தமிழ்ச்செல்வன்
மேலே குறிப்பிடப்பட்டுள்ள www.cathnewsindia.com கிறுத்துவ இணையதளம் மேலும் ஒரு தகவல் தருகிறது. பாதிரியார் சேவியர் தனிநாயகம் என்பவர் ”தமிழ் ஆரய்ச்சிக்கான சர்வதேசச் சங்கம்” (IATR – International Association of Tamil Research) என்ற அமைப்பை நிறுவி, 1965-ஆம் ஆண்டு, முதல் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தினார். பின்னர் அது தொடர்ந்து நடத்தப்பட்டு வந்து, தற்போது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தும் அளவிற்கு வளர்ந்துள்ளது. எனவே தமிழ் மொழியை சர்வதேச அளவிற்குக் கொண்டு சென்றவர் பாதிரியார் தனிநாயகம் தான்” என்று கூறுகிறது அந்த இணைய தளம். தமிழ் ஆரய்ச்சிக்கான சர்வதேச்ச் சங்கத்தை நிறுவியவர் பாதிரியார் தனிநாயகம் என்பது உண்மை தான் என்றாலும், அவருடைய அந்த முயற்ச்சி தான் தற்போது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தும் அளவிற்கு வளர்ந்துள்ளது என்று உரிமை கொண்டாடுவது ஒத்துக்கொள்ள முடியாததாகும். சொல்லப்போனால், ”ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு” நடத்த வேண்டும் என்ற தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் வேண்டுகோளை மறுத்தது தமிழ் ஆரய்ச்சிக்கான சர்வதேசச் சங்கம் என்கிற உண்மையைச் சொல்லும் தைரியம்கூட அந்தக் கிறுத்துவ இணைய தளத்திற்கு இல்லை. அதை விட்டு, தமிழ்ச்செம்மொழி மாநாட்டிற்கு உரிமை கொண்டாடுவதென்பது சிறுபிள்ளைத் தனமாக இருக்கிறது. தமிழ் ஆரய்ச்சிக்கான சர்வதேசச் சங்கத்தின் மறுப்பை புறந்தள்ளிய கலைஞர் அவ்வமைப்பைத் தண்டிக்கும் விதமாக “முதலாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு” என்று அறிவித்து நடத்தியதோடு மட்டுமல்லாமல் “உலகத் தொல்காப்பியர் செம்மொழித் தமிழ்ச் சங்கம்” என்ற புதிய அமைப்பையும் துவக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 45 ஆண்டுகளில் எட்டு மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றில் இரண்டு மாநாடுகள் (1983 & 1992) அ.தி.மு.க மாநாடுகளாகவும், ஒரு மாநாடு (1968) தி.மு.க மாநாடாகவும் மற்ற ஐந்தும் மிகச் சாதாரண மாநாடுகளாகவும் நடந்தேறியுள்ளன. இவற்றினால் தமிழ் மொழிக்கோ, தமிழ் இலக்கியத்திற்கோ, தமிழ் கலாசாரத்திற்கோ, என்ன பயன் ஏற்பட்டுள்ளது? – ஒன்றுமில்லை!
இப்போது கோவையில் நடந்த மாநாடும் தி.மு.க மாநாடே என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. தொலைக்காட்சிகள் தங்களின் நேரலை ஒளிபரப்புகள் மூலமே கோவையில் நடந்தது கட்சி மாநாடுதான் என்பதைத் தெளிவாக்க் காட்டிவிட்டன. இம்மாநாட்டில் கிறுத்துவ ஆதிக்கம் இருந்ததும் கண்கூடாகத் தெரிந்தது. அதாவது திராவிட-கிறுத்துவ உறவு மீண்டும் ஒருமுறை உறுதி செய்யப்பட்டுள்ளது.
www.transcurrents.com என்கிற மற்றொரு கிறுத்துவ இணைய தளத்தில் பாதிரியர் தமிழ் நேசன் என்பவர் தான் எழுதிய கட்டுரையில், “பாதிரியார் தனிநாயகம் பல ஐரோப்பிய மொழிகளையும் அம்மொழிகளின் இலக்கியங்களையும் கற்றறிந்தமையால் அவற்றுடன் தமிழ் இலக்கியங்களை ஒப்பிட்டுத் தமிழ் மொழியை சர்வதேச அளவில் வளர்ச்சியடையச் செய்தார். அவர் தமிழ் கலாசாரத்தின் தூதுவராக சர்வதேச அரங்கில் விளங்கினார். தமிழ் கலாசாரத்தை உலகெங்கும் கொண்டுசென்ற கத்தோலிக்கப் பாதிரியாராக விளங்கினார். தமிழ் மொழி மற்றும் இலக்கியங்களின் தொன்மையையும், செழுமையையும், அழகையும் சர்வதேச அளவில் கொண்டு செல்லுகின்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டபோதும், எப்போதும் கர்தரிடம் பக்தியுடைய பாதிரியாராகவே விளங்கினார். இவருடைய கடுமையான அயராத உழைப்பினால் தான் உலகம் தமிழ் மொழியின் செம்மொழி அந்தஸ்தை ஏற்றுக் கொண்டு அங்கீகரித்தது என்று சொன்னால் அது மிகையாகாது.” என்று கூறுகிறார். (http://transcurrents.com/tc/2010/06/contribution_of_sri_lankan_tam.html)
இப்பொழுது ஒரு கேள்வி எழுகிறது. தமிழ் கலாசாரம் என்பது என்ன? கிறுத்துவர்கள் எதைத் தமிழ் கலாசாரம் என்று சொல்கிறார்கள்? அப்படியென்றால் ஹிந்தி கலாசரம், தெலுங்கு கலாசாரம், மராத்தி கலாசாரம், குஜராத்தி கலாசாரம், வங்காள கலாசாரம் என்றெல்லாம் இருக்கின்றனவா என்ன? இமயத்திலிருந்து குமரிமுனை வரை பாரத மொழிகளைப் பேசும் அனைத்து சமூகங்களையும் ஒன்றாக இணைப்பது ஒரே நாகரிகப் பாரம்பரியம் தான். அதுதான் ஹிந்து கலாசாரம். இந்த ஹிந்து பூமியின் கலாசாரம். சில சடங்குகளிலும் சில சம்பிரதாயங்களிலும் சிறு சிறு வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அடிப்படையில் கலாசாரம் ஒன்று தான். பேசும் மொழிகள் வேறாக இருந்தாலும், வணங்கும் கடவுள்களும், கொண்டாடும் பண்டிகைகளும், வாழும் முறையும் அனைவருக்கும் ஒன்றாகத்தான் பற்பல நூற்றாண்டுகளாக இருக்கின்றன. இதைத் தான் வேற்றுமையில் ஒற்றுமை என்கிறோம்.
மேலும், பாதிரியார் தமிழ் நேசன் அவர்கள், “பல நாடுகளிலும் தமிழ் பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. அவற்றுக்குக் காரணம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பாதிரியார் தனிநாயகம் என்ற தனிநபரின் கடுமையான உழைப்புதான்” என்று சொல்கிறார். ஆனால் அவர் “தமிழ்” பண்டிகைகள் யாவை என்று கூறவில்லை. இங்கே தமிழ் வருடப் பிறப்பை மாற்றியமைத்த திராவிட இனவாதிகளிடம் கேட்டால், பொங்கல் தான் தமிழர் திருநாள் என்று கூறுவார்கள். பொங்கல் திருநாள் என்பதே ஹிந்துக்களின் “மகர ஸங்கராந்தி” என்கிற பண்டிகை தான் என்பது வேறு விஷயம். அப்படியென்றால் மற்ற பண்டிகைகள் எல்லாம் தமிழ் பண்டிகைகள் கிடையாதா? அவையெல்லாம் ஹிந்துப் பண்டிகைகள் என்றுதானே அர்த்தமாகிறது? அப்புறம் ஏன் பாதிரியார் தமிழ் நேசன் அவற்றைத் தமிழ் பண்டிகைகள் என்று கூறுகிறார்?
பதில் அவருடைய கட்டுரையிலேயே இருக்கிறது. பாதிரியார் தமிழ் நேசன், “பாதிரியார் தனிநாயகம் தமிழ் கலாசாரத்தின் கத்தோலிக்கத் தூதுவராக சர்வதேச அரங்கில் திறம்படப் பணிபுரிந்தார்” என்று சொல்கிறார். உண்மையிலேயே தமிழர்களின் பலவிதமானப் பண்டிகைகளும் ஆங்காங்கே கொண்டாடப்பட்டு தமிழர்கள் தங்கள் பண்பாடு மிளிர வாழ்ந்து வரும் பட்சத்தில், அவற்றிற்குப் பெரிதும் பாடுபட்டவர் என்ற முறையில், தமிழ்ஹிந்து கலாசாரத்தின் கத்தோலிக்கத் தூதுவராக பாதிரியார் தனிநாயகம் திகழ்ந்தார் என்று கூறுவது தானே? அவ்வாறு சொல்வது மிகவும் பெருமை தரக்கூடியது அல்லவா? அன்றி தமிழ் கலாசாரம் என்று சொல்வது எதனால்? ஹிந்து என்கிற அடையாளத்திலிருந்து தமிழர்களைப் பிரித்துத் தனிமைப்படுத்தத்தானே? ஹிந்து கலாசாரம் என்று சொல்வதற்கு விருப்பமில்லையென்றால் இந்திய கலாசாரம் என்று சொல்வது தானே? அப்படிக் கூறினால் தமிழ் என்ற அடையாளம் இருக்காது, தமிழ் அடையாளம் கொடுத்து ஹிந்து அடையாளத்தை அழிக்க முடியாது, தமிழ் மொழியைக் கிறுத்துவத்துடன் இணைக்க முடியாது, தமிழ் கிருத்துவ தேசம் அமைக்கும் அடிப்படை நோக்கமே அடிபட்டுப்போகும், என்பது தானே உண்மை? அதற்காகத்தான் அனைத்து கிறுத்துவ மிஷினரிகளும் தமிழ் மொழிப்பற்றளர்களாகவும், தமிழ் இலக்கியக் காவலர்களாக்வும், தமிழ் பண்பாட்டின் பாதுகாப்பாளர்களாக்வும் முன்நிறுத்தப்பட்டார்கள் என்பது நிதர்சனம்.
கட்டுரையில் பாதிரியார் தமிழ் நேசன் அவர்கள் ஒரு ஒப்புதல் அறிக்கையே வாசிக்கிறார்:
“…பாதிரியார் தனிநாயகம் தமிழ் மொழி மீது பற்றும் ஆர்வமும் கொண்ட இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த இறை தூதன் (Zealous Apostle)…இறைவன் தனக்குக் கொடுத்துள்ள மொழி மற்றும் இலக்கியத் திறமைகளைப் பற்றிய தன்னுணர்வோடு இருந்ததோடு மட்டுமல்லாமல் இறைச் சேவைக்காக (அறுவடைக்காக) அவற்றைப் பயன்படுத்தவும் (பயிரிடவும்) செய்தார். ஒரு பாதிரியார் என்கிற முறையில், தென்னிந்தியா மற்றும் இலங்கையில் உள்ள தமிழ் பேசும் மக்களைச் சென்றடையும் விதத்தில் தன் அதிகாரச் சபைக்காகத் (better for his ministry) தனக்குத் தேவையான உபகரணமாகத் தமிழ் மொழியையும் இலக்கியத்தையும் ஆழமாகக் கற்றார்…தமிழ்க்கல்வியை சர்வதேச அளவில் கொண்டு சேர்த்ததில் பாதிரியார் தனிநாயகம் பெரும்பங்கு ஆற்றியிருக்கிறார். அவர் தமிழ்கலாசாரத்தைப் பரப்பிய கத்தோலிக்கப் பாதிரியார். கத்தோலிக்கக் கிறுத்துவம் சர்வதேச மதம் என்பதால் அது அவருடைய வாழ்நாள் நோக்கமான தமிழ்க் கல்வியை சர்வதேச அளவில் பரப்புவதற்கு உதவியாக இருந்தது….தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தின் செழுமையையும் அழகையும் உலகெங்கும் ஒப்புக்கொள்வதற்கான தன்னுடைய அனைத்து நடவடிக்கைகளுக்கு இடையேயும், அவர் எப்போதும் இறைவனிடம் விசுவாசம் மிக்க பாதிரியாராகவே திகழ்ந்தார்.”
லண்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சி.ஆர்.பாக்ஸர் என்பவர், “சரியான கருத்துப்படி, பாதிரியார் தனிநாயகம் நான்கு கண்டங்களிலும் ஏழு கடல்களிலும் விரிவான பயணங்கள் மேற்கொண்டவர் என்பதாலும், புதிய இடங்கள், புதிய மனிதர்கள், புதிய கருத்துக்கள் ஆகியவற்றிற்கு அவர் எப்போதும் வரவேற்பு அளித்தவர் என்பதாலும், அவரை “உலக்க் குடிமகன்” என்று சொல்ல்லாம்” என்று கூறியதையும் தமிழ் நேசன் மேற்கோளாகக் காண்பிக்கிறார்.
தமிழ் அறிஞர்களில் ஒரு பிரிவினர் பாதிரியார் தனிநாயகம் தமிழுக்கு ஆற்றிய “பங்கு” பற்றி நம்பிக்கை ஏற்படாமல் உள்ளனர். அவர்கள், “மதிப்பும் தரமும் மிக்க சஞ்சிகைகளில் பிரசுரிக்கத் தக்கவாறோ, சக அறிஞர்களும் தர்கரீதியான கல்வியாளர்களும் கூர்ந்து ஆராய்ந்து விமரிசனம் செய்யத்தக்க அளவிலோ அவர் ஏன் தமிழ் பங்காற்றவில்லை?” என்று கேட்கின்றனர். மேலும், ”தமிழ் ஆரய்ச்சிக்கான சர்வதேசச் சங்கம் நிறுவியதிலும், அதைத் திறம்பட நிர்வகித்ததிலும் அவருடைய பங்கு மிகவும் பாராட்டத் தக்கது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால் அச்சங்கத்தின் வளர்ச்சியிலும், வெற்றியிலும் மற்ற அறிஞர்களின் பெரும்பங்கும் உள்ளது என்பதை மறுக்க முடியாது. அந்தப் புகழ் ஒருவரை மட்டும் சார்ந்த்தல்ல” என்று கூறுகின்றனர்
இதையே, பின்வரும் காலத்திற்கும் வருங்காலத் தலைமுறையினருக்கும் பேருதவியாக சங்க இலக்கியங்களைத் தேடிக் கண்டு பிடித்து ஒருங்கிணைத்து அவற்றை அச்சிட்டு வெளிக்கொணர்ந்த உ.வெ.சாமிநாத ஐயர் அவர்களின் சேவையுடனோ, அல்லது நவீன அச்சகங்களை முதன் முதலில் பயன்படுத்தி சங்க இலக்கியங்களை அச்சிட்ட ஆறுமுக நவலரின் சேவையுடனோ ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியது அவசியம்.
சிறந்த தமிழ் அறிஞர்களுள் ஒருவரான வையாபுரிப் பிள்ளையைப் பொறுத்தவரை, இலக்கணம், சொற்கள் மற்றும் பிற இலக்கியக் குறிப்புகள் முதலியவற்றை கூர்ந்து மதிப்பிட்டு தமிழ் இலக்கியங்களின் காலத்தைக் கணித்த ஒரே அறிஞராகத் திகழ்ந்தார் என்றால் அது மிகையாகாது. தமிழ் இலக்கியங்களின் காலங்களைப் பற்றிய அவருடைய கணிப்புகள், கிறுத்துவ மிஷனரிகளால் ஒத்துழைப்பும் ஆதரவும் தரப்பட்ட திராவிட இனவாதிகளின் மிகைப் படுத்தல்களைத் தகர்த்துள்ளன என்பதில் ஐயமில்லை.
முடிவுரை
ராபர்ட்-டி-நொபிலி முதல் ராபர்ட் கால்டுவெல் வரையிலான கிறுத்துவ மிஷனரிகளும், தனிநாயகம் போன்ற பாதிரிமார்களும், தெய்வநாயகம் போன்ற எவாங்கலிக்கர்களும், தமிழ் மொழியைக் கடத்தி, அதன் ஹிந்து அடையாளத்தை அழித்து, தமிழ் மண்ணின் கலாசரத்தை ஒழித்து, தமிழ் மக்களை கிறுத்துவர்களாக மதம் மாற்றி, இறுதியாகத் தமிழகம் மற்றும் வட-கிழக்கு இலங்கை சேர்ந்த ஒரு தமிழ் கிறுத்துவ தேசத்தை ஸ்தாபிப்பது ஒன்றையே குறிக்கோளாக்க் கொண்டு இயங்கினர், இயங்கி வருகின்றனர்.
பண்பாட்டுப் பெருமையும், மொழியுணர்வும், தேசப்பற்றும் இல்லாத திராவிட இனவாத இயக்கங்கள் கிறுத்துவ நிறுவனங்களுடன் சேர்ந்து கொண்டு தமிழ்ப் பகுதிகளைத் தேசிய நீரோட்டத்திலிருந்து விரோதப்படுத்தி வருகின்றன. தீய சக்திகளின் இந்தச் செயல்பாடுகள் தோற்கடிக்கப்படவேண்டியது அவசியமாகும். தமிழகம் மற்றும் இலங்கையில் தற்போது உள்ள அரசியல் நிலவரம் ஊக்கமளிப்பதாக இல்லை. அரசியல் கட்சிகளும் நம்பகத்தன்மைச் சிறிதும் இல்லாதவையாக இருக்கின்றன. இந்நிலையில், தமிழகம் மற்றும் இலங்கையில் இருக்கும் தமிழ் மக்கள் வசம் தான் பொறுப்பும் கடமையும் இருக்கிறது. அவர்கள் தங்களின் ஹிந்து அடையாளத்தை மீண்டும் நிறுவவேண்டும். பண்பாட்டுப் பெருமை, மொழியுணர்வு, தேசப் பற்று ஆகிய குணங்களுடன் தீவிர விடா முயற்சியுடன் தங்களுடைய ஹிந்துத்தன்மையை நிலைநிறுத்த வேண்டும். தங்களின் மொழி, இசை, கலை மற்றும் சிற்ப சாஸ்திரங்கள் அனைத்தும், சிந்து சரஸ்வதி நதி தீரங்களில் வளர்ந்த வேத நாகரிகத்தின் வழியில் பாரம்பரியமாக வந்த ஹிந்து கலாசாரத்தைச் சேர்ந்தவை தான் என்பதையும் தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
தமிழ் அடையாளம் என்பது ஹிந்து என்கிற விசாலமான அடையாளத்துடன் தொடர்பு கொண்டது. இந்தத் தொடர்பை நாம் கர்நாடக சங்கீதம், பரத நாட்டியம், கோவில்கள், சிற்பக்கலை, பண்டைய இலக்கியங்கள், அரசியல், கடல்கடந்த வாணிபம் ஆகியவற்றில் காணலாம். சங்க இலக்கியங்கள் தெளிவாக, விளக்கமாக ஹிந்து விஷயங்களைப் பேசாமல் இருக்கலாம். ஆனால் அவை மதப் பழக்க வழக்கங்களைப் பற்றிப் பேசும்போதெல்லாம், மாயோன் அல்லது விஷ்ணு, சேயோன் அல்லது முருகன், கொற்றவை அல்லது துர்கை, வேந்தன் அல்லது இந்திரன், வருணன் ஆகிய தெய்வங்களின் வழிபாடுகள் போன்ற ஹிந்து மதத் தொடர்புகளைக் கண்டுணரலம்.
சங்க காலத்தைத் தொடர்ந்து இயற்றப்பட்ட இலக்கியங்களான திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவை மேலும் விரிவான ஹிந்துத் தத்துவங்களுடன் மிளிர்கின்றன. அவற்றைத் தொடர்ந்து வந்த பக்தி கலாசாரக் காலங்களில் தேவாரம், திவ்யப்பிரபந்தம் போன்ற இலக்கியங்கள் தமிழ் சாம்ராஜ்ஜியத்தின் வளர்ச்சியையும், தமிழகத்தின் அரசியலையும் பலப்படுத்தி அதன் மூலம் கடல் கடந்த வாணிபத்தையும், தமிழகத்தின் மொத்த அபிவிருத்தியையும் உறுதி செய்தன. அந்தக் காலக் கட்டத்தில் வேளாண்மையும், நீர்பாசனமும் அபரிமிதமாக வளர்ச்சி அடைந்தன. தமிழ் மொழியின் தோற்றமும், வளர்ச்சியும் வரலாற்று நெடுகிலும் விசாலமான ஹிந்து உலகத்துடன் தொடர்பு கொண்டுள்ளன என்பதை மறந்துவிடக் கூடாது.
இந்த உண்மை தான், தாய்லாந்து மன்னனின் முடிசூட்டு விழாவின் போது ஏன் திருவாசகம் பாடப்படுகிறது… பாரம்பரியமாக சித்திரை (ஏப்ரல்) மாதம் கொண்டாடப்படும் தமிழ் புத்தாண்டுப் பண்டிகை காம்போஜத்திலும், பர்மாவிலும் கூட அதே சமயத்தில் ஏன் கொண்டாடப்படுகிறது… இந்தோனேசியாவின் இந்துமத சிற்ப இயலில் ஏன் தமிழின் பாதிப்பு இருக்கிறது… போன்ற கேள்விகளுக்கெல்லாம் விளக்கம் அளிக்கிறது. இந்த ஹிந்து அடையாளம் நியூஜிலாந்தைக்கூட இணைத்துள்ளது! நியூஜிலாந்தின் பழங்குடி மக்களான மாவோரிக்கள் வில்லியம் கொலென்ஸோ என்கிற பிராடெஸ்டண்டு மிஷனரிக்கு (1836) அன்பளிப்பாக்க் கொடுத்த ஆலய மணியில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. (Ref: -http://www.tepapa.govt.nz/ResearchAtTePapa/FAQs/Pages/History.aspx#tamilbell )
தமிழ் என்பது ஹிந்து; தமிழ் கலாசாரம் ஹிந்து கலாசரம்; தமிழ் பண்பாடு ஹிந்து பண்பாடு; தமிழ் பாரம்பரியம் சிந்து சரஸ்வதி நதி தீரங்களில் தோன்றி வளர்ந்த வேத நாகரிகத்தின் தொடர்ச்சியே!
(முற்றும்).
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 8
- தாலிபானியத்தை வளர்க்கும் இந்தியா
- ரகசியங்களின் ஒற்றை சாவி
- ஜெயபாரதன் கவிதை பற்றி
- நீலத்தில் மனம் தோயும்போது…
- தனித்தில்லை
- மானுட பிம்பங்கள்
- அகோரி
- சாத்தான் படலம் !
- மலைகள்
- காலச்சுவடு பதிப்பகம் புத்தக வெளியீடு
- லெனின் விருது வழங்கும் நிகழ்வு
- பட்டுக்கோட்டையார் வலியுறுத்தும் பெண்ணுரிமைகள்
- நாசாவும் ஈசாவும் கூட்டமைத்துச் செவ்வாய்க் கோள் ஆராயும் விண்ணுளவி
- எல்லார் நெஞ்சிலும் பாலைவனம் இருக்கிறது
- சிரிக்கும் தருணங்கள் ….!
- மொழிவது சுகம்: மகேசன் நலமே மக்கள் நலம்
- முள்பாதை 42
- இரண்டு முழு நிலா = தாய்லாந்து நாடோடிக்கதை
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -8
- சிறகும், உறவும்!
- நட்பு
- பாதிரிமார்களின் தமிழ் பங்களிப்பு: ஒரு நடுநிலைப் பார்வை – 5
- ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் — பகுதி – 3
- பரிமளவல்லி – தொடர் – அத்தியாயம் 7. வின்டர் ப்ரேக்
- பூரண சுதந்திரம் ?
- உலக ஆத்மா நீ = கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஒரு பெரும் வாகனம் கவிதை -15 பாகம் -3
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஓ இரவே ! கவிதை -32 பாகம் -6
- வேத வனம்- விருட்சம் 99
- நானை கொலை செய்த மரணம்
- மூன்றாமவன்
- ஒரு நூலும் மூன்று வெளியீட்டு நிகழ்வுகளும் சென்னையில் “எனது பர்மா குறிப்புகள்” வெளியீட்டு விழா
- சமபாத்த்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள்: (6)