நான்…….?

This entry is part of 34 in the series 20070621_Issue

ஆதிராஜ்


சல்லடை சொன்னது “நான்
சலிப்பதனால் மக்கள்
சாப்பிடுகின்றனர்!”

‘பொ’க்கெனச் சிரித்தது முறம்! “நான்
புடைத்தபின் தானே?
பொங்குது சோறு?”

“அற்பரே எங்களை
அறியீரோ” என
ஆர்ப்பரித்தது நெருப்பு!
அடுப்பும் அதையே
ஆமோதித்தது!

பூமி மௌனமாய்ப்ப்
புன்னகை செய்தது!
பசியோ ம¨றைவாய்ப்
பணியைத் தொடர்ந்தது!

– ஆதிராஜ்

Series Navigation