முகம்

This entry is part of 45 in the series 20030302_Issue

பத்மாசினி


முகமூடிகளைக்
கழட்டியும், மாட்டியும்
பின் மாற்றியும், மாட்டியும்
இருந்ததில்…முகம் மறந்து போனது.

முகத்தை மீட்டெடுக்க
கழட்டிய முகமூடியைப் போடாமல்
முகத்தைத் தேடிய போதுதான்
தெரிந்தது…முகம் தொலைந்திருந்தது.

padmasini2003@yahoo.com

Series Navigation