முகம்

This entry is part of 47 in the series 20050120_Issue

ம.நவீன்


ஐந்தாவது முறையாக
கழட்டி வைத்து
மற்றதை எடுத்து மாட்டியபோது
அலமாரிக்குள் இருந்து சிரித்தது
இன்றைய
இரண்டாவது முகம்!

அதிகமாக அடுத்தவர்களிடம்
பல் இளித்த களைப்பில்
இன்னும் உரக்கத்தில் இருந்தபடியால்
முதல் முகத்துக்கு தொந்தரவில்லாமல்
கதவடைக்கும் நேரம்
இன்னும் என் கழுத்துக்குமேல்
இருக்கும் நினைவில்
பழையபடி கோபத்தில் கத்த தொடங்கியது
மூன்றாவது !

இப்போது புதிதாய்
எடுத்து அணிந்துக்கொண்ட
‘வெள்ளை ‘ முகம்
ஆள்காட்டி விரலை இழுத்து
‘உஷ் ‘ என கடமையை தொடங்க
ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருந்து
திடுக்கிட்ட நான்காவது
சுதாகரித்தபடி
விட்டு வைத்த காதல் வசனத்தை
தொடங்கியது!

உறங்கும்போது மட்டுமே
பயன்படும் உண்மைமுகம்
இதில் எது ‘தான் ‘ என்ற குழப்பத்தில்
இன்னும்!

ம.நவீன், மலேசியா.

Series Navigation