிருஷ்ண ப~ம்) தேய்பிறை. இரண்டு ப~ம் கூடியது ஒரு மாதம். 6 மாதம், தைமுதல் ஆடி வரை உத்தராயணம். 6 மாதம், ஆடி முதல் தை வரை த~pணாயனம். தேவர்களுக்கு உத்திராயணம் பகல், த~pணாயனம் இரவு. இந்தப் பகலும் இரவும் சேர்ந்து, தேவர்களுக்கு ஒரு தினம். இம்மாதிரி 360 தினம், அதாவது 360 மனித வருஷம் ஒரு தேவ வருஷம்;. 1200 தேவ வருஷம் கலியுகம்ƒ 2400 தேவ வருஷம் த்வாபர யுகம். 3600 தேவ வருஷம் த்ரேதா யுகம். 4800 தேவ வருஷம் க்ருத யுகம். ஆக 12000 தேவ வருஷம் ஒரு சதுர் யுகம். 1000 சதுர் யுகம் பிரம்மதேவரின் பகல்ƒ 1000 சதுர்யுகம் பிரம்மதேவரின் இரவு. ஆக 2000 சதுர் யுகம் பிரம்மாவின் ஒரு நாள். இம்மாதிரி அவர் வயது 100. இதற்கும் பரம்… என்று பெயர். – உரையாசிரியர் அண்ணா.

3.இதுவே பிரளயம் எனப்படும். இது நான்கு வகைப்படும்.தோன்றிய பொருள்கள் அவ்வப்போது அழிவதும், இரவு தோறும் நமது உறக்கத்தில் உலகம் நம்மிடம் ஒடுங்குவதும் நித்யப் பிரளயம். பிரம்மாவின் ஓர் இரவான 1000 சதுர் யுகத்துக்கு ஒரு முறை அவரிடம் உலகம் ஒடுங்குவது நைமித்தியப் பிரளயம். ஒரு பிரம்மாவின் 100 வயது ஆயுள் முடிவில், அந்த பிரம்மாவும் அனைத்து உலகங்களும் ஆதி நாராயணனிடம் ஒடுங்குவது மகாப்பிரளயம். முடிவாக முக்தியடைவதே ஆந்யந்திகப்பிரளயம். – விஷ்ணு புராணம்

4.சூரியன் வடதிசை பயணம் செய்யும் ஆறு மாதங்கள்.

5.சூரியன் தென் திசைப் பயணம் செய்யும் ஆறு மாதங்கள்.


Series Navigation

எஸ் மெய்யப்பன்

எஸ் மெய்யப்பன்

பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 4

This entry is part [part not set] of 29 in the series 20070823_Issue

எஸ் மெய்யப்பன்


அத்தியாயம் ஐந்து
கர்ம சந்நியாச யோகம்

உடலால் செயல்படுதல் கர்மம் உள்ளத்தால் செயல்படுதல் சந்நியாசம். ஞானயோகமும் சந்நியாச யோகமும் ஒன்றே. கர்மயோகமும் சந்நியாச யோகமும் ஒரே பலனைத்தான் கொடுக்கின்றன. தொழிலைத் துறப்பதைக் காட்டிலும் அதைச் செய்வதே மேலானது. இக்கருத்துக்கள் இதில் விளக்கப்படுகின்றன.

இதில் 29 சுலோகங்கள் உள்ளன.

—————-

அர்ஜுனன்: கிருஷ்ணா, ஒரு முறை கர்மத்தைத் துறந்து விடச் சொல்லுகிறாய், மறுமுறை கர்மத்தை மேற்கொள்ளச் சொல்லுகிறாய், சந்தேகத்திற்கு இடமின்றி, இரண்டில் எது சிறந்தது என்று முடிவாகச் சொல்.

கண்ணன்: 1கபித்விஜயா, கர்மம் செய்தாலும் சரியே, அதனைத் துறந்தாலும் சரியே, இரண்டுமே சொர்க்கத்தை அளிப்பவை. ஆனாலும் கர்மத்தைத் துறப்பதைக் காட்டிலும், அதைச் செய்வதே மேலானது. ஏனெனில் விருப்பு வெறுப்புகளைக் கடந்த உண்மையான ஞானி, இன்ப துன்ப இரட்டைகளை நீக்கிவிடுவதால், இனிதே பந்தத்திலிருந்து விடுபடுகிறான். ஆத்ம ஞானம் வேறு, செயல் நிலை வேறு என்று அறியாதவர்கள் சொல்வார்கள். அறிந்தவர்கள் அவ்விதம் சொல்ல மாட்டார்கள். ஏனெனில் இவை இரண்டில் எதைக் கடைப்பிடித்தாலும் சொர்க்கம் கிட்டுவது நிச்சயம். ஆத்ம ஞானி அடையும் அதே உன்னத நிலையை, கர்மயோகியும் நிச்சயம் அடையலாம். உண்மையில் சொல்ல போனால் கர்மத்தைச் செய்வது, கர்மத்தைத் துறப்பது இரண்டுமே ஒன்று தான். இதை உணர்ந்தவனே விபரம் தெரிந்தவன்.

மேலும் ஒன்றைப் புரிந்து கொள் அர்ஜுனா, துறவியாக வேண்டுமென்றாலும் சில கர்மங்களைச் செய்து தான் ஆக வேண்டும். அந்த 2கர்மங்களின் மூலம் மனத்தைச் சித்தப்படுத்தி, ஆத்மாவைச் சுத்தப் படுத்தி, புலன்களைக் கட்டுப்படுத்த வேண்டும். முடிவில் உயிர்கள் அனைத்திலும் ஊடாடும் பரம்பொருளின் சொரூபமே ஆத்மா என்பதை உணர வேண்டும். இத்தகைய திறமை படைத்தவன் வெகுவிரைவில் இறைவனை அடைகிறான்.

உண்மையான ஞானி எதையுமே தான் செய்வதாக நினைப்பதில்லை. அவன் பார்த்தாலும் கேட்டாலும், உண்டாலும் உறங்கினாலும், தொட்டாலும் விட்டாலும், நடந்தாலும் நுகர்ந்தாலும், எடுத்தாலும் கொடுத்தாலும், சுவாதித்தாலும் பேசினாலும், திறந்தாலும் மூடினாலும், எல்லாம் அவன் செயல்… என்றே நினைக்கிறான். செய்வதைச் செய்துவிட்டுப் பலாபலன்களை ஈசுவரனிடம் விட்டுவிடுகிறவன் தாமரை இலை போன்றவன், அவன் மேல் பாவம் எனும் தண்ணீர் ஒட்டுவதில்லை.

துறவிகள் கர்மத்தில் ஈடுபடுவது எதற்காக? உடம்பு, மனம், அறிவு மற்றும் ஐம்புலன்களில் படிந்துள்ள பற்று எனும் அழுக்கை அகற்றி, ஆத்மாவைப் பரிசுத்தம் ஆக்கத்தான். கர்மங்களின் பலனைத் துறக்கும் ஞானி, நிலையான நிம்மதியை அடைகிறான். ஆனால் இலாப நோக்குடன் செயல் படுபவன் அச்செயலுக்குள்ளேயே மாட்டிக் கொள்ளுகிறான். உடம்பை வென்று உள்ளத்தாலும் ஞானியானவன் எதையும் செய்வதில்லை, செய்யப் பிறரை தூண்டுவதும் இல்லை. அவன் 3நவவாயில் நகரத்தில் சுகமாக இருப்பான். „இதைச் செய்‚… என்று ஆத்மா ஆனையிடுவதும் இல்லை, செயல்களை உண்டாக்குவதும் இல்லை, பலாபலன்களுடன் நம்மை பந்தப்படுத்துவதும் இல்லை. இயற்கையே எல்லாவற்றையும் இயக்குகிறது. அந்த ஆத்மா எவனுடைய பாவத்தையும் எடுத்துக் கொள்ளுவதில்லை, புண்ணியத்தையும் ஏற்றுக் கொள்ளுவதில்லை. மூடத்தனம் அறிவை மூடி இருப்பதால், ஜீவராசிகள் மயக்க நிலையில் உள்ளன. இந்த மயக்கம் அகல வேண்டுமானால், ஆத்மாவில் ஞானம் உதிக்க வேண்டும். அப்போது ஆத்மா சூரியனைப் போல் பிரகாசிக்கும. ஞானத்தால் பாவங்களைக் கழுவிக் கொண்டு, புத்தி முதலான எல்லாவற்றையும் பரம்பொருளோடு சங்கமிக்கிறவர்கள் பிறவிப் பெருங்கடலைத் தாண்டிவிடுகிறார்கள்.

4சவ்யசாசின், சமநோக்கைப் பற்றி இப்போது விளக்குவேன், நாயையும், பசுவையும், நாய் தின்னும் நீசனையும், மிகப்பெரிய யானையையும் செந்தண்மை பூண்டொழுகும் அந்தணனையும் ஞானிகள் 5சமமாகத் தான் பார்ப்பார்கள், சம நோக்குடைய இவர்கள் பிறப்பு இறப்பு இரண்டையும் வென்றுவிடுகிறார்கள். ஏனெனில் எங்கும் எதிலும் சமமாக இருக்கும் ஈசுவரனும் அவர்களும் ஒன்றாகிவிடுகிறார்கள். ஈசுவர சம்பத்தைப் பெற்றவன் வேண்டியது கிடைத்த போது இன்புறுவதும் இல்லை, வேண்டாதது கிடைத்த போது துன்புறுவதும் இல்லை.

ஆத்ம சுகத்தைப் பற்றி இனி கூறுவேன் அர்ஜுனா, வெளியுலகில் கவனம் செலுத்தாதவன் ஆத்மாவின் உள்ளுக்குள் சுகங்களைக் கண்டு கொள்கிறான். ஈசுவரனிடம் ஈடுபாடு கொள்ளும் அவன், அழிவில்லாத சுகத்தில் திளைக்கிறான். உலகிலுள்ள எல்லாப் பொருள்களுக்கும் ஆதியும் உண்டு, அந்தமும் உண்டு. அவற்றில் சுகமும் உண்டு, துக்கமும் உண்டு. எனவே விவேகி அவற்றில் நாட்டம் செலுத்த மாட்டான். உடம்பெடுத்த இப்பிறவிலேயே காமத்தின் வேகத்தையும், குரோதத்தின் தாபத்தையும் தடுக்கும் சக்தியுள்ளவன் தான் சுகம் பெற்ற ஞானி. ஆத்மாவின் மேல் விருப்பம் கொண்டு, அது காட்டும் வெளிச்சத்தில் வழியைக் கண்டு, அந்த ஆத்மாவின் உள்ளுக்குள்ளேயே சுகத்தில் திளைப்பவன் ஈசுவரனாகவே மாறி விடுகிறான், பிரம்மானந்தத்தில் ஊறிவிடுகிறான். மாசுகளை நீக்கிக் கொண்டவர்களும், சந்தேகத்தைப் போக்கிக் கொண்டவர்களும், உலக நலத்தையே தங்கள் நலமாக ஆக்கிக் கொண்டவர்களும், மனக்கதவைப் பூட்டிகொண்டவர்களும், ஆத்மஜோதியில் உள்ளத்தை நாட்டிக் கொண்டவர்களும் மண்ணுலகில் மட்டுமல்ல, விண்ணுலகிலும் பிரம்மானந்தத்தை அனுசரிக்கிறார்கள்.

புறவுலகக் காட்சிகளை வெளியிலே இருக்க விட்டு, நயனப்பார்வையை புருவ மத்தியில் நிலைக்க விட்டு, நாசிவழிப் பிராண அபானங்களை சமப்படுத்தி மூச்சுவிட்டு, ஆசை அச்சம் கோபம் இவற்றை நீக்கிவிட்டு, அறிவு, மனம், தேகம் இவற்றை அடக்கிவிட்டு, சொர்க்க நோக்கமே கொண்டிருக்கும் முனிவனுக்கு எந்த நேரமும் சுகம் தான் எந்த இடமும் சொர்க்கம் தான்.

தனஞ்சயா, தவங்களையும் யாகங்களையும் அனுபவிப்பவன் நானே, அனைத்து உலகங்களுக்கும் ஈசன் நானே, சகல உயிர்களுக்கும் நண்பன் நானே, இதனை அறிந்தவன் நிம்மதியில் திளைக்கிறான்.

(ஐந்தாம் அத்தியாயம் நிறைவு பெற்றது)

1. குரங்குக் கொடியுடையவன்.
2. காய் ஒன்று மரத்தில் முறையாக ஒட்டியிருந்தால் மரத்திலிருந்து பெற வேண்டிய சாரத்தையும் வலிவையும் பெற்றுப் பின் தானே மரத்தைவிட்டுப் பிரிந்து பழமாக விழுகிறது. யோகி ஒருவன் முறையாகக் கர்மயோகம் செய்வதால் இயற்கையினின்று பெற வேண்டிய அனுபவங்களைப் பெற்று, அந்த ஞான முதிர்ச்சியால் பிரம்ப நிஷ்டனாகிறான். இதுவே முறையான கர்ம சந்தியாசம். ஆக, எல்லாரும் கர்மயோகத்தைக் கையாளுதல் வேண்டும். – சுவாமி சித்பவானந்தர்
3. ஒன்பது வாசல்களை உடைய உடல், நகரமாக உவமிக்கப்பட்டுள்ளது. நாசித் துவாரங்கள் 2, காதுத்; துவாரங்கள் 2, கண்வழி 2, வாய்த் துவாரம் 1, சிறுநீர்த் துவாரம் 1, மனத்துவாரம் 1 ஆக 9 வாயில்கள்.
-கருணை வடிவான அவன், தான் இருப்பதற்கான இடத்தை அமைத்துக் கொண்டான், காற்று, நீர், நெருப்பு இவற்றை இணைத்து, சரீரத்தைப் படைக்கிறான். அதற்கு ஒன்பது வாசல்களை வைத்து, பத்தாவது வாசலில் அவன் வசிக்கிறான். – குரு நானக்

புனித நகரமாகிய மனித உடம்பில் ஒன்பது வாயில்கள் இருக்கின்றன. அவற்றுக்குக் கதவுகளும் கிடையாது. ஆனாலும் ஒன்பது ஓட்டைகள் உள்ள உடம்பில் உயிர்க்காற்று இயங்கிக் கொண்டிருக்கிறது. மூச்சுக் காற்று உடம்பிலிருந்து வெளியே செல்லும் போது ஏதோ ஒரு சக்தி அதை மீண்டும் உள்ளேயும் இழுத்துக் கொள்கிறது. – சுவாமி சச்சிதானந்தா

4. இடது கையால் அம்பு எய்பவன்.

5. சூரிய வெளிச்சம் எல்லாப் பொருள்கள் மீதும் சமமாகவே படுகிறது. இது கங்கை, இது சாக்கடை என்று சூரியன் பேதம் பாராட்டுவதில்லை.

– சுவாமி சித்பவானந்தர்.



அத்தியாயம் ஆறு
தியான யோகம்

ஆத்மாவைப் பற்றிய சிந்தனையில் இன்பமுறுவதே தியானம். கர்ம யோகத்திலும் ஞான யோகத்திலும் சித்தி பெற்றவன் ஆத்ம ஞானம் பெறுகிறான். அப்படிப்பட்டவனுக்கு அனைத்தும் ஒன்றே என்ற சமநோக்கு தோன்றி விடும். உடல் உறவை நீக்கிவிட்டால், ஆத்மாவும் பரம்பொருளும் ஒன்றேயாகும். இக்கருத்துகள் இதில் விளக்கப்படுகின்றன.

இதில் 47 சுலோகங்கள் அடங்கியுள்ளன.

————-

கண்ணன்: பாண்டு குமாரனே‚ இலாப நோக்கத்தைத் துறக்காதவன் துறவி ஆக மாட்டான். உணவுக்காக உலையில் நெருப்பைப் பற்ற வைக்காததாலும், உரிய காரியங்களைச் செய்யாமல் துறந்து விடுவதாலும் கூட ஒருவன் துறவியாகிவிட மாட்டான். பலாபலன்களைப் பற்றிக் கவலைப்படாமல், செய்யும் காரியத்தை ஒழுங்காகச் செய்பவனே உண்மைத் துறவி. புலன்கள் விஷயத்திலும், கர்மங்களைச் செய்யும் விஷயத்திலும் அவன் சகலத்தையும் துறந்துவிட வேண்டும். துறவு என்று சொல்லுகிறார்களே, அது தான் யோகம். தியான யோகத்தில் முன்னேற விரும்பும் முனிவனுக்கு அதற்குரிய வழி கர்மத்தில் இறங்குவது தான். இவ்விதம் தியான சித்தி அடைந்தவனுக்கு செயலற்றிருப்பது1 சாத்தியாமாகிறது.

ஆத்மாவை 2ஆத்மாவினால் தான் உயர்த்த வேண்டும். எக்காரணம் கொண்டும் அதைக் 3கீழ்நோக்கிச் செல்லவிடக் கூடாது. ஆத்மாவே ஆத்மாவுக்கு நண்பன்ƒ 4ஆத்மாவே ஆத்மாவுக்குப் பகைவன். ஆத்மாவினால் ஆத்மாவை வசப்படுத்தியவனுக்கு ஆத்மா நண்பன்ƒ ஆத்மாவை வசப்படுத்தியவனுக்கு ஆத்மாவே பகைவன்5.

தன்னை வென்று மனந் தெளிந்தவனுக்கு, குளிர்ச்சியிலும், வெப்பத்திலும், இன்பத்திலும் துன்பத்திலும், புகழ்ச்சியிலும் இகழ்ச்சியிலும் பரமாத்ம தரிசனம் கிட்டும். அறிவு மற்றும் அனுபவத்தால் மனத்திருப்தி அடைந்தவனும் இன்ப துன்பங்களில் 6அசைந்து கொடுக்காதவனும், ஐம்புலன்களை வெற்றி கண்டவனும், மண்ணையும் பொன்னையும் ஒன்றாகக் காணும் பண்பு கொண்டவனும் எவனோ அவன் துறவிகளில் எல்லாம் உயர்ந்த துறவியாவான். அன்பர்கள்.. அலட்சியப்படுத்துபவர்கள், நண்பர்கள்.. பகைவர்கள், நடுநிலையாளர்கள்.. வெறுத்து ஒதுக்குபவர்கள், சாதுக்கள்..பாவிகள், உற்றார்கள்..உறவினர்கள் அனைவரிடமும் சமமாக நடந்து கொள்ளுபவன் மிகவும் உயர்ந்தவன். உண்மையான துறவி ஆசையை அறுக்க வேண்டும்ƒ சொத்து சுகங்களைத் துறக்க வேண்டும்ƒ மனக் கிளர்ச்சியை ஒடுக்க வேண்டும்ƒ 7ஏகாந்தத்தில் கிடக்க வேண்டும்ƒ ஆத்மாவுக்கு யோக விருந்து படைக்க வேண்டும் ƒ சுத்தமான ஓரிடம் பிடிக்க வேண்டும்ƒ அது மிதமான உயரத்தில் இருக்க வேண்டும்ƒ அதன் மேல் 8தர்பைப்புல் பரப்ப வேண்டும், பிறகு 9மான் தோலை விரிக்க வேண்டும்ƒ அதன் மேல் வஸ்திரத்தைப் போட வேண்டும். அதில் அமர்ந்து உடல், தலை, கழுத்து, மூன்றையும், நேராகவும், அசையாமலும், நிலையாகவும் வைக்க வேண்டும். கண்கள் இப்படியும் அப்படியும் அசையாமல் இரண்டு 10புருவங்களுக்கும் இடைப்பட்டு முக்கின் நுனியையே பார்க்க வேண்டும். பிரம்மசரிய கட்டுப்பாட்டுடன் சலனமும் பயமும் நீங்கிய மனத்தை என் மேல் செலுத்த வேண்டும். பிறகு புலன்களை அடக்கி என்னையே குறிக்கோளாய்க் கொண்டு யோகம் பயில வேண்டும். இவ்விதம் யோகம் பயிலும் துறவி என்னிடம் உள்ள, சொர்க்க சுகத்துடன் கூடிய அமைதியை அடைகிறான்.

வயிறு முட்டச் சாப்பிடுபவனுக்கும், பட்டினி கிடப்பவனுக்கும், அதிகமாகத் தூங்குபவனுக்கும், விழித்துக் கொண்டே இருப்பவனுக்கும் யோகம் கிட்டுவதில்லை. அளவான ஆகாரம், அளவான நடமாட்டம், அளவான தூக்கம், அளவான விழிப்பு, அளவான செயல், இவையே ஒரு வகை யோகம் தான். இது நிச்சயம் துக்கத்தை நீக்கும். மனதைப் பிடித்து ஆத்மாவிற்குள் அடைத்து விட்டு,ஆசையைத் துடைத்து விட்டு,பொருட்களின் மேல் விருப்பத்தை நீக்கி விட்டவன் உன்னதமான யோகியாவான். அவன் காற்றில்லாத இடத்தில் வைக்கப்பட்ட மூடியில்லாத விளக்கைப் போன்றவன். விளக்கில் எரியும் நெருப்பு ஆடாது, அசையாது, யோகியின் மனமும் ஆடாது. அசையாது. பரம்பொருள் மேல் நிலைத்து நிற்கும். எந்த நிலையில் யோகப்பயிற்சில் கட்டுண்ட மனம் அடைய வேண்டிய இடத்தை நாடுகிறதோ.. எந்த நிலையில் மனமானது ஆத்மாவைக் கண்டு ஆனந்திக்கிறதோ.. எந்த நிலையில் சுகம் என்பது உடலால் அனுபவிக்கப்பட முடியாமல் அறிவால் அனுபவிக்கப்படுகிறதோ.. எந்த நிலையில் இதற்கு மேல் இலாபமில்லை என்று கருதப்படுகிறதோ.. எந்த நிலையில் எந்தத் துக்கம் வந்தாலும் கலங்காத நிலை ஏற்படுகிறதோ.. அந்த நிலையே பிரம்மானந்த யோகம். இந்த யோகத்தை மனங்கலங்காமல் உறுதியாகப் பயில வேண்டும். மனக்கிளர்ச்சியால் தோன்றும் ஆசைகளைத் துறந்து, புலன்களின் கூட்டத்தை மனச்சங்கிலியால் கட்டிப் பிணைத்துத் துணிவுடனும் விவேகத்துடனும் மௌ;ள மௌ;ள அடக்க வேண்டும். மனம் வேறொன்றையும் நினைக்காத படி11 ஆத்மாவிலேயே நிலைக்கச் செய்ய வேண்டும். ஆடிக் கொண்டும் ஓடிக் கொண்டும் இருக்கும் மனத்தைத் தகுந்த முறையில் தடுத்து நிறுத்தி, ஆத்மாவுடன் அது கூடிக் கொண்டிருக்கும் நிலையை உருவாக்க வேண்டும். இவ்விதம் ஈசுவர நிலையடைந்த யோகிக்குத் தான் உன்னதமான சுகம் கிடைக்கிறது. அவன் ஈசுவரனுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு எல்லையற்ற சுகத்தைத் தொல்லையின்றி அனுபவிக்கிறான். அவன் சகல உயிர்களிலும், தன்னைக் காண்பான். தனக்குள் சகல உயிர்களையும் காண்பான். அனைத்திலுமே சமநோக்குக் காட்டுவான்12.

எங்கும் நிறைந்தவனாயும் எல்லாம் இருப்பவனாயும் என்னைக் காண்பவனுக்கு நான் காட்சியளிப்பேன். நானும் அவனைக் கண்டு கொள்வேன். ‘உள்ளது ஒன்றே” என்ற உணர்வுடன் எல்லா உயிர்களிலும் உள்ள என்னைத் தொழுகின்றவன் எந்த நிலையில் இருந்தாலும் அவன் என்னிடமே இருப்பான்.

அர்ஜுனன்: 13கிருஷ்ணா, மனம் என்பது சஞ்சலம்மிக்கது, குழப்பம் விளைவிக்கத் தக்கது, அடங்காதது, எதற்கும் மடங்காதது. காற்றை அடக்க முடியாதது போல் அதையும் அடக்கமுடியா தென்று நான் நினைக்கிறேன், அதனால் நீ சொன்ன சமநிலை தேவைப்படும் தியான யோகம் செய்வதில், அந்த மனம் நிலையாக நிற்காதென்றே நான் எண்ணுகிறேன்.

கண்ணன்: உண்மை தான் விஜயா, மனம் அடக்க முடியாதது தான், அலை பாய்வது தான். ஆனால் வைராக்கியம் மிக்க பயிற்சியினால் அதை இழுத்துக் கட்டிவிடலாம். மனதை அடக்கமுடியாதவனுக்கு யோகம் கிட்டுவதில்லை, 14மனத்தை ஒழுங்குபடுத்தி முறையாக முயல்பவனுக்கு யோகம் நிச்சயம் கிட்டுகிறது.

அர்ஜுனன்: சரி கண்ணா, ஒருவன் அக்கறையுடன் யோகத்தில் இறங்கினான். ஆனால் அவனுக்கு முயற்சி போதவில்லை. யோகத்திலிருந்து அவன் மனம் நழுவிவிட்டதால் யோகத்தின் பலன் அவனுக்குக் கிடைக்கவில்லை. அவன் என்ன கதி அடைவான்? சிதறுண்ட மேகம் போல் அவன் அழிந்து விடுவானா? இந்தச் சந்தேகத்தைத் தீர்க்க வேண்டுகிறேன், இந்தச் சந்தேகம் தீர்க்க உன்னையன்றி யாரால் முடியும்?

கண்ணன்: அர்ஜுனா, அப்படிப்பட்டவனுக்கு இந்த உலகத்திலும் சரி..மேலுலகத்திலும் சரி அழிவே கிடையாது. நல்லதைச் செய்ய முயலும் எவனும் துர்கதி அடைவதில்லை. அப்பனே, அவ்விதம் யோகத்திலிருந்து நழுவியவன் புண்ணியவான்கள் அடையும் இன்பங்களை வேண்டிய மட்டும் அனுபவிப்பான், பிறகு உத்தமச் செல்வர்களின் குலத்தில் மறுபடியும் பிறப்பான். அல்லது ஞானிகளான யோகிகள் குலத்தில் பிறப்பான். இந்தப் பிறவி கிடைத்தற்கரிய ஒன்றாகும். இந்தப் பிறவியில் முந்திய பிறவியில் இருந்த அதே அறிவைப் பெறுவான். யோக நிலை அடைவதற்கு மறுபடியும் முயற்சி செய்வான். பூர்வ ஜென்ம 15வாசனையால் அவனையறியாமலே யோகத்தின் பக்கம் இழுத்துச் செல்லப்படுவான். வெறும் யோக ஆராய்ச்சியில் ஈடுபட்டாலே போதும், ஒலி உலகத்தை அவன் கடந்து விடுவான். இடைவிடா முயற்சியில் ஈடுபடும் யோகியானவன், கடந்த பல பிறவிகளில் பக்குவப்பட்டிருப்பதால், யோக சித்தி பெற்று நல்ல கதி அடைகிறான்;.

கடுத்தவ முனிவர்களைக் காட்டிலும் உயர்ந்தவன் யோகி. கனிந்த நல் ஞானிகளைக் காட்டிலும் உயர்ந்தவன் யோகி. கடமையில் சிறந்தவர்களைக் காட்டிலும் உயர்ந்தவன் யோகி. ஆகவே அர்ஜுனா, நீயும் யோகியாய் ஆகுக‚ என்னைச் சரணடைந்து என்னையே தொழுகின்றவன் யோகிகளில் எல்லாம் உன்னதமானவன். இதுவே என் முடிந்த முடிவு.
(ஆறாம் அத்தியாயம் நிறைவு பெற்றது)

1. பம்பரம் நடுநிலையில் நின்று வேகமாகச் சுழலும் போது அதனிடத்து ஒரு செயலும் வெளிக்குத் தென்படுவதில்லை. ஓய்ந்து நிற்பது போன்று அது காட்சியளிக்கிறது. ஒழுங்கான இயக்கம் என்பது அதுவே. அதர்மம் போன்று தென்படுகிற கர்மம் அது. தியானம் நன்கு கூடிவரும் பொழுது யோகியானவன் கர்மத்தையெல்லாம் ஒழித்துவிட்டவனாகக் காட்சியளிக்கிறான். – சுவாமி சித்பவானந்தர்

2. எதிலும் பற்றுக் கொள்ளாத உள்ளம். – ஸ்ரீ ராமாநுஜர்.

3. மனதைக் கீழ் ஆதாரங்களில் நிலைக்கும்படிச் செய்வது அறிவுடைய செயல் ஆகாது. கீழ் ஆதாரங்களில் தோன்றும் இனிய வெப்பத்தில் மனம் ஈடுபட அனுமதிக்கக் கூடாது. அதை மேல் நோக்கிச் செல்லும் படிச் செய்ய வேண்டும். இதயப் பகுதியாகிய அனாகத ஆதாரத்தையோ, புருவ மத்திப் பகுதியாகிய ஆக்ஞை ஆதாரத்தையோ, நோக்கி மனம் செல்லும்படிச் செய்ய வேண்டும். தியான ஆற்றல் முழுவதையும் கொண்டு மனத்தை மேல் நோக்கியேச் செல்லும் படிச் செய்ய வேண்டும். – சுவாமி சச்சிதானந்தா

4. தன் மனத்தை வசப்படுத்தியவனுக்கு. – ஸ்ரீ ராமாநுஜர்

5. தீதும் நன்றும் பிறர் தர வாரா. – புறநானூறு
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல். – திருவள்ளுவர்

6. சம்மட்டி அடிக்கல் அதன் மேல் அடிக்கப்படும் இரும்பு பல உருவத்தை அடைந்தாலும் அடிக்கல் மாறுபடாமல் நிற்பது போல் அசையாமல் நிற்பவன். – உரையாசிரியர் அண்ணா

7. பசித்திரு, தனித்திரு, விழித்திரு. – வடலூர் இராமலிங்க சுவாமிகள்

8. தர்பை ஆசனத்திலோ, பலகை ஆசனத்திலோ அமர்ந்து நம் துறவிகள் தியானம் செய்கிறார்கள். இந்த ஆசானங்கள் மின்சாரத்தைத் தடுக்கும் ஆற்றல் உடையவை. பூ மையக் கவர்ச்சியிலிருந்து நம்மைப் பாதுகாப்பதற்கு இப்படிப்பட்ட இருக்கைகள் துணை செய்கின்றன. – சுவாமி சச்சிதானந்தா

9. மான் தோலிலோ புலித் தோலிலோ யோகிகள் அமர்ந்து தியானம் செய்யும் படங்களைப் பார்த்திருக்கிறோம். தங்கள் தியானத்திற்கு வேண்டிய தோல்களுக்காக யோகிகள் அந்த உயிர்களைக் கொல்வதில்லை. தங்களுக்குக் கிடைக்கும் தோல்களைத் தியானப் பயிற்சிக்கு ஏற்ற இருக்கையாகப் பயன்படுத்துகிறார்கள். அந்தத் தோல்கள் பூ மையக் கவர்ச்சியிலிருந்து அவர்களைப் பாதுகாக்கிறது. மின்சாரக் கம்பியில் வேலை செய்பவர்கள் தங்கள் கைகளில் தோலினாலோ ரப்பரினாலோ ஆன கை உரைகளை அணிந்து கொள்வதை நாம் பார்க்கிறோம். இது மின்சாரத் தாக்குதலிலிருந்து அவர்களைக் காப்பாற்ற உதவுகிறது. – சுவாமி சச்சிதானந்தா

10. கையறவு இலாதுநடுக் கண்புருவப் பூட்டு கண்குகளி கொண்டுதிறந்(து) உண்டு நடு நாட்டு
ஐயர்மிக உய்யும் வகை அப்பர்விளை யாட்டு ஆடுவதென் மறமறைகள் பாடுவது பாட்டு. – வடலூர் இராமலிங்க சுவாமிகள்
நாட்டமிரண்டு நடுமூக்கில் வைத்திடில் வாட்டமுமில்லை மனைக்கு மழிவில்லை ஓட்டமுமில்லை உணர்வில்லை தானில்லை தேட்டமில்லை சிவ னவனாமே. – திருமந்திரம்.
நாசி நுனியைப் பார்ப்பது போல் இருகண்களையும் புறப்பொருள்களில் செல்லாமல் அகத்தில் பதிய வைத்தல். புறத்தில் நாசி நுனியில் கவனம் செலுத்துவது கருத்தன்று. – ஆதி சங்கரர்.

11. தியானம் என்றால், எண்ணெயின் ஒழுக்கு போல், நினைவுகளின் தொடர்ச்சி பொருளை வகை கண்டு, தொடர்பு படுத்திக் காணும் ஆற்றலினால், நினைவானது பொருளை நேராக அறிகிறது. – ஸ்ரீ இராமாநுஜர்

12. இன்பத்திலும் துன்பத்திலும் தன்னைப் போலவே பிறரையும் எண்ணுவான். அவனே உயர்ந்தவன், உன்னதமானவன்.
13. க்ருஷ் என்பதற்கு இழுத்தல் என்று பொருள். பக்தர்களின் பாவத்தைத் தன்பால் இழுத்துக் கொள்வதால் கிருஷ்ணன்.
14. பயங்கர மழை, கடும் குளிர், பெரும் காற்று, மிகுந்த வெயில், இவற்றிற்கு அஞ்சாமல், ஒருமித்த மனத்தோடு கடவுளிடம் பக்தி செலுத்துகிறவனே சாதகப் பறவையைப் போல் புத்திசாலி. மற்றதெல்லாம் பூஜிக்கத் தகுந்த காமதேனுப் பசுவை. தங்கக் கலப்பையில் கட்டி, விஷத்தை அறுவடை செய்ய உழுவது போலாகும். – துளிசிதாசர்
15. ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் வல்லவராக இருப்பது பூர்வ ஜென்மத்தில் விட்ட குறை தொட்ட குறை தானே. – கண்ணதாசன்


(காலஞ்சென்ற திரு எஸ் மெய்யப்பன் உலக மக்கள்தொகைத் திட்டத்தின் உறுப்பினராய் தமிழ் நாட்டு அரசுப் பணியில் இருந்தவர்.சௌடீஸ்வரி மலர் என்ற மாத இதழின் ஆசிரியராய் இருந்தவர். )

Series Navigation

எஸ் மெய்யப்பன்

எஸ் மெய்யப்பன்

பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 3

This entry is part [part not set] of 34 in the series 20070816_Issue

எஸ் மெய்யப்பன்


அத்தியாயம் நான்கு

ஞான யோகம்

புலன்களை அடக்கிப் பரம்பொருளை நினைப்பதே ஞான யோகம். கண்ணனின் அவதாரம் பெருமை மிக்கது. கர்மயோகத்தில் ஞான பாகமும் அடங்கியுள்ளது. அதனால் ஞான யோகத்தின் பலன்களை, கர்மயோகமும் கொடுக்க வல்லது. இக்கருத்துக்கள் இதில் விளக்கப்படுகின்றன.

இதில் 42 சுலோகங்கள் அடங்கியுள்ளன.

————–

கண்ணன்: பகைவர்க்குப் பயங்கரனே, அழிவற்ற இந்தக் கர்மயோகத்தை முதலில் நான் சூரியனுக்குச் சொன்னேன். சூரியன் மனுவுக்கு மொழிந்தான். அவன் இச்வாகு மன்னனுக்கு உரைத்தான். இவ்விதம் வழிவழியாக வந்த இந்த யோகத்தை 1ராஜரிஷிகள் அறிந்தார்கள். பிறகு நாளடைவில் அது மறைந்து போய்விட்டது. நீ எனது பக்தன், நண்பன் என்ற காரணத்தால், இந்தப் பழமையான யோகத்தை இன்று உனக்கு எடுத்துச் சொன்னேன், இது சிறந்த இரகசியம்.

அர்ஜுனன்: கண்ணா, மணிவண்ணா, சூரியனுடைய பிறப்பு முந்தியது உனது பிறப்போ 2பிந்தியது. அப்படியிருக்க, முதலில் நீ சூரியனுக்கு உபதேசித்தவன் என்பதை எப்படி நான் நம்புவேன்?

கண்ணன்: அர்ஜுனா, எனக்கு எத்தனையோ 3பிறவிகள் கழிந்துவிட்டன. உனக்கும் அப்படித்தான் அவற்றை எல்லாம் நான் அறிவேன். ஆனால் நீ அறிய மாட்டாய்.

நான் பிறப்பும் இறப்பும் இல்லாதவன், எல்லா உயிர்க்கும் உள்ளானவன், இருந்தாலும் என் மாயா சத்தியால் இயற்கையை வசமாக்கிக் கொண்டு, புதிய புதிய பிறவிகளில் அவதரிக்கிறேன். தர்மத்தைச் சூது கவ்வும் போதெல்லாம் என் பிறப்பெனும் சம்பவத்தை நிகழ்த்துகிறேன். நல்லதைக் காக்கவும், தீயதைப் போக்கவும், அறத்தை நிலை நாட்டவும் ஒவ்வொரு யுகத்திலும் நான் அவதரிக்கிறேன். எனவே என் பிறப்பு தெய்வீகமானது, செயலும் தெய்வீகமானது. இதை உணர்ந்தவன் இறந்தால் மீண்டும் பிறப்பதில்லை. அவன் என்னுடன் சங்கமித்து விடுகிறான். மேலும் ஆசை, அச்சம், கோபம் ஆகியவை நீங்கிட என்னிடம் சரணடைந்து, ஞானதபசால் பரிசுத்தமாகி, என்னையே பலர் அடைந்திருக்கின்றனர். என்னை வழிபடுகிறவர்களுக்கு அவரவர் 4நினைத்தபடியே அருள் புரிகின்றேன். எனவே எங்குமுள்ள மனிதர்கள் என் வழியையே பின்பற்றி நடக்கிறார்கள்.
செய்யும் தொழிலில் வெற்றியை விரும்பும் மனிதர்கள், தேவதைகளை வணங்குகிறார்கள். ஏனெனில் இந்த உலகில் தொழில் செய்தால் விரைவில் பலன் கிடைக்கிறது. இந்தத் தொழிலை மக்களின் குணநலன்களுக்குத் தக்கபடி நான்காகப் பிரித்து, 5நான்கு வர்ணங்களையும் நான் தான் படைத்தேன். ஆனால் அதன் படைப்புக்குப் பொறுப்பாளி 6நானல்ல என்பதை நீ அறிந்து கொள். ஏனெனில் எந்த செயலும் என்னைத் தீண்டுவதில்லை. அதன் பலனும் எனக்கு வேண்டுவதில்லை. இந்த உண்மையை அறிந்தவன் உலக பந்தங்களில் கட்டுப்படுவதில்லை மோட்சத்தை விரும்பிய முன்னோர்கள் இதை அறிந்து தான் செயல்பட்டார்கள். அவர்களின் அடிச்சுவட்டை நீயும் பின்பற்று‚

கர்ம மார்கம் எது, அது அல்லாத மார்கம் எது என்பதில் ஞானிகளும் தடுமாறுகின்றனர். கர்ம மார்கம் மிகவும் மர்மமானதுƒ புரிந்து கொள்ளக் கடினமானது. ஆகவே அதைப்பற்றி உனக்குக் கூறுவேன்‚ செய்ய வேண்டிய தொழில், விலக்க வேண்டிய தொழில், தொழிலின் இயல்பு நிலை, தொழிலைக் கடந்த நிலை ஆகிய அனைத்தையுமே நீ அறிந்து கொள்ள வேண்டும்ƒ இதை அறிந்து கொண்டால் தீமைகளிலிருந்து நீ விடுபடுவாய்‚

இயக்கத்தில் இயக்கமின்மை ஒளிந்திருக்கிறது. இயக்கமின்மையில் இயக்கம் மறைந்திருக்கிறது. இதனை அறிந்தவனே பேரறிஞன். ஆசையின் நிழல் படியாது, ஞானத்தீயால் புடமிடப்பட்ட செயலுக்குரிய அவனே அறிஞருள் அறிஞனாவான்ƒ எதிலும் அவனுக்கு ஆசை உண்டாகாதுƒ அவன் ஒரு செயலைச் செய்தாலும் கூட, அதைச் செய்தவனாக 7ஆகமாட்டான். அவன் செய்வது எல்லாமே தவம் செய்வது போலவே இருக்கும், அவன் அறிவால் ஆசையை அடக்கியவன், ஆத்ம சத்தியால் உடலையும் உள்ளத்தையும் மடக்கியவன், சொத்து சுகங்களைத் துறந்தவன், இன்ப துன்பம் முதலிய இரட்டைகளை மறந்தவன், கிடைத்ததைக் கொண்டே மகிழ்பவன், பொல்லாத பொறாமையை இகழ்பவன், அன்றாட சரீரத் தேவைக்காக மட்டுமே தொழிலைச் செய்பவன், காரியம் நடந்தாலும் நடக்காவிட்டாலும் சமமாக நினைப்பவன், தானாக இலாபம் வந்தாலும் அமைதியாக இருப்பவன், அறிவிலே மனத்தை ஆழ்த்தி, ஆசையை வெட்டி வீழ்த்தி, செய்யும் தொழிலை வேள்வியைப் போலவே செய்யக்கூடிய அவனுக்கு, முன் வினையெல்லாம் முற்றிலும் அற்றுப் போகும்.

இனி இந்தக் கர்மத்தால் நிகழும் யாகத்தைப் பற்றி விளக்குவேன், யாகத்தில் செய்யும் அர்ப்பணச் செயலும் பிரம்மமே, அர்ப்பவிக்கப்படும் அவிர்ப்பாகமும் பிரம்மமே, அதனை ஏற்கும் அக்கினியும் பிரம்மமே, பிரம்மமாகிய தலைவனால் செய்யப்படும் ஹோமமும் பிரம்மமே, எல்லாம் பிரம்மமே, என்று நினைப்பவன் முடிவில் சேர வேண்டிய இடமும் 8 பிரம்மமே.
சில யோகிகள் தேவதைகளுக்காக யாகம் செய்கிறார்கள். மற்றும் சிலர் இயற்கைத் தீயில் ஆத்மாவையே ஆகுதி செய்கிறார்கள். இன்னும் சிலர் செவி முதலிய புலன்களை அடக்கம் என்ற அக்கினியில் ஆகுதி செய்கிறார்கள். மேலும் சிலர் புலன்களாகிய நெருப்பில் ஆரவாரத்தைப் போட்டு எரிக்கிறார்கள். வேறுசில முற்றிய ஞானிகள் புலன்களின் சேட்டைகளையும் உயிரின் ஆட்டப் பாட்டங்களையும் மனக்கட்டுப்பாடு என்ற யோக நெருப்பில் போட்டு எரிக்கிறார்கள்.

சிலர் பொருள்களை அளிப்பதையே யாகமாகச் செய்கிறார்கள். சிலர் தவத்தால் யாகம் செய்கிறார்கள். சிலர் யோகத்தால் யாகம் செய்கிறார்கள். சிலர் கல்வியாலும் ஞானத்தாலும் யாகம் செய்கிறார்கள், இன்னும் சிலர் உண்ணும் உணவை ஒழுங்கு படுத்திக் கொண்டு, 9பிராணாயாமத்தின் மூலம் 10பிராண வாயுவில் 11அபான வாயுவையும், அபான வாயுவில் பிராண வாயுவையும் ஆகுதி செய்கிறார்கள், இன்னும் சிலர் இவ்விரண்டின் போக்கையும் கட்டுப்படுத்திக் கொண்டு, உயிரையே உயிரில் 12ஆகுதி செய்கிறார்கள். இவர்கள் அனைவருமே யாகத்தைப் பற்றி நன்கு அறிந்தவர்கள், அதில் மிஞ்சிய உணவான அமிர்தத்தை உண்டவர்கள், அதனால் புண்ணியம் கொண்டவர்கள். யாகம் செய்யாதவர்களுக்கு இவ்வுலகத்திலும் சுகம் இல்லை, அவ்வுலகத்திலும் சுகம் இல்லை. இவ்விதம் பலவிதமான யாகங்கள் வேதத்தின் முன்பகுதிகளில் கூறப்பட்டுள்ளன. கர்மம் என்பது இல்லை என்றால் எந்த யாகமும் இல்லை, இதை உணர்ந்துவிட்டால் உன்னை அலைக்கழிக்கும் மயக்கத்திலுருந்து விடுதலை பெறுவாய்.

பாண்டவனே‚ பொருள்களைக் கொண்டு செய்யும் யாகத்தைக் காட்டிலும், ஞானயாகமே சிறந்தது. ஏனெனில் எல்லாக் கர்மங்களும் ஞானத்தில் தான் முடிவடைகின்றன. இந்த ஞானத்தை உயர்ந்த தத்துவ ஞானிகள் உனக்கு 13உபதேசிப்பார்கள். அவர்களின் திருவடிகளைத் தொழுதும், தொண்டுகள் புரிந்தும், அடிக்கடி கேள்விகள் கேட்டும், இந்த ஆத்ம ஞானத்தைக் கற்றுக் கொள், இந்த ஞானத்தை நீ பெற்று விட்டால், அனைத்துமே உனக்குள் அடங்கியிருப்பதை உணர்ந்து கொள்வாய், அவை எனக்குள் இருப்பதையும் கண்டு கொள்வாய்.

நீ நீந்தும் பாவக்கடல் என்ன தான் பெரியதாக இருந்தாலும் ஞானத்தோணி உன்னை நிச்சயம் கரையில் சேர்த்துவிடும். கொழுந்து விடும் நெருப்பு, விறகுகளை எரித்துச் சாம்பலாக்கி விடுவது போல், ஞானக்கனல் உன் வினைகளை எல்லாம் எரித்துத் தள்ளிவிடும். உன்னைப் பரிசுத்தப்படுத்த உலகில் ஞானத்தை விடச் சிறந்தது ஒன்றுமில்லை. தகுந்த காலம் வரும்போது, யோகசித்தன் அதைத்தானே தனக்குள் அடையாளம் கண்டு கொள்கிறான். ஞான சம்பாத்தியத்தில் நாட்டமுள்ளவன், புலன்களை அடக்கும் ஆற்றலுள்ளவன் ஞானத்தை அடைகிறான். அமைதி மயமான மோட்சத்தை அடைகிறான். ஆனால் அறிவில்லாதவனும் அக்கரை இல்லாதவனும், சந்தேகப்பட்டவனும் அழிந்து போகிறான். சந்தேகப் பிராணிகளுக்கு மண்ணுலகிலும் சுகம் இல்லை. விண்ணுலகிலும் சுகம் இல்லை.

14தனஞ்ஜயனே, யோகத்தால் செயல்களை விலக்கி, ஞானத்தால் சந்தேகத்தைத் துலக்கி, அத்மாவை விருப்பம் போல் பழக்கியவனை முன்வினைகள் 15கட்டுப்படுத்துவதில்லை. ஆகவே அஞ்ஞானத்தில் பிறந்திருக்கும் உன் ஐயத்தை ஞான வாளால் துண்டித்துவிடு‚ எழுந்து நின்று எதிரிகளைத் 16தண்டித்துவிடு.

(நான்காம் அத்தியாயம் நிறைவு பெற்றது)

1. பிராமணர்கள் சாங்கியநிஷ்டை பயின்று பிரம்ம ரிஷிகளாயினர், அரசர்களிற் சிறந்தவர்கள் கரும நிஷ்டை பயின்று ராஜாரிஷிகளாயினர்.

2. நீயோ இப்பொழுதுள்ள வசுதேவனுக்குப் பிறந்தவன் சூரியனோ சிருஷ்டித் தொடக்கத்தில் பிறந்தவன். – ஸ்ரீ சங்கரர்
3. உலகில் தோன்றிய அவதாரங்களெல்லாம் ஒரே ஈசுவரனே. அவன் பிரம்மமாகிய சமுத்திரத்தில் அமிழ்ந்து ஓரிடத்தில் கிளம்பும் போது கிருஷ்ணன் எனவும் இன்னோரு தரம் மூழ்கி வேரிடத்தில் கிளம்பும்போது கிறிஸ்து எனவும் அழைக்கப்படுகிறான். – ஸ்ரீ இராமகிருஷ்ணர்
4. அவரவர் தமதம தறிவறி வகைவகை
அவரவர் இறையவ ரெனஅடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் வழிவழி அடையநின் றனரே. – திருவாய்மொழி.

5. பிராமணன் ~த்ரியன், வைசியன், சூத்திரன்.

“செயல் திறத்தையும், தன்மையின் பகுப்புக்களையும் அடிப்படையாகக் கொண்டு நான்தான் நான்கு வருணங்களையும் உருவாக்கினேன்” என்று கண்ணன் சொல்லுகிறான். இந்த வாசகத்தை அடிப்படையாகக் கொண்டு, இம்முறையை என்றும் நிலைத்திருக்கும் உலகளாவிய ஒரு சமுதாய அமைப்பாக கீதை கருதியது என்ற முடிவிற்கு வந்துவிட முடியாது. பழம்பெரும் தத்துவ மேதைகளும் அவ்விதம் கருதவில்லை. மாறாக ஆதிகாலத்தில் நால் வருண முறை இருந்ததில்லை என்றும், பின் வரும் காலச்சக்கரத்தில் அது சிதறுண்டு போகும் என்றும் தெளிவாகக் குறிப்பிட்டனர். இருப்பினும் இந்த வாசகத்திலிருந்து நால் வருண முறை ஒவ்வொரு சமூகத்தினுடையவும் தனி மனிதனுடையவும் பொருளாதார மற்றும் மனோதத்துவத் தேவைகளில் ஒன்று கலந்துள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
– ஸ்ரீ அரவிந்தர், கீதைக் கட்டுரைகள்.
பரந்த மனப்பான்மை கொண்டவர்கள் அநீதியையும் கொடுமையும் பாகுபாடு காட்டும் தன்மையையும் வளர்க்கிறது என்று குற்றம் சாட்டி, இம்முறையை எதிர்த்து ஒட்டு மொத்தமாகக் குரல் எழுப்பியுள்ளனர். இருப்பினும் இயற்கை அமைப்பில் மனிதர்களும் பொருட்களும் பல்வேறுபட்ட செயல்களை நிறைவு செய்யும் பொருட்டு, வளர்ச்சியின் பல்வேறு மட்டங்களில் தோன்றியுள்ளன. எல்லாச் செடி கொடிகளும் மருந்தாகப் பயன் படுவதில்லை. எல்லா மரங்களும் வானளாவி வளர்வதில்லைƒ எல்லா நதிகளும் கம்பீரச் சலசலப்புடன் ஓடுவதில்லை. எல்லா மலைகளும் அதீத அழகு மிக்க பனிப்படலங்களைச் சூடிக்கொள்ளுவதில்லை. உண்மையில் சொல்லப் போனால் எல்லா மனிதர்களும் ஒரே தன்மையும், ஒரே வலிமையும், ஒரே தகுதியும் உடையவர்களாக இருந்தால் வாழ்க்கை என்பது சகிக்க முடியாத வகையில் எழுச்சியற்றதாகவும் கவர்ச்சியற்றதாகவும் ஆகிவிடும்.

– தீலீப்குமார் ராய், பகவத்கீதை ஓர் அருள் வெளிபாடு

6. மாயா சம்பந்தத்தால் நான் பொறுப்பாளியாக இருந்தாலும் உண்மையில் நான் பொறுப்பாளி அல்ல. – ஸ்ரீ சங்கரர்
7. எண்ணெயும் தண்ணீரும் போல் நிற்பவன். – கண்ணதாசன்
8. மூலப் பொருளுக்கு மூலம் தந்த பொருளைப் படைத்து, எல்லாம் அந்த மூலவனின் செயலே என்று அமைதி அடைந்தால் அந்த மூலவனை அடையலாம். – கண்ணதாசன்
9.பிராணாயாமம்: சாதரணமாக நாம் மூச்சுவிடும் போது 500 கன சென்டி மீட்டர் அளவுடைய காற்றைச் சுவாசிக்கிறோம் என்று விஞ்ஞானிகள் கணக்கிட்டுக் கூறுகிறார்கள். யோக சாதனையில் ஆழ்ந்து சுவாசிக்கும் போது ஒரே மூச்சில் 3700 கன சென்டி மீட்டர் காற்றைச் சுவாசிக்க முடிகிறது என்று சொல்லுகிறார்கள். நமது இரத்தத்திலும், உடலின் மற்ற பகுதிகளிலும் இருந்து உண்டாகிற விஷத்தன்மையைப் போக்கி, நரம்பு மண்டலத்தைத் தூய்மைப்படுத்தும் ஆற்றல் உடையது பிராணாயாமப் பயிற்சி. இது சளி பிடிக்கும் தொல்லையிலிருந்து நம்மைக் காப்பாற்றும். விஷ ஜீரம் போன்ற கொடிய நோய்கள் வராமல் தடுக்கும். மூக்குக்குள் ஏற்படும் மூச்சு அடைப்பு போன்ற தொந்தரவிலிருந்தும் பாதுகாக்கும். -சுவாமி சச்சிதானந்தா

பிராணாயாமத்தினால் மனம் தூய்மையும், அமைதியும் அடையும். எதையும் கூர்ந்து கவனித்து அதைப் பற்றிக் கொள்ளும் மகத்தான ஆற்றலையும் மனம் பெறும். – பதஞ்சலி முனிவர்
10. நாசியில் உட்கொள்ளும் காற்று – இது பூரகம் எனப்படும்.
11. நாசியில் வெளிவிடும் காற்று – இது ரேசகம் எனப்படும்.

12. பிராணாயாமத்தின் மூன்று கூறுபாடுகளான பூரகம், ரேசகம், கும்பகம் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன. பூரகம் அல்லது ரேசகம் செய்த காற்றை உள்ளே அல்லது வெளியில் அடக்குதல் கும்பகம் எனப்படும்.

13. உண்மையாக குரு படகோட்டி. அவருடைய உபதேசம் ஒரு கரையிலிருந்து மற்றோரு கரைக்குக் கொண்டு செலுத்தும். மறு கரையில் காற்றில்லை, நெருப்பு இல்லை, நீர் இல்லை, வடிவங்கள் இல்லை. அங்கு இறைவன் இருக்கிறான். அங்கு குருவால் அழைத்துச் செல்லப்பட்டவர்கள், இறைவனுடன் ஒன்றி இசைக்கிறார்கள். அங்கு சென்ற பிறகு வருவதும், போதும் நிகழ்வதில்லை. ஏனெனில் இறைவனின் உபதேசத்தைத் தம் வாயால் சொல்பவரே குரு. – குருநானக்
14. அடைபட்ட செல்வத்தைச் சேகரிப்பவன்.
15. கடல் நீருக்குள்ளேயே இருக்கும் மீனின் உடலில், கடல் நீரில் கலந்திருக்கும் உப்பு ஏறுவதில்லை, உலக வாழ்வில் இருந்தாலும் உண்மை ஞானிகளின் உள்ளத்தில் ஆசாபாசங்கள் ஏறாது. – பாம்பன் சுவாமிகள்
16. கீதையின் மையக் கருத்து அகிம்சையே தவிர ஹிம்சையல்ல. 2-வது அத்தியாயத்தில் ஆரம்பித்து 18-வது அத்தியாயம் வரை மிகத் தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது. பிற அத்தியாயங்களில் காணப்படும் விளக்கங்களும் இதற்கு ஆதரவாகவே இருக்கின்றன. கோபம், வெறுப்பு, பற்றுதல் இருந்தால் தான் ஹிம்சை தோன்றும். கோபம், வெறுப்பு ஆகியவற்றுக்குக் காரணமான சத்வம், ராஜசம், தாமசம் ஆகிய குணங்களைக் கடந்து செயல்படுவதற்குத்தான் கீதை வழிகாட்டுகிறது.
– மகாத்மா காந்தி, யங் இந்தியா, நவம்பர் 12, 1925.

Series Navigation

எஸ் மெய்யப்பன்

எஸ் மெய்யப்பன்

பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 2

This entry is part [part not set] of 36 in the series 20070809_Issue

எஸ் மெய்யப்பன்



அத்தியாயம் மூன்று

கர்ம யோகம்

கர்மம் என்பது செய்யும் தொழில்.

தொழில் செய்வது இயற்கையானது மேன்மையானது. செய்வது அனைத்தையும் பரம்பொருளுக்கே அர்ப்பணிந்து விட வேண்டும். ஞானயோகம் தத்துவ ஞானிகளுக்கே பொருந்தும் மற்றவர்களுக்குக் கர்ம யோகமே சிறந்தது. இக்கருத்துக்கள் இதில் விளக்கப்படுகின்றன.

இதில் 43 சுலோகங்கள் அடங்கியுள்ளன.


அர்ஜுனன்: ஜனார்த்தனா, கர்மத்திலும் சிறந்தது ஞானமே என்பது உனது கொள்கையானால், ஏன் என்னை இந்தக் கொடும்போரில் ஈடுபடுத்துகிறாய்? முன்னுக்குப் பின் முரண்படுவது போல் தோன்றும் உன் உபதேச மொழிகள், எனக்குக் குழப்பத்தை உண்டாக்குகின்றன. இப்போது இரண்டிலே ஒன்றைச் சொல், எது எனக்கு நல்லது? அதைப் பின்பற்றி நான் பயன் பெறுகிறேன்.

கண்ணன்: குற்றமற்ற அர்ஜுனா, குவலயத்தில் மனிதனாகப் பிறந்தவன் மேற்கொள்ள வேண்டிய தவநெறிகளை நெடுங்காலத்திற்கு முன்பே நான் சொல்லியிருக்கிறேன். ஒன்று தத்துவ ஞானிகளுக்குரியது. ஞானயோகம், இன்னோன்று மற்றவர்களுக்குரியது கர்மயோகம்.

ஒருவன் கர்மங்களைச் செய்யாமல் இருப்பதாலேயே 1செயலற்ற நிலையை அடைவதில்லை. இன்னொருவன் துறவியாவதால் மட்டுமே பரம்பொருளை அடைவதும் இல்லை. உலகில் பிறந்த எவனும் கணப்பொழுதும் கூட இயங்காமல் இருப்பதில்லை. இயற்கைக் குணமே அவனை இயங்கத் தூண்டுகிறது. எவனொருவன் உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு, உள்ளத்தால் அவற்றை நினைத்துக் கொண்டிருக்கிறானோ.. அவன் மகா மூடன்‚ ஒழுக்கமற்றவன்‚ 2வேஷக்காரன்‚ கட்டுக்குள் உணர்வுகளை வைத்துக் கொண்டு, கர்மயோக காரியங்களில் ஈடுபடுகிறவனே உயர்ந்தவன். அதனால், உனக்கு விதிக்கப்பட்ட கருமத்தைச் செய்வாயாக, இல்லையெனில் உடம்பே உனக்குப் பாரமாகும். சும்மா இருப்பதைக் காட்டிலும், ஏதாவது ஒரு3 கருமம் செய்வதே வாழ்வின் சாரமாகும். கர்மத்தை எப்படிச் செய்வது என்பதைச் சொல்லுகிறேன். எந்தத் தொழிலையும் ஈசுவரக் கடமை என்றே செய்ய வேண்டும். பயன் கருதிச் செய்யும் தொழில் தான் உலகைப் பிணித்திருக்கும் விலங்கு. சிருஷ்டித் துவக்கத்தில் பிரம்மதேவன் ஒருயாகம் நடத்தி, மனிதர்களைப் படைத்து, அவர்களைப் பார்த்துச் சொன்னான்: 4‘பலுகிப் பெருகுங்கள், யாகம் உங்கள் ஆசைகளை நிறைவேற்றும் 5காமதேனுவாக இருக்கட்டும்;‚ நீங்கள் தேவர்களை வழிபடுங்கள், அவர்கள் உங்களுக்கு வளங்களைப் பொழியட்டும், இவ்விதம் பரஸ்பரம் பேணி பெருநன்மை அடையுங்கள், 6யாகம் செய்து தேவர்களைப் பேணுங்கள். நீங்கள் விரும்பும் சுகங்களை அவர்கள் தருவார்கள் அவர்கள் கொடுத்ததை அவர்களுக்கு நிவேதனம் செய்யாமல் உண்பவன் திருடன், எனவே யாகத்தில் மிஞ்சியதை உண்ணும் நல்லவர்கள் பாவங்களிலிருந்தும் விடுபடுகின்றனர். ஆனால் 7தமக்கு மட்டுமே சமைத்துண்ணும் பாவிகள், பாவத்தையே உண்கிறார்கள்.”

உணவிலிருந்து உயிர்கள் உண்டாகின்றன. மழையிலிருந்து உணவு உற்பத்தியாகிறது. மழை வேள்வியினால் உருவாகிறது. யாகம் மனிதனின் செயலால் உண்டானது. இந்தச் செயல் வேதத்தில் உதித்தது. வேதம் என்பது பிரம்மத்தில் தோன்றியது. எங்கும் நிறைந்த இந்தப் பிரம்மம். யாகத்தில் நிலைபெற்றுள்ளது. இந்தச் சங்கிலித்தொடர் சக்கர வட்டத்தைப் பின்பற்றாதவன் பாவியிலும் பாவியாவான். ஆனால் ஆத்மஞானத்தில் திளைத்து திருப்தி அடைகிறவனுக்கு தொழில் செய்யும் கடமை இல்லை அப்படிச் செய்தாலும் யாதொரு பயனுமில்லை, எவ்வுயிருடனும் அவனுக்கு உறவுமில்லை, ஆகவே பற்றைத் துறந்து பாங்குடன் பணிகளைச் செய்‚ இப்படிச் செய்பவன் பரம்பொருளை அடைவது மெய்‚ ஆம்.. 8ஜனகன் முதலானோர் கடமையைச் செய்தே முக்தியடைந்தார்கள். உனக்காக இல்லையென்றாலும் உலக நன்மைக்காக காரியத்தில் நீ ஈடுபட்டாக வேண்டும். ஏனெனில், தலைவன் செய்வதையே மற்றவர்கள் செய்கிறார்கள். அவன் நியாயம் என்பதையே மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளுகிறார்கள். என்னைத்தான் எடுத்துக் கொள்ளேன். மூவுலகிலும் எனக்கு கடமைகள் இல்லை. இனி அடைய வேண்டிய உடமைகள் இல்லை. ஆனாலும் நான் விடாமல் இயங்கிக் கொண்டே இருக்கிறேன். ‘எனக்கென்ன‚” என்று நான் எதுவுமே செய்யாமல் இருந்தால் என்ன ஆகும்? என்னைப் பின்பற்றி எல்லா மனிதர்களும் எதுவுமே செய்யாமல் சும்மாவே இருப்பார்கள். இதனால் உலகங்களெல்லாம் அழிந்து போகும். 9ஜாதிகளெல்லாம் கலந்து போகும் மனித இனமே குலைந்து போகும்.

பரதகுமாரா‚ பாமரமக்கள் பொருளாசையில் தொழில் செய்கிறார்கள்ƒ அறிவாளன் உலக நன்மைக்காக ஆசையற்றவனாய் தொழில் செய்ய வேண்டும். அப்பாவி மக்கள் உள்ளத்தில் அவன் தடுமாற்றத்தை உண்டாக்கக் கூடாதுƒ அனைத்துத் தொழில்களிலும் அவன் ஈடுபட்டு, மற்றவர்களையும் ஈடுபடுத்த வேண்டும். இயற்கையின் உந்துதல் தான் உலகின் தொழில்களை இயக்குகிறது. ஆனால் ஆணவ மனிதனோ, 10’நான் செய்தேன்‚ நான் செய்தேன்‚” என்று குதிக்கிறான். உண்மை அறிஞன் தான் அது இயற்கையின் செயல் என்றுணர்ந்து ஆசையைத் துறக்கிறான். ஆசை மிகுதியால் தொழில் செய்யும் மந்த புத்திக்காரர்களை அறிஞன் குழப்பக்கூடாது. இந்த என் மதக் கோட்பாட்டைப் பின் பற்றுகிறவர்கள் வினைகளிலிருந்து விடுபடுவார்கள். பொறாமையால் இதைப் பின்பற்றாமல் இகழும் மூடர்கள் அழிந்து படுவார்கள்.

அனைத்து உயிர்களுமே இயற்கையின் நியதிப்படியே இயங்குகின்றன. அறிஞனும் கூட தன் இயல்புப்படிதான் நடக்கிறான். அதைத் தடுப்பதில் பயனில்லை. அந்தந்தப் புலனுக்கு அந்தந்த நுகர்ச்சிகளில் விருப்பு வெறுப்புகள் இருக்கின்றன. இந்த விருப்பு வெறுப்புகள் கட்டுக்குள் இல்லையென்றால், அவையே அவனை அழிக்கும் எதிரிகள். மேலும் பிறனுக்குரிய தொழிலை நன்கு நுட்பத்துடன் செய்வதைக் காட்டிலும், தனக்குரிய தொழிலைத் தரங்குன்றவே செய்தாலும் கூட, அதுவே உயர்ந்தது. சுயதர்மத்தை நிறைவேற்றுவதில் ஒருவன் இறந்தாலும் அதுவே சிறந்தது. பரதர்மத்தைச் செய்வதோ மிகவும் ஆபத்தானது.

ஆகையால் அர்ஜுனா, நீ செய்யும் காரியத்தை எனக்கே அர்ப்பணித்து விடு, அது உன்னுடையது என்ற எண்ணத்தை நீக்கிவிடு;;‚ குழப்பங்கள் அனைத்தையும் போக்கிவிடு, பொங்கியெழுந்து போரிடப் புறப்படு.

அர்ஜுனன்: விருஷ்ணிகுலக் கிருஷ்ணா, மனிதன், தான் விரும்பாவிட்டாலும், பலவந்தமாக ஏவப்பட்டு, பாவப்பட்டச் செயல் செய்கின்றானே , அது ஏன்?

கண்ணன்: காமமும் குரோதமும் தான் அதற்குக் காரணம். அது மயக்கத்தில் பிறக்கிறது. பெருந்தீனி தின்கிறது. அது தான் உனக்குப் பகை என்பதைத் தெரிந்து கொள்‚ நெருப்பைச் சூழ்ந்திருக்கும் புகையைப் போல்;, கண்ணாடியில் படிந்திருக்கும் கறையைப் போல், கருவை மூடியிருக்கும் கர்ப்பப் பையைப் போல் ஆசையானது ஞானத்தைச் சூழ்ந்திருக்கிறது. ஆசையே ஞானத்தின் நித்திய வைரி. அது 11காம வடிவம் கொண்டது. 12நிரப்பவே முடியாதது. புலன்களும், புத்தியும், மனமும் தான் இந்த ஆசையின் இருப்பிடம். இவை அறிவை மறைத்து மனிதனை மயங்க வைக்கின்றன.

ஆகவே பரதகுலச் செல்வா, முதலில் நீ புலன்களை அடக்கிக் காமத்தை அழித்துவிடு, உடம்பைக் காட்டிலும் புலன்கள் உயர்ந்தவை தான். ஆனால் அவற்றிலும் மேலானது மனம், அறிவோ மனத்தை விடச் சிறந்தது, அறிவை விட உயர்ந்தது ஆத்மா, இந்த ஆத்மாவை அறிந்து கொண்டு, ஆத்ம சக்தியால் உள்ளத்தைத் திறந்து கொண்டு, வெல்லற்கரிய காமம் எனும் பகையைக் கொன்றுவிடு. வென்றுவிடு.

(மூன்றாம் அத்தியாயம் நிறைவு பெற்;றது)

1. கர்மம் செய்யாமல் இருந்தாலே முக்தி கிடைக்கும் என்றால் தாவரப் பொருட்களுக்கும் முக்தி கிடைக்க வேண்டும். – ஸ்ரீ மத்வர்

2. நீ ஜபமாலை உருட்டலாம்ƒ நெற்றியில் திருநீறு அணியலாம்ƒ நீண்ட ஜடை தரிக்கலாம்; ஆனால் உள்ளத்தில் கடும் நஞ்சு இருக்கும் போது, நீ எவ்விதம் கடவுளைக் காண முடியும்? -கபீர்தாஸ்

உண்மையை அறியாத வேஷதாரிகளுக்கு நற்பெயரும் இல்லை, கவுரமும் இல்லை. அவர்கள் அசுத்தமான காக்கைக்குச் சமமானவர்கள். கூண்டில் அடைபட்டுப் பெருமித நடை போடும் பறவையைப் போன்ற அவர்களுக்கு விடுதலையே கிடையாது. – குரு நாநக்

3. சுலோகம் 8 முதல் 16 வரை:

இந்தச் சுலோக வரிகளில் தான் இன்றைய இந்தியாவிற்கு, கைராட்டினமே உடனடித்தேவை என்ற உண்மை அடங்கியுள்ளது என்று கருதுகிறேன். இங்கே “கருமம் செய்” என்றது சந்தேகத்திற்கிடமின்றி உடலுழைப்பைத்தான் குறிக்கிறது. “பயன் கருதாத உழைப்பு” என்பது பொது நன்மைக்காக எல்லாரும் ஏற்கும் உழைப்பாகும். அத்தகைய பயன் கருதாத உழைப்பு, இந்த நூற்புப்பணியாகத் தான் இருக்க முடியும். கண்ணபெருமான் இங்கே கைராட்டினத்தைத்தான் குறிப்பிடுகிறார் என்று நான் சொல்லவில்லை. அவர் இங்கே ஓர் அடிப்படைத் தத்துவத்தைக் கோடிட்டுக் காட்டியுள்ளார். இந்தியக் கண்ணோட்டத்தில் இந்த வரிகளைப் படிக்கும் போது, நூற்புப்பணியைத் தான் மிகப் பொருத்தமான உழைப்பாக என்னால் எண்ணிப் பார்க்க முடிகிறது. இதை விட மேன்மையான நாட்டுப்பற்று மிக்க ஒன்றை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. ஏனேனில் ஏழைகளைப் போலவே நாம் அனைவரும் உழைப்பதன் மூலம் தான் அந்த ஏழை மக்களுடனும், அவர்கள் மூலமாக மனித சமுதாயத்துடனும் நாம் நம்மை இணைத்துக் கொள்ள முடியும். ஏழைகளுக்காக உழைப்பதை விடப் பெரியதோர் தொழுகையை என்னால் எண்ணிப் பார்க்க இயலவில்லை. கைராட்டினம் தான் பூமித்தாயின் செல்வங்களைச் சமமாகப் பகிர்ந்தளிக்க வழி செய்கிறது.
– மகாத்மா காந்தி, யங் இந்தியா, அக்டோபர் 20, 1921

4. “பலுகிப் பெருகுங்கள்” என்ற பைபிள் வாசகம் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.

5. இது ஒரு தெய்வீகப்பசு. கேட்டதெல்லாம் தரவல்லது என்பது புராணம். கற்பக தரு, அட்சயப் பாத்திரம் போன்றது இது.
6. யாகங்கள் ஐந்து: தேவ யக்ஞம், ரிஷி யக்ஞம், பித்ரு யக்ஞம், நர யக்ஞம், பூத யக்ஞம். இங்கு கூறப்பட்டது தேவ யக்ஞம்.
7. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. – திருவள்ளுவர்
8. ஜனகன், இவாகு, ரகு, திலீபன், அச்வபதி, பிரகலாதன், அம்பரீஷன் முதலியவர்கள்.
9. ஒவ்வொருவனுடைய வகுப்பு அல்லது ஜாதி, அவன் புரியும் கர்மத்தினின்று விளங்குகிறது. ஆக வினையாற்றாவிடின் வாழ்வு குன்றுகிறது. பகவான் பிரகிருதிகளைச் செயலில் தூண்டாவிடில் இத்தகைய சீர்கேடுகள் வந்தமையும். – ஸ்ரீ சித்பவானந்தர்.

10. எதிரில் நிற்கும் ஓர் ரயில் வண்டித் தொடரைப் பார்த்துக் கொண்டிருப்பவன், அவ்வண்டி ஓட ஆரம்பித்ததும், தானிருக்கும் ரயில் வண்டியே ஓடுவதாக மயங்குதலை ஒத்தது இது. – ஸ்ரீ சித்பவானந்தர்.
11. யமனுக்கும் காமனுக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. யமன் பிரியமற்றவனைப் போலிருந்து மனிதனுக்கு நன்மை செய்கிறான். காமன் பிரியமுள்ளவனைப் போலிருந்து தீமை செய்கிறான்.
12. ஓட்டைச் சட்டியில் நீர் வார்த்து நிரப்ப முடியாது. ஆசையையும் நிரப்பி ஒரு முடிவுக்குக் கொண்டு வர முடியாது. – ஸ்ரீ சித்பவானந்தர்


(காலஞ்சென்ற திரு எஸ் மெய்யப்பன் உலக மக்கள்தொகைத் திட்டத்தின் உறுப்பினராய் தமிழ் நாட்டு அரசுப் பணியில் இருந்தவர்.சௌடீஸ்வரி மலர் என்ற மாத இதழின் ஆசிரியராய் இருந்தவர். )

Series Navigation

எஸ் மெய்யப்பன்

எஸ் மெய்யப்பன்

பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம்

This entry is part [part not set] of 35 in the series 20070705_Issue

எஸ் மெய்யப்பன்


பகவத் கீதையின் அமைப்பு முறை

குருச்சேத்திரத்தில் கௌரவர் படைகளும் பாண்டவர் படைகளும் போரிட ஆயத்தமாய் அணிவகுத்து நிற்கின்றன.

அஸ்தினாபுரத்தில் அரண்மனை முற்றத்தில் துரியோதனனின் தந்தை திருதராஷ்டிர மன்னன் அமர்ந்துள்ளான். அவன் கண்பார்வையற்றவன். அருகில் அமைச்சன் சஞ்சயன் இருக்கிறான்.

அப்போது வியாச முனிவர் அங்கே தோன்றி, ‘திருதராஷ்டிரா… குருச்சேத்திரப் போரைப் பார்க்க விரும்பினால்… உனக்கு ஞான திருஷ்டி தருகிறேன்!” என்றார்.

‘உறவினர்கள்; கொல்லப்படுவதை நான் காண விரும்பவில்லை” என்ற திருதராஷ்டிரன், ‘இருந்தாலும், போரின் தன்மையை அறிய விரும்புகிறேன்” என்றான்.

‘அப்படியானால் இதோ.. இந்த அமைச்சன் சஞ்சயனுக்கு ஞானதிருஷ்டி அளிக்கிறேன்! இவன் உனக்குப் போர்க்கள நிகழ்ச்சிகளை அப்படியே கூறுவான்!“ என்று அருகில் அமர்ந்திருந்த அமைச்சன் சஞ்சயனுக்கு ஞானக்கண் அருளிவிட்டு வியாச முனிவர் மறைந்து போனார்.

பிறகு அமைச்சன் சஞ்சயன் போர்க்கள நிகழ்ச்சிகளை ஞானக்கண்ணால் கண்டு, மன்னவன் திருதராஷ்டிரனுக்கு 1விளக்கிக் கூறுகிறான்.

இவ்விதம் அமைச்சன் சஞ்சயன் விளக்கும் வகையில்தான் பகவத் கீதை அமைந்து, பதினெட்டாம் அத்தியாயத்தின் இறுதியில் அவன் வாய்மொழி மூலமாகவே நிறைவெய்துகிறது.

அமைப்பு முறையில் எடுத்துக் கொண்டால் இது ஓர் அற்புதமான உத்தி என்று தான் சொல்ல வேண்டும்.

இடைப்பட்ட அத்தியாயங்களில் பல இடங்களில் அமைச்சன் சஞ்சயன் பேசுகிறான். இவ்விதம் அவன் பேசுவதெல்லாம், தெளிவு கருதி, இப்புதிய மொழிபெயர்ப்பில் அடைப்புக் குறிக்குள் தரப்பெற்றுள்ளன.

(1. வாரியார் சுவாமிகளின் ஸ்ரீமகாபாரதம் – பக். 303 – 305

இதையே உரையாசிரியர் அண்ணா கீழ்கண்டவாறு விவரித்துள்ளார். : பத்தாவது நாள் போரில் பீஷ்மர் தேரினின்றும் வீழ்த்தப்பட்டு அம்புப் படுக்கையில் சயனித்து மரணத்தை எதிர் நோக்கியிருந்தார். இச்செய்தியை அமைச்சன் சஞ்சயன், மன்னவன் திருதராஷ்டிரனிடம் கூறிய போது, மன்னவன் மிகவும் துக்கித்து, யுத்தச் செய்திகளை விவரமாய் வர்ணிக்கும்படிக் கேட்டான். வியாசருடைய அருளால் தூரத்தில் நடப்பவற்றை மனக்கண்ணில் காணும் சக்தி பெற்றிருந்த அமைச்சன் சஞ்சயன் போர் ஆரம்பித்தது முதல் வர்ணிக்கத் தொடங்கினான்!
– ஸ்ரீமத் பகவத் கீதை, பக். 4)



அத்தியாயம் ஒன்று
அர்ஜுன விஷாத யோகம்

விஷாதம் என்றால் துயரம். அர்ஜுனன் துயரமடையும் பகுதி இது. குருச்சேத்திரத்தில் கௌரவர்களும் பாண்டவர்களும் போர் புரிய, நால்வகைப் படைகளுடன் அணிவகுத்து நிற்கின்றனர். பாண்டவர்களில் ஒருவனான அர்ஜுனன் எதிரிப்படையை நோட்டம் விடுகிறான். எதிரிகள் அனைவருமே அவனது உற்றார் உறவினர்களாயும், ஆசிரியன்மார்களாயும் இருக்கக் கண்டு உயிரினும் இனிய அவர்களைக் கொல்லுவதா என்று துயரம் மிகுந்தவனாய் வில்லையும் அம்பையும் வீசி எறிகிறான். இந்நிகழ்ச்சிகள் இதில் விளக்கப் பெறுகின்றன.

இதில் 47 சுலோகங்கள் அடங்கியுள்ளன.

——-

(அஸ்தினாபுரம் அரண்மனை முற்றத்தில் திருதராஷ்டிர மன்னவன் அமர்ந்திருக்க, அமைச்சன் சஞ்சயன் அருகில் இருக்கிறான்)

திருதராஷ்டிரன்: ஓ சஞ்சயா, குருச்சேத்திரத்தில் போர் செய்யத் திரண்ட என் மைந்தர்களும் பாண்டவர்களும் என்ன தான் செய்தார்கள்?

அமைச்சன் சஞ்சயன்1: மாமன்னவரே‚ இதோ2… தங்கள் மைந்தன் துரியோதனன் அணிவகுத்து நிற்கும் பாண்டவர் படையைப் பார்த்த பின்பு, குருதேவர் துரோணாச்சாரியாரிடம் செல்கிறான்.. இவ்வாறு சொல்லுகிறான்‚
(என்று அமைச்சன் சஞ்சயன் ஆரம்பித்து வைக்க குருச்சேத்திர யுத்தகளத்திற்குக் காட்சி மாறுகிறது.)

துரியோதனன்3: குருதேவரே, தங்களது சீடனும் துருபதன் மகனுமான திருஷ்டத்யுமனன்4 அணிவகுத்திருக்கும் அதோ.. அந்தப் பெரிய பாண்டவ சேனையைப் பாருங்கள், அங்கே வீராதி வீரர்களும் விற்போர் வித்தகர்களும் இருக்கிறார்கள். விராடன், துருபதன், வீரமிக்க காசிராஜன், யுயுதானன், சேகிதானன், குந்திபோஜன், சைவியன்.. அபிமன்யு, யுதாமன்யூ, உத்தமவுஜா, புருஜித்து, திருஷ்டகேது மற்றும் திரௌபதி மைந்தர்களான உபபாண்டவர்;களும் இருக்கிறார்கள். இவர்கள் அத்தனை பேருமே மகாரதர்கள்5. ஓ பிராமண குல திலகமே.. இப்போது6 நமது படைப் பெருமை கூறுவேன், நமது தளநாயகர் வரிசையை நினைவு கூர்வேன், தாங்களும் பீஷ்மரும் கர்ணனும், கிருபரும், விகர்ணனும், அச்வத்தாமனும், தத்தன் மகன் பூரிசிரவசும் இருக்கிறீர்கள், மேலும் எனக்காக உயிரும் கொடுக்கத் துணிந்த சூரர்கள் பலர் இருக்கிறார்கள், அத்தனை பேருமே போரிலே வல்லவர்கள்.. பற்பல ஆயுதம் உள்ளவர்கள், பீஷ்மரால் காக்கப்படும் நமது சேனை அளவுகடந்து7 அலை மோதுகிறது. பீமனால் காக்கப்படும் பாண்டவர் படையோ அளவுக்கு உட்பட்டு நிற்கிறது. (வீரர்கள் பக்கம் திரும்பி) ஓ, சேனா வீரர்களே, அவரவர்குரிய இடத்திலிருந்து கொண்டு நமது பீஷ்மரைக் காத்து நின்று போர் புரியுங்கள்.

(இவ்விதம் கூறிய துரியோதனனுக்கு உற்சாகம் தோன்றும் படியாக, குருவம்சப்பெருவீரர் பீஷ்மர் சிம்மம் போல் கர்ஜித்து, சங்கை ஊதினார். உடனே சங்குகளும் பேரிகைகளும், பறைகளும் கொம்புகளும் மற்றும் தம்பட்டங்களும் முழங்கப் பேரொலி எழுந்தது.
பாண்டவர் படையில் வெள்ளைக் குதிரைகள் பூட்டி.. கொள்ளை அழகு காட்டி ஓர் இரதம் நின்றது. அதில் சாரதியாக அமர்ந்திருந்த கண்ணன் பாஞ்சஜன்யம் என்ற தெய்வீக சங்கை ஊதினான். அருகிலிருந்த அர்ஜுனன் தேவதத்தம் என்ற சங்கை நாதித்தான். பீமசேனன் பவுண்டரம் என்ற பெரிய சங்கை ஒலித்தான். தருமன் அனந்தவிஜயம் என்ற சங்கையும், நகுலனும் சகதேவனும் முறையே சுகோஷம், மணிபுஷ்பகம் என்ற சங்குகளையும் ஊதினார்கள். மற்றும் காசிராஜன், சிகண்டி8, திருஷ்டத்யுமனன், விராடன், சாத்யகி, துருபதன், திரௌபதி மைந்தர்கள் மற்றும் அபிமன்யு ஆகிய அனைவரும் தனித்தனியே தத்தம் சங்குகளை முழக்கினார்கள். இந்தப் பெருமுழக்கம் வானை அதிரடித்தது… மண்ணில் எதிரொலித்தது… துரியோதனாதியர் கூட்டத்தைக் கதிகலங்க வைத்தது.
போர் துவங்கும் இந்த நேரத்தில் காண்டீபமும் கையுமாக நின்ற அனுமக்கொடி அர்ஜுனன், ஹிருஷிகேசனான9 கண்ணனிடம் சொல்லுகிறான்)

அர்ஜுனன்: அச்சுதா, இரு படைகளுக்கும் நடுவே என் தேரை நிறுத்துக, போரிலே ஆசை கொண்டு நிற்கும் வீரர்களை நான் பார்க்க வேண்டும், துன்மதி படைத்த துரியோதனனுக்குக்காகப் போரிட வந்துள்ளவர்களை நான் காண வேண்டும்.

கண்ணன்: அப்படியே ஆகட்டும் அர்ஜுனா, அணி திரண்டு நிற்கும் கௌரவர்களை நீ பார்க்கலாம்.
(என்றவாறு பரந்தாமன் அழகிய தன் சிறந்த ரதத்தைப் படை நடுவே நிறுத்தினான். அர்ஜுனன் கண்களை மலர்த்தி இருபுறமும் பார்த்தான். எதிரில் தந்தையர் நின்றனர், பாட்டன்மார் நின்றனர், ஆச்சாரியரும் அண்ணன் தம்பியரும் நின்றனர், மக்களும் மாமன்மாரும் நின்றனர், தோழரும் பேரன்மாரும் நின்றனர், இதைப் பார்த்த அர்ஜுனன் குமுறும் துயரத்துடன் கண்ணனைப் பார்த்துச் சொல்லுகிறான்.)

அர்ஜுனன்: கண்ணா, இவர்களுடனா நான் போர் செய்ய வேண்டும்? என் உடல் சோர்வடைகின்றதே, வாய் வறள்கின்றதே, நடுக்கமும் மயிர்க்கூச்சமும் எழுகின்றதே, கையிலிருந்து காண்டீபம் நழுவுகின்றதே, மேலும் தோலும் பற்றி எரிகின்றதே, மனது சுழல்கின்றதே, என்னால் நிற்கவும் முடியவில்லையே.

கேசவா10, கெட்ட சகுணம் தோன்றுகின்றதே, ஆச்சாரியர்களும் பாட்டன்மார்களும் தகப்பன்மார்களும், பேரன்மார்களும் பிள்ளைச் செல்வங்களும், மாமன்மார்களும் மாமனார்களும், சம்பந்திகளும் மைத்துனர்களும் என் எதிரில் நிற்கிறார்களே, இச்சுற்றத்தைக் கொன்று, கொற்றத்தை வென்றிட நான் விரும்பவில்லை, அதில் எந்த நன்மையும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை, ராஜ்ஜியம், ரம்மிய சுகவாழ்வு இவற்றில் பயன் இருப்பதாகவும் எனக்குத் தெரியவில்லை, அரச போகம் எதற்காக, ஆசாரியர்களும் அன்பான உறவினர்களும் அக மகிழ்வதற்காக, அத்தனை பேரும், இதோ உயிரையும் துறக்கச் சித்தமாய் யுத்த பூமியில் நிற்கிறார்களே, இவர்களைக் கொன்றா இன்பம் அனுபவிப்பது?

மதுசூதனா, 11 நான் கொல்லப்பட்டாலும் கவலை இல்லை… இவர்களை கொல்ல நான் விரும்பவில்லை, மூவுலகுமே பரிசாகக் கிடைத்தாலும் சரி.. முன் நிற்கும் இவர்களை நான் கொல்ல மாட்டேன், மேலும் கொடும் பாவிகளான 12கௌரவர்களைக் கொல்லுவதால் பாவமே வந்து சேரும். சுற்றத்தை அழித்துவிட்டு சுகத்தைப் பெற்றிட முடியுமா? குல நாசத்தாலும், மித்திர துரோகத்தாலும் விளையும் கேடுகளை, ஆசை மிகுதியால் அறிவிழந்த இவர்கள் உணராவிட்டாலும், அதை உணர்ந்த நாம், அந்தப் பழி பாவத்திலிருந்து ஏன் விலகிக் கொள்ளக் கூடாது.

ஜனார்தனா, 13 குலம் அழிந்தால் குலதர்மம் வீழும் அதர்மம் சூழும் அதர்மத்தின் மிகுதியால் மாதர் கற்பு கெடும் இது வர்ணக் கலப்பில்14 கொண்டு போய்விடும்; இதனால் ஜாதி தர்மங்களும் குலதர்மங்களும் நிலைகுலையும்; இதற்குக் காரணமானவர்களுக்கும் அவர்களின் சந்ததியார்களுக்கும் நிச்சயம் நரகமே ஏற்படும் அவர்களின் பித்ருக்கள்15 சோறும் நீரும் இழந்து வீழ்ச்சியடைவார்கள். குலதர்மத்தை இழந்தவர்கள் நரகத்தில் வீழ்வார்கள்; அதனால் சுற்றத்தைக் கொல்லுவது பாவம், அதை நான் செய்ய மாட்டேன். ஆயுதமின்றி இருக்கும் என்னை அவர்கள் கொல்லட்டும்; அதுவே எனக்குப் பெரும் பாக்கியம்.

(இவ்விதம் கூறிய அர்ஜுனன் வில்லையும் அம்பையும் வீசி எறிந்து விட்டு, துயரம் மிகுந்தவனாய் இரதத்தின் பீடத்தில் அமர்ந்து விட்டான்)

(முதல் அத்தியாயம் நிறைவு பெற்றது)

1. சஞ்சயன் – விருப்பு வெறுப்பு ஆகியவற்றை வென்றவன்.

2. அமைச்சன் சஞ்சயன் ஞானக்கண்ணால் பார்த்து விவரிக்க ஆரம்பிக்கிறான். அக்காலத்திலும் தொலைக்காட்சி இருந்திருக்குமோ‚ தற்காலத் தொலைக்காட்சியில் நேர்முக வர்ணனையாளர், நிகழ்ச்சி நடக்கும் களத்திலேயே இருக்கிறார். அமைச்சன் சஞ்சயன் களத்திலே இல்லாமல், அரண்மனை முற்றத்திலிருந்து கொண்டு, ஞானக் கண்ணால் காண்பதை வர்ணனை செய்கிறான்.

3. துரியோதனன் – யுத்தத்தில் எளிதில் வெல்லப்படாதவன்.

4. திருஷ்டத்யுமனன் – எவராலும் எதிர்க்க முடியாதவன்.

5. மகாரதர்கள் – தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் பகைவரின் ஆயுதங்களிலிருந்து காத்துக் கொண்டு, பதினாயிரம் வில்லாளிகளை நடத்துபவன் மகாரதன்.

6. துரியோதனனும் அவனைச் சேர்ந்தவர்களும் மனிதனின் கீழ்த்தர உணர்வுகளையும் அர்ஜுனனும் அவனைச் சேர்ந்தவர்களும் மனிதனின் மேன்மையான உணர்வுகளையும் பிரதிபலிப்பதாகக் கருதுகிறேன். நமது உடம்பு தான் போர்க்களம். மேற் சொன்ன இரு வகை உணர்வுகளுக்கும் இடையில் முடிவில்லாத போராட்டம் நடந்து வருகிறது; இதுவே கீதையில் தெளிவாக விளக்கப் பெற்றுள்ளது. கண்ணனே உடம்பினுள் உறைபவன், தூய்மையான இதயத்தில் அவன் குரல் ஒலித்துக் கொண்டே உள்ளது. கடிகாரத்திற்குப் போலவே இதயத்திற்கும் தூய்மை எனும் சாவி தேவை இல்லாவிட்டால் இதயத்திற்குள் அவன் பேச்சு நின்றுவிடுகிறது.
– காந்தியடிகள்: யங் இந்தியா – நவ 12, 1925.

7. சில உரையாசிரியர்கள் இதில் வரும் “பர்யாப்தம்” என்ற சொல்லுக்கு, “பூரணமான” என்ற பொருளையும் “அபர்யாப்தம்” என்ற சொல்லுக்கு “பூரணமற்ற” என்ற பொருளையும் கொண்டு, துரியோதனன் சேனையை விட, பாண்டவர் சேனை அதிகமாயுள்ளது என்று பொருள் கொண்டுள்ளனர். துவாரகைக்குச் சென்ற அர்ஜுனன் கண்ணனுடைய சகாயத்தையும், துரியோதனன் கண்ணனுடைய படை உதவியையும் பொறுக்கி எடுத்தனர் என்பதால் துரியோதனன் சேனை அபரிமிதமாக இருந்தது என்று பொருள் கொள்வதே பொருத்தமுடையதாகும்.

8. சிகண்டி – முகத்தில் மீசை இல்லாதவன். துருபத ராஜனுக்குப் பெண்ணாகப் பிறந்து, பிறகு ஆண் தன்மை பெற்றவன். இவன் பீஷ்மருக்கு எதிரில் நின்ற போது, அவர் போர் புரியாமல் நிற்கவே, அவருக்குத் தோல்வியுண்டாயிற்று.

9. ஹிருஷிகேசன் – இந்திரியங்களுக்கு ஈசன்.

10. கேசவன் – அழகிய முடியுடையவன், கேசிகன் என்ற அசுரனைக் கொன்றவன், மும்மூர்த்திகளை வசப்படுத்தி வைத்திருப்பவன்.
11. மதுசூதனன் – மது என்ற அசுரனை அழித்தவன்.

12. தீ வைப்பவன், விஷம் வைப்பவன், ஆயுதம் கொண்டு ஆயுதம் இல்லாதவனைக் கொல்பவன், பொருளை அபகரிப்பவன், பிறர் பூமியை அபகரிப்பவன், பிறர் மனைவியை அபகரிப்பவன் என்று ஆறு வகையான கொடும் பாவிகள்.

13. ஜனார்தனன் – மக்களால் துதிக்கப்படுபவன்.
14. “வர்ணலங்கர” என்ற வார்த்தைக்கு “குலங்களின் கலப்பு” என்றே பலரும் பொருள் கொண்டுள்ளனர். ஸ்ரீ பக்தி வேதாந்த ஸ்வாமி பிரபுபாதா இதற்கு “தேவையற்ற மக்கள் கூட்டம்” என்ற பொருள் கொண்டுள்ளார்.

15. இறந்தவர்கள் சிறிதுகாலம் பித்ருலோகத்தில் வசிக்கின்றனர் என்பதும் அவர்களை,அவர்களைச் சார்ந்தவர்கள் நினைத்துப் பார்க்கும் நல்லெண்ணம் அவர்களுக்குச் சகாயம் செய்கிறது என்பதும் ஐதீகம். இவ்விதம் நினைத்துப் பார்க்கும் சொல்லுக்கு சிராத்தம் என்று பெயர். இதில் முன்னோர்களுக்காகப் பிண்டம் மற்றும் நீர் கையாளப்படுகின்றன. அவர்களைச் சூழ்ந்துள்ளவர்களுக்காக, வறியோர்க்கு சிராத்த காலத்தில் உணவளிக்கப் படுகிறது.

அத்தியாயம் இரண்டு

ஸாங்கிய யோகம்

ஸாங்கியம் என்பது ஆராய்ச்சியால் வரும் ஞானம். அழியக்கூடியது உடல் அழிவற்றது ஆத்மா. ஆகவே உடலைக் கொன்றாலும் ஆத்மாவை கொன்றதாகாது. கடமைகளைச் சரிவரச் செய்தால் ஆத்மஞானம் கிட்டும். அதனால் நற்கதியடையலாம். இக்கருத்துக்கள் இதில் விளக்கப்படுகின்றன.

இதில் 72 சுலோகங்கள் அடங்கியுள்ளன.

————-

(1மருகித் துயருற்ற அர்ஜுனனுக்கு மதுசூதனன் தேறுதல் வார்த்தைகள் கூறலானான்)

கண்ணன்: அர்ஜுனா, உன் செயல் 2ஆரியனுக்கு அடாதது! சொர்க்கத்தைக் கொடாதது, புகழின்பால் படாதது! இந்த நெருக்கடி நிலையில் இத்தகைய மனச்சோர்வு உனக்கு எங்கிருந்து வந்தது? 3பேடியைப் போல் வாடி நில்லாதே, போரிடேன் எனும் வார்த்தையைச் சொல்லாதே, எழுந்திடு, எதிரிகள் மேல் பாணத்தைப் பொழிந்திடு.
அர்ஜுனன்: மதுசூதனா, பூஜைக்குரிய பீஷ்மரையும் மகாத்மா துரோணரையும் பாணங்களால் எப்படி அடிப்பேன். இவர்களைக் கொன்றால், இவர்களின் இரத்தம் தோய்ந்த இன்பங்களைத் தான் நான் இம்மையில் அனுபவிக்க வேண்டும். அதைவிட நான் யாசகம் பண்ணலாம்… அதிலே கிடைக்கும் உணவை உண்ணலாம். வானகமும் இந்த வையகமும் ஒருங்கே கிடைத்தாலும், என் புலன்களில் அலை பாயும் இந்தத் துயரம் என்னை விட்டு நீங்காது. எவரைக் கொன்றபின் நான் உயிர் வாழ விரும்ப மாட்டேனோ, அந்தத் திருதராஷ்டிர மைந்தர்களல்லவா எதிரே நிற்கிறார்கள். ஒன்று.. இவர்களை நாம் கொல்லப் போகிறோம், அல்லது அவர்கள் நம்மை வெல்லப் போகிறார்கள், இவற்றில் எது மேலானது என்பது எனக்கு விளங்கவில்லை. கண்ணா! 4கார்ப்பண்யம் என்ற சிறுமையால் கலங்கி நிற்கும் நான் உன் சீடன். உன்னையே சரணடைந்தவன். அறம் எது என்பதை எனக்கு அறிவுறுத்துக, அலைபாயும் என் மனத்தை நிலை நிறுத்துக.

(இவ்விதம் போர் புரியேன் என்று சொன்ன அர்ஜுனனுக்கு புன்முறுவல் பூத்தவாறு கண்ணன் கூறுவான்)

கண்ணன்: அர்ஜுனா, வீணாக நீ துயரப் படுகிறாய். பேச்சிலே அறிவாளி போல் உயரப் பறக்கிறாய். இறந்தவர் அல்லது இருப்பவருக்காக அறிஞர்கள் துயரப்பட மாட்டார்கள். நானும் நீயும்… இந்த அரசர்களும் இதற்கு முன்பு இல்லாமல் இருந்ததில்லை, இனியும் நாம் இல்லாமலிருக்கப் போவதில்லை. உடலுக்கு இளமையும் மூப்பும் வருவது போல், ஆத்மாவுக்கு வேறு உடல் வருகிறது. கிழிந்த துணிகளைக் களைந்து விட்டு மனிதன் புதிய துணிகளை அணிவது போல், சிதைந்த உடம்பினை நீத்து விட்டு ஆத்மா புதிய உடம்பினுள் நுழைகிறது. எனவே இறப்பிற்காக உண்மையான வீரன் கலங்கமாட்டான்;5. 6ஐம்புலன்களின் திருவிளையாடலில்..குளிர் வெப்பம், இன்பம் துன்பம் ஆகியவை தோன்றுகின்றன. இவை வரும் போகும்.. நிலைத்து நிற்பதில்லை. இந்த இன்ப துன்பங்களை எவன் சமமாகக் கருதுகிறானோ அந்த வீரனுக்கு மரணமே இல்லை.

இன்னும் சொல்வேன் குந்தியின் மைந்தா, இல்லாததற்கு இருப்புக் கிடையாது, இருப்பது இல்லாமல் போக முடியாது. உலகெல்லாம் ஊடாடி நிற்கும் ஆத்மா அழிவற்றது என்பதை அறிந்து கொள், இதை அழிக்க எவராலும் முடியாது. ஆத்மாவால் தாங்கப்படும் ஸ்தூல வடிவங்களே அழியக் கூடியவை. இவன் கொல்வான், இவன் கொலையுண்டான் என்று எண்ணும் இருவருமே அறியாதவர்கள். ஆத்மா கொல்வதும் இல்லை, கொலையுண்பதும் இல்லை, அது பிறப்பதும் இல்லை, இறப்பதும் இல்லை, அது இல்லாதிருந்து பிறப்பதும் இல்லை, அது தேய்வதும் இல்லை, வளர்வதும் இல்லை, உடல் கொல்லப்படும் போதும் ஆத்மா கொல்லப்படுவதில்லை. ஆயுதங்கள் அதை அறுக்காது, தீ அதை எரிக்காது7, நீர் அதை நனைக்காது, காற்று அதை உலர்த்தாது, அது8 அறுக்க முடியாதது‚ எரிக்க முடியாதது, நனைக்க முடியாதது, உலர்த்த முடியாதது, அது நிரந்தரமானது9, நிறைவானது, நிலையானது, உறுதியானது, முடிவற்றது, மாறுபடாதது, சிந்தனைக்கு எட்டாதது, பொறிகளுக்குத் தென்படாதது, இன்னும் என்றும் புதியது, ஆகவே அர்ஜுனா, இவ்வுண்மைகளை அறிந்து துயரத்தைக் கைவிடு.

ஒரு வேளை, இவ்வாத்மா பிறப்பும் இறப்பும் உடையது என்று நீ கருதினாலும் கூட, அதற்காக நீ வருந்துவதும் பொருந்தாது. பிறந்தவன் இறப்பதும், இறந்தவன் பிறப்பதும் நிச்சயமாக இருக்கும் போது, இதைப் பற்றி நீ வருந்தி என்ன பயன்? இதில் துன்பப்பட என்ன இருக்கிறது? உயிர்களின் துவக்கமும் முடிவும் தெளிவற்ற நிலையில் இருக்க, இடைப்பட்ட காலம் தெளிவாக இருக்கிறது. இந்த ஆத்மாவை ஒருவன் வியந்து பார்க்கிறான், இன்னொருவன் வியந்து பேசுகிறான், மற்றொருவன் வியந்து கேட்கிறான், ஆனால் யாரும் இதனை முழுமையாக அறிந்ததில்லை.

சுயதர்மத்தை எடுத்துக் கொண்டாலும், நீ அஞ்சுவது பொருந்தாது. அறப்போரைக் காட்டிலும் அரசனுக்குச் சிறந்த சுய தர்மம் இல்லை. தற்செயலாய் மூண்டிருக்கும் இந்த யுத்தம், கதவு திறந்திருக்கும் சொர்க்கம், நியாயமான யுத்தமே ~த்ரியனுக்கும் பாக்கியம்‚ இதை நீ நழுவ விட்டால் புகழை இழப்பாய், பாவத்தை அடைவாய், பயத்தால் நீ பின் வாங்கினாய் என்று பலரும் உன்னை இழித்துப் பேசுவர், பகைவர் உன் திறமையைப் பழித்துப் பேசுவர், பெருமையாகப் பேசியவர்களே அதை அழித்துப் பேசுவர், இது சிறப்பைக் காட்டிலும் இழிவானதல்லவா? இதைவிடத் துன்பம் வேறு உலகினில் உள்ளதா? போரில் நீ மடிந்தால் கிடைக்கப் போவது பொன்னுலகம், வென்றால் கிடைக்கப் போவது மண்ணுலகம், ஆகவே வெற்றி தோல்வியைச் சமமாகக் கொள், போருக்குத் துணிந்து நில், இதனால் உனக்குப் பாவம் உண்டாகாது.

அர்ஜுனா, இது வரை உனக்கு10 ஆராய்ச்சி வழியில் அறிவுரை கூறினேன்: இனி யோக வழியில் விளக்கிச் சொல்லுவேன், இந்த யோக புத்தி கர்ம பந்தங்களை நீக்கும், குற்றம் வராது காக்கும், இந்தக் கர்ம யோக முறை முழுமை பெறாவிட்டாலும், 11 வீணாகிப் போகாது, இதன் சிறு பகுதியும் கூட சம்சார பயத்தைப் போக்கும், இதில் உறுதி கொண்டவனுக்கு அறிவு ஒருமைப்பட்டு 12உயர்ந்து நிற்கும், மற்றவர் புத்தியோ கிளைவிட்டுப் பிரியும், சொர்க்கப் பயன் கூறும் வேத வாக்கியங்களில் சிலர் பற்று வைக்கிறார்கள், இவர்கள் இறுதிப் பயன் என்று சொர்க்கத்தைத் தேடுகிறவர்கள், ஆசைப் பாட்டுப் பாடுகிறவர்கள், செல்வத்தின் பின்னால் ஓடுகிறவர்கள், அதிகாரத்தை நாடுகிறவர்கள், பேச்சிலே பூப் போன்ற அடுக்குச் சொல் போடுகிறவர்கள், இவர்களின் பேச்சில் உள்ளத்தைப் பறி கொடுப்பவர்களுக்கு அறிவு என்றுமே ஒரு நிலைப்படாது.

அர்ஜுனா‚ வேதங்கள் கூறும்13 முக்குணங்களை நீ கடந்தவனாக வேண்டும்; இன்ப துன்ப இருமைகளற்று சமநிலை அடைந்தவனாக வேண்டும். ஆத்மாவை வசப்படுத்திச் சிறந்தவனாக வேண்டும்‚ அப்போது உனக்கு வேதங்கள் தேவையில்லை; பொங்கும்14 வெள்ள நீர் இருக்கும் போது, சின்னஞ்சிறு பள்ளநீர் எதற்கு?

இன்னொன்றும் கூறுவேன் அர்ஜுனா, சும்மா இருப்பதில் சுகம் காண்பது மடமை, வினை செய்வதே உன் கடமை‚ விளையும் பலா பலன்கள் உனைச் சேர்ந்தவையல்ல, பயன் கருதிக் காரியம் செய்வது பாவமானது, 15பற்றைத் துறந்து பணி செய்வதே சாலச் சிறந்தது, அதிலும் 16திறமையுடன் செயல் புரிவதே யோகம் என்பது, இது கைவரப் பெற்றவன் நன்மை தீமைகளைத் துறந்தவனாகிறான், பிறவித்தளைகளை மறந்தவனாகிறான்‚ மனிதரில் சிறந்தவனாகிறான், அறிவின் துணை கொண்டு மோகம் என்ற குழப்பத்தை அகற்றும் போது, கேட்பது, கேட்கப் போவது இரண்டாலும் நீ பற்றினை விடுவாய், அந்த அறிவை ஆத்மாவுடன் இணைக்கும் போது யோகத்தை அடைவாய்.

அர்ஜுனன்: கேசவா‚ சமாதியில் நிலைத்த புத்திமானுடைய இலக்கணம் என்ன?

கண்ணன்: ஆசைகளைத் துறந்து, தன்னிலே தானாகி, தனக்குள்ளே மகிழ்ந்தவன் நிறைஞானி ஆவான், அவனே ஸ்திதப்பிரக்ஞன்‚

அர்ஜுனன்: அவன் எப்படி இருப்பான்?

கண்ணன்: அவன் இன்பத்தில் மகிழாமல் இருப்பான், துன்பத்தில் துவளாமல் இருப்பான், ஆமை தன் அவயங்களை வேண்டும் போது ஓட்டுக்குள் இழுத்துக் கொள்வது போல், அவன் தன் ஜம்புலன்களையும் உணர்ச்சிகள் தாக்காமல் உள்ளிழுத்துக் கொள்வான்.

அர்ஜுனன்: அவன் எப்படிப் பேசுவான்?

கண்ணன்: அவன் நல்லவை நடந்தால் மகிழ்ந்துரைப்பதுமில்லை அல்லவை நடந்தால் நொந்து கொள்வதுமில்லை.

அர்ஜுனன்: அவன் எப்படி நடந்து கொள்வான்?

கண்ணன்: கொந்தளிக்கும் புலன்கள் தவமுனிவர் மனத்தையும் கொதிப்பேற்றுகின்றன. நிறை ஞானி அவற்றை அடக்கி, என்னைச் சரணடைகிறான். உணவை உண்ணாதவன் அதை ஒதுக்கி வைக்கிறான். ஆனால் அதன் சுவையை மறப்பதில்லை, பரம்பொருளைக் கண்டு கொண்டதும், அந்தச் சுவை பற்றிய நினைவும் பறந்து விடுகிறது.

இன்னும் கேள் அர்ஜுனா, பொருட்களை நினைக்கும் போது மனிதனுக்குப் பற்று உண்டாகிறது, பற்று ஆசையாய்ப் பரிணமிக்கிறது, ஆசை கோபமாய் உருவெடுக்கிறது கோபத்தால் மோகம் தோன்றுகிறது, மோகத்தால் நினைவு தடுமாறுகிறது, இத்தடுமாற்றத்தால் அறிவு கெடுகிறது, முடிவில் மனிதன் அழிந்தே போகிறான். ஆனால் புலன்களை வசப்படுத்தும் மனவேந்தன், ஆறுதலடைகிறான். அந்த ஆறுதலில் துன்பங்கள் பொசுங்கி விடுகின்றன. அதனால் அவன் அறிவு ஆத்மாவுடன் கலந்து விடுகிறது. அதே சமயம் மனம் அடங்காதவனுக்கு ஆத்ம சிந்தனை இருப்பதில்லை; ஆத்ம சிந்தனை இல்லாதவனுக்கு அமைதி இருப்பதில்லை, அமைதி இல்லாதவனுக்கு இன்பம் கிடைப்பதில்லை. அலைந்து திரியும் புலன்களை விரைந்து பின் தொடரும் மனமானது கப்பலைக் கவரும் காற்றைப் போல், அறிவை அலைக்கழிக்கிறது.

ஆகவே புலன்களை அடக்கியவன் அறிவே நிலையானது. மனிதன் தூங்கும் போது அவன் விழித்திருக்கிறான், மனிதன் விழித்திருக்கும் நேரமே அவனுக்கு இரவு. ஆறுகளின் தண்ணிரை ஆர்ப்பாட்டமின்றி வாங்கிக் கொள்ளும் 17கடல் போல் ஆசைகள் அனைத்தையும் தன்னுள் அடக்கிக் கொண்டு, அகங்கார மமகாரமின்றி நடமாடும் அவனுக்கே அமைதி சொந்தம், ஆசையுள்ளவனுக்கு அமைதி வெகு தூரம்.

இதற்குப் பெயர் தான் அர்ஜுனா பிரம்ம நிலை இதை அடைந்த பிறகு மயக்கம் என்பது இல்லை இறுதிக் காலத்திலாவது இந்நிலை அடைந்தவனுக்கு பிரம்ம நிர்வாணம் என்னும் தெய்வீக நிலை சித்தியாகும்.

(இரண்டாம் அத்தியாயம் நிறைவுபெற்றது)

1. கீதோபதேசத்தின் துவக்கம் இது தான்.

2. பண்பட்ட மனதும், சிறந்த வாழ்க்கை முறையும் எவனிடத்துளதோ அவனே ஆரியன். இது போன்று துரை, ஜென்டில்மேன், அந்தணன், சாஹிப் முதலிய சொற்கள் மேன் மக்களது பண்பைக் குறிக்கும். -சுவாமி சித்பவானந்தர்.

3. உலகில் பாவம் என்பது உண்டு என்றால் அது தான் பயமும் பலஹீனமும். இந்த ஒரு சுலோகத்தை ஒருவன் படித்தால் கீதை முழுதும் படித்த பயன் எய்துகிறான். இந்த ஒரு சுலோகத்தில் கீதையின் இரகசியம் முழுவதும் அடங்கியுள்ளது. -சுவாமி விவேகானந்தர்
4. கார்ப்பண்யம்: மனத்தின் கண் அமைந்துள்ள ஏழ்மையானது கார்ப்பண்யம் எனப்படுகிறது. பிறர் பார்த்து இரங்கி வருந்துதற்கேற்ற நிலையும் கார்ப்பண்யம். ஒரு நெருக்கடியில் மனதினுள் வருவித்துக் கொண்ட தளர்வும் துயரமும் அதன் கண் உண்டு. -சுவாமி சித்பவானந்தர்.

5. புத்தாடை உடுப்பவன் போல் மகிழ்ச்சியடைய வேண்டும். – ஸ்ரீ இராமானுஜர்
6. கண், காது, வாய், மூக்கு, மெய், இவை புலன்கள். காணல், கேட்டல், உண்ணல், உயிர்த்தல், அறிதல் என்பவை முறையே இவற்றின் செயல்கள்.

7. புகையானது சுவரைக் கரியாக்கும். ஆனால் அதனால் சூழப்பட்டிருக்கும் வெளியிடத்தைக் கரியாக்க முடியாது. – ஸ்ரீ ராமகிருஷ்ணர்

8. ஆத்மாவைப் பற்றி மீண்டும் மீண்டும் வௌ;வேறு விதமாகச் சொன்னாலாவது சம்சாரிகள் ஆத்மாவின் பெருமையறிந்து சம்சார பந்தத்திலிருந்து விடுபட முயற்சி செய்யக்கூடும் என்று பரிவுடன் கருதி, சொன்னதையே திரும்பச் சொல்லுகிறான் வாசுதேவன். – ஸ்ரீ சங்கரர்

9. கடல் இருந்தபடி இருக்க அதனுள் நீர் இடம் மாறி அமைகிறது, ஆறாக ஓடுகிறது, பனிக்கட்டியாக உறைகிறது, இது போன்றே ஆத்மாவில் மாறுதல் இல்லை, ஆதலால் ஆத்மா நித்தியமானது. – சுவாமி சித்பவானந்தர்
10. ஆராய்ச்சிக்குச் சமமான ஞானம் இல்லை, யோகத்துக்குச் சமமான பலம் இல்லை. இவ்விரண்டும் ஒன்றே என்று அறியத்தக்கது. – யாக்ஞவல்க்யர்
11. ஒரு நாள் உண்ட உணவில் அதற்கேற்ற பயன் இருப்பது போன்று, அனுஷ்டானத்திற்கு ஏற்ற அளவு யோகத்தின் பயன் உண்டு.

– சுவாமி சித்பவானந்தர்
12. தென்னை மரம்போல். – கண்ணதாசன்.
13. சத்வம், ரஜசம், தமசம் ஆகிய குணங்கள்.
14. கடலுக்கு நடுவே கிணறு எதற்கு? – கண்ணதாசன்.
அரசனுடைய காமக்கிழத்தி தெருப்பிச்சைகாரனைக் கண்ணெடுத்தும் பார்க்க மாட்டாள். – ஸ்ரீ இராமகிருஷ்ணர்.
அருட்பெருஞ்சோதி என்னும் அமுதக் கள் உண்டவன் கீழான உடல் இன்ப இச்சையில் உழன்று ஆட மாட்டான். – வடலூர் இராமலிங்க சுவாமிகள்.
15. ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள்
ஆசைப்படப்பட்ட ஆய்வரும் துன்பம்
ஆசை விட விட ஆனந்தமாமே – திருமந்திரம்.

16. சிந்தையைச் சிதறவிடும் யோகி ஒருவன் மலைக்குகையில் தியானம் செய்கிறான். கடைத்தெருவில் செருப்புத் தைக்கும் சக்கிலியன் குவிந்த மனத்துடன் திறம்படத் தன் தொழிலைச் செய்கிறான். இவ்விருவரில்
சக்கிலியனே கரும யோகத்தில் சிறந்தவன்.
– சுவாமி சித்பவானந்தர்

17. கடலைக் கலக்கிச் சேறுபடுத்த யாராலும் முடியாது. முனியின் நிறை மனது கலங்கிய மனது ஆவதில்லை. சாந்தம் அல்லது ஜீவன் முக்தி என்ற பெருநிலையும் அவனுக்கே உரியது. – சுவாமி சித்பவானந்தர்


(காலஞ்சென்ற திரு எஸ் மெய்யப்பன் உலக மக்கள்தொகைத் திட்டத்தின் உறுப்பினராய் தமிழ் நாட்டு அரசுப் பணியில் இருந்தவர்.சௌடீஸ்வரி மலர் என்ற மாத இதழின் ஆசிரியராய் இருந்தவர். )

Series Navigation

எஸ் மெய்யப்பன்

எஸ் மெய்யப்பன்