சுனாமியும் ஃபெட்னாவும் (FETNA ):::

This entry is part [part not set] of 64 in the series 20050113_Issue

கோவிந்த்


பிறநாட்டில் வாழ்பவர்களுக்கு, FETNA என்பது வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு.

இதில் இலங்கைத் தமிழ்சங்கம் உள்ளடக்கி பல அமெரிக்கத் தமிழ்சங்கங்களும் உறுப்பினர்கள். அதன் விவரம் பற்றி FETNA.org-ல் காணலாம்.

பொதுவாக வருடம் ஒருமுறை, பெரும் விழாவக கிழக்குபகுதியில் கூட கொண்டாடுவது வழக்கம். வெறும் கேளிக்கை கூத்தாக இல்லாமல், கூத்துப்பட்டறை போன்ற இலக்கிய உணர்வு நாடகங்கள், பிரபஞ்சன் போன்ற குறிக்கோள் உள்ள எழுத்தாளர்கள் என தரமிகு விழாவாக கொண்டாடுவது மிகவும் பாராட்ட வேண்டிய விஷயம்.

கேளிக்கை, இலக்கியம் தாண்டி அதன் சக்தி வெளிப்பட்டது தவிர்க்க முடியாத துர்நிகழ்ச்சிகளில் அது ஆற்றும் பங்கின் போது தான்.

நமது எல்லோர் மனங்களையும் சுட்டுப்போட்ட கும்பகோணவிஷயத்தில் FETNA உதவும் பிரிவை ஆரம்பித்தது. அது கூட தானாக நடந்த ஆச்சரிய விஷயம்.

அது பற்றிய தகவல்களுக்கு அதன் இணையத்தளம் காணலாம்.

தற்போது , FETNA சுனாமி அழிவிற்கு உதவிக்கரமாய் நிதி திரட்டி வழங்குகிறது.

அமெரிக்கவாழ் தமிழர்களில் பல மனநிலை கொண்டவர்கள் உண்டு. பல காரண வேறுபாடுகள் இருந்தாலும் சிந்தனா முறை வேறுபாடு வருவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று – அவர்கள் இருக்கும் விசா முறை.

பச்சை அட்டை கிடைப்பது அரிதாகப்போனதாலும், H1 மற்றும் L1 விசாவில் இருப்பவர்கள் காரணமாகவும் தமிழகம் சார்ந்த உதவிப் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்வது FETNA-விற்கு அவசியமாகிறது.

பல அமைப்புகள் , தமிழகம் , இந்திய மற்றும் இலங்கைச் சார்ந்த அமைப்புகள் நிதி திரட்டி வந்தாலும் , FETNA- வின் நிதிக்கு உதவ வேண்டியது தமிழர்களின் கடமை.

காரணம், பாதிக்கப்பட்ட தமிழகத்தில் நிச்சயம் அமெரிக்கத்தமிழ் சங்கங்கள் அளித்த உதவி அறியப்பட வேண்டும். அப்போது தான், அக்கரையில் உள்ள நமது அக்கறை அவர்களுக்குப் புரியும். உறவும் நம்பிக்கையும் மேம்படும். நம்மை ‘அந்நியன் ‘ எனும் நினைப்பு போகும்.

நேரடிக் களப்பணியில் FETNA இறங்கி வேலை பார்க்காததால், அப்படி நேரடிக்களப்பணியாற்றும் குழுக்களுக்கு பண உதவி செய்வதற்கு முன்னுரிமை வழங்குபவர்கள் , சிறிது தொகையை FETNA-விற்கும் வழங்கலாம்.

தமிழர் கூட்டமைப்பின் செயல்பாட்டுக்கு உதவுவது தேவையான ஒன்று.

FETNAவும் தன் கடமையுணர்ந்து இதில் களமிறங்கி இருப்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

ஃFETNA-விற்கு நிதி உதவி வழங்க விரும்புபவர்கள், அந்தந்த பகுதி தமிழ்சங்கங்களையோ அல்லது president@fetna.org மற்றும் annaiillam@comcast.net மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளலாம்.

சிறுதுளி பெருவெள்ளம் என்பதுபடி, நீங்கள் அனுப்பும் பொருளுதவி மிக மிக முக்கியமானது என அறிக.

அதும் போக, FETNA- 501(3)(C) உடைய அமைப்பு என்பதால், உங்களின் கொடைக்கு வருமான வரிவிலக்கு உண்டு.

ஃFETNA-விற்கு ஒரு கோரிக்கை.

பல உள்பிரிவு அமைப்புகள் இருப்பது போல், FETNA-வில் ‘சேவை பகுதி ‘க்கென்று ஒரு உள்பிரிவு அமைக்கலாம்.

அல்லது, தமிழக, இலங்கையில் பணியாற்றும் அனைத்து அமைப்புகளுக்கும் தகவல் பாலமாக இருக்கலாம்.

—-

கோவிந்த்

—-

gocha2004@yahoo.com

Series Navigation

கோவிந்த்

கோவிந்த்