செல்லங்கள்

This entry is part of 40 in the series 20101114_Issue

ப.மதியழகன்


கண்முன்னே நடமாடும் கடவுள்கள்
கவலைக் கடலில் மூழ்காமல்
காப்பாற்றும் இறைத் தூதர்கள்
அன்பு மழையில் நித்தம் நனையச் செய்யும்
கார்முகில்கள்
பூவுலகை சொர்க்கமாக்கிடும் தேவதைகள்
குற்றமில்லா மனம் படைத்து பூமித் தோட்டத்தை
சுற்றி வரும் வண்ணத்துப்பூச்சிகள்
கூடவே இருக்குச் சொல்லியும்,
இடுப்பினில் தூக்கச் சொல்லியும்
அன்புத் தொல்லைகள்
பல தரும் கண்மணிகள்
புன்னகையில் பொன் நகைகளை
ஒளித்து வைத்திருக்கும் செல்லங்கள்
மனதில் விகல்பமில்லாமல்
நம்மோடு விளையாடி
மடியிலிருந்து கீழிறங்கி
மண்ணை அள்ளித்தின்னும் பிஞ்சுகள்
மணல் வீடு கட்டி
கடலலையோடு கட்டிப் புரண்டு கும்மாளமிடும்
சின்னஞ் சிறு முல்லைகள்
மொத்தத்தில்
பூக்களில் வந்தமர்ந்து தேனை மட்டும்
குடித்தோடும் தேனீக்கள்
எந்நேரமும் குறும்புத்தனம் செய்து திரியும்
எங்கள் வீட்டுக் செல்லக் கிளிகள்.

ப.மதியழகன்,

Series Navigation