சென்னை புத்தகக் கண்காட்சி 2009-ல் எனிஇந்தியன்.காம்

This entry is part [part not set] of 42 in the series 20090115_Issue

பி.கே. சிவகுமார்



சென்னை புத்தகக் கண்காட்சி 2009ல் எனி இந்தியன் கடை எண்: 003

வார்த்தை மாத இதழ் சந்தா சலுகைகள்:

இச்சலுகை 2009 சென்னை புத்தகக் கண்காட்சியில் எனி இந்தியன் கடை எண் 003-ல் நேரடியாகச் சந்தா செலுத்துகிறவர்களுக்கு மட்டுமே.

வார்த்தை ஓராண்டு இந்தியச் சந்தா: ரூபாய் 125 (இது வழக்கமான சந்தாத் தொகையைவிட ரூபாய் 75 குறைவு)

வார்த்தை இரண்டு ஆண்டுகள் இந்தியச் சந்தா: ரூபாய் 250 (இது வழக்கமான சந்தாத் தொகையைவிட ரூபாய் 125 குறைவு)

வார்த்தை ஓராண்டு வெளிநாட்டுச் சந்தா: ரூபாய் 1500 (இது வழக்கமான சந்தாத் தொகையைவிட ரூபாய் 500 குறைவு)

வார்த்தை இரண்டு ஆண்டுகள் வெளிநாட்டுச் சந்தா ரூபாய் 3000 (இது வழக்கமான சந்தாத் தொகையைவிட ரூபாய் 800 குறைவு)

புத்தகக் கண்காட்சியில் எனி இந்தியன் கடையில் அனைத்துப் புத்தகங்களும் (எனி இந்தியன் மற்றும் முன்னணி பதிப்பகங்கள் பதிப்பித்தவை) பத்து சதவீதத் தள்ளுபடி விலையில் கிடைக்கும்.

அனைவரையும் வருக என அழைக்கிறோம்.

To buy Indian Books Online: http://www.AnyIndian.com

To read my writings in Tamil: http://pksivakumar.blogspot.com

Series Navigation

பி.கே. சிவகுமார்

பி.கே. சிவகுமார்

சென்னை புத்தகக் கண்காட்சி 2009-ல் எனிஇந்தியன்.காம்

This entry is part [part not set] of 46 in the series 20090108_Issue

பி.கே. சிவகுமார்


சென்னை புத்தகக் கண்காட்சி 2009ல் எனி இந்தியன் கடை எண்: 003

வார்த்தை மாத இதழ் சந்தா சலுகைகள்:

இச்சலுகை 2009 சென்னை புத்தகக் கண்காட்சியில் எனி இந்தியன் கடை எண் 003-ல் நேரடியாகச் சந்தா செலுத்துகிறவர்களுக்கு மட்டுமே.

வார்த்தை ஓராண்டு இந்தியச் சந்தா: ரூபாய் 125 (இது வழக்கமான சந்தாத் தொகையைவிட ரூபாய் 75 குறைவு)
வார்த்தை இரண்டு ஆண்டுகள் இந்தியச் சந்தா: ரூபாய் 250 (இது வழக்கமான சந்தாத் தொகையைவிட ரூபாய் 125 குறைவு)

வார்த்தை ஓராண்டு வெளிநாட்டுச் சந்தா: ரூபாய் 1500 (இது வழக்கமான சந்தாத் தொகையைவிட ரூபாய் 500 குறைவு)
வார்த்தை இரண்டு ஆண்டுகள் வெளிநாட்டுச் சந்தா ரூபாய் 3000 (இது வழக்கமான சந்தாத் தொகையைவிட ரூபாய் 800 குறைவு)

புத்தகக் கண்காட்சியில் எனி இந்தியன் கடையில் அனைத்துப் புத்தகங்களும் (எனி இந்தியன் மற்றும் முன்னணி பதிப்பகங்கள் பதிப்பித்தவை) பத்து சதவீதத் தள்ளுபடி விலையில் கிடைக்கும்.

அனைவரையும் வருக என அழைக்கிறோம்.


To buy Indian Books Online: http://www.AnyIndian.com
To read my writings in Tamil: http://pksivakumar.blogspot.com

Series Navigation

பி.கே. சிவகுமார்

பி.கே. சிவகுமார்

சென்னை புத்தகக் கண்காட்சி

This entry is part [part not set] of 43 in the series 20070125_Issue

சாமிநாதன்


அறிவியல் கூடம்

ரத்த தான முகாம்

இயக்குநர் பாலா, ஜெய மோகன்

என் சொக்கன்

சுரேஷ் கண்ணன் , ஜெயமோகன் , இயக்குநர் பாலா

விக்கிரமாதித்தன் , மருதா பதிப்பகம் பால குரு

சாமிநாதன் (நடுவில் இருப்பவர்)

Series Navigation

சாமிநாதன்

சாமிநாதன்

சென்னை புத்தகக் கண்காட்சி – நாள் ஆறு – ஜனவரி 15, 2007

This entry is part [part not set] of 32 in the series 20070118_Issue

சாமிநாதன்


ஜனவரி 15, 2007 – திங்கட்கிழமை காட்சிகள்

ஞானரதத்தில் ஜெயகாந்தன் புத்தக வெளியீடு

படங்கள் : சாமிநாதன்


பி ச குப்புசாமி, ஜெயகாந்தன், சித்திரபாரதி

பி ச குப்புசாமி, ஜெயகாந்தன், சித்திரபாரதி,ஹரன் பிரசன்னா

Series Navigation

சாமிநாதன்

சாமிநாதன்

சென்னை புத்தகக் கண்காட்சி நாள் எட்டு – ஜனவரி 17, 2007

This entry is part [part not set] of 32 in the series 20070118_Issue

சாமிநாதன்


சென்னை புத்தகக் கண்காட்சி நாள் எட்டு

எனிஇந்தியன்.காம் கடை எண் 326-ல் இரண்டு புத்தக வெளியீடுகள் இன்று (ஜனவரி 17, 2007 – புதன்) நடைபெற்றன. பிரதாப சந்திர விலாசம் புத்தகத்தை இந்திரா பார்த்தசாரதி வெளியிட வெளி ரங்கராஜன் பெற்றுக் கொண்டார். இ.பா, ரங்கராஜன் இருவரும் புத்தகத்தைப் பற்றிப் பேசினர்.

ஜெயமோகனின் விசும்பு (அறிவியல் புனைகதைகள்) தொகுப்பை யுவன் வெளியிட ஷாஜி பெற்றுக் கொண்டார். யுவன், ஷாஜி இருவரும் பேசினர். வெளியிட்ட, பெற்றுக் கொண்ட விருந்தினர்கள் எனிஇந்தியன் புத்தகங்கள் பதிப்பு குறித்தத் தங்கள் மேலான ஆலோசனைகளையும் பின்னர் வழங்கினர். எனிஇந்தியன் மீதும் பதிப்புத் தொழில் மீதும் அவர்களுக்கு இருக்கிற அக்கறைக்கு எனிஇந்தியன் நன்றி சொல்கிறது. எங்களால் இயன்ற அளவு அந்த ஆலோசனைகளை செயல்படுத்துவோம். ஹரன் பிரசன்னா நன்றி சொல்லக் கூட்டங்கள் நிறைவுற்றன.

ஜனவரி 17, 2007 (புதன்) காட்சிகள்:

படங்கள் : சாமிநாதன்


ஹரன் பிரசன்னா, வெளி ரங்கராஜன், இந்திரா பார்த்தசாரதி


வெளி ரங்கராஜன், இந்திரா பார்த்தசாரதி


வெளி ரங்கராஜன், இந்திரா பார்த்தசாரதி


வெளி ரங்கராஜன், இந்திரா பார்த்தசாரதி


ஹரன் பிரசன்னா, வெளி ரங்கராஜன், இந்திரா பார்த்தசாரதி


ஹரன் பிரசன்னா, யுவன், ஷாஜி


ஹரன் பிரசன்னா, யுவன், ஷாஜி


பேரா பக்த வத்சல பாரதி

இ பா, நர்மதா சீனிவாசன், ஆர் வெங்கடேஷ்

Series Navigation

சாமிநாதன்

சாமிநாதன்

சென்னை புத்தகக் கண்காட்சி – நாள் ஏழு

This entry is part [part not set] of 32 in the series 20070118_Issue

சாமிநாதன்


சென்னை புத்தகக் கண்காட்சி நாள் ஏழு

சாமிநாதன்
புத்தகக் கண்காட்சி – ஏழாம் நாள்

வெங்கட் சாமிநாதனின் இரண்டு புத்தகங்களின் வெளியீட்டு விழா சென்னை புத்தகக் கண்காட்சியில் எனிஇந்தியன்.காம் புத்தகக் கடை எண்:326-இல் ஜனவரி 16, 2007 செவ்வாய் மாலை நடைபெற்றது. இன்னும் சில ஆளுமைகள் புத்தகத்தை வெங்கட் சாமிநாதன் வெளியிட அண்ணா கண்ணன் பெற்றுக் கொண்டார். யூமா வாசுகியிலிருந்து சமுத்திரம் வரை புத்தகத்தை வெங்கட் சாமிநாதன் வெளியிட க்ருஷாங்கினி பெற்றுக் கொண்டார். அண்ணா கண்ணன், க்ருஷாங்கினி, வெ.சா ஆகியோர் உரையாற்றினர். எனிஇந்தியன்.காம் சார்பாக ஹரன் பிரசன்னா நன்றி சொல்ல கூட்டம் இனிதே முடிவுற்றது.

படங்கள் : சாமிநாதன்
வெங்கட் சாமிநாதன் நூல்கள் வெளியீடு

கிருஷாங்கினி, வெங்கட் சாமிநாதன், ஹரன் பிரசன்னா

கிருஷாங்கினி, வெங்கட் சாமிநாதன்

அண்ணா கண்ணன் , வெங்கட் சாமிநாதன்

அண்ணா கண்ணன், கிருஷாங்கினி

வெங்கட் சாமிநாதன், ஹரன் பிரசன்னா

கிருஷாங்கினி, வெங்கட் சாமிநாதன்,அண்ணா கண்ணன், ஹரன் பிரசன்னா

ஞானக்கூத்தன்

பத்ரி

சுஜாதா (உயிர்மை கடையில்)

ஞானபானு பதிப்பகம்

Series Navigation

சாமிநாதன்

சாமிநாதன்

சென்னை புத்தகக் கண்காட்சி நாள் 9

This entry is part [part not set] of 32 in the series 20070118_Issue

சாமிநாதன்


படங்கள் : சாமிநாதன்

மார்வின் ஹாரிஸ் எழுதி துகாராம் கோபால்ராவ் மொழிபெயர்த்த “பசுக்கள், பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள் ஆகிய கலாசாரப் புதிர்கள் – பாகம் 2”-ன் வெளியீட்டு விழா ஜனவரி 18, 2007 (வியாழன்) மாலை எனிஇந்தியன் கடை எண் 326-ல் நடைபெற்றது. பி.ஏ. கிருஷ்ணன் வெளியிட கல்வெட்டியல் ஆய்வாளர் எஸ். ராமச்சந்திரன் பெற்றுக் கொண்டார். எழுத்தாளர் பிரவாஹன், வலைப்பதிவர்கள் சுரேஷ் கண்ணன், பிரதீப் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பி.ஏ. கிருஷ்ணன், எஸ். ராமச்சந்திரன் ஆகியோர் புத்தகம் பற்றிய தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். ஹரன் பிரசன்னா நன்றி சொல்லக் கூட்டம் நிறைவுற்றது.

ஒன்பதாம் நாள் காட்சிகள்:


ஹரன் பிரசன்னா, பி ஏ கிருஷ்ணன், எஸ் ராமச்சந்திரன்


பி ஏ கிருஷ்ணன், எஸ் ராமச்சந்திரன், பிரவாஹன்


பி ஏ கிருஷ்ணன், எஸ் ராமச்சந்திரன், பிரவாஹன்


பிரதீப், சுரேஷ் கண்ணன்


சுரேஷ் கண்ணன் , பி ஏ கிருஷ்ணன்

Series Navigation

சாமிநாதன்

சாமிநாதன்

சென்னை புத்தகக் கண்காட்சி

This entry is part [part not set] of 26 in the series 20070111_Issue

சாமிநாதன்


படங்கள் : சாமிநாதன்

புத்தக விழா படங்களை தினமும் காண

Series Navigation

சாமிநாதன்

சாமிநாதன்

சென்னை புத்தகக் கண்காட்சியில் எனிஇந்தியன்

This entry is part [part not set] of 43 in the series 20070104_Issue

பி.கே. சிவகுமார்


சென்னை புத்தகக் கண்காட்சியில் எனிஇந்தியன்

30-ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி ஜனவரி 10, 2007 முதல் ஜனவரி 21, 2007 வரை செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. மேலதிக விவரங்களை பபாஸி இணையதளத்தில் http://www.bapasi.org காணலாம்.

எனிஇந்தியன்.காம் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் பங்குபெறுகிறது. கண்காட்சியில் எங்கள் கடையில் எனிஇந்தியன் பதிப்பகத்தின் புத்தகங்கள் 20% சதவீத தள்ளுபடியிலும், மற்ற பதிப்பகங்களின் புத்தகங்கள் 10% சதவீத தள்ளுபடியிலும் கிடைக்கும்.

சென்னை புத்தகக் கண்காட்சியில் எனிஇந்தியன்.காமின் கடை எண்: 326

கண்காட்சியில் கடைக்கு விஜயம் செய்யும் வருகையாளர்களுக்குக் குலுக்கல் முறையில் தினசரி புத்தகப் பரிசுகளும் உண்டு.

எனிஇந்தியனின் புதிய புத்தகங்கள் பற்றி விரைவில் பகிர்ந்து கொள்கிறேன்.

– பி.கே. சிவகுமார்

Series Navigation

பி.கே. சிவகுமார்

பி.கே. சிவகுமார்

சென்னை புத்தகக் கண்காட்சியில் மக்களிடம் கருத்துக்கணிப்புகள்

This entry is part [part not set] of 36 in the series 20030223_Issue

ஞாநி


ஜனவரி முதல் வாரத்தில் செனையில் நடைபெற்ற 27வது புத்தகக் கண்காட்சியில் மக்கள் கவனத்தை கவர்ந்த அரங்குகளில் நம்முடையதும் ஒன்று. ஓ என்ற தலைப்பில் பல முக்கியமான தகவல்களைப் படிக்க வைத்திருந்தோம். தினசரி அதே நாளில் உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளை செய்தியாக வெளியிட்டோம். வாசகர்கள் நேரடியாகப் பங்கேற்கும் விதத்தில் தினசரி தேர்தல் நடத்தப்பட்டது. ஒவ்வொரு நாளும் ஒரு கேள்வி எழுப்பப்பட்டு அதற்கான பதில்களில் ஏதேனும் ஒன்றிற்கு வாக்களிக்கும்படி மக்களிடம் கோரினோம். வாக்குப்பதிவு முடிவுகள் மறு தினம் வெளியிடப்பட்டன.சராசரியாக தினசரி 500 பேருக்குக் குறையாமல் வாக்களித்தனர். இந்த வாக்குப்பதிவு படித்த நடுத்தர வகுப்பு மக்களின் சிந்தனையோட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக் கருதலாம். இதே கேள்விகளுக்கு எழுத்தறிவற்ற பெரும்பான்மை மக்கள் எந்த மாதிரி வாக்களித்திருக்கக்கூடும் என்று ஊகித்துப் பார்க்க்லாம். அரங்கில் தினசரி வாக்குப்பதிவு நடைபெற்றபோது, வாசகர்கள் பலரும் உற்சாகத்துடன் அரங்கில் இருந்த தீம்தரிகிட பொறுப்பாளர்களிடம் உரையாடினர். விவாதித்தனர். சிலர் உணர்ச்சிவசப்பட்டனர். வாக்குப்பதிவில் பெரும்பான்மை முடிவுகள் சில தீம்தரிகிடவுக்கு மகிழ்ச்சி தருவன ( தமிழ் வழிக்கல்வி, பாலியல் கல்வி, ஆண்-பெண் உடை). சில உடன்பாடில்லாதவை (தனியார் துறையில் இட ஒதுக்கீடு). எனினும் நமது சமூகத்தின் முக்கிய அங்கமான படித்தவர்களின் மன நிலையை ஏதோ ஒரு விதத்தில் இவை பிரதிபலிப்பவை என்பதால் முக்கியமானவை.

இனி மக்கள் தீர்ப்பு தேர்தல் முடிவுகள் உங்கள் பார்வைக்கு:

1.வீரப்பன்

பிடித்தே ஆகவேண்டும் – 49 சதவிகிதம்

பொதுமன்னிப்பு வழங்கலாம் – 51 சதவிகிதம்

2.ரஜினி

புதுக் கட்சி தொடங்க வேண்டும் – 22.27 சதவிகிதம்

பழைய கட்சி எதிலேனும் சேரலாம் -8.29 சதவிகிதம்

அரசியலுக்கே வர வேண்டாம்- 69.43 சதவிகிதம்

3 ஜெயலலிதா

பிரதமர் முயற்சி தேவையற்றது – 73 சதவிகிதம்

தேவையானது – 16 சதவிகிதம்

4. கங்கை காவிரி இணைப்பு

சாத்தியம்தான் . செய்தே ஆக வேண்டும் – 77.4 சதவிகிதம்

சாத்தியமில்லை. வீண் செலவு வேண்டாம் 22.6 சதவிகிதம்

5. கலைஞர் கருணாநிதி

கட்சித்தலைமையிலிருந்து விலகி இளைய தலைமுறைக்கு வழி விடவேண்டும் – 71.3 சதவிகிதம்

முழுக்கவும் அரசியலிலிருந்து விலகிவிடலாம் – 28.6 சதவிகிதம்

6.தமிழ் ஆண்-பெண் உடை

பெண்கள் சேலை; ஆண்கள் வேட்டி – 10.66 சதவிகிதம்

ஆண்கள் பேண்ட் அணியலாம். பெண்கள் சேலைமட்டும்.- 8.66 சதவிகிதம்

பெண்கள் சுடிதார். ஆண்கள் பேண்ட் வசதிப்படிஅணியலாம் – 80.66 சதவிகிதம்

7.பயிற்றுமொழி

எல்லாப் பாடமும் தமிழில். ஆங்கிலம் மொழிப்பாடமாக மட்டும் – 65.1 சதவிகிதம்

எல்லாப் பாடமும் ஆங்கிலத்தில். தமிழ் மொழிப்பாடமாக மட்டும் – 34.7 சதவிகிதம்

8.+2 வகுப்பில் பாலியல் கல்வி

கட்டாயம் வேண்டும் – 81.5 சதவிகிதம்

நிச்சயமாககூடாது -12.5 சதவிகிதம்

9. தனியார் துறையில் இட ஒதுக்கீடு

உடனடியாக வேண்டும் – 43.8 சதவிகிதம்

கூடவே கூடாது – 48.45சதவிகிதம்

10.அடுத்த பிரதமர்- உங்கள் விருப்பம்

வாஜ்பாய் – 22.8 சதவிகிதம்

அத்வானி- 16.28 சதவிகிதம்

சோனியா- 22.8 சதவிகிதம்

நீங்கள் விரும்பும் வேறு யாரேனும் — 21.8 சதவிகிதம்

சதவிகிதங்களைக் கூட்டிப் பார்த்தால் சில நாட்களில் 100க்குக் குறைவாக வரும். காரணம் மீதி சதவிகிதம் செல்லாத வாக்குகள்.

(தீம்தரிகிட பிப்ரவரி 2003. dheemtharikida@hotmail.com)

Series Navigation

ஞாநி

ஞாநி