வைரமுத்துக்களை விழுங்கிய ஒரு சுனாமி.

This entry is part [part not set] of 64 in the series 20050113_Issue

கவிஞர்பவளமுத்து.


சுனாமி என்றவுடன்
சுள்ளென்று
பேப்பரும் பேனாவுமாய்
பிணங்களை சொற்களாக்கி
சிதையடுக்க வந்த
கவிஞர்களிடையே
உயிரெழுத்தோடு
ஒரு கவிதை கொண்டுவந்த
கவிச்சக்கரவர்த்தி
விவேக் அவர்களே!
வைரமுத்துக்களையும்
விழுங்கிவிட்ட சுனாமியே!
உங்களுக்கு எங்கள்
உள்ளம் அவிழ்ந்த பாராட்டுகள்.
குமுதம் 17-01-05 இதழில்-
பொங்கல் மலர் IV ல்
நாங்கள் வியந்து போனோம்.
இந்த விவேக்கில்
எத்தனை விவேக்குகள்
இதழ் விரித்தன!

சினிமாவின்
இசை அமைப்பாளர்கள் எனும்
சடையப்பவள்ளல்கள் இல்லாமலேயே
கடைவிரித்து….இந்த
கடலின் மூக்கை உடைக்க வந்த
கவிப்புயலே!
கம்பர்கள் வேண்டுமானால்
ராமர்களைப்பாடி
பாராயணம் செய்திருப்பார்கள்.
கடல் அரக்கன் ராவணனை
உன் பேனா அம்புகள்
தாக்கியத்தில்
போர் நாகரிகம் தெரிந்திருந்தால்
அவன் அந்த
கடலுக்குள்ளேயே மூழ்கி
தற்கொலை செய்திருக்க வேண்டும்!
படையப்பாக்கள் கூட
பதுங்கிப்போனார்கள்
சில லட்சங்களை வீசிவிட்டு.
அந்த லட்சங்களிலும்
மூழ்கிப்போகாத
கவிதைகளின்
லட்சத்தீவுகள் அல்லவா
உன் கவிதை.

உன் கவிதையைப்
படித்த பிறகு
சில சினிமாக்கவிஞர்களுக்கும்
‘இனிமா ‘ கொடுத்தது போல்
இருக்கும்.
ஒரு சிரிப்பு நடிகனுக்குள்
ஆவேச எரிமலையின்
எரிப்பு அலைகள்
எப்படி பிறந்திருக்கும் ?
என்று இவர்கள்
மண்டை காய்ந்து கொள்ளட்டும்
கவலை இல்லை.
சிரிப்பதற்காக காட்டப்படும்
கார்ட்டுன் படங்களில்
எரிமலைகள் கூட
சிரிப்பைத்தான் வரவழைக்கும்.
விவேக் அவர்களே!
உங்கள் வரிகளின் சோகம்
அந்த பூகம்பங்களின்
அடிவயிற்றையே
கலங்கடித்தன.
விவேக் என்றவுடனே
சிரிப்போடுதான்
இந்த கவிதையை
படிக்க ஆரம்பித்தோம்.
ஆனால்
நாங்களும்
‘கண்ணீருடன் ‘ முடித்தோம்.

‘கரை வரை வா!
எங்கள் உயிர் வரை
வேண்டாம் ‘
இந்த வரிகளை
ஊனும் உயிரும்
உருகிக்கேட்பதற்காக
உயிர் இழந்து கிடக்கும்
இவர்களூக்கும்
உயிர் வந்திருக்கும்.
எதற்கும்
அந்த பிண அறைகளை
சோதித்து விடுங்கள் !

விருது வழங்கும் நிறுவனங்களே!
புகழ்பெற்ற சிலைகள்மீதும்
மற்றும் பிரபலங்கள் மீதும்
எச்சமிடும்
வெறும் காக்கைகளா
நீங்கள் ?
அப்படியும்
பறந்து திரிந்து போக
சோம்பல் பட்டு
ஒரே இடத்தில்
அஞ்சாறு தடவை
எச்சமிட்டு கும்பாபிஷேகம் நடத்தும்
வேடிக்கை இனி வேண்டாம்.
கொச்சைப்படுத்தியது போதும்.
மிச்சம் வையுங்கள்
கொஞ்சம் விருதுகளை.
இந்த மகாக்கவிஞன்களுக்கு!

எனக்கு விருதா ?
என்று
விருதாக்களாய்
ஆகிப்போனஅவலங்களும்
நடந்ததுண்டு.
நரைத்த பிறகும்
உடல் உதிரப்போகும்
பக்குவம் வந்தபிறகுமே தான்
விருது
என்று ஒரு நூல் பிடித்திருப்பீர்கள்.
அப்போது
நீங்கள் அனுப்பிய விருதுகள்
காலியாகிப்போன
அந்த சாய்வு நாற்காலிகளுக்கோ
இல்லை
அந்த சாம்பல் வனங்களுக்கோ தான்
போய்ச்சேரும்.
விருது வழங்கும் இந்த சுறுசுறுப்புக்கு
விருது வழங்கும் உங்களுக்கே
ஒரு விருது வழங்கவேண்டும்.

டில்லியே.
இப்படி வியாபாரம் பேசும்
‘விருது ‘ நகராக
மாறிப்போய்விடவில்லை நீ
என்பதற்கு சான்றாக
இந்த ஆண்டு
இந்தக்கவிஞனுக்கு
விருது வழங்கு!
கவிஞர் பவளமுத்துக்களின்
கனமான பரிந்துரை இது.

குமுதத்துக்கும்
சில சமயங்களில்
ஞானம் வருவதுண்டு.
நடிகர் விவேக்கிற்கு.
அப்படியொரு
குமுதம் கொடுத்த
ஞானபீட விருது இது!

கவிஞர் பவளமுத்து.

epsi_van@hotmail.com

Series Navigation

கவிஞர்பவளமுத்து.

கவிஞர்பவளமுத்து.