இரு கவிதைகள்

This entry is part of 46 in the series 20060217_Issue

றகுமான் ஏ. ஜெமில்ஒரு ஊசித்தும்பியின் கேவல்

நரகல் கிளறும் இவ்வதிகாலை
கிளப்பாட்டும் கிழவன் கதையும் பயின்றபடியாக
மயிலிறகு குட்டிபோட்ட மாயத்தை
தோழியிடம் கூடிக்கூடி குசுகுசுத்து
தோப்புக் கறணம் வாங்கியபடியாக கிடந்திருப்பேன்
முன்பள்ளி வெளியில் சம்மாரமிட்டபடி

ஏன் மணல்வீட்டை சாித்து
நிர்வாணமாய் நின்றபடி மூத்திரம்பெய்து
யாதேனுமொரு நிழலசைவில் கீாிடும்
என் அல்லசல் குட்டிநட்டிகள்
பள்ளிக்கமர்த்தப்பட்ட சூாிய உதயத்தில்தான்
நானும் வலுக்கட்டாயமாக
வீட்டு வேலைக்கமர்த்தப்படலானேன்.

ஏன்னை ஆடு மாடுகள்மாதிாி
ஒரு அடிமையாக வித்துத்தொலைத்து
பட்டாம்பூச்சி பிடித்துவிளையாடும்
என் ஆசைகளை சொதப்பி
கனவுகளையும் செமித்தாயே!
அம்மா நீ மஹா கொடுரீதான்.

இந்தப் பளிங்கு மாளிகையின்
நாய்க்கும் பூனைக்குமான செல்லத்தில்
சொற்பமும் எனக்கு வாய்க்காமலாயிற்று
இருந்தும் இந்தப் பிராணிகளோடுதான்
ஏன் ஆறுதல்களும் முறைப்பாடுமாகும்.

ஏஜமானின் ஆக்கிரமிப்பிலிருந்து தப்பி
வாழ்தலின் அழகை ரசிக்கும்படியான
ஏன் சூாியன் அதோ அழுகிறது
தூக்கணம் குருவின் சிறகடிப்பிலிருந்தும்
சிலந்தியின் காலிடுக்கிலிருந்துமாக.


எனதின் பாடலும்
திராய்க்காற சிறுமியும்

மிக அதிகாலை மங்கலான வெளி
புழுப்பூச்சிகளற்ற தெரு
இரவின் அடைமழை கூதலில் கொடுகிக்கிடந்தது
ஏனதின் நாயும் பூனையும்
சற்று தொலைவில் ஆயதம் தாித்தபடியாக
நுகா;ந்தனர் சிலர் அடையாளம் காணமுடியாதபடி

வயற்காடுகளின் ஈரம் உலராத பிசுபிசுப்புகளோடு
சேறு நெடி அடிக்கும்படியாக
மிலாந்தினாள் சிறுமி
திராய் கத்தைகளோடு
மிகுதியாயும் ஒட்டிக்கிழங்கும் வைத்திருந்தாள்

அம்மாவை பறிகொடுத்து தவிக்கும்
தனித்த பறவையின் கேவலாக
சோகம் மிகுந்த பாடலாக கவிந்தது
அந்தப் பிஞ்சின் இரங்கல்
இன்னும் எல்லாவிதமுமான பிரக்ஞைகளும்
இழையோடிக்கிடந்தது அவள் முகத்தில்

ஒரு கலர் பெட்டிக்காக
அல்லது மிகவும் அவசியமென்றாகிய
ஏதேனும் ஒன்றுக்காக
இந்த திராய் கத்தைகளை
அவள் ஏந்தி வந்திருக்கக்கூடும்
அப்பாவின் பாடுகளை தணிக்கும்படியாக

இருந்தும் எனதின் உணர்வெல்லாம்
யாரேனும் ஒரு காட்டுமிராண்டி
தனித்த ஒரு சூழலில்
இந்தப் பட்டடாம் பூச்சியின் சிறகடிப்பை
நிர்மூலமாக்கிவிடலாமென்பதுபற்றியேதான்.

றகுமான் ஏ. ஜெமில், இலங்கை

Series Navigation