நிராகரிப்பு

This entry is part of 39 in the series 20101002_Issue

சிறி.ப.வில்லியம்ஸ்ஓயாத கீச்சொலியும்
ஒருவிதமான துர்நாற்றமும்
யாருக்கும் பிடிக்கவில்லை
வேறு வழியின்றி
வரி விளம்பரத்திற்கு
பணம் செலுத்தியாயிற்று
போகுமிடத்தில்
இதையும் விட
அற்பக் காரணங்களுக்காக நிராகரிகப்படக்கூடும்
ஆசையாய் வாங்கிய
காதல்பறவைகளும் கூண்டும் ..

Series Navigation