அரசியல்
எம்.ரிஷான் ஷெரீப்,இலங்கை
வண்ணத்துப்பூச்சியொன்றின்
ஒரு இறகில் நீயும்
மறு இறகில் நானும் ஏறிக் கொண்டு
உலகம் முழுதும் சுற்றிப்பார்ப்போம்
நான் ஆளும் தேசம் பற்றிய
பஞ்சப்பாட்டுக்களைத் தவிர்த்து
என் பற்றிச் சிலாகித்துப்பாடு
அது நான் செய்யாததாக இருப்பினும்
நிறைந்த நற்செயல்களாலும்
அருள்மிகுந்த கீர்த்திகளாலும் -எனது
நீண்ட ஆயுளுக்கான பிரார்த்தனைகளாலும்
ஆனதாக இருக்கட்டும்
காலம் காலமாகப் பிரிந்தே பயணித்த
இரு சமாந்தரத் தண்டவாளங்களை
சூடாகித் தெறித்துப் பின் காய்ந்து போன
சிவப்புவர்ணத்தைப் பூசி இணைத்தது
தலையற்ற முண்டமொன்று
அது பற்றி உனக்கென்ன கவலை?
வா
வண்ணத்துப்பூச்சி வேண்டாம்
தும்பிக்கு நான்கு சிறகுகளாம்
அதன்
ஒரு இறகில் நீயும்
மறு இறகில் நானும்
மற்ற இரண்டில்
எதிர்த்துக் கேள்விகளெதுவும் கேட்கவிழையாத
மேலுமிரு அப்பாவிக் குடிமகன்களையுமேற்றி
என் புகழ் பாடியபடி
உலகம் முழுதும் சுற்றிப்பார்ப்போம்
– எம்.ரிஷான் ஷெரீப்,இலங்கை.
mrishanshareef@gmail.com
நன்றி – உன்னதம் இதழ், டிசம்பர் 2009
- கரைப்பார் கரைத்தால்
- பொட்டலம்
- அரசியல்
- இதையும்
- காத்திருப்பேன்
- அறம் செறிந்த அன்பும் மறமும்
- மொழிவது சுகம்: அடித்து வளர்க்கிற பிள்ளைகள்
- முள்பாதை 13
- பள்ளத்தாக்கு (முடிவு)
- பள்ளத்தாக்கு
- மாயபிம்பம்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) நாலங்க நாடகம் அங்கம் -4 காட்சி -6 (கடைசிக் காட்சி)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஆத்மாவின் உபதேசம் எனக்கு >> கவிதை -22 பாகம் -4
- உண்மை பேசும் சிநேகிதம்
- இயல்பாயொரு இயல்பு உடைத்தல்..
- வஹ்ஹாபியின் மோசடி
- “ஜெயகாந்தனின் இலக்கியப் பங்களிப்பு” கனடா எழுத்தாளர் இணையம் நடத்தும் கவியரங்கும் கருத்தரங்கும்
- புதுவகை நோய்: இமி-5
- வண்ணநிலவனின் நாவல் ‘ரெயினீஸ் ஐயர் தெரு’
- குழந்தையின் கண்களால்
- ரெ.கார்த்திகேசுவின் சிறுகதை :மல்லியும் மழையும் – சிறுகதை விமர்சனம்
- விண்வெளிப் பயணங்களில் பங்கெடுத்த விஞ்ஞானி கார்ல் சேகன்
- வானுக்கு கீழே அதன் வாழ்க்கை
- வேத வனம் -விருட்சம் 68
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -2 பாகம் -7 மதுக்குடி அங்காடி (The Tavern)
- நான் யார்?