கவிதை 2

This entry is part [part not set] of 64 in the series 20050113_Issue

வா.மணிகண்டன்


1.
மரத்தில் இருந்து உதிரும்
பழுத்தயிலையொன்று
நினைவில் வருகிறது.

‘ஒண்ணுமில்லையே ‘
என்ற பிரம்மாண்ட
சொல்லில்
உண்ர்த்தப்படும்
உன் எளிய
ப்ரியத்தில்.

2.
விறைத்த
பிணத்தின் அசையாத
விழிகளென
இந்த குளத்தின்
ஆழத்தில் கிடக்கின்றன.

இருவரும்
பேசி கரைத்த
சொற்கள்.

வா.மணிகண்டன்

kvmanikandan1@yahoo.co.in

Series Navigation