யார் வீரன்…. ? ஜெயந்திரர் நிலை.

This entry is part [part not set] of 64 in the series 20050113_Issue

வரதன்


நாம் முன்பே சொல்லப்பட்டது போல் சங்கரமடத்தில் தவறுகள் நடந்திருந்தால் அதற்கு ஜெயேந்திரர் முழு பொறுப்பு ஏற்று பாவபிராயச்ச்ித்தம் செய்தல் வேண்டும்.

அதில் மாற்றமில்லை.

ஆனால், குற்றம் சுமத்தப்பட்டு பல மாதங்கள் ஆயினும் வழக்கு சும்மா சொதப்பலாகத்தான் நகர்கிறது.

முதல் காலகட்டங்களில் எல்லோராலும் வெறுக்கப்பட்ட ரகு & கம்பெனி கண்டுகொள்ளாமல் விடப்பட்டதும் ஆனால் தற்போது ஜெயேந்திரர் விடுதலை தொடர்பாக அவர்கள் உள்ளே தள்ளப்பட்டதும் ஏனோ சரியாகப்படவில்லை.

அதிலும், ஜெயேந்திரர் தமிழ்நாட்டில் தங்கக் கூடாது எனும் வாதம் ஏற்புடையாதில்லை.

அப்படியானால் இது தமிழகத்தில் குற்றச்சாட்டுகளில் ஜாமீனில் வெளிவந்திருக்கும் அனைவருக்கும் பொறுந்துமா என்பது பற்றி அரசு தான் சொல்லவேண்டும்.

ஜெயெந்திரர் மீதோ, சங்கரமடம் மீதோ, பொருளாதார துஷ்பிரயோக வழக்குகள் இல்லாத பொழுது, அரசு அவர்களின் வங்கிக் கணக்கை முடக்குவது சரியான நடவடிக்கை இல்லை.

எந்தக் காரணமாக இருப்பினும் தற்போது, சுனாமி பாதிப்புப் பகுதிகளுக்கு ஜெயேந்திரர் பணியாற்றும் திட்டம் இருப்பதாக செய்திகள் வரும் வேளையில் அரசின் இந்த நடவெடிக்கை ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.

ஆனால், இது எதிர்மறை விளைவுகளைத் தான் தமிழகத்தில் ஏற்படுத்தப்போகிறது.

எப்படி முந்தைய கால அணுகுமுறையால், காலம் காலமாக தி.மு.க-விற்கு எதிர்த்து வந்த இந்து , பிறாமணர்கள் களம் மாறி திமுக-விற்கு வாக்களித்தார்களோ அது போன்ற ஒரு காலம் கட்டம் வரப்போகிறது.

திமுக கட்சியில் நேரிடையாக பிறாமணர்கள் பதவி வகிக்காத போதும், பல பிறாமணர்கள் திமுக சார்பு தொழில் நிறுவனங்களில் முடிவெடுக்கும் அதிகார, ஆலோசனை நிலையில் தற்போது இருக்கின்றனர்.

கலைஞருக்கும் எதிர்ப்பு காட்டுதலின் எல்லைக் கோடு தெரியும்.

ஜெயேந்திரரும், தாழ்த்தப்பட்டவர்களின் முன்னேற்றம் , பிற ஜாதியினரின் முக்கியத்துவம் அறிந்த அவற்றை ஜனகல்யாண் அமைப்பின் மூலம் நடைமுறைப்படுத்தியிருப்பதால்,

தற்போது நடக்கும் செயல்கள் கலைஞரும்- சங்கராச்சாரியாரும் நெருங்கிவரும் நிலை ஏற்படுத்தும்.

ஆன்மீகச் சேவையே உன்னத நிலை என்ற நிலைப்பாடு இருப்பின், திமுக -வின் புதிய நிலைப்பாடு காலத்தின் கட்டாயம் ஆகும்.

விரைவில் இது மாதிரியான சூழல் தமிழகத்தில் ஏற்படும்.

ஜெயேந்திரரும் தற்போது ஆர்.வி, சேஷன் போன்றவர்களின் சுயரூபம் உணர்ந்திருப்பார்.

இழப்பதற்கு அஞ்சாதவனும், இழப்பதற்கு எதுவுமே இல்லாதவனும் தான் நல் தலைமை கொண்டவராக வர முடியும்.

தற்போது இரண்டுமே ஜெயேந்திரரிடம் இருக்கிறது.

கொண்டநிலையில் ஒருமுகத்தன்மையுடனும், தனக்கென்ற அரசியல் அமைப்பை நல்ல படி காத்தும் திமுக வருகிறது.

சில கருத்துகளில் பெருவாரியாக திமுக-வுடன் எதிர் நிலை கொண்டவர்களுக்கு ஜெயேந்திரர் ஒரு நல் தலைமையாக அமைய முடியும்.

எதிர் அணியில் இருப்பினும் நாகரிமான உறவுமுறயை திமுக – ஜெயேந்திரரால் கடைபிடிக்க முடியும்.

அதனால்,

ஜெயேந்திரை அழைப்போம் – அரசியல் களம் புகுங்கள் என்று. திமுக-விற்கு மாற்றாக களத்தில் நில்லுங்கள் என்று.

பல வருடங்களாக, ஒரு ஆன்மீகத்தலைவர் தான் அடுத்த அரசியல் புரட்சிக்கு தமிழகத்தில் காரணமாக இருப்பார் என பலர் ஆருடம் கூறி வருகிறார்கள்.

அது நீங்கள் தான் என இருக்கலாம்.

பாதபூஜை நடத்தப்பட்ட நிலையில் இருந்த உங்களுக்கு, ஜெயில் வாசமும் அவமானமும் ஒரு நல்ல மனநிலையை உங்களுக்குத் தந்திருக்கும்.

அது தந்த சக்தியை, ஆக்கப்பூர்வமான பணிக்குச் செலுத்துங்கள்.

இறைவன் வெளியேறிய பின் கோவில் வெறும் கட்டடம் தான். அதுபோல் தான் நீங்கள் வெளியேறிய காஞ்சிபுர சங்கரமடமும்.

உங்களின் ஜனகல்யாண் அமைப்பின் மேல் நம்பிக்கை இருக்கிறது. அள்ளித்தர உலகமெங்கும் நம்பிக்கையுள்ள உள்ளங்கள் இருக்கின்றன.

ஆண்டிகளின் மரியாதை வங்கி கணக்கிலல்ல. மனங்களின் கணக்கில் .அது நிறையவே உங்களுக்காக உலகெங்கும் இருக்கிறது.

வாருங்கள்… என உங்களை வரவேற்கிறோம்…!!

வரதன்

varathan_rv@yahoo.com

Series Navigation

வரதன்

வரதன்