உறவு

This entry is part of 29 in the series 20070201_Issue

வி கலைச்செல்வி


உறவு துளிர்க்கும்போதே
விலகலுக்கு அஸ்திவாரம்

எதிராளி மட்டுமே
எப்போதும் குற்றவாளி !

எதிர்கொள்ளும் நேரங்களி ல்

உள்ளத்தில் உதிக்காததால்
உதட்டை வருத்தும் சிரிப்பு

அப்படியென்ன அவசரம்
அதிகம் இதழ் பிரிக்காமல் ?

‘அவசரம்தானா, அலட்சியமா ?’
ஆராய்ந்தே அதிகம் விலகுவோம்

குற்றம் பார்த்துப் பார்த்தே
சுற்றம் தொலைத்துவிட்டோம்

முற்றிலும் மறந்து போனோம்

அரக்கனும் நம் நெஞ்சி¢ல் உண்டு!
ஆண்டவனும் நம் நெஞ்சிலுண்டு!

அசுரனை அழித்து நாளும்
ஆண்டவனை அதிகம் நாடத்

தொடங்குவோம் இந்த நாளில்
தொடருவோம் ஒவ்வொரு நாளும்

உறவுகள் சிறகுகளாகும் !
உதயங்கள் சிறக்கும் நாளும் !

நன்றி : ஒலி 96.8 (2002) , தமிழ் முரசு (2004).


girijanathan@yahoo.com

Series Navigation