அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்

This entry is part of 44 in the series 20080410_Issue

அகரம்.அமுதா


1. கணவன்:-

காதோடக் கம்மல் கழட்டிபோய் விற்றபணம்

சூதாட்டத் தில்வெச்சி தோற்றுவிட்டேன் -தோதாக

கட்டிய தாலி கழட்டிநீ தந்தாக்கா

விட்டதை மீட்டிடு வேன்!

மனைவி:-

வேலைக்குப் போகாமல் வெத்துவேட்டாய்ச் சுற்றிவந்து

தாலிக் கொடியையா ~தா|ங்கற? -மாலையானால்

வீட்டுப் பொருளையெல்லாம் விற்றுக் குடித்துவிட்டு

சீட்டாடப் போறியா? சீ!

2. மகன்:-

வீடியோ கேமரா வாய்ஸ்ரெக்கார்(டு) எம்.பி.த்ரி

ரேடியோ இல்லாமல் செல்போனா? -டாடியோட

பேங்க்பேலன்ஸ் தீர்ந்தாலும் தீரட்டும் காஸ்ட்லிசெல்

வாங்கினால்தான் ஃபிரண்ட்ஸ்முன் மதிப்பு!

அன்னை:-

வேர்வைசிந்தி அப்பன் வயல்காட்டில் வேலைசெய்து

கார்ப்பரேஷன் ஸ்கூலிலுன்னைக் கொண்டுபோய் -சேர்க்காமல்

கான்மெண்டில் சேர்த்துவிட்டுக் காலேஜ்க்கும் போச்சொன்னால்

ஏன்டா கொழுப்பா உனக்கு?

அகரம்.அமுதா

Series Navigation