சொன்னார்கள்

This entry is part of 26 in the series 20050923_Issue

சொதப்பப்பா


‘பாகிஸ்தானைத் தனிமைப்படுத்திப் பார்ப்பது தவறு. பாலியல் பலாத்காரம் எல்லா நாடுகளிலும் நடக்கிறது. அமெரிக்கா, பிரிட்டன், ஃபிரான்ஸ் போன்ற நாடுகளிலும், எல்லா இடங்களிலும் பாலியல் பலாத்காரம் நடக்கிறது என்ற செய்திகளை நான் பார்க்கிறேன். பாகிஸ்தானில் உருவாகியுள்ள கலாசாரம் பற்றி நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். இது பாகிஸ்தானில் பணம் பண்ணும் ஒரு வழியாகிவிட்டது. கற்பழிக்க அனுமதித்தால், லட்சக்கணக்கில்பணம் பண்ணலாம், கனடாவிற்கு சுலபமாய் விசா கிடைக்கும் என்று சொல்கிறார்கள். ‘

( ‘You must understand the environment in Pakistan. This has become a money making concern. A lot of people say if you want to go abroad and get a visa for Canada or citizenship and be a millionnaire, get yourself raped. ‘ )

பாகிஸ்தானின் ராணுவ சர்வாதிகாரி பர்வேஸ் முஷரஃப்


‘அதிமுக அமைச்சர்கள் அனைவரும் அடிமைகள், கோழைகள், பதவியில் இருந்தால் போதும் என்று பணிந்தே கிடக்கிற பிறவிகள் என்று கூறுவது , நம்மால் நமது அமைச்சரவையை இப்படி நடத்த முடியவில்லையே என்ற ஆதங்கத்தைத் தீர்த்துக் கொள்ள மற்ற முதல்வர்களுக்கு உதவலாம். நம்மைப்போன்ற விமர்சகர்களின் கிண்டலுக்கும் இதில் தீனி கிடைக்கலாம் . ஆனால் இந்த கட்டுப்பாடு பிரமிப்புக்குரிய ஒரு விஷயம் தான் என்பதை ஒப்புக் கொள்ளாமல் இருக்க முடியாது. ‘

துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோ


‘பெரியார் காட்டிய வழியில் முடிந்த அளவு சென்று கொண்டிருக்கிறோம். ‘

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ்


‘ஆண்பாதி – பெண் பாதி என்னும் அர்த்தநாரீசுவர தத்துவத்தை ஆகாயமளவப் புகழ்கிறவர்கள், பெண்களுக்கு 50 சதவீதம் அல்ல – 33 சதவீதமாவது இடஒதுக்கீடு தரவேண்டும் என்ற கோரிக்கையை ஆதரிக்க முன்வரக்கூடாதா ? இக்கோரிக்கைக்குப் பேராதரவு தரவேண்டியது பெண் வயிற்றில் பிறந்தோரின் கடமை. ‘

கருணாநிதி


‘தலித் கிறுஸ்துவர்களுக்கு முன்னுரிமை தரமறுப்பதற்குச் சொல்லப்படும் வழக்கமான காரணம் கிறுஸ்துவ மதத்தில் சாதி இல்லை என்பதாகும். இது சரிதான். கிறுஸ்துவ மதம் சாதி பாகுபாட்டைப் பிரசாரம் செய்வதில்லை. ஆனால் இந்தியாவில் நிலைமை வேறு. தொட்டிலில் தொடங்கி, சுடுகாடு வரையில் சாதி அமைப்புக் கோலோச்சுகிறது. மதமாற்றம் சமூகப் பொருளாதார நிலையை மாற்றுவதில்லை. சமூகப் புறக்கணிப்பும் அவர்கள் எங்கு போனாலும் தொடர்ந்து அவர்களைத் துன்புறுத்துகிறது. ஹிந்து தலித், கிறுஸ்துவ தலித் என்ற பாகுபாடு இல்லாமல் அவர்கள் மீது கொடுமைகள் தொடர்கின்றன…தலித்களுக்குக் கிடைக்கவேண்டிய சலுகைகளை ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு மட்டும் எனக் கட்டுப்படுத்துவதன் மூலம் தலித் சமூகத்தினரை மதரீதியாய்ப் பிரிக்கிறது இந்தச் சட்டம். சமூகப் பொருளாதாரப் பின்னடைவு முன்னுரிமைக்கு அடிப்படை இல்லாமல், மதத்தையும் சாதியையும் இணைத்து, அதுவே பிரசினை என்று சட்டம் கருதுகிறது. ‘

சென்னை-மயிலாப்பூர் ஆர்ச்பிஷப் மற்றும் கத்தோலிக் பிஷப் கான்பெரன்ஸின் இந்திய தாழ்த்தப்பட்ட மக்கள், மலைவாசிகள்ம் பிற்படுத்தப் பட்டோர் கமிஷனின் தலைவர் டாக்டர் ஏ எம் சின்னப்பா, கமிஷனின் தேசீயச் செயலாளர் ஏ ஃபிலோமின் ராஜ்.


‘இது எனக்குக் கிடைத்த மட்டும் கிடைத்த வெற்றி அல்ல. எழுத்து சுதந்திரத்துக்குக் கிடைத்த வெற்றி. இந்தியாவில் சட்டத்தின் அடிப்படையிலான ஆட்சி இருப்பதன் நிரூபணம் இது. ‘

டாக்டர் தஸ்லீமா நஸ்ரீன்

கொல்கத்தாவில் டாக்டர் தஸ்லீமா நஸ்ரீனின் ‘த்விகண்டிதோ ‘ (இருகூறுகளாக்கப்பட்டது) என்ற நாவலை இடதுசாரி அரசாங்கம் தடை செய்திருந்தது. நீதிமன்றம் இந்தத் தடையை இப்போது ரத்து செய்துள்ளது.


Series Navigation