தவம்

This entry is part [part not set] of 24 in the series 20070503_Issue

ஆதிராஜ்


காதலெனும் பொய்யினை நம்பி
கருத்தழிந்து கடமை மறந்து
சோதனைகள் வந்ததன் பின்னே
சோகமென்னும் அலைகடல் மூழ்கி
போதம் பெற்ற தவசியை அண்டி
போகும் பாதை எதுவெனக் கேட்டேன்!
பாதை காட்டும் முன்னர் பணித்த
பணிகள் யாவும் வேதனை ஆச்சே!
காதலித்த காரிகைக்கு ஏங்கி
கால முற்றும் தவஞ் செயலானேன்!

– ஆதிராஜ்.

Series Navigation

ஆதிராஜ்

ஆதிராஜ்

தவம்

This entry is part [part not set] of 51 in the series 20040219_Issue

வை.ஈ. மணி


ஐந்தையும் குழைத்து ஐம்பு லனாக்கி
ஐந்தையும் அவனிக் களித்து மனிதர்
போற்றிடும் இறைவன் புதிர்போல் பாரில்
சேற்றினில் முளைக்கும் செந்தா மரைபோல்
உடலெனும் அழுக்கை உறையாய்ப் பூண்டு
குடத்தினுள் விளக்காய் குன்றி நின்றான். (1)

வலையினில் விழுந்த விலங்கைப் போலும்
புலன்களின் வலுத்த பிடியில் சிக்கி
நாடகம் நிகழ்த்தும் நோக்கம், புறத்தில்
தேடியு மறியத் தளைத்த மனிதன்
அறிவினை யளித்து அகத்தி லமர்ந்த
இறைவனை எளிதில் உணர்வ தற்கே. (2)

கடலினி லெழுந்து கரிய முகிலாய்
கடலுடன் தண்ணீர் கூடல் போன்று
பூரணன் படைப்பில் புகுந்து வாழ்வை
போரெனச் செய்து பற்றை அகற்றி
அகவுயிர் முழுமை யடைந்து தன்னில்
தொகுத்திட ஆதரித் தருளு கின்றான். (3)
—-
ntcmama@pathcom.com

Series Navigation

வை ஈ மணி

வை ஈ மணி

தவம்

This entry is part [part not set] of 42 in the series 20030615_Issue

ஜெயந்தி சேது


ஏறாத கோவிலில்லை
வேண்டாத தெய்வமில்லை
கேட்பதெல்லாம்..
ஆசையாய் அம்மா என்றழைத்து
வெற்றுடம்பை உயிர்கொண்டு நிரப்பும் சிறுஉயிர்

புலனனைத்தும் அடக்கி
புலால் ஒதுக்கி
வெளியுலகம் மறந்து
வெற்றிடத்தில் மனம் செலுத்தி
உயிர்க்காலில் செய்யும் தவங்களிவை…

என்ன பயன் ?
அனுதாபப் பார்வைகளால் அடிவாங்கிச் செய்த
அடிப்பிரதட்சணங்கள் அனர்த்தமாய்போயிருக்கின்றன..

தவங்களும் வரங்களும்
தவறான கற்பனைகள் என்று
கண்விழித்து நிஜவுலகம் தரிசிக்க
கண்ணீரோடு கைகூப்பும் ஆதரவற்ற மழலைகள்

யாரோ பெற்று யாருமே பெற்றுக்கொள்ளாத வரங்கள்…

எல்லா கோவில்கள் அருகேயும்
ஓர் குழந்தைகள் இல்லம் வேண்டும்..

கடவுள்கள் கண்திறப்பதில்லை என்று
கண்மூடிச் சொல்லும் மனிதர்களுக்காகவேனும்…!!

***
jeyanthi.sethu@attws.com

Series Navigation

ஜெயந்தி சேது

ஜெயந்தி சேது

தவம்

This entry is part [part not set] of 30 in the series 20030125_Issue

வேதா


உன் பார்வை தீண்டலுக்காய்..!
உன் சிரிப்பு சிதறலுக்காய்…!
உன் அணைப்பின் ஆறுதலுக்காய்…!
பிரியமான புன்னகைக்காய் – என்னை
பிளந்து வைக்கும் நிகழ்வுகளுக்காய்…!
எட்டி நின்று பரந்து, விரிந்து,
உருண்டோடி, உறைந்து , கரைந்து,
உருகி வழியும் வானமாய்…
உன் விரல் நுனியில்
ஒற்றை மழைத்துளியாய்…
நான் !

tamilmano@rediffmail.com

Series Navigation

வேதா

வேதா