ஆசை

This entry is part [part not set] of 45 in the series 20090731_Issue

ரதி ஸ்டீபன்


மிகவும் கிட்டத்தில் பார்க்கிறேன்
நான் நினைத்ததை விடவும்
மிகவும் இயல்பாய் இருந்தது

இது வரை தொட்டுப்பார்த்திருக்காததால்
கொஞ்சம் பயமாய் கொஞ்சம் அன்னியமாய்
விலகியே இருந்தது

கனவுகளில் சிரித்தும்
நிஐத்தில் பயம் காட்டியும்
முகில்களுக்குள் எட்டிப்பார்க்கும்
நிலவு போல

தொட்டுவிடும் தூரம்தான்
பிரகாசமாய்
பசுமையாய்
செளிப்பாய்
மிகவும் சினேகமாய் தெரிகிறதே

இன்னும் கொஞ்சம் முயற்சித்தால்
தொட்டுவிடலாம்
ஒருமுறையாவது
வெற்றியை
stefiny20@hotmail.com

Series Navigation

ரதி ஸ்டீபன்

ரதி ஸ்டீபன்

ஆசை

This entry is part [part not set] of 21 in the series 20090122_Issue

ரா.கணேஷ்


என் வாழ்வின்
முற்றுப்புள்ளி
என் பின்னே
வந்து
சம்மணமிடும் போது…

என் சுவாசம்
எனை விடுத்து
விதவை
ஆகும் போது…

மரணமென்னும்
வேடன்
என் வேர்களை
அறுக்கும் போது…

உறவுகளே
உங்கள் கூட்டில்
எனை
அடைகாத்தவர்களே !

ஒப்பா¡¢யிட்டோ
ஓலமிட்டோ
கதா¢யோ
அழுதுவிடாதீர்கள்
என்
கடமையை
நான்
பூர்த்தி செய்யவில்லை
என்றாகி விடும்

உங்கள்
பாதையில்
கைகோர்க்க
இனி
நானில்லை

உங்கள்
கனவுகளில்
வெறும்
கனவாய்
நான்

வெடித்து சிதறிய
பலூன் காற்றாய்
வாங்க மறந்த
சில்லரை காசாய்
நான்
ஆகியிருப்பேன் !
அவ்வளவே

எனக்காக
என்னுள்
கவிழ்ந்து கிடந்த
ரகசியங்களை
என்னுடன்
சேர்த்து தீயிடுங்கள்

அதில்

அழகாய் சில
இருக்கலாம்
இருந்திருந்தால்..
கவிதையாய் கொட்டியிருப்பேன்

அபூர்வமாய் சில
இருக்கலாம்
இருந்திருந்தால்…
கையோடு கொண்டிருப்பேன்

அசிங்கமாய் சில
இருக்கலாம்
இருந்திருந்தால்…
கண்டிப்பாக இருக்கும்
என்னுடன்
சேர்த்து தீயிடுங்கள்

பின் என்ன ?

நான் யார்
எதற்காக வந்தேன்
எங்கு வந்தேன்
எங்கு செல்கிறேன்
என் வாழ்வின்
அர்த்தம்தான்
என்ன ?
யாருக்குத் தொ¢யும் ?
எனக்கு மட்டும் தானோ ?

அன்று…
இந்த
கேள்விகள் தான்
மிஞ்சும்

இக்கேள்விகளை
நம்
வீட்டு சுவர்களில்
ஆணியடித்து
மாட்டி
வையுங்கள் !

Series Navigation

ரா.கணேஷ்

ரா.கணேஷ்

ஆசை

This entry is part [part not set] of 23 in the series 20021102_Issue

ஆனந்தன்


நன்கு விலையும்
நன் -சய்
நிலத்தின் மீது
ஆசை!

அந்தஸ்தின்
அடைய ‘ளம் க ‘ட்டும்
வைர
வைடுரியத்தின் மீது
ஆசை!

ப ‘ர்தவுடன் மே ‘கம்
பற்றிக் -க ‘ள்ளூம்
-பண்ணின் மீது
ஆசை!

பூத்துக் குளுங்கும்
பூவின் மீது
ஆசை!

பறந்து திரியும்
பறவை மீது
ஆசை!

குற்றத்தின் எஜம ‘னன்
ஆசை!
ஆசையை அரவே
துறந்து நில்…

-ப ‘ற ‘மையும், கே ‘பமும்
ஆசையின் குழந்தைகள்!

உலகத்தை -வன்றவனுக்கும்
உள்ளத்தில் நிறைவு வேண்டி
ஆசை!

வேண்டும் என்ற உள்ளம்
வேண்ட ‘த பே ‘துத ‘ன்
மன நிறைவு தேடி வரும்!

இன்னல்களின்
இனியவன் ஆசை!
துன்பத்தின்
துனையவன் ஆசை!

ஆசையைப் பகைத்துக் -க ‘ண்ட ‘ல்
ஆண்டவனை அனைத்துக் -க ‘ள்வ ‘ய்!

k_anandan@yahoo.com

Series Navigation

ஆனந்தன்

ஆனந்தன்

ஆசை

This entry is part [part not set] of 30 in the series 20020414_Issue

கு.முனியசாமி


எம்ப்பீசி எடுத்து
என்ஜினியரிங் சேருகையில்
பைப்பீசி மீது ஒரு
ப்ரிதாபமாய் ஆசை…

மெக்கானிக்கல் சேர்ந்து
மேலாக முடித்தாலும்
எலக்ட்ரானிக் மீது
ஏனோ ஒரு ஆசை…

கம்பனி வேலை
கையில் இருந்தாலும்
எம்டெக் படிக்க
இதயத்தில் வரும் ஆசை…

காதலே மேலென்று
கல்யாணம் செய்த பின்பு
அத்தையின் மகள் மீது
அரும்புகின்ற ஒரு ஆசை…

ஒன்றே போது மென்று
உவகையில் இருந்து விட்டு
ஐம்பதைக் கடந்த பின்பு
ஆசைக்கு மகள் ஆசை…

இக்கரை எழில் மறந்து
அக்கரை பசுமை என்று
சக்கரை தேடி நிற்கும்
சராசரி ஆசை…

Series Navigation

கு முனியசாமி

கு முனியசாமி