An open letter to Pujyasri puuvaraswanaar !

This entry is part [part not set] of 35 in the series 20070705_Issue

புதுவை ஞானம்


An open letter letter to Pujyasri puuvaraswanaar !

பெருமதிப்பிற்குரிய பூவரசனார் அவர்களின் திவ்வியசமூகத்திற்கு,
அனந்த கோடி நமஸ்காரம் !
இந்தப் பணிவு எந்த வகையிலும் போலியானதல்ல நான் நம்பும் அன்னையின் பேரில் ஆணையாக!

பாரதிதாசன் எதிர் வீட்டில் குடியிருந்ததாலும் அறிஞர் அண்ணா போன்ற மக்கள் தலைவர்களின் பழக்கத்தினாலும் மத்திய தர பொதுப்புத்தியினால் நீங்கள் ‘மலர் மன்னன்’ என உங்களை அழைத்துக் கொண்ட போதிலும் பாட்டாளி வர்க்கப் பொதுப்புத்தியில் நான் ஒரு வகையில் அதே பொருள் கொண்ட ‘பூவரசன்’ என விளிக்கிறேன். எந்த மொழியில் எந்தப் பெயரில் அழைதாலும் ‘ரோஜா ரோஜா தான் அரவிந்தம் அரவிந்தம் தான்” அல்லவா?

நீங்கள் திண்ணையில் தொடர்ந்து எழுதி வருவதனைப் படித்துப் படித்து ஒரு மிதமான குடிகாரனாகிய நான் மொடாக்குடியன் ஆகிவிட்டேன். எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான் படித்தவன் பாட்டைக் கெடுத்தான் என்றவாறு ! மெதையும் படிக்கவோ மொழி பெயர்த்துப் பகிர்ந்து கொள்ளவோ சக்தியற்றவனாகி விட்டேன் ! பல ஆண்டு காலம் இலக்கியம் படித்ததில் ‘அவனவன் பக்குவத்திற்கேற்ப தான் ஒரு படைப்பை உள்வாங்கிக் கொள்கிறான்’ என்பது எனது புரிதல் ! என் பேரிலும் தவறு இருக்கலாம் தானே ! அரவிந்தரை விட நீங்களோ நானோ உண்மையில் இந்தியக் கலாச்சாரத்தில் பற்றும் பரிவும் கொண்டவர்கள் ஆகிவிடமாட்டோம் !

கடல் கடந்து இந்து மதம் பரவியதில் பிராமணர்களுக்கு எந்த பங்கும் இல்லையென எளியேனுக்குத் தோன்றுகிறது. அது அழிந்ததிலும் அவர்களுக்குப் பங்கில்லை.’யுகதர்மம்’ என்பதும் இந்து மதத்தின் பாற்பட்டதே ! ஒரு காலத்தில் இந்துவாயிருந்தவனே பின்னொரு காலத்தில் பெளத்தன், அவனே இன்னொரு காலத்தில் மொகமதியன், பிரிதொரு காலத்தில் கிருத்துவன் இப்படியெல்லாம் சலுகைக்காக மதம் மாறியவர்களை உங்களுக்கே தெரியும் தானே ? புதுவையின் ‘பெரிய பாப்பாரத்தெரு என்னும் நீடராஜப்பையர் தெருவில் இன்னும் உயிர்த்திருக்கும் பார்ப்பனர்கள் எத்தனை பேர் ?’ அந்த ஊரில் இருக்கும் மாதா கோயில்களில் தேடியும் பார்க்க முடியும் , .திரு.பிரபஞ்சன் போன்ற உள்ளூர் பிரமுகர்களும் ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பும் ஆண்டவர் சாட்சியாக வந்து நிற்பர்.

எனவே ‘சம்பவாமி யுகே யுகே’ என பார்ப்பனர்கள் மதம் மாறுவார்கள், சலுகை மட்டுமல்ல அதிகாரத்தில் பங்கு தேடுவார்கள் என்பது சரித்திரம் படித்த அனைவருக்கும் தெரியும்! நீங்கள் ஏன் அநாவசியாகப் புலம்பி என்னைப் போன்றவர்களை மொடாக்குடிய்ன் ஆக்க வேண்டும் ? இறையருள் எல்லாம் கூட்டுவிக்கும் தடுத்தாட்கொள்ளும் ! யுக தர்மம் வெல்லும் !

அன்புடன்,
புதுவை ஞானம்.


j.p.pandit@gmail.com

Series Navigation