நிராகரிப்பு

This entry is part [part not set] of 39 in the series 20101002_Issue

சிறி.ப.வில்லியம்ஸ்



ஓயாத கீச்சொலியும்
ஒருவிதமான துர்நாற்றமும்
யாருக்கும் பிடிக்கவில்லை
வேறு வழியின்றி
வரி விளம்பரத்திற்கு
பணம் செலுத்தியாயிற்று
போகுமிடத்தில்
இதையும் விட
அற்பக் காரணங்களுக்காக நிராகரிகப்படக்கூடும்
ஆசையாய் வாங்கிய
காதல்பறவைகளும் கூண்டும் ..

Series Navigation

சிறி. ப. வில்லியம்ஸ்

சிறி. ப. வில்லியம்ஸ்

நிராகரிப்பு

This entry is part [part not set] of 30 in the series 20100530_Issue

ஸ் ரீபன்



காய்ந்துபோன ஒரு குவளைக்குள் விழும்
ஒரு புதிய கண்ணீர்த்துளியின் சத்தமும்
இலைகள் தேடி அலுத்துப்போன
ஒரு ஆட்டுக்குட்டியின் விலகலும்
ஒரு புதிய சோகத்தின் வரவை பறைசாற்ற
போதுமானதாக இருக்கலாம்

மரங்கள் பிடித்துக்கொண்ட நிலப்பரப்பில்
தனது நன்றிகளையும் பிரியங்களையும் ஒளித்துவிட்ட
சூரியனின் விலகலும்கூட

அடைக்கலம் குருவிக்கு கூடுகட்ட
ஒரு புதிய இடம்; தேவைப்படுகிறது
நானும் தனியாகத்தான் இருக்கிறேன் என்பதை
எப்படி புரியவைக்க

Series Navigation

ஸ்ரீபன்

ஸ்ரீபன்

நிராகரிப்பு

This entry is part [part not set] of 47 in the series 20040304_Issue

சேவியர்


0

வாசலிலேயே
நிறுத்தப் படுகிறேன்
நான்.

நீ
காசு போட்டு வளர்க்கிறாய்
இரண்டு நாய்களையும்
ஒரு
காவலாளியையும்.

உன்
குறட்டையையும்
பாதுகாக்கும்
கடமை அவர்களுக்கு.

சன்னல் வழிக்
கசிகிறது
உன்
தொலைக்காட்சி ஒலி.

அவ்வப்போது
தொலைபேசுகிறாய்.
சத்தமாக சிரிக்கிறாய் !

எல்லாம்
கேட்டுக் கொண்டும்
கைகளைக்
கட்டிக் கொண்டும்
காத்திருக்கிறேன்
நான்.

நீ
வெளிவரவுமில்லை
என்னை
உள்ளே அனுமதிக்கவும்
இல்லை.

ஏமாற்ற இருளில்
ஏறித் திரும்புகிறேன்.

கதவுகள் இல்லாமல்
கட்டியிருக்கலாம்
நீ
உன் உயரமான
மதில் சுவரை !

0

Xavier.Dasaian@in.eFunds.com

Series Navigation

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்