குழந்தை…

This entry is part of 47 in the series 20040624_Issue

ந.வீ.விசயபாரதி(சிங்கப்பூர்)


0
பொம்மையைக் கண்டாலே
பொக்கைவாய் பூப்பூக்கும்
உயிர்ச்செடி.
0
இதழுடுக்கின் ஈறுகளால்
மனம் மயக்கும்
மானுட மலர்.
0
மறக்கப்போகும் சிரிப்பையெல்லாம்
அரக்கப் பறக்கச் சுரக்கும்
அரும்பு.
0
தங்கக்கொலுசொலிக்கும்
தகரக் கிலுகிலுப்பைக்கும்
வேறுபாடறியாத வெண்மனம்.
0
ரோசா செய்யும் போது
குழந்தை செய்த கடவுளின்
ஞாபக நகல்.
0
visayabharathy@yahoo.com

Series Navigation