அகரம்..அமுதாவின் வெண்பாக்கள்!

This entry is part [part not set] of 40 in the series 20080522_Issue

அகரம்.அமுதா


அஞ்சி வருஷம் அரசாள வேண்டியே

அஞ்சோபத் தோலஞ்சம் தந்தீர்!அதை -மிஞ்ச

ஒருடி.வி தந்தீர்! இரும்!கொடுத்த வாக்கை

நிறைவேற்றித் தந்தீரா நீர்?

புட்டிக்கு ‘பார்’திறந் தோங்கு புகழ்பெற்றீர்!

குட்டிக்கு லாட்ஜ்திறக்கக் கூடாதா? -சட்டம்

மதுவிலக்கை ரத்துசெயத் தானா? இதற்கும்

புதுவிதியைக் கண்டு புகுத்து!


amuthasudha76@yahoo.com.sg

Series Navigation

அகரம்.அமுதா

அகரம்.அமுதா

அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்! – கல்வி!

This entry is part [part not set] of 45 in the series 20080501_Issue

அகரம்.அமுதா



முதுகில்புக்ஸ் மூட்டை சுமந்துநான் போக

பொதிகழுதை கண்டு புலம்பும் -அதுக்கிருக்கும்

நல்ல குணங்கூட நாலுபேர்க் கில்லையிக்

கல்வியென் மேலெரிந்த கல்!

எழுதிகை சோர்ந்து விரல்தேய்ந்து ரேகை

அழிந்துகண் பார்வை குறைந்துப் -பழுதாகிக்

கண்ணாடி போட்டபின்னும் ஹோம்வொர்க்செய் என்கறீங்க

என்னாங்க டீச்சர் இது!

விடிந்தால் டியூஷன்விட் டால்பள்ளிக் கூடம்

முடிந்து விளையாடப் போனா �படிங்கிற

வார்த்தையைத்தான் பாட்டிவரை வாய்நிறையக் கற்றிருக்காள்

ஆர்கிட்டச் சொல்லி அழ!

ஹோம்வெர்கை செய்து முடித்தவுடன் ஓடிப்போய்

கேம்ஆட டி.விரிமோட் கேட்டாக்கா �வீம்போட

சீரியல் பார்க்கணுண்ணு சீறுகிறாள் என்மம்மி

போரடிக்குதே வாழ்க்கை போ!


agramamutha08@gmail.com

Series Navigation

அகரம்.அமுதா

அகரம்.அமுதா

அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்!

This entry is part [part not set] of 34 in the series 20080424_Issue

அகரம்.அமுதா


கொம்பு முளைச்சிடுமா பட்டம் படிச்சிட்டா?

ஜம்முண்ணு சுத்திடுவான் ஜாலியா! -கம்முண்ணு

தந்தைக் குருப்படியாய் ஹெல்பேதும் செய்யாமல்

சந்தையி லேஅடிப்பான் சைட்டு!

எம்.ஏ படிச்சதற்(கு) ஏற்றவேலை வேண்டுமென்று

சும்மாத் திரிந்தால் சுகப்படுமா? -பம்மாத்துக்

காட்டாமல் கைக்குக் கிடைத்தவேலை பார்த்தால்தான்

வீட்டில் கிடைக்கும் மதிப்பு!

Series Navigation

அகரம்.அமுதா

அகரம்.அமுதா

அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்!

This entry is part [part not set] of 43 in the series 20080417_Issue

அகரம்.அமுதா


ஆபியம், கிட்டிப்புல், பம்பரம் போயாச்சு;

ஹாபியாய் வீடியோ கேமாச்சு; -ஹேப்பியாய்

குந்தி விளையாடும் கேம்ஸின் அடிமைகளாய்

சந்ததிகள் ஆயிடுச்சே தான்!

மூக்கில் சலியொழுகும்; முன்பல் இரண்டிரர்

காக்கி டவுசரை கையினால் -தூக்கிப்

பிடித்தபடி, பேட்டுயரம் இல்லாப் பொடிசும்

அடிக்குமே சிக்சரை ஆர்த்து!

ஈரெட் டுவயதுமே ஆகாத போதும்வெண்

சீரெட்டு தேடும் சிறுசெல்லாம்! -பீரை

ஒளித்துக் குடிப்பதுடன் சைட்டும் அடிப்பார்கள்

கலிகாலம் ஈதென்றே காண்!


agramamutha08@gmail.com

Series Navigation

அகரம்.அமுதா

அகரம்.அமுதா

அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்

This entry is part [part not set] of 44 in the series 20080410_Issue

அகரம்.அமுதா


1. கணவன்:-

காதோடக் கம்மல் கழட்டிபோய் விற்றபணம்

சூதாட்டத் தில்வெச்சி தோற்றுவிட்டேன் -தோதாக

கட்டிய தாலி கழட்டிநீ தந்தாக்கா

விட்டதை மீட்டிடு வேன்!

மனைவி:-

வேலைக்குப் போகாமல் வெத்துவேட்டாய்ச் சுற்றிவந்து

தாலிக் கொடியையா ~தா|ங்கற? -மாலையானால்

வீட்டுப் பொருளையெல்லாம் விற்றுக் குடித்துவிட்டு

சீட்டாடப் போறியா? சீ!

2. மகன்:-

வீடியோ கேமரா வாய்ஸ்ரெக்கார்(டு) எம்.பி.த்ரி

ரேடியோ இல்லாமல் செல்போனா? -டாடியோட

பேங்க்பேலன்ஸ் தீர்ந்தாலும் தீரட்டும் காஸ்ட்லிசெல்

வாங்கினால்தான் ஃபிரண்ட்ஸ்முன் மதிப்பு!

அன்னை:-

வேர்வைசிந்தி அப்பன் வயல்காட்டில் வேலைசெய்து

கார்ப்பரேஷன் ஸ்கூலிலுன்னைக் கொண்டுபோய் -சேர்க்காமல்

கான்மெண்டில் சேர்த்துவிட்டுக் காலேஜ்க்கும் போச்சொன்னால்

ஏன்டா கொழுப்பா உனக்கு?

அகரம்.அமுதா

Series Navigation

அகரம்.அமுதா

அகரம்.அமுதா

அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்!

This entry is part [part not set] of 44 in the series 20080403_Issue

அகரம்.அமுதா


அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்!

நேர்பிடித்து �கீவில்� நிதமுமே நிண்ணாலும்
நீர்வருமோ கார்ப்பரே ஷன்குழாயில்? -பார்த்தாக்கா
காத்துவரும்; காத்தோட சத்த(ம்)வரும்; நீர்க்குமிழி
பூத்துவரும் பாத்துட்டு போ!

வாராத நீர்க்கு வரிசையிலே நிண்ணுப்பா(ள்);
தேராத வார்த்தைகளால் திட்டிப்பா(ள்); -நேராய்
அடிச்சிப்பா(ள்); மண்டை உடைச்சிப்பா(ள்); சிண்டைப்
பிடிச்சிப்பா(ள்) கொத்தாகப் பிய்த்து!

தண்ணி பிடிக்குமிடம் தண்ணி அடிக்குமிடம்
ரெண்டிலயும் சண்டைக்குப் பஞ்சமில்லே! -தண்ணி
அடிச்சாத்தான் ஆண்சண்டை போடுறான்; பொண்ணோ
பிடிக்கவே போடுறாசண் டை!


agramamutha@yahoo.com

Series Navigation

அகரம்.அமுதா

அகரம்.அமுதா

அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்!

This entry is part [part not set] of 41 in the series 20080320_Issue

அகரம்.அமுதாவின்


அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்!

குட்டைப்பா வாடை கொழுத்த தொடைகாட்ட
வட்டணிந்த மார்பின் வளங்காட்டி -வட்டுடைகீழ்
ஆதார மில்லா அரும்பாகம் காட்டுமவள்
சேதார மில்லாச் சிலை!

குதிகால் அணியால் கொடியிடை ஆடும்
இதழோடு லிப்ஸ்டிக் எழிலாம் -சுதிசேர்
நடையில் நளின நயமிருக்கும் இல்லா
இடைபோல் அணிவாள் உடை!

பாவாடை தாவணிகள் பார்ப்ப(து) அரிதாச்சு
பூவாட்டம் சேலைகளும் போயாச்சு@ -பாவையர்க்கு
சல்வார்க் கமீஸ், சுடி தார்,மிடி, ஜீன்ஸ், மினிஸ்கர்ட்(டு)
எல்லாந்தான் இன்றைய டேஸ்ட்(டு)!


agramamutha@yahoo.com

Series Navigation

அகரம்.அமுதாவின்

அகரம்.அமுதாவின்

அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்!

This entry is part [part not set] of 33 in the series 20080313_Issue

அகரம்.அமுதா


கண்டெக்டர்:-
இந்தாப்பா! பஸ்;ஸிற்குள் ஏறுமுன்னே சொன்னேன்ல!
வந்துட்டான் என்உயிரை வாங்கன்னே -அஞ்சுரூபாய்
சீட்டுக்குச் சில்லரையை நீட்டாமல் நூறுரூபாய்
நோட்டெடுத்து நீட்டுறியா நீ?

பயணி:-
கூட்டத்தில் முந்திவந்து குந்த இடம்பிடிக்கும்
ஆட்டத்தில் தோற்றுநான் அங்கநின்னா -சேட்டையைக்
காட்டுற:அங்கஇங்க ஓட்டுற: நோட்டுதந்தால்
நீட்டுற: சில்லரைக்கே சீட்டு?

அகரம்.அமுதா


agramamutha@yahoo.com

Series Navigation

அகரம்.அமுதா

அகரம்.அமுதா

அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்!

This entry is part [part not set] of 39 in the series 20080306_Issue

அகரம்.அமுதா



கஸ்டமர்:-
டிக்யாஷன் இல்லாமல் ~டீ|யொன்னு போடப்பா!
பக்காவாப் போட்டால் பணமுண்டு -அக்கவுண்டில்
கேட்கிறதாய் எண்ணிக்கிட்டுக் கண்டபடி போட்டாக்கா
சாக்கடைக்குப் போய்டுஞ் சரி!

டீக்கடைக்காரன்:-
டீக்கடை பெஞ்சில்உன் டிக்கியைப் பார்க்பண்ணி
பாக்கிவெச்சி பால்டீயாக் கேட்குறே? -போக்கிடம்
வேறின்றி பேப்பரில் வைத்தகண் வாங்காமல்
ஆரிடம்ஆர் டர்போடு றே?

அகரம்.அமுதா


agramamutha@yahoo.com

Series Navigation

அகரம்.அமுதா

அகரம்.அமுதா