வேடம்

This entry is part of 52 in the series 20040513_Issue

நெப்போலியன்


முத்துமாரியம்மன்
பூச்சொரிதல் விழா…
பாஞ்சாலி சபதம்
விடிய விடியக் கூத்து…
துரியோதணன் உருவலுக்கு
கத்திக் கதறியவளுக்கு
ஆபத்பாந்தவனாய்
அருள் புரிந்த
கோவில்பட்டி கண்ணபரமாத்மா
கூத்து முடிந்த
விடியல் கருக்கலில்
தண்டபாணி லாட்ஜில்
ஸ்திரீபார்ட் ஸ்ரீதேவியின்
சேலை உருவிக்கொண்டிருந்தார் !
—-
kavingarnepolian@yahoo.com.sg
—- நெப்போலியன்

____

Series Navigation