‘இவை… நமக்கான வார்த்தைகள்…!’

This entry is part [part not set] of 49 in the series 20110320_Issue

மீராவாணி



 என் வலையில் மாட்டியிருந்த
உன் வார்த்தைகளில்
இரண்டை கையிலெடுத்தேன்
ஒன்று தன்னை விடுவிக்கச்சொல்லி
கண்ணீர் சிந்தியது…
மற்றொன்று
மனதில் இருத்திக்கொள்ளச் சொல்லி
துடித்தது….
நான் வலைப்பின்னுவதை
நிறுத்திவிட்டேன்.
 வார்த்தைகளை குவித்து
கண்ணாமூச்சு ஆடினோம்…
இன்று ஏதோ தொலைந்துவிட்டதாக
முகத்திருப்பிகொள்கிறோம்
தொலந்துப்போனவை
உன் கனவுகளும் என் சிணுங்களுமாக
இருக்கலாம்.
 பேச நினைத்த வார்த்தைகள்
நாம் பேசிய வார்த்தைகளில்
இல்லை!
கடந்திருந்த நொடிகளில்
கசிந்தது உயிரற்ற மொழிகள்,
இப்போதும் கசிந்து வழிகின்றது
சத்தமில்லாத மொழியாய்
நம்மை நாம்
புரிந்துக்கொண்டுவிட்ட
வார்த்தைகள் !
 வார்த்தைகளைப்
பரிமாறிக்கொள்ளும் தருணங்களை
நம்மை கடந்துப்போன நொடிகள்
தருவிக்காது போயிருந்ததால்…
நாம் என்ற நாம்
நானாகவும் நீயாகவும்
பிரிந்துப்போகிறோம்.
 அழைத்துப் பார்த்து
பின் முறைத்துப்போனபோது
வாசலில் நீ சிந்தியிருந்த
வார்த்தைகளை
நான் சேமிக்கிறேன்
என் பொக்கிஷப்பேழைக்குள்!

-மீராவாணி

Series Navigation

‘இவை… நமக்கான வார்த்தைகள்…!’

This entry is part [part not set] of 48 in the series 20110313_Issue

மீராவாணி



 என் வலையில் மாட்டியிருந்த
உன் வார்த்தைகளில்
இரண்டை கையிலெடுத்தேன்
ஒன்று தன்னை விடுவிக்கச்சொல்லி
கண்ணீர் சிந்தியது…
மற்றொன்று
மனதில் இருத்திக்கொள்ளச் சொல்லி
துடித்தது….
நான் வலைப்பின்னுவதை
நிறுத்திவிட்டேன்.
 வார்த்தைகளை குவித்து
கண்ணாமூச்சு ஆடினோம்…
இன்று ஏதோ தொலைந்துவிட்டதாக
முகத்திருப்பிகொள்கிறோம்
தொலந்துப்போனவை
உன் கனவுகளும் என் சிணுங்களுமாக
இருக்கலாம்.
 பேச நினைத்த வார்த்தைகள்
நாம் பேசிய வார்த்தைகளில்
இல்லை!
கடந்திருந்த நொடிகளில்
கசிந்தது உயிரற்ற மொழிகள்,
இப்போதும் கசிந்து வழிகின்றது
சத்தமில்லாத மொழியாய்
நம்மை நாம்
புரிந்துக்கொண்டுவிட்ட
வார்த்தைகள் !
 வார்த்தைகளைப்
பரிமாறிக்கொள்ளும் தருணங்களை
நம்மை கடந்துப்போன நொடிகள்
தருவிக்காது போயிருந்ததால்…
நாம் என்ற நாம்
நானாகவும் நீயாகவும்
பிரிந்துப்போகிறோம்.
 அழைத்துப் பார்த்து
பின் முறைத்துப்போனபோது
வாசலில் நீ சிந்தியிருந்த
வார்த்தைகளை
நான் சேமிக்கிறேன்
என் பொக்கிஷப்பேழைக்குள்!

-மீராவாணி

Series Navigation