கடிதம் ஜனவரி 13,2005 – கே.ரவி ஸ்ரீநிவாஸ்: அரவிந்தன்: பா.ரெங்கதுரை

This entry is part [part not set] of 64 in the series 20050113_Issue

சோதிப் பிரகாசம்


திண்ணையின் ஆசிரியருக்கு, வணக்கம்!

ஜெய மோகனின் ‘காடு ‘ கதை பற்றிய ஒரு விவாதத்தின் போது திரு. ரவி ஸ்ரீநிவாஸ் அவர்களைக் கொஞ்சம் கடுமையாகவே நான் எதிர் கொண்டு இருந்தேன். அவ்வளவு கடுமையாக அவருக்கு நான் மறு-வினை புரிந்து இருக்க வேண்டியது இல்லை என்று சில சமயங்களில் எனக்குத் தோன்றுவது உண்டு.

எனினும், ஆள் வயமான ஒரு சாடலாக அதனை ரவி ஸ்ரீநிவாஸ் எடுத்துக் கொள்ள வில்லை என்பது மகிழ்ச்சிக்கு உரியது!

ஆனால், திரு. எஸ். அரவிந்தன் நீல கண்டன் அவர்களோ எல்லா வற்றையும் ஆள் வயமாக எடுத்துக் கொள்கிறார்; மனம் புண்பட்டும் போகிறார்—-ருஷ்யாவின் அதிபராக இருந்த ஸ்தாலினைப் போல!

எப்படியும், என்னைப் பற்றிய அவரது எல்லாக் கிண்டல்களையும்—-அப்பு + அழுக்கு உட்பட—-மிகவும் சுவனித்து நான் மகிழ்ந்தேன். ‘சாதி-மத வேறுபாடு ‘களைப் பார்க்காமல் கடல் கோளால் பாதிக்கப் பட்ட மக்கள் இடையே அவர் ஆற்றி இருக்கின்ற பணிகள் மகிழ்ச்சிக்கு உரியவை!

‘மெய்மையின் மயக்கம் ‘ பற்றிய திரு. பா. ரெங்கதுரை அவர்களின் மடலுக்கு நன்றி! அவர் குறிப்பிட்டு இருக்கின்ற கவிதைதான் நான் எழுதிய கடைசிக் கவிதை என்று எனக்குத் தோன்றுகிறது.

அவரும் சில கட்டுரைகளை எழுதலாமே!

அன்புடன்,

சோதிப் பிரகாசம்

08-1-2005.

sothipiragasam@yahoo.co.in

Series Navigation

சோதிப் பிரகாசம்

சோதிப் பிரகாசம்