அமைதி

This entry is part [part not set] of 54 in the series 20090915_Issue

முத்துசாமி பழனியப்பன்சீரான இடைவெளிகளில்
கேட்டுக் கொண்டிருந்தது
என் வீட்டுக் கடிகாரச் சத்தமும்
பக்கத்து வீட்டுக் குறட்டைச் சத்தமும்
எதிர் வீட்டுக் குழந்தை அழுகையும்
தெருவில் நாயின் ஊளையும்
இருந்தும் – அமைதியாக இருந்தது
இரவு இடைவெளிகளில்!

muthusamypalaniappan@gmail.com

Series Navigation

அமைதி

This entry is part [part not set] of 40 in the series 20031204_Issue

பா. சத்தியமோகன்.


ஒரு முட்டாளைப் போல
நிதானமாக வெறிக்கிறது
நெருங்கிவிட முடியாமல்
தள்ளி நிற்கும் அமைதி
உள்புறம் தாழில்லாக் கழிவறை போல
பதற்றம் மோதிச் சாய்கிறது அமைதி
மெல்ல ஒரு காவியத்தின் தயிர்ப் பானையில்
நுரை திரள வெண்ணெயுடன்
திடப்படுத்திக் கொண்டு
மூச்சு விடுகிறது அமைதி

நம்பிக் கொண்டு
குயில் பாடவில்லையா
மழையா இரவா வெயிலா
தனித்திருந்து அமுதம் இறைத்துப்
பாடிக் கொண்டிருக்கிறது அமைதி.
———————————————-
cdl_lavi@sancharnet.in

Series Navigation

அமைதி

This entry is part [part not set] of 37 in the series 20030202_Issue

மொழியாக்கம் : ஜடாயு ( மூலம் : சுவாமி விவேகானந்தரின் Peace என்ற கவிதை)


அறிந்து கொள் நண்பா
ஆற்றலிடம் மட்டுமே வரும்
அமைதி

சக்தியாய்த் தோன்றாத சக்தி
இருளில் இருக்கும் ஒளி
ஒளிப்பிழம்பின் நிழல்
அமைதி

பேசாத பேருவகை
சோகப் படாத பெரும் துக்கம்
வாழாத அமர வாழ்வு
அஞ்சலி பெறாத முடிவில்லா மரணம்
அமைதி

இன்பமும் அல்ல துன்பமும் அல்ல
இடைப்பட்டது அமைதி
இரவும் அல்ல பகலும் அல்ல
இவற்றை இணைப்பது அமைதி .
(c) ஜடாயு (jataayu@hotmail.com)
** மூலக் கவிதை : The Complete Works of Swami Vivekananda, Published by Advaita Ashrama, Calcutta, INDIA .

Series Navigation

அமைதி

This entry is part [part not set] of 37 in the series 20030104_Issue

புஷ்பா கிறிஸ்ரி


எங்கிருந்தோ ஒரு

சில்வண்டு

தனிமையில்

பறந்து வந்தது

காட்டின் மத்தியில்

அமைதியான சூழலில்

அந்த மயானம்

தனித்து கிடந்தது

பாதை தவறிய

வண்டும்

மயானததை

அடைந்த போது

தனிமையும்

பயமும் தொற்றிக் கொள்ள

வண்டு அழுதது.

நான் எங்கோ

செல்ல வந்தேன்

தொலைந்து போனேன்

என்ற வண்டின் கதை கேட்டு

காடு கண்ணீர் விட்டது

‘அழாதே!

நீ போக வேண்டியவிடம்

எனக்கும் தெரியாது

நானும் நாட்டிலிருந்து

வெகு தூரம் தொலைந்து

வந்து தானிங்கு

தஞ்சமானேன்

அழுது பயனென்ன ?

நீ என் நிழலில் தங்கலாம்

என் நிழலில் நீயும் அமைதி காண் ‘

என்றது காடு

வண்டு வேறு வழியின்றி

அமைதியாக …

அடக்கமாக..

வாழத்தொடங்கியது..

அந்த மயானத்துக்

காட்டில்….

புஷ்பா கிறிஸ்ரி
pushpa_christy@yahoo.com

Series Navigation