அம்மா தூங்க மறுக்கிறார்

This entry is part [part not set] of 61 in the series 20040318_Issue

புஷ்பா கிறிஸ்ரி


அம்மா தூங்க முயல்கிறார்.
கண்கள் தூங்க மறுக்கின்றன
இன்னும் பொழுது விடியவில்லைத் தான்
தூரத்துக் காரொன்று உறுமுகின்றது
இரவு வேலை முடித்த
அதிகாலை உழைப்பாளி போலும்
அம்மா திரும்பிப் படுக்கிறார்
பகல் முழுவதும் அலைந்து
வீட்டினுள்ளே நடந்த அலைச்சல்
உடல் முழுவதும் தெரிகிறது
இன்னும் கண்களில் தூக்கக் கலக்கம்
மூடமறுக்கும் இமைகள்
பொழுது புலர்ந்ததை சூரியன்
கிழக்கிலே உணர்த்துகிறது
இனியும் தூங்குவதில் அர்த்தமில்லை
வந்து கதவு தட்டும்
தன் பேரக் குழ்ந்தைகளை
ஏற்றுக் கொண்டு
தொழிலுக்குப் போகும்
தன் மக்களை வழுயனுப்பி
வைக்க வேண்டும்..
விடியா மூஞ்சியாய் படுக்கையில்
கிடப்பதில் யாருக்கு என்ன லாபாம் ?
நிரந்தர நோயுடன்
படுக்கையில் கிடக்கும் கணவனுக்கு
தேனீர் தர யார் வருவார் ?
தூக்கக் கலக்கத்தில் கிடக்கும்
மறு பிள்ளைகளை
தொலைபேசியில் அழைத்து
யார் எழுப்புவார்கள் ?
இந்தக் கட்டை உயிருடன்
இருக்கும் வரை
என் கடன் பணி செய்வதே!
கடமையைச் செய்தால்
பலன் தேடி வருமென்ற
முனகலுடன் மிகுந்த சிரமத்துடன்
கண்விழித்து எழுந்து தன்
கடமையைத் தொடர்கிறார்
75 வயது அம்மா
இனி இரவுத் தூக்கமா ?
இல்லை மறுநாள் இரவு…
அதுவும் ஏமாற்றினால்,
நித்தியத் தூக்கம் தானே நிரந்தரம்..

புஷ்பா கிறிஸ்ரி !

புஷ்பா கிறிஸ்ரி

pushpa_christy@yahoo.com

Series Navigation

புஷ்பா கிறிஸ்ரி

புஷ்பா கிறிஸ்ரி