தெளிவு

This entry is part [part not set] of 43 in the series 20051028_Issue

தேவமைந்தன்


ஏதேதோ சாப்பிடுகிறோம். ஏதேதோ குடிக்கிறோம். எங்கெங்கோ போகிறோம். யார்யாருட

னோ என்னஎன்னவெல்லாமோ பேசுகிறோம்; சிரிக்கிறோம்; புண்படுகிறோம்; சந்தோஷப் படுகிறே

ாம்; வருந்துகிறோம்; புண்படுத்துகிறோம்; சந்தோஷப்படுகிறோம்; வருந்துகிறோம்… இன்னும் செ

ால்லிக்கொண்டே போகலாம். பல சிக்கிக்கொள்ளுதல்கள்[commitments]. பற்பல உடன்படுதல்கள்

[involvements]. பல வாக்குறுதிகள்; கொடுத்தவற்றை நமக்கே நாம் வகுத்துக்கொள்ளும் பாணியில்

மீறி, ‘அப்பாடா ‘ என்று நிம்மதியடைதல்கள். பிறகு தூங்குகிறோம்; நிம்மதியாகவா ? இல்லை, பக

ல்நேர வாழ்க்கையைவிடவும் அபத்தம் மிகுந்த கனவுகளோடு. ‘ ‘உங்கள் நண்பர்கள் யார்யார் என்று

காட்டுங்கள்; நீங்கள் யாரென்று சொல்லிவிடுகிறேன்! ‘ ‘ என்பது பழையது. ‘ ‘உங்கள் கனவுகள் எை

வஎவை என்று சொல்லுங்கள்; நீங்கள் யாரென்று சொல்லிவிடுகிறேன்! ‘ ‘ என்பது புதியது. நாம் வா

சிக்கும் புத்தகங்கள் என்று ‘இல்லாத ‘ பட்டியலைக் கொடுத்து, தப்பிவிடலாம். கனவுகள் விஷயத்தில்

இது நடக்காது. கண்களே காட்டிக்கொடுத்து விடும்.

சந்திக்கும் உங்கள் நண்பர் ஒவ்வொருவரிடமும் கேட்டுப்பாருங்கள். ‘தெளிவு என்றால் எ

ன்ன ? கொஞ்சம் சொல்லுங்கள்! ‘ என்றுதான். எத்தனைவகை ‘வியாக்கியானங்கள் ‘ வரும்; பாருங்க

ள். என் ஊரில் பெரியவர் ஒருவரிடம் இதை நான் கேட்டேன், பல ஆண்டுகளுக்கு முன். அவர்

பெயர் வேடிக்கையானது. ‘பேயன்பழத் தாத்தா. ‘ இயற்கை மருத்துவர். எந்த நோய்க்கும், மோ

ட்டுவளை பார்த்து ஏதேதோ முணுமுணுத்துவிட்டு பேயன்பழம் ஒன்று தருவார். பலபேருக்கு கு

ணமாயிற்று. ‘கைவசம் புண்ணியம் போதாதவர்கள், ‘ மேற்காலிருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நி

லையத்துக்குப் போவார்கள். இன்னும் போதாதவர்கள், அங்கிருந்து ஜி ஹெச் ‘ச்சுக்கு; மேலதிகம் ே

பாதாதவர்கள், மேலே, மேலே-மேலே! – இது அவர் ‘பாஷை. ‘ ‘மொழி ‘என்று திருத்த முடியாது.

ஒருமுறை பண்டிதர் ஒருவர் அவரிடம் மாட்டிக்கொண்டு பட்ட பாடு… ‘ ‘பாடையிலே போறவனே! ‘ ‘

என்று திட்டு வாங்கினார். அவர் செய்த தப்பு, பாஷை என்று சொல்லக்கூடாது[ ‘ ‘பாடையென்றல்ல

வோ அறைதல் வேண்டும் ?] என்று அறிவுறுத்தியதுதான். இன்று என்றால் மொழி என்று சொல்லித்

தப்பித்து இருந்திருப்பார். சரிதான்.

‘பேயன்பழத் தாத்தா ‘ தனக்கென்று திட்டவட்டமான முடிவுகளையும் முடிபுகளையும் வைத்தி

ருந்தார். ‘ ‘தெளிவு ‘ன்னா இன்னா ‘ன்னுதா ‘ன கேட்ட ? ‘ ‘ என்று சொல்லிவிட்டு ஜாதிக்காய்ப் பெட்டி

ஒன்றைத் திறந்தார். உள்ளே திருநீறு மணக்கும் பழைய புத்தகம். ‘திருமந்திரம். ‘ ‘ ‘பிரி, அந்த

139ஆம் பாட்டெ.., ஆங்ங்.. பட்டுக்கயிறு சாத்தி வச்சிருப்பன் ‘ல..அந்தப் பக்கத்த எடு… ‘ ‘ அவர்

பேசியது இன்னும் என் செவிகளில் ‘ரீங்காரம். ‘ இசையான மொழி.[ ‘இசை ‘ன்னு சொன்னாலே பயமா

இருக்கு.. ‘இசைஞானி இளையராஜாவின் திருவாசகம் ‘ என்றே பலர் பேசுகிறார்கள். சிலர் வை

லயெழுதுகிறார்கள்]…. வாசித்துக் காட்டச் சொன்னார்; வாசித்த முறை திருத்தினார்.. ‘ ‘ஆங்..பாட்ட

ல் ‘லாம் இப்ப் ‘டிப் படிக்கக் கூடாதெ…திருத்தமா, ஒப்புராவா ஓசை நிரவி படி! ‘ ‘

‘ ‘தெளிவு குருவின் திருமேனி காண்டல்

தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்

தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்

தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே ‘ ‘

படித்தேன். பொருள் கேட்டேன். எனக்கு அப்பொழுது பன்னிரண்டு வயதிருக்கும்.

ஒருமாதிரி மருமமாக சிரித்தார். ‘ ‘பொருள் சொல்ல் ‘றதா..சொன்னா விளங்காது.. நீயா படி..

ஒவ்வொரு ‘தாட்டி ‘யும் படி.. ஒவ்வொரு வயசி ‘லயுந்தான்.. புதுசு புதுசா விளங்கும்.. ஒவ்வொருத

ீவாளிக்கும் பொங்கலுக்கும் உனக்கு புதிசு புதிசாத் துணியெடுத்துத் தர்றாங் ‘கல்ல.. அதுமாதிரி ‘குரு ‘

ஒனக்கு ஒவ்வொரு ‘தாட்டி ‘யும் புதிசு புதிசா பொருள் விளங்க ‘றமாதிரி தருவார்.. ‘ ‘ என்றார்.

‘ ‘தாத்தா! குரு ‘ன்னா வாத்தியாரா ? ‘ ‘ – கேட்டேன்.

‘ ‘ம்ம்..அப் ‘டியும் வச்சுக்கோ.. ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு குரு… ‘ ‘ என்று முனகலாகப் ே

பசினார். கண்களில் ஆழமாகப் பார்த்துவிட்டு சொன்னார்: ‘ ‘பசுவதீ! இதெல்லாம் ‘டக் ‘க்னு எடுத்து

முன்னால வைக்கற சமாச்சாரமில்லப்பா.. ஒன் வாழ்க்கையில..அட என்னாப்பா..ஒவ்வொருத்தவங்க

வாழ்க்கை ‘ல அடிபட்டு அடிபட்டு தெளிஞ்சுக்கறபோது அப்பப்ப வருவதுதாம் ‘ப்பா தெளிவு..

அட..ஒஞ்சாமி மட்டுமில்ல..ஒனக்கு அது தந்து இருக்கிற வாழ்க்கை ‘லே ஒவ்வொரு ‘தாட்டி ‘யும் நீ

வுழுந்து எழுந்து தெரிஞ்சுக்கிற பாரு..அதுதான் குரு.. அதென்னவோ..ஒரு உபநிசத்து ‘ங்கறாங்

க..அதுல சாமி, ஆசாமி ‘ல இருந்து வேசி வரி ‘ல..அது என்னமோப்பா இருவத்தாறு இருவத்தேழு

குரு எனக்கு ‘ன்னு சொலவம் வருதாம் ‘ல…. ‘ ‘

எனக்கென்னவோ ‘பேயன்பழத் தாத்தா ‘ எனக்கு அதன் நேர்பொருள் சொன்னதாகத் தெரி

யவில்லை. ஒருசமயம் அவர்க்கும் அது விளங்கவில்லையோ என்னவோ ?

ஆனால் ‘இரசமணி ‘ என்றும் ‘ ‘அது குருகுலக் காலம் ‘ என்றும் ‘ ‘கு ‘ என்றால் இருள்; ‘ரு ‘ எ

ன்றால் நீக்குதல் ‘ ‘ என்றும் சொல்லி மேலும் குழப்பாமல், தனக்குத் தெரிந்த பொருளை நேர்மையா

கச் சொன்னாரே….

அதுவே ஒரு தெளிவுதான்.

****

pasu2tamil@yahoo.com

Series Navigation

தேவமைந்தன்

தேவமைந்தன்

தெளிவு

This entry is part [part not set] of 59 in the series 20031106_Issue

ஜெயந்தி சங்கர் -சிங்கப்பூர்


வருடங்கள் பல உருண்டும் மருத்துவமனையில் சிறிது நேரம் இருக்க நேர்ந்தாலும், என் எண்ணங்கள் ஆச்சரியமான நாலு கால் பாய்ச்சலில் பதினைந்து வருடங்கள் பின்னோக்கி ஓடிவிடுகின்றன ! அப்போதும் இதே டான் டோக் செங் மருத்துவமனையில் தான் பிரகாஷ் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தான். அப்போதும் இதேபோல பிரவீணா தான் என் முகத்தையே பார்த்தவண்ணம், தம்பியைப் பற்றிய கவலையை முகத்தில் அணிந்து என் அருகில் உட்கார்ந்திருந்தாள். கும்பிட்ட தெய்வங்கள் மட்டும் என்னக் கைவிடவில்லை. பிழைத்து எழுந்து மறுதினமே தம்பி பார்த்திபனுடன் வீட்டில் விளையாட ஆரம்பித்து விட்டான். தனியாகத் தவித்த எனக்கு உற்ற நண்பர்களின் உதவிகள் கிடைத்திராவிட்டால், நிலைமையை நினைத்துப் பார்க்கவே இன்று நடுக்கமாக உள்ளது.

அதே பிரகாஷ் இன்று கல்லூரிப் படிப்பையும் முடித்து தேசிய சேவைக்குச் செல்லத் தொடங்கி விட்டிருந்தான். எலும்பும் தோலுமாய் இருந்த அந்தச் சிறுவனா இவன் என்று பெற்றவளான நானே வியக்கும் வண்ணம் உயரமாய், அதற்கேற்ற பருமனுடன் என்னமாய்த் தான் வளர்ந்து நிற்கிறான்!

எத்தனை எடுத்துச் சொல்லியும் கேட்காமல், சமயோசிதமாய்ப் பேசித் தன்னுடன் என்னையும் கூட்டி வந்து விட்டான். மூவரில் என்னிடம் அதிகமான அன்பு கொண்டிருந்தவன் பிரகாஷ் என்பது என் அந்தரங்கச் சொந்தக் கணிப்பு. நான் அவனிடம் காட்டிய அதிக அன்பின் விளைவோ!

பிரவீணாவோ என்னைப்போலவே பிரகாஷின் எண்ணங்களை ஒப்புக்கொள்ளவில்லை. அவளுக்குத் தன் தகப்பனிடம் பாசமில்லாமலில்லை. இருப்பினும், தன்னுடைய ஒரு சிறுநீரகத்தையே கொடுத்துதவ நினைத்த பிரகாஷின் எண்ண அலை வரிசை எங்களுடைய அலைவரிசையுடன் ஒத்துப் போகவில்லை. நாங்கள் இருவருமே மனதிற்குள் ஒரே மாதிரியாய் சிந்தித்துக் கொண்டிருப்பதுபோல என் மனதுக்குள் நினைத்துக்கொள்கிறேன். பிரகாஷின் சிறுநீரகம் பொருந்தாது என்று மட்டும் மருத்துவர்கள் கூறிவிட்டால் ,……. எத்தனை நிம்மதி!

மற்றொரு கோணத்திலிலிருந்து பார்த்தால் என் இரக்கமில்லாத்தனம் என்னையே அதிர வைக்கிறது! இரக்கம் முற்றும் அழிந்துவிடவில்லை என்னுள் என்பதற்கு என் பொது நலசேவைகள் சாட்சி கூறும். ஆனால், சற்றும் பொறுப்பில்லாமல் மூன்று சின்னஞ்சிறு குழந்தைகளுடன் நின்ற என்னை அநாதரவாய் விட்டுச் சென்ற அந்த ஆளை நினைத்தால் என்னையும் மீறி வெறுப்பும் கோபமுமே மனதில் எரிமலையெனக் கொப்பளிக்கின்றன.

‘அம்மா, உங்களுக்குக் குடிக்க ஏதும் வாங்கிக்கிட்டு வரவா ? ‘, மகள் தான், என்னையும் என் நினைவலைகளையும் உலுக்கி நனவுலகிற்குக் கூட்டி வருகிறாள். சைகையிலேயே வேண்டாமென்று மறுத்துவிட்டு சுற்றுமுற்றும் கண்களைச் சுழற்றுகிறேன். கண்கள் தங்கள் வேலையில் ஈடுபட்டிருந்தபோதும் மனம் மட்டும் விட்ட இடத்தையே பிடிக்க ஓடுகிறது.

அன்று தான், பெயரளவிலாவது கணவனாய் இருந்த அந்த ஆள் என் கண் முன்னே கயவனாகிப் போனான். எப்போதும் போல அலுவலக விஷயமாகத்தான் பெட்டி படுக்கைகளுடன் கிளம்புகிறானென்று நினைத்த என் தலையில் மண்ணை வாரி இறைத்தான். வீட்டையும் குடும்பத்தையும் விட்டு போவதாய் சர்வசாதாரணமாய்க் கூறிவிட்டுக் கிளம்பி விட்டான். அழுகவோ, ஆத்திரப்படவோ இல்லை சண்டையிடவோ எனக்குச் சந்தர்ப்பமே தராமல் மறைந்தான். மாதங்கள் கடந்துதான் அவனுக்குப் பினாங்கில் மறுமணமென்ற செய்தி என் காதை எட்டியது.

பாவி மனுஷன் நான் பார்த்த வேலையையும் இரண்டாம் குழந்தைப்பேறு முடிந்த சமயத்தில் விட்டுவிட வற்புறுத்தியதில், நானும் வேலைத் துறந்திருந்தேன். வீட்டைவிட்டு அவன் வெளியேறிய பின் யோசித்தபோது தான் சிறுசிறு சம்பவங்கள் என்னால் அலட்சியப்படுத்தப்பட்டிருப்பது எனக்குப் புரிந்தது. நாளடைவில் அவனிடம் தெரிந்த மாறுதல்களை நான் பொருட்படுத்தாது இருந்தது அவனிடமிருந்த நம்பிக்கையின் காரணமோ என்னவோ. முன்பே சிறிதளவாவது சூசகமாய் எனக்கு உணர்த்தியிருந்தால் பேரிடியாகவாவது உணர்ந்திருக்க மாட்டேன்.

நண்பர்கள் உதவியுடன் ஒரு வேலையைத் தேடிக் கொண்டு குடும்பத்தையும் அவர்கள் உதவியுடனேயே நடத்த நான் பட்ட கஷ்டங்கள் ஒரு விரோதிக்கும் வரக்கூடாது. பிரவீணா தான் ஆக அதிகம் பாதிக்கப்பட்டவள். மூத்தவளாய்ப் பிறந்து, இன்னல்களைக் கண்டு, சிறுமியாக இருந்தபோதே அவள் பொறுப்புள்ள பெண்ணாகி விட்டிருந்தாள். நான் வீட்டிலில்லாத சமயங்களில் தம்பிகளைப் பார்த்துக் கொண்டதே அவள் தான். அவள் ஒன்றாம் வகுப்பு படிக்கும் போதே அவளிடம் வீட்டுச் சாவி பள்ளிப் பையில் இருக்கும். வேலை நேரத்தில், வீட்டில் திருடன் புகுந்து விடுவானோ என்ற பயமே எனக்கு இருந்ததில்லை. காரணம், திருடனுக்கும் தெரியுமே, அவனுக்கு ஒன்றும் கிடைக்காதென்று. இருப்பினும், குழந்தைகள் காயம் படாமல் பத்திரமாய் இருக்கவேண்டுமே என்ற கவலையும் பயமும் மட்டும் என் மனம் நிறைய வியாப்பிக்கும். அண்டை வீட்டாரும் ஓரளவு கவனித்துக் கொண்டனர்.

‘அம்மா, அம்மா, நீங்க வேணா வீட்டுக்குப் போங்கம்மா. இன்னிக்கி எனக்கு பாடம் முடிஞ்சிடிச்சி. அதான் சீக்கிரமே வந்துட்டேன். நானும் அக்காவும் காத்திருக்கோம் ‘,என்று பார்த்திபன் கூப்பிட்டதும், அருகில் கல்லூரிச் சீருடையில் அவன் நிற்பதைப் பார்க்கிறேன். ஒரு விதத்தில் இவன் அதிருஷ்டசாலி. ஏனென்றால், அவனுக்கு விவரம் புரியும் வயதில் நான் ஓரளவு பொருளாதாரம் மட்டுமில்லாமல் வாழ்க்கையை எதிர் நோக்கும் திறனிலும் தேர்ந்துவிட்டிருந்தேன். ஓரளவு நல்ல இளமைப் பருவம் அமைந்து விட்டிருந்தது இவனுக்கு, மற்ற இருவரையும் ஒப்பிடும் போது.

‘ நீ சாப்பிட்டயா பார்த்திபா ?, என்று நான் கேட்டதும், ‘நா சாப்புட்டுட்டேம்மா. நீங்க ரெண்டு பேரும் போயி சாப்பிடறீங்களா ? அண்ணனுக்கு ரத்தப் பரிசாத்னை தவிர வேறு சில பரிசோதனைகளும் இருக்காம். வெறும் பரிசோதனை தானேம்மா. இதுக்கு ஏம்மா உங்க முகத்துல இவ்வளவு கவலை ? கவலப்படாதீங்கம்மா ‘, தன் பாணியிலேயே சிரித்துக் கொண்டே கூறுகிறான். அவனுடைய உற்சாகம் எனக்குப் பொறாமை கலந்த பெருமிதத்தைக் கொடுத்தது. புன்னகைக்க முயல்கிறேன்.

‘பிரவீணா, பிரகாஷ் முடிவு பண்ணிட்டானா, ஒரு கிட்னிய உங்கப்பாவுக்குக் கொடுக்கத் தான் போறானா என்ன ? ‘ பீடிகையின்றி நான் அதிரடியாய் என் கவலையை வெளிப்படுத்த, பார்த்திபன் முந்திக் கொண்டு, ‘பொருந்தினாத் தானேம்மா, அதைப் பத்தியே சொல்ல முடியும். ஆனா, அப்பா ரொம்பவே முடியாமத்தான் இருக்காரு. இரண்டு கிட்னியும் சுத்தமா செயலிழந்தாச்சுன்னும் மாற்று சிறுநீரகம் பொருத்தினாத்தான் பிழைப்பாருன்னும் கண்டிப்பாச் சொல்லிட்டாங்களாம். டையாலிஸிஸ்ல தான் ஓடிட்டுக்கு. இப்பப் பொருந்துமான்னு தெரியத் தான் பிரகாஷ் பரிசோதனைக்குப் போயிருக்கான். அதுக்குள்ள நீங்க,.. ‘, என்று சமாதானம் செய்கிறான்.

‘என்னவோ எனக்குத் துளிக்கூடப் பிடிக்கல்ல. இருந்ததோ இருந்துட்டோம். அவனும் வந்துடட்டும். சேர்ந்தே வீட்டுக்குப் போயிடலாம், ‘என்று சொல்லிவிட்டு என் இருக்கையில் செளகரியமாய் உட்கார்ந்து கொள்கிறேன். பொது இடங்களில் மேலும் பேசி உணர்ச்சி வசப்படுவதில் யாதொரு பலனும் இல்லை. பேசுவதைவிட, யோசனையில் தான் என் மனம் அதிக நாட்டம் கொள்கிறது.

வயிற்றில் சுமந்து, பெற்று, வளர்த்து, படிக்க வைத்து உயர்த்தியதால் மட்டும் மகனைத் தன் உடைமையெனக் கருதும் என் பேதமையை நினைத்து என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை. மூளைக்கிருக்கும் பக்குவம் மனதிற்கில்லாமல் போனதே. வளர்ந்து ஓர் ஆணாகிவிட்ட மகனை இன்னும் சிறு குழந்தையாகவே நினைக்க வைக்கிறது, எனக்கு அவனிடம் இருக்கும் பாசம். அவன் வாழ்வே இப்போது தான் தொடங்கியிருக்கிறது. அவனுக்கு ஒரு நல்ல வேலை, பொருத்தமான திருமணம் என்று நடக்கும் முன்பே இது என்ன பெரும் சோதனை!

சிறு வயதுப் பிள்ளையாய் இருந்தாலும் அதட்டி உருட்டி மிரட்டிப் பணிய வைக்கலாம். தோளுக்கு மேல் வளர்ந்துவிட்ட மகனிடம் சொற்களைக் கவனமாக உபயோகிக்கும் என் நிலை இருதலைக் கொள்ளி எறும்பின் நிலைதான். செய்வதறியாது குழம்பியது தான் மிச்சம். நாலரை வயதில் அவன் உயிர் பிழைப்பது கடினம் என்று மருத்துவரே உதட்டைப் பிதுக்கிக் கைவிட்டுவிட்டனர். விஷக்காய்ச்சலிலிருந்து பிழத்தெழுந்த மகனைக் கண்டு நான் அடைந்த நிம்மதி, மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. இன்று இதே மருத்துவமனைச் சூழலில் மறுபடியும் என் மனபலத்தை இறைவன் சோதிப்பதாய் தோன்றியது. எனக்கு வைத்த சோதனைகளிலெல்லாம் அவன் திருப்தி அடையவில்லை போலும்.

எண்ணிலடங்காப் பல இன்னல்களுக்கு ஆளாகிப் பிள்ளைகளை நான் வளர்த்து வாழ்க்கையில் ஓரளவு உயர்ந்து விட்ட நிலையில் தானே, திடாரென்று எங்கள் நினைவு வந்து வீடு தேடி வர ஆரம்பித்திருந்தான் என் மக்களின் தகப்பன். சமீபமாக, சுமார் நான்கைந்து வருடங்களாகத் தான் , எனக்குத் தெரிந்தும் தெரியாமலும் வீட்டுக்கு வந்து தன் குழந்தைகளுடன் பேசிவிட்டுச் செல்ல ஆரம்பித்திருந்தான். முதலில் வெகுண்டெழுந்த நான், பிறகு குழந்தைகளுக்குத் தகப்பனின் சிறிதளவு அன்பு காலம் கடந்தாவது கிடைக்கிறதே என்ற எண்ணத்தில் கண்டும் காணாமலும் இருக்கத் தொடங்கினேன். விதி வழி வாழப் பழகிய எனக்குச் சொந்த விருப்பு வெறுப்புகளைத் துறப்பது சுலபமாகி விட்டிருந்தது. வாழ்க்கையில் நான் ஏமாறாத ஒரே விஷயம் என் குழந்தைகள். அவர்கள் நல்ல, பொறுப்புள்ளவர்களாய் இருந்து விட்டது எனக்கு ஒரு நிம்மதி. ஒழுக்கப் பிரச்சனைகள் ஒன்றும் இல்லாதுபோனதே என் வாழ்க்கைப்படகு கரை சேர ஏதுவானது. மூவருக்குமே என்னிடம் பாசம், அன்பு மற்றும் மரியாதை உண்டு.

தான் சம்பாதித்து பார்த்திபனை மருத்துவம் படிக்க வைக்கப் போவதாய் பிரகாஷ் கூறியிருந்தான். பிரவீணாவும் வேலையில் அமர்ந்து ஒன்றரை ஆண்டுகளாகி விட்டன. இருவருமாய் வேலையை விட்டுவிட்டு என்னை நிம்மதியாய் இருக்கச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். இன்னொரு முறை அத்தகைய முட்டாள்த்தனத்தைச் செய்ய நான் ஒன்றும் அத்தனை அறிவிலி அல்லவே! இதோ அதோ என்று தான் இதமாய்த் தள்ளிப்போடுகிறேன்.

தன் மனைவிக்குப் பத்து வருடங்களாகியும் பிள்ளை பிறக்கவில்லை என்றபோது தான் தந்தைக்கு மக்களின் நினைவு வந்திருக்கிறது என்று வெகு சீக்கிரமே புரிந்தபோது என் உணர்ச்சிகளை என்னாலேயே புரிந்து கொள்ள முடியவில்லை. அவளுக்குப் பிள்ளை பிறந்திருக்குமானால், நாங்கள் இருக்கிறோமா, செத்தோமா என்ற நினைப்பேயில்லாமல் இருந்திருப்பான். அவனைத் தகப்பன் என்று சொல்லக்கூட நாக்கூசுகிறது.பெற்றுவிட்டால் மட்டும் தந்தையாகிவிட முடியாதென்று ஏனோ யோசித்துப் பழகிய மனம் உரக்கக் கத்துகிறது. நான் பட்ட வேதனைகள் அவனுக்கு அவனுடைய இரண்டாம் மனைவி மூலம் வாரிசில்லாமல் செய்து விட்டதோ என்று கூட நினைத்ததுண்டு. மனமறிந்து ஒரு முறைகூட சபித்ததாய் நினைவில்லை எனக்கு.

சட்டப்படி எளிதாய் மணவிலக்கு ஆனதும் அவன் கொடுக்கவிருந்த மாதாந்திரப் பொருளுதவியை வீராப்பாய் மறுத்து முழுக்கமுழுக்க சொந்த முயற்சியில் பிள்ளைகளை வளர்க்க எண்ணி, பிறகு திணறி ஒரு வழியாய் சாதித்தும் விட்டேன்.

தன் ஆசைக்காக பணமாகவும் பொருளாகவும் காலம் கடந்து வீட்டில் கொண்டு வந்து கொட்டிப் பிள்ளைகளையும் என்னையும் மகிழ்விக்க எண்ணி பல கோமாளித்தனங்கள் செய்தான். பிள்ளைகளுக்கு வேண்டுமானால், அவன் செயல்கள் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கலாம். எதிர்பாராமல் சந்திக்க நேர்ந்தாலே புழுவைப் பார்ப்பதைப் போல ஒதுங்கும் எனக்கு அவனுடைய பணமும் பகட்டும் பொருளும் மண்ணுக்குச் சமமாயிருந்தது. தங்களுக்கு அவன் அளித்த பரிசுப்பொருள்களையும் கூடப் பிள்ளைகள் பயந்தபடியே தான் என்னிடம் காட்டுவர்.அவனின் செய்கைகள் அவனுடைய குற்றவுணர்விற்கும் மனசாட்சியின் குதறலுக்கும் மருந்தாய் அமைந்ததோ என்னவோ. ஒரு பிராயச்சித்தமாய் நினைத்தான் போலும்.

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மடியையே கடிக்க வந்தது போல பிரகாஷின் சிறுநீரகத்திற்கே அடிபோடுகிறானே என்று எனக்கு ஒரே எரிச்சலாய் இருந்தது. பிரகாஷின் சொந்த யோசனையோ இல்லை அவன் கேட்டுத் தான் இவன் இதில் இறங்குகிறானோ என்றறியேன்.

‘அம்மா, அதோ பிரகாஷ் வெளிய வந்துட்டான் ‘, பார்த்திபன் கூற, நான் அவசரமாய் எழுந்து அவனை நோக்கி நடந்து சென்று, ‘ என்னப்பா, என்ன சொன்னாரு டாக்டர் ? பொருந்துதா ? ‘, என்று கேட்கிறேன், மனதிற்குள் பொருந்தக்கூடாதே ஆண்டவனே என்று வேண்டியபடி. ‘ஐயோ அம்மா, இப்பவே தெரியாதும்மா. கொறஞ்சது நாலு நாளாவது ஆகும். எனக்குத் தெரியப்படுத்துவாங்க. நீங்க ஏம்மா இவ்வளவு கவலப்படறீங்க. வாங்க வீட்டுக்குப் போகலாம். பிரவீணா, நீயும் வீட்டுக்குத் தானே,. ?. ‘, என்று கூறியபடி சிரித்துக் கொண்டே என் தோளை ஆதரவுடன் அணைத்துக் கொண்டு நடக்கிறான்.

வீட்டில் அவரவர், வேலை, படிப்பு, நண்பர்கள் வட்டம் என்பன பற்றி படு உற்சாகமாகப் பேசியபடியே உணவருந்துகிறார்கள். நான் மட்டும் அதில் சேராமல் அமைதியாய் உண்கிறேன். என் அமைதியின் பின்னால் உள்ள கவலை அவர்களுக்குப் புரியும் என்று நான் அறிவேன். அதனால் தானோ என்னவோ எனக்கு உணர்ச்சி வசப்படவே சந்தர்ப்பம் தராது லொடலொடவென்று பேசித்தீர்க்கிறார்கள். அவர்களை நான் அறிந்த அளவிற்கு அவர்களும் என்னைக் கணித்துத் தானே வைத்திருந்தார்கள்.

அவரவர் அலுவல்களில் ஒரு வாரம் சீக்கிரமே பறந்து விடுகிறது. மூவரும் கூடிக் கூடிப் பேசுவதும், என்னைக் கண்டதும் நிறுத்துவதும் என்னையும் என் கவனத்தையும் கவர்கிறது. எனக்குத் தனித்து விடப்பட்ட உணர்வு.

அன்று சனிக்கிழமை.சற்றும் எதிர் பாராமல், பெற்றுவிட்டதால் மட்டுமே தந்தையான அந்தச் சுயநலவாதியும், உடன் உடன் அவன் மனைவியும் மாலையில் வந்துவிடுகின்றனர். எப்படிச் சமாளிப்பதென்ற குழப்பத்தில் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

பிரகாஷ் மெள்ள என்னிடம் வந்து, ‘ அம்மா, நீங்க கிளம்பிச் சட்னு வெளிய போயிடாதீங்கம்மா. முக்கியமா உங்ககிட்டத் தான் பேச வந்திருக்காங்க. ‘என் முறைப்பைக் கவனித்தபடி, ‘கோபப்படாதீங்கம்மா. என்னோட சிறுநீரகம் பொருந்துது. நேத்திக்கே தெரிஞ்சிடுச்சி. சொன்னவொடனேயே அப்பா மறுத்துட்டாரு. அவங்க மனைவி தான் கெஞ்சினாங்க. அப்புறமா, எல்லோரும் பேசி, நீங்க ஒத்துக்கிட்டா மட்டும் தான் மேல்கொண்டு பேசலாம்னு அப்பா சொல்லிட்டாரு ‘, தொடர்த்து கூறி முடித்தும் விடுகிறான். என் கண்கள் கண்ணீரால் நிறைந்து அவன் முகம் கூடச் சரிவரத் திரியவில்லை எனக்கு.

என் நிலையை உணர்ந்த பிரகாஷ் என் கைகளைப் பற்றி ஆசுவாசப் படுத்திக் கூட்டிச் சென்று கூடத்து இருக்கையில் உட்கார வைக்கிறான். உடன் வந்திருந்த மனைவியையும், அடையாளம் தெரியாமல் மெலிந்து இருந்த சக்கர நாற்காலியில் அமர்ந்த உருவத்தையும் பார்க்கிறேன். ஏனோ அவளிடம் வெறுப்பே ஏற்படவில்லை எனக்கு. மாறாக, அவள் முகத்தில் இருந்த கவலை என் கன்னெஞ்சையும் உருக்கி விடுமோவென்று தான் நான் பயந்து கொண்டிருந்தேன். அந்த ஆள் செய்த தவறுக்கு அவளை என்ன சொல்வது.

என் கைகளை நீட்டியும் மடக்கியும், புதிதாய் விரல்களைப் பார்ப்பதுபோல பார்த்தபடி, என் முகத்தின் கடுமையைக் குறைக்காமல் அமர்ந்திருந்தேன். முதலில் அந்த ஆள், ‘ க்கும்,.. இதுல எனக்குத் துளிக்கூட இஷ்டமில்ல. ம்,. அருகதையும் கூட இல்லதான். ஆனா, இவதான் ரொம்ப வற்புறுத்தறா. பிரகாஷுக்கும் உடன்பாடுதான். உன்னோட சம்மதம் இல்லாம செய்யக் கூடாதுன்னு மட்டும் நா தீர்மானமாவே சொல்லிட்டேன் ‘, கஷ்டப்பட்டு இருமல்களுக்கிடையே சொல்லி முடித்தான். அவள் தொடர்ந்து , ‘ பழைய நினைவுகளை மனசுல வச்சிக்கிட்டு தயவு செஞ்சு மறுத்துடாதீங்க. இந்த உதவிய வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன். உங்க மகன் சிறு வயசு. ஒரு பிரச்சனையும் வராதுன்னு டாக்டர் சொன்னாரு. இதுக்கு மேல எனக்குச் சொல்ல ஒண்ணுமில்ல ‘, கேவல்களுக்கிடையே சொன்னாள். என் கோபத்திற்கு பயந்தோ என்னவோ உடனே கிளம்பிப்போய் விடுகிறார்கள்.

வாயிற்கதவை அடைத்து விட்டு, பிரகாஷ் என்னிடம் ஆழ்ந்து யோசித்தபடி அமர்கிறான். அவன் முகத்தையே பார்த்தபடி சிறிது நேரம் உட்கார்ந்திருந்த நான் அடக்க முடியாமல் திடாரென்று குலுங்கிக்குலுங்கி அழுகிறேன். ‘ஏம்மா, அம்மா,.. ஏம்மா அழறீங்க. அழாதீங்கம்மா ‘, ஆதரவாய்த் தோளைத் தட்டி ஆசுவாசப்படுத்துகிறான். பேசமுடியாமல் அழுத என்னை அழுது ஓயட்டும் என்று விடுகிறான்.

அழுகை அடங்கியபின், ‘பிரகாஷ், இது வேண்டாமே ப்ளீஸ். பிரகாஷ், எனக்குப் பிடிக்கல்ல. இப்பத்தான் உன்னோட வாழ்க்கையே ஆரம்பிக்கப் போகுது. இப்போப் போயி இதெல்லாம் எதுக்கு ? வாழ்ந்து முடிச்ச அந்த ஆளுக்கு என்ன, வேற வெளியில கிட்னி கிடைக்காதா என்ன ? எனக்கு இதுல சம்மதமில்ல ‘, என்று அவனிடம் கூறிவிடுகிறேன். என்னை என் அறைக்கு அழைத்துச் செல்கிறான்.

‘பழைய நினைவுகளையெல்லாம் மறக்க முயற்சிங்கம்மா. அது உங்களுக்கும் ரொம்ப நல்லது. அப்பா செஞ்ச தப்புக்கு அவருக்குத் தண்டனை கொடுக்க மட்டும் நினைக்காதீங்க. முன்பின் தெரியாத ஒரு ஆளா இருந்தா எப்படி நினைப்பீங்களோ, அப்படி நினைச்சுக்கோங்க. அடிபட்ட பூனைநாய்க்குக் கூடப் பரிதாபப் படறவங்க நீங்களும் நானும். எத்தனையோ பேருக்கு உதவற நாம அப்பாவுக்குச் செய்யலேன்னா எப்படிம்மா. அவரு மேல இருக்கற வெறுப்புல நீங்க மறுக்கறத மட்டும் என்னால ஏத்துக்க முடியாது. என் மேல உள்ள பாசமும் ஒரு காரணம்னு எனக்குத் தெரியும். எனக்கு ஒண்ணும் ஆகாதும்மா. கவலையே படாம, மனசுல ஒரு தெளிவு ஏற்படற வரைக்கும் யோசிங்க. அப்புறம் நல்லாத் தூங்குங்க. உங்க முடிவு ‘சரி ‘ ன்னா நாளைக்குக் காலையில மஞ்சச் சேலை உடுத்துங்க. இல்லைன்னா, கருப்புப் புடவை கட்டுங்க. உங்க முடிவுக்கு எதிரா மட்டும் நான் செய்யவே மாட்டேன். நல்லாத் தூங்குங்கம்மா,. குட் நைட்,.. ‘, பொறுப்பை என்னிடம் விட்டு புன்னகையுடன் என் கைகளை வழக்கம் போல அழுத்தி விட்டுத் தன் அறைக்குப் போய் விடுகிறான். மனதில் பலவிதக் குழப்பங்கள், தர்க்கம், விவாதம், போராட்டம். பல வருடங்களுக்குப் பிறகு முழு இரவையும் கண்கள் மூடாமலேயே கழிக்கிறேன். வானமும் எனக்காக என் கூடவே இரவு முழுவதும் அழுது தீர்க்கிறது.

எழுந்து குளிர்ந்த நீரில் குளித்துக் கொண்டே மறுபடியும் யோசித்து ‘மஞ்சளா, கருப்பா ‘ என்று குழம்பம். சன்னல் வழியே பார்க்கிறேன். வானம் தெளிந்து நீலம் காட்டியது. புதிதாய்ப் பூத்த பூவாய் இருந்தது அந்த நாள்.

அமைதியாயிருந்த வீட்டில், என்னைத் தவிர ஒருவரும் எழவில்லை. பிரகாஷின் அறையைத் திறந்து, அவனைத் தொட்டெழுப்பி, ‘நான் கோவிலுக்குப் போயிட்டு சீக்கிரமே வந்துடறேம்பா. உங்களுக்கெல்லாம் காப்பி ரெடியா போட்டு வச்சிட்டேன்,ம்..சரியா ‘, என்று கூறியபடி வெளியேறுகிறேன்.

தூக்கக் கலக்கத்தில், முதலில் சாதாரணமாய் என்னைப் பார்த்த பிரகாஷின் கண்கள் விசையை அழுத்திய வேகத்தில் எரியும் விளக்காய் பிரகாசமாயின. வாய் பேசாத ஆயிரம் வார்த்தைகளை அவன் கண்கள் என் மஞ்சள் புடைவைப் பார்த்துப் பேசின.

Saturday 27th September 2003

தமிழ் முரசு

———————

sankari01sg@yahoo.com

Series Navigation

ஜெயந்தி சங்கர்

ஜெயந்தி சங்கர்

தெளிவு

This entry is part [part not set] of 35 in the series 20021022_Issue

அலர்மேல் மங்கை


இன்றும் பூங்காவில் ஒரே கூட்டம்……

இந்த அமெரிக்கர்கள் எங்குதான் கூட்டம் போடவில்லை ? இவ்வளவு பரந்த நாடாக இருந்ததோ, பிழைத்ததோ!

மரத்தில் அமைக்கப்பட்டிருந்த அந்தக் குழந்தைகள் விளையாடும் ஊஞ்சல், சறுக்குப் பகுதி மட்டுமே ஒரு ஏக்கர் நிலத்தில் அமைந்திருந்தது. முக்கியமாக வெள்ளைக்காரக் குழைந்தைகள் பத்துப் பதினைந்து, நான்கைந்து கறுப்புக் குழந்தைகள் அங்கிங்கே. அத்தி பூத்தாற் போல ஒன்றிரண்டு இந்தியக் குழந்தைகள். அதில் கங்காவின் மகன் பூபால் ஒருவன்.

மகனைக் குழந்தைகள் அமரும் தடுப்புப் போட்ட ஊஞ்சலில் அமர வைத்து ஆட்டி விட்டாள். பக்கத்து கம்பத்தில் சாய்ந்து நின்று கொண்டாள். எதிரே தெரிந்த கால்ஃப் மைதானத்தில் வேலையில்லாத அமெரிக்கர்கள் கால்ப் விளையாடிக் கொண்டிருந்தனர்.

‘அம்மா நான் ஊஞ்சலில் உட்கார வேண்டும் ‘ ஒரு மூன்று வயதுக் குழந்தை தன் தாயிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான்.

‘கொஞ்சம் காத்திரு ரிச்சர்ட். யாராவது இறங்கிய பின்புதான் நீ அமர முடியும்…. ‘ தாய் கண்டிப்பான குரலில் பேசினாள். உடனே அந்தக் குழந்தை ‘சரி ‘ என்று பக்கத்தில் இருந்த மரக் குதிரையில் ஆட ஆரம்பித்தது.

கங்கா அக்குழந்தயை வியப்புடன் பார்த்தாள். ‘தாய் சொன்னவுடன் கேட்டுக் கொண்டதே! ஏன் நம் இந்தியக் குழந்தைகளுக்கு மட்டும் முரண்டும் பிடிவாதமும் ? இதுவே பூபாலாக இருந்தால் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணியிருப்பான். ‘

நினைத்தவாறே பூபாலைப் பார்த்தாள். அவன் இவளைப் பார்த்து கன்னங்குழியச் சிரித்தான். வீட்டில் அழுத அழுகையின் ஈரம் இனூம் லேசாகக் கன்னத்தில் கோடிட்டிருந்தது. துடைத்து விட்டாள்.

‘அம்மா, அப்பா ஆபிஸ் போயிட்டு வருவா.. ‘ என்றான் பூபால் மழலை ஆங்கிலத்தில்.

‘ஆமாண்டா கண்ணா… ‘

கங்காவின் கணவன் சுந்தர் புதிதாக ‘கன்சல்டன்சி ‘ துவங்கியதில் இருந்து, பூபால் இப்படித்தான் சொல்லிக் கொண்டிருந்தான். தகப்பன் ‘பிசினெஸ், க்ளை¢யண்ட், ப்ராஜக்ட் டெட்லைன் ‘ என்று பறந்து ஓடும் நேரம், மனைவியோடும், குழந்தையோடும் சேர்ந்திருக்க முடியாத குற்ற மனப்பான்மையில் குழந்தையைக் கொஞ்சிய வேகத்திலேயே திரும்ப ஆஃபீசுக்கு ஓடுவான். குழந்தை தகப்பன் தன்னோடு விளையாடாத கோபத்தில் ஓர் அரை மணி நேரம் அழும். அப்புறம் அம்மாவைச் சமாதானப் படுத்துவது போல,

‘அம்மா, அப்பா ஆபிஸ் போயிட்டு வருவா ‘ என்று கூறி தன்னையும் சமாதானப் படுத்தி கொள்ளும்.

கணவன் மீது மீண்டும் கோபம் வந்தது கங்காவுக்கு!

‘யாருக்கு வேணும் பணம் ? குப்பையில கொண்டு கொட்டு. ‘

என்று நினைத்துக் கொண்டாள். பூபாலுடைய ஊஞ்சல் நின்று விட்டது. மீண்டும் ஆட்டி விட்டாள். தூரத்தில் அவர்கள் வருவது தெரிந்தது.

அந்த இளஞ் ஜோடி குழந்தையை ஸ்ட்ராலரில் வைத்து தள்ளிக் கொண்டு வந்தனர். அந்தப் பெண் கங்காவைக் கண்டதும் முகம் மலர்ந்து புன்னகைத்தாள்.

‘ஹலோ… ‘

‘ஹாய்.. ‘

‘க்யா ஹுவா ? தோ, தீன் தின் ஆப்கோ தேகா நஹி ? ‘ (என்ன இரண்டு, மூன்று நாட்கள் உங்களைக் காணோமே ?) என்றாள்.

‘இவனுக்கு லேசா சளி இருந்தது, அதான்.. ‘

இதற்குள் அவள் கணவன் குழந்தையை ஸ்ட்ராலரில் இருந்து எடுத்து வெறுமையாக இருந்த ஊஞ்சல் ஒன்றில் வைத்து தடுப்பை மாட்டினான். அவர்கள் வட இந்தியத் தம்பதிகள். கங்காவும் ஒரு இந்தியப் பெண் என்ற நேசத்தையும் மீறி, ஒரு தென்னிந்திய ‘மதராஸிப் பெண் ‘ இவ்வளவு இலக்கண சுத்தமாக ஹிந்தி பேசுகிறாளே என்ற வியப்பு!

கணவன் பெயர் அனில் குப்தா. அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்தவன். மனைவி பெயர் நீலம். திருமணம் செய்து கொண்ட பின் அமெரிக்காவில் குடியேறியவள். கங்காவுக்கு அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் லேசான பொறாமை எழாமல் இல்லை. ‘ நடு இருபது வயதுகளில் நானும் சுந்தரும் இதை விட அன்னியோன்யமாகத்தான் இருந்தோம் ‘. என்று நினைத்துக் கொண்டாள். அந்தத் தோழமை, கருத்துப் பரிமாற்றம், விவாதங்கள் இந்த மூன்று மாதமாக எங்கோ இருட்டில் ஒளிந்து கொண்டன.

‘ நமக்கு அப்படியென்ன வயதாகி விட்டது ? முப்பதெல்லாம் ஒரு வயதா ? ஆனால் முப்பது வயதில் ஐம்பது வயதின் அயர்வு!… ‘

‘கங்கா, உங்கள் கணவரின் பிசினெஸ் எப்படிப் போகிறது ? ‘ – என்றான் அனில் அமெரிக்க ஆங்கிலத்தில்.

‘வெகு நன்றாகப் போகிறது. அவர் இவ்வளவு பிசியாக இருப்பதில் இருந்தே தெரியவில்லையா ? ‘

கங்கா வறட்சியாகச் சிரித்தாள்.

‘அடுத்த வருடம் லெக்ஸஸ் காரில் பார்க்குக்கு வருவீர்கள்… ‘ – கூறிய அனில் புன்னகைத்தான்.

கங்காவுக்கு கோபம் சுறுசுறுவென்று ஏறியது.

‘இதென்ன பேச்சு ? எந்த இந்தியரைப் பார்த்தாலும், ‘பிசினெஸ் துவங்கி விட்டார்கள். இனி அப்படி பணம் பண்ணி விடுவீர்கள். இப்படிச் செல்வம் கொழிக்கப் போகிறது ‘ என்று ஏன் பேச வேண்டும் ? ‘ – மனதுள் கேள்வி புகைந்தது.

‘என்னத்தை சம்பாதித்தாலும், சாப்பிடப் போறதென்னவோ மூணு வேளைதான்…. ‘

கங்கா மீண்டும் சிரித்தாள். நீலம் பதறியவளாக,

‘தவறாகப் புரிந்து கொண்டார்களா கங்கா ? ‘ – என்றாள்.

‘இல்லையில்லை. நான் உண்மையைத்தானே கூறினேன் ? என்ன பணம் சம்பாதித்தாலும், அடிப்படைப் பழக்கங்கள் என்ன மாறப் போகுது ? நாம் நாமாகத்தான் இருப்போம், இல்லையா ? ‘

‘பில்குல் ‘ (முற்றிலும்)

பூபால் ஊஞ்சலில் இருந்து இறங்கி சறுக்கில் விளையாடிக் கொண்டிருந்தான். கங்காவும், நீலமும் ஒரு மரப் பெஞ்சில் அமர்ந்து கொண்டனர். சிறிது நேரம் மவுனம் நிலவியது.

‘கங்கா, ஏன் சுரத்தில்லாமல் இருக்கிறீர்கள் ? ‘ என்றாள் நீலம் மெதுவாக.

‘ஒன்றுமில்லயே… ‘

‘இல்லை, ஏதோ உள்ளது. மிகவும் சோர்வு தெரிகிறது உங்களிடம். சொல்ல வேண்டும் என்று நான் வற்புறுத்த மாட்டேன். ‘ – என்றாள் நீலம் மென்மையாக.

கங்கா ஒரு நொடி கண்களை மூடிக் கொண்டாள். கண்களைத் திறந்த போது நீலம் அவளை அதே புன்முறுவலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘பணம் மனிதனுக்கு சந்தோஷத்தைத் தந்து விடுங்கறது எவ்வளவு பொய்! ‘

‘உண்மைதான் ‘

நீலம் தூரத்துப் புல் வெளியை வெறித்தாள். பின்பு,

‘ நீங்கள் சொல்வது போல பணமோ, பணத்தால் கிடைக்கக் கூடிய வசதிகளோ மனிதனுக்கு மகிழ்ச்சியைத் தந்து விடப் போவதில்லை. அப்படியே தருவது போன்ற ஒரு பிரமையை ஏற்படுத்தினாலும் அது நிலைப்பதில்லை. மகிழ்ச்சி என்பது மனிதனுக்கு எதில், எப்படி ஏற்படுகிறது என்று யோசித்திருக்கிறீர்களா ? ‘

கங்கா ஒன்றும் கூறாமல் பூபால் இருந்த பக்கம் பார்வையைத் திருப்பினாள். அவன் இப்போது அப்பாவை மறந்தவனாக சறுக்கில் விளையாடிக் கொண்டிருந்தான்.

‘என்ன ஒன்றும் சொல்லவில்லை என்றால் எப்படி ? ‘ என்றாள் நீலம்.

‘சொல்ல என்ன இருக்கிறது நீலம் ? சந்தோஷம் என்பது அவரவர் மனதில்தான் உள்ளது என்று எனக்கும் தெரியும்….ஆனால் மனதில் சந்தோஷம் ஏற்பட மனது மட்டும் போதாது, புறத்தில் இருந்தும் செயல்கள் மனதில் சந்தோஷத்தைத் தூண்ட வேண்டும்… ‘

நீலம் கலகலவெனச் சிரித்தாள்.

‘எத்தனை பேர் உங்களைப் பார்த்து பொறாமைப் படுகிறார்களோ! அன்பும் பொறுப்பான கணவன், அழகும், அறிவான குழந்தை, நல்ல வேலை….! ‘

‘கரெக்ட்… நான் சந்தோஷமாயில்லை என்று சொன்னால் கேட்பவர்கள் பைத்தியம் என்றுதான் நினைப்பார்கள்… ‘

கங்காவும் சிரித்தாள்.

நீலம், ‘சந்தோஷமாயிருக்க முயற்சியுங்கள், கங்கா. எல்லாவற்றையும் விட அது முக்கியமல்லவா ? ‘ என்றாள் புன்னகை மின்ன.

பூபாலை கார் சீட்டில் வைத்துப் பெல்ட்டை மாட்டி வீட்டுக்கு ஓட்டிக் கொண்டு வரும் வழியில் மீண்டும் மீண்டும் அது ஒலித்தது.

‘சந்தோஷமாயிருங்கள் கங்கா. எல்லாவற்றையும் விட அதுதான் முக்கியம். ‘

தாத்தா கூறும் அதே வார்த்தை…

எங்கோ மதுரையில் பிறந்து, வளர்ந்து, படித்து பின் இப்போது அமெரிக்காவில், சிகாகோ நகரத்தில் கார் ஓட்டிக் கொண்டிருக்கும் விந்தையை நினைத்து சிரித்துக் கொண்டாள்.

என்ன சந்தோஷமான நாட்கள் அவை!

தாத்தாவின் முன்கோபமும், பாட்டியின் நச்சரிப்பும், அப்பாவின் சிடுசிடுப்பும், அம்மாவின் இயலாமையுமே பெரிய பிரச்னைகளாகத் தோன்றிய பருவம்!

ஷேக்ஸ்பியரும், மில்டனும், வர்ட்ஸ்வர்த்தும், ராபர்ட் ப்ராஸ்ட்டுமே உலகமாய் இருந்த பருவம்!

இப்போது கம்ப்யூட்டருடன் யூனிக்ஸில் போராடும் அவலத்தை என்னவென்பது ?

மீண்டும் கணவன் மேல் கோபம் எழுந்தது.

‘இலக்கியம் படிச்சவளை இயந்திரத்துடன் பேச வச்சுட்டாரே! ‘

‘இலக்கியம் சோறு போடாது, கங்கா…. ‘- சுந்தர் சிரித்துக் கொண்டே கூறினான் ஒரு விவாதத்தின் போது.

‘சோறுதான் வாழ்க்கையா ? ‘- கங்கா ஆத்திரத்துடன் கேட்டாள்.

‘இல்லியா பின்னே ? ஒரு வேள சோத்துக்கே கஷ்டப் படறவன்கிட்ட போய்க் கேளு, உனக்கு இலக்கியம் வேணுமா ? சோறு வேணுமான்னு ? இலக்கியம் மேட்டுக் குடிக்கு. அடுத்த வேள சாப்பாட்டுக்கு என்ன பண்றதுன்னு யோசிக்கறவனால இலக்கியம் படிக்க முடியாது…… ‘

‘ஓகே…! நான் அடுத்த வேள சாப்பாட்டைப் பத்தி யோசிக்காத மேட்டுகுடியாத்தானே இருக்கேன் ? நா ஏன் கம்ப்யூட்டரைக் கட்டிட்டு அழணும் ? ‘

‘ஏன்னா, அதான் யதார்த்தம்…. ‘

எத்தனை விவாதங்கள்…எத்தனை போர்க்கொடிகள்…!

கடைசியில் யதார்த்தம்தான் அவளைக் கட்டிப் போட்டது. ‘க்ரியேடிவ் ரைட்டிங் ‘ படிக்கப் போகிறேன் என்றவளை அதுதான் கம்ப்யூட்டர் படிக்க வைத்தது….

சுந்தர் உடை மாற்றி வந்தான்.

‘இன்னிக்கு சனிக் கிழமை, ஆஃபீசுக்குப் போகலைன்னுதானே சொன்னீங்க ? ‘ – கங்காவின் குரல் உயர்ந்தது.

‘ஐ ‘ம் ஸாரி. திங்கட்கிழமை ரிப்போர்ட் குடுக்கணும், க்ளையண்ட்டுக்கு… ‘

‘அப்ப ஏன் வீட்ல இருப்பேன்னு நேத்து சொன்னீங்க ? ‘

‘அதான் ஸாரி சொல்றேன் ‘ல ? இப்பதான் ஜிம் ஃபோன் பண்ணினான், திங்கள் ரிபோர்ட் ட்யூன்னு! ‘

கங்கா ஆத்திரத்துடன் பாத்ரூமுக்குள் சென்று கதவைத் தாழிட்டாள். சுந்தர் ஏதும் செய்ய இயலாதவனாக நகர்ந்தான்.

அன்றும் பூங்காவுக்கு அனிலும், நீலமும் குழந்தையுடன் வந்திருந்தனர். அவர்களைக் கண்டதும் லேசாகப் பொறாமை பற்றிக் கொண்டது. பொருத்தமான ஜோடியாக மட்டும் அல்லாமல், எப்போதும் உலகையே மறந்து சந்தோஷமாக அலையும் ஜோடி என்று நினைத்துக் கொண்டாள். ஆனாலும் நீலத்தின், அருகாமையும், பேச்சும் அவளுக்கு வேண்டித்தான் இருந்தது.

இவளைக் கண்டதும் நீலம் புன்னகையுடன் அருகில் வந்தாள்.

‘என்ன கங்கா, எப்படி இருக்கிறீர்கள் ? ‘ என்றாள் இனிமையான ஆங்கிலத்தில்.

‘ஏதோ இருக்கேன். ‘

நீலம் கங்காவின் இடுப்பைச் சுற்றி கையை வளைத்து கொண்டாள். வட இந்தியர்கள் தோழமையையும், நேயத்தையும் வெளிப்படுத்தும் விதம் அழகாகத்தான் இருக்கிறது.

‘சொல்லுங்கள், என்ன ப்ரச்னை இன்றைக்கு ? ‘

‘ப்ரச்னை ஏதுமில்லை… ‘

‘ப்ரச்னை இல்லாததுதான் ப்ரச்னையோ ? ‘ – சிரித்தாள் நீலம்

சுந்தர் மீது இன்னும் தீராத கோபத்தில், வார்த்தைகள் கசப்பாகக் கொட்டின.

‘பிசினெஸ் என்று வெறி பிடித்து அலையும் கணவன், ஹைபர் ஆக்டிவ் குழந்தை, மனதுக்குப் பிடிக்காத வேலை, எங்கோ ஆயிரக் கணக்கான மைல்களுக்கு அப்பால் பெற்றவர்கள்….. ‘

– கூறிவிட்டு நிறுத்தினாள் கங்கா.

நீலம் அதே புன்னகையுடன் இவளை கவனித்துக் கொண்டிருந்தாள்.

‘யாருடைய வாழ்க்கைதான் எல்லாவிதத்திலும் திருப்திகரமாக அமைகிறது, கங்கா ? ‘

‘எனக்கு ஆயாசமாக இருக்கிறது, நீலம். சில நேரம் இந்த அமெரிக்க வாழ்க்கை எனக்கு மூச்சு முட்டுகிறது…. ‘

‘அப்படியானால், மீதி நேரம் இந்த அமெரிக்க வாழ்க்கை பிடித்துதானே இருக்கிறது ? ‘

புன்னகையுடன் கூறினாள், நீலம்.

‘எதிலுமே திருப்தியாக இல்லை…கணவரின் பிசினஸ் வெறி பிடிக்கவில்லை, செய்யும் வேலையில் ஆத்ம திருப்தி இல்லை… ‘

‘வேலையை விட்டு விடுங்கள். ‘ என்றாள் நீலம், சிரித்துக் கொண்டே.

‘விட்டு விட்டு ?….அப்புறம்… ? ‘

‘உங்கள் ஆசை போல ‘க்ரியேட்டிவ் ரைட்டிங் ‘ படிக்கப் போங்கள் ‘

‘அதற்கப்புறம் ? ‘

‘அப்புறம் பார்த்துக் கொள்கிறது… ‘

நீலம் கூறி விட்டு அழகாகச் சிரித்தாள். கங்காவுக்கும் சிரிப்பு வந்தது.

எவ்வளவு சுலபமாகக் கூறி விட்டாள். ‘அப்புறம் பார்த்துக் கொள்கிறது. ‘

இரண்டு மூன்று மாதங்கள் ஓடி விட்டன. திடாரென்று இரண்டு வாரங்களாக நீலமும், அனிலும் பார்க்குக்கு வருவதை நிறுத்தி விட்டனர். கங்கா அவளுடைய வீட்டுக்கு இரு முறை ஃபோன் செய்து பார்த்தாள். ‘ஆன்ஸரிங் மெஷின் ‘ மட்டுமே வந்தது.

ஒரு நாள் நேரே அவள் வீட்டுக்குப் போய் அழைப்பு மணியை அழுத்தினாள். நீலம்தான் கதவைத் திறந்தாள். இவளைக் கண்டவுடன் கண்களில் ஆச்சர்யம் மின்னச் சிரித்தாள்.

‘கங்கா, ஆயியே…ஆயியே. என்ன அதிசயமாக இருக்கிறது ?. ‘

கங்கா சிரித்துக் கொண்டே உள்ளே நுழைந்த்தாள். தரையில் கால் வைக்க முடியாமல் சிறிதும் பெரிதுமாகப் அட்டைப் பெட்டிகள்…….

‘மன்னித்துக் கொள்ளுங்கள், வீடு ரெம்ப மோசமான நிலயில் இருப்பதற்கு. உட்காருங்கள் ப்ளீஸ். ‘ – கூறி விட்டு சோபாவில் தானும் அமர்ந்து கொண்டாள்.

‘குழந்தை எங்கே ? ‘ – என்றாள் கங்கா.

‘தூங்கறான்….அதுசரி உங்கள் கணவர் எப்படி இருக்கிறார் ? ‘

‘சுகந்தான்..அனில் எங்கே ? ‘

ஒரு கணம் நீலம் மெளனமாக இருந்தாள். பின்பு,

‘ நாங்கள் பிரிந்து விட்டோம், கங்கா. டிவோர்ஸ் ஆகி விட்டது. ‘ என்றாள் மெதுவாக.

‘என்ன ? ‘

கங்கா ஒரு கணம் அதிர்ந்து விட்டாள். நீலம் அப்போதும் மெதுவாகச் சிரித்தாள்.

‘என்ன ஆச்சு, நீலம் ? என்னிடம் நீ ஒன்றுமே கூறலையே ? ‘ – கங்காவுக்குக் குரல் நடுங்கியது.

‘சொல்ல என்ன இருக்கிறது, கங்கா ? இருவருக்கும் ஒத்து வரவில்லை. நிறைய முரண்பாடுகள்….. ‘

‘அதனால் பிரிந்து விடுவதா ? என்ன அனியாயம்! ‘

கங்கா நீலத்தின் கரங்களைப் பற்றிக் கொண்டாள். நடுங்கிய கங்காவின் கரங்களை ஆதரவாகத் தட்டிக் கொடுத்தாள் நீலம்.

‘என்ன செய்வது கங்கா ? எனக்கும் டிவோர்ஸில் விருப்பம் இல்லைதான். ஆனால் அனில் அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்தவன் அல்லவா ? வளர்ப்பால் இந்தியனாக இருந்தாலும் எண்ணங்களில் முழுக்க முழுக்க அவன் அமெரிக்கன்தான்….! ‘

கங்கா கண்கள் கலங்க அவளை வெறித்தாள்.

நீலம் புன்னகை மாறாமல்,

‘ரிலாக்ஸ் கங்கா. இப்போது என்ன ஆகி விட்டது ? இப்படி இடிந்து போய் விட்டார்களே ? ‘

‘எப்படி நீலம் ?இவ்வளவு பிரச்னையிலேயும் எப்பவும் சிரிச்சுட்டே இருந்தாயே ? என்னால் நம்பத்தான் முடியவில்லை ‘

‘திருமணமாகி ஒரு வருடத்திலேயே பிரச்னை துவங்கி விட்டது, கங்கா. நான் ரெம்ப இந்தியத் தனத்துடன் இருப்பதாக அனிலுக்கு நினைப்பு. நான் தில்லியில் வளர்ந்தவள்தான். இருந்தாலும் ரெம்ப கட்டுப்பெட்டித்தனமாக இருக்கிறேன் என்று அவனுக்கு ஏமாற்றம். இப்படிச் சிறிதும் பெரிதுமாக எத்தனையோ ஏமாற்றங்கள், அவனுக்கு. நான் தாய்மை அடைந்திருந்ததால் பிரிவைத் தள்ளிப் போட்டோம். மேலும் என் படிப்பு முடிந்து ஒரு வேலை கிடைக்கும் வரை ஒன்றாக இருப்பதாக ஒப்பந்தம்…இந்த இடைக் காலத்தில் அவன் மாறலாம், டிவோர்ஸ் எண்ணத்தை விட்டு விடுவான் என்று கூட நினைத்தேன்…. ‘

நீலம் ஒரு பெருமூச்சுடன் நிறுத்தினாள்.

‘போகட்டும். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் ? ‘

கங்காவினால் அழுகையைக் கட்டுப் படுத்த முடியவில்லை. எப்பேர்ப்பட்ட பெண்ணிவள்! இத்தனை பிரச்னைகளையும், சோகத்தையும் மனதில் தாங்கிக் கொண்டு, கங்காவுடைய பிரச்னைகளைப் பற்றிப் பேசி, ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாளே! நீலம் அவசரமாக கங்கா அருகில் வந்து அமர்ந்து அவளை அணைத்துக் கொண்டாள்.

‘என்ன கங்கா ? என்ன ஆச்சென்று இப்படிக் கலங்குகிறீர்கள் ? ரிலாக்ஸ்.. ‘

‘என்ன அனியாயம் இது… நான் பேசுகிறேன் அனிலிடம்..உன்னைப் போன்ற ஒரு பெண் கிடைக்க அவன் தவம் இருந்திருக்க வேண்டும்..என்ன கல் நெஞ்சுக்காரன்… ‘ என்றாள் கங்கா ஆத்திரத்துடன்.

நீலம் சிரித்தாள்.

‘சிறு பிள்ளை போலப் பேசுகிறீர்கள் கங்கா…அனில் கல் நெஞ்சுக்காரன் அல்ல. ரெம்ப நல்லவன். ஹி இஸ் அ ஜெண்டில் மான். அவன் செய்த ஒரே தவறு, என்னைத் திருமணம் செய்ததுதான். அவனுடைய ரசனைகளுக்கும், விருப்பங்களுக்கும் ஏற்ற பெண்ணைத் தேர்வு செய்திருக்க வேண்டும், பெற்றவர்கள் சொன்னதற்காக என்னைத் திருமணம் செய்தது ஒன்றுதான் அவன் செய்த தவறு. அதற்காக எத்தனையோ முறை என்னிடம் மிக வருந்தி உள்ளான். அவனுடைய விருப்பத்திற்கு உகந்தவளாக நான் இல்லை என்பதால் ஒரு போதும் எனக்குத் தர வேண்டிய மரியாதையை அவன் தராமல் இல்லை. இப்போதும் நாங்கள் இருவரும் ஒரே வீட்டில் வாழப் போவதில்லை என்றாலும் நல்ல நண்பர்களாகவே இருப்போம். எங்கள் குழந்தைக்குச் செய்ய வேண்டிய எல்லாக் கடமைகளையும் தவறாமல் செய்யத்தான் போகிறான். ஒரு முறை தவ்று செய்து விட்டான் என்பதால், அந்தத் தவறுடனேயே வாழ வேண்டும் என்று அவனை நிர்ப்பந்தம் செய்வது நியாயமில்லை…மேலும் இத்துடன் என் வாழ்க்கை முடிந்து விட்டதாக நான் நினைக்கவும் இல்லை. இது என் வாழ்க்கையில் நடந்த ஒரு பெரிய தவறு..இதற்காக வாழ் நாள் முழுவதும் நான் அழுது கொண்டிருக்கப் போவதில்லை. இனி என் வாழ்க்கையில் எடுக்கப் படும் முடிவுகள் என் குழந்தையையும், என்னையும் சந்தோஷப் படுத்தும் முடிவுகளாகத்தான் இருக்கும்…. ‘ என்றாள் நீலம் புன்னகையுடன்.

கங்கா ஒன்றும் கூறாமல் அவளை வெறித்தாள். நீலம் விலகி அமர்ந்தவளாக கங்காவைத் தீர்க்கமாகப் பார்த்தாள்.

‘ஒன்று சொல்லட்டுமா கங்கா ? ‘ என்றாள்.

‘என்ன ? ‘

‘உங்களுக்குக் கிடைத்திருக்கும் இந்த அழகான வாழ்க்கையை அனுபவியுங்கள்…. ‘

என்றாள் அதே புன்னகையுடன்.

திரும்ப வரும் போது காரைக் கணவன் ஆபிசுக்கு ஓட்டினாள். எப்போதும் அவன் தான் அவளை டின்னருக்கு அழைத்துச் செல்ல வேண்டுமா என்ன ? இனி அவளும் அவனை அழைத்துப் போவாள்.

***

alamu_perumal@yahoo.com

Series Navigation

அலர்மேல் மங்கை

அலர்மேல் மங்கை

தெளிவு

This entry is part [part not set] of 26 in the series 20020210_Issue

ராமசுப்ரமணியம் சேஷாத்ரிநாதன்


இதுவரை அவளும் சொல்லவில்லை
நானும் சொல்லவில்லை
அவள் திருமணத்தன்று என்னை கண்டபொழுது
அவள் கண்களில் தளும்பிய நீர் சொன்னது
அது காதல் என்று

Series Navigation

ராமசுப்ரமணியம் சேஷாத்ரிநாதன்

ராமசுப்ரமணியம் சேஷாத்ரிநாதன்

தெளிவு

This entry is part [part not set] of 8 in the series 20000806_Issue

கே ஆர் அய்யங்கார்



இந்தக் கால இளைஞர்காள் இசைவாய்ச் சொல்வேன் கதைகேளும்
எந்தக் காலத் திலுமேதான் எழிலாய் மனதில் நிலைத்திருக்கும்
அந்தக் காலத் திலேயோர்நாள் மனிதன் ஒருவன் இருந்திருந்தான்
சொந்தம் எதையும் நோக்காமல் சுயமாய்த் தேனீர் விற்றிருந்தான்

கடையும் சிறிதாய் இருந்தாலும் சுவையும் நன்றாய் இருந்ததனால்
தடைகள் எல்லாம் தகர்ந்துவிட நன்றாய் வாழ்க்கை ஓடியது
படைகள் போாில் சென்றிருந்தால் தோல்வி வெற்றி வருவதுபோல்
கடையை வைத்த அவனுக்கும் காலம் ஓர்நாள் மாறியது

மனத்தைக் கெடுக்கும் மதுவிற்கு அவனும் சற்று இடங்கொடுக்க
மனத்தை முற்றும் மயங்கவைத்து மதுவும் அவனுள் புகுந்ததுவே
கனவில் வாழ நினைத்ததனால் நனவும் நகர்ந்து போனதுவே
பணமும் காற்றாய்க் கரைந்துவிட பாவி மகனும் நிலைகுலைந்தான்

குடியில் மயங்கி ஒருநாள் அவனும் நடந்து செல்ல
மடியில் பூனை போலே விதியும் சதியைச் செய்ய
கடிதாய் வந்த காவலன் மேலே காலும் படவே
தடியாய் வாளை யுருவி யவனும் சண்டைக் கழைத்தான்

ஆளைப் பார்த்து யாரும் அன்று சண்டைக் கழைத்தால்
காலை தலையை வைத்தும் கூட போட வேண்டும்
மாலைப் பொழுதும் மதுவும் தந்த மயக்கத் தாலே
வாளைப் பிடிக்கத் தொியா யிவனும் ஒத்துக் கொண்டான்

மயக்கந் தெளிய மனமும் குழம்பித் தவிக்கத் தவிக்க
தயக்கத் துடனே தக்க குருவைத் தேடிச் சென்றான்
இயக்க வைத்தே என்னை நீரும் வெல்லச் செய்வீர்
முயக்கங் கொண்டு நானும் சற்றே முயல்வே னென்றான்

தெள்ளிய வானம் போலத் தெளிந்த குருவும் சிாித்தே
அள்ளித் தருவேன் எனது வித்தை உனக்கே என்றார்
பள்ளி சேரும் நாளை நானும் உனக்குச் சொல்வேன்
துள்ளி நீயும் தேனீர் போட்டுப் பழகு என்றார்

வாரஞ் செல்ல மாதம் வரவும் சேதி வராமல்
கார மிளகாய் கடித்தாற் போலக் கலங்கி விட்டான்
நேரஞ் சொல்வீர் என்றே நினைத்தேன் ஒன்றும் இல்லை
ஓரம் நின்றே நானும் வித்தை உணர்வேன் என்றான்

கடையில் தேனீர் போடும் முறையும் ஏது என்க
மடையும் திறந்து விட்டாற் போலப் பத்து என்றான்
விடையை நானும் விரைந்து சொல்வேன் கவலைப் படாதே
கடையில் சென்று மேலும் ஐந்து முறைகள் செய்வாய்

குருவை நம்பி மேலும் பலவாய்த் தேனீர் கலந்தே
இருளும் நீங்கும் என்றே நினைந்து தவமாய் இருந்தான்
வருமே அழைப்பு என்றே இருந்த அவனும் மெல்லக்
கருமை முகத்தில் சேரக் கலங்கி குருவிடம் சென்றான்

என்று எனக்கு வித்தை எல்லாம் சொல்லித் தருவீர்
அன்று மயங்கி அலைந்தே நானும் வாக்குக் கொடுத்தேன்
இன்று நீரும் எனக்கோர் வார்த்தை சொல்ல வேண்டும்
நன்றாய் நாளை வாட்போர் உண்டு மறந்தீர் போலும்

மெல்லக் குருவும் சிாித்துவிட்டு மென்மை யாகக் கூறிவிட்டார்
நல்ல தனமாய் வீரனிடம் போாின் முன்னால் சொல்லிடுவாய்
சற்றே கொஞ்சம் தேனீரும் சற்று அருந்து எனச்சொல்லு
பற்றுடன் என்னை நம்பிவிடு பாங்காய்ப் போருக்குச் சென்றுவிடு

களைப்பைப் போக்கும் தேனீரைப் அருந்தச் சொன்ன அவனுடைய
அழைப்பை ஏற்ற வீரனும்தான் அயர்ந்து போயே நின்றுவிட்டான்
சற்றுப் பொழுதில் உயிர்போகும் சற்றும் அதையும் எண்ணாமல்
சற்றுத் துளியும் சிந்தாமல் தேனீர் கலப்பதைப் பார்த்துவிட்டான்

எந்த குருதான் உனக்கு வித்தை சொல்லித் தந்தார்
அந்த குருவா அவரை நானும் நன்கு அறிவேன்
மந்த புத்தி கொண்டே அழைத்தேன் மன்னி என்றே
நந்த வனத்தில் நடந்தே வீரன் சென்று விட்டான்

விரைந்து செல்லும் வீரனையே விழிகள் நிறைந்து பார்த்திருக்க
கரையும் மனது குரல்கொடுக்க குருவை மனதில் வணங்கிவிட்டான்
எளிதாய் இருக்கும் இக்கதையின் அர்த்தம் உணர்வீர் இப்போது
தெளிவாய்த் தொழிலும் தொிந்திருந்தால் பயமும் எதற்கும் வேண்டாமே.

**********

பின்னுரை: இது ஒரு ஜென் கதை. ஜப்பானில் தேனீர்கலை வல்லுனனை தேனீர் முதுநிலையாளன் என(டா மாஸ்டர்) அழைப்பார்கள்.அப்படிப் பட்ட ஒருவன் குடிபோதையில் ஒரு சமுராய் வீரன் உறங்கும் போது அவனை மிதித்துவிட சமுராய் வீரன் கோபம் கொண்டு அவனைப் போருக்கு அழைக்கிறான். யாராவது வாட்போருக்கு அழைத்தால் அன்று போாிட வேண்டுமாம். இல்லையெனில் ஹரகிாி எனச் சொல்லப்படும்

தற்கொலை செய்து கொள்ளவேண்டும். எனவே இவன் ஒத்துக் கொண்டு குருவிடம் கற்கச் செல்லுகிறான். குரு அவனை எத்தனை தடவை தேனீர் போடுவாய் எனக் கேட்க ஐந்து முறை என்கிறான். குரு அதை பத்தாக்கு,மறுவாரம் வா என்கிறார். மறுவாரம் சென்றால் அதை பதினைந்து தடவை ஒரு நாள் செய்து பார் எனச் சொல்கிறார். இப்படி போருக்கு முதல் நாள் குருவிடம், குருவே எனக்கு வாள் வித்தை எதுவும் சொல்லித் தரவில்லையே எனக் கவலைப் பட்டுக் கேட்க குரு போருக்கு முன்னால் அந்த வீரனைத் தேனீருக்கு அழை என்கிறார்.

இவனும் அந்த வீரனைத் தேனீருக்கு அழைக்கிறான். சற்றுத் துளிகூட கீழே சிந்தாமல், நிதானம் எதுவும் குலையாமல், நல்ல சுவையுடன் தேனீர் கொடுக்கும் அவனைப் பார்த்து வீரனுக்குச் சந்தேகம் வருகிறது.இவ்வளவு நிதானத்துடன் தேனீர் கொடுக்கிறானே. வாட்போர் நன்றாய்க் கற்றிருப்பானோ என நினைத்து யார் உனது குரு எனக் கேட்கிறான். குருவின் பெயர் கேட்டதும் வீரனின் சந்தேகம் உறுதிப்பட அழைத்த போரை திரும்பிப் பெற்று விடுகிறான்..

இந்தக் கதை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

Series Navigation

கே.ஆர். அய்யங்கார்

கே.ஆர். அய்யங்கார்