தண்டனை

This entry is part of 34 in the series 20101107_Issue

செண்பக ஜெகதீசன்நல்ல மனைவிவர தட்சணையாய்
நாலுவகைப் பொருள்கேட்டு
நாயகர்கள் அலைவதாலே
தங்கிப்போய்விடுகின்றன
தங்கமான
கன்னிமலர்கள் முற்றி
கண்ணீரில்
காய்ந்து ஜன்னலோரமாய்…!

தாய் கேட்டாலும்
மகன் கேட்டாலும்
தண்டிக்கப்படவேண்டியது
அவர்கள்தானே,
கண்ணியமான பெண்
ஏன் பெறுகிறாள்
காத்திருக்கும் தண்டனை…!

-செண்பக ஜெகதீசன்…

Series Navigation