எஸ் ஜெயலட்சுமி
சிவகாமி ஆச்சிக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. அன்று காலை ரயிலில் தான் திருநெல்வேலி வந்தாள். நவம்பர் மாதம் பிறந்துவிட்டால் டில்லி குளிர் தாங்க முடியாது என்ப தால் தீபாவளிக்கே ஊருக்கு வந்து விட்டாள். ஆச்சி குளித்து விட்டு காபி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது மருமகள் மீனாக்ஷி, “அத்தே! ஒங்க பேத்திப் பொண்ணு பேறு கால சமயத்தில நீங்க வந்திடமேன்னு நெனச் சேன். நீங்க வந்தது எனக்கு ரொம்பத் தெம்பா இருக்கு” என்றாள்.
”எம் பேத்திப் பொண்ண எங்க காணூம்?” கேட்டுக் கொண்டிருக்கும் போதே வாக்கிங் போயிருந்த ராஜி உள்ளே வந்தாள். எட்டுமாதச் சூலியான அவளைப் பார்த்த ஆச்சி வாஞ்சையுடன், “என்னம்மா, ராஜி நல்லாயிருக்கியா? என்றாள். ஆச்சி நான் கும்புடறேன். எனக்குத் திருநீறு பூசுங்க” என்று வணங்கினாள்
ஆச்சி குளித்து விட்டு வந்த பின் சங்கரலிங்கமும் குளித்து விட்டு நேரக பூஜை அறைக்குள் சென்றான். மீனாக்ஷி போய் விளக்கை ஏற்றி விட்டு குக்கரில் இட்டிலிக்கு மாவை ஊற்றப் போன நேரம் மீனாக்ஷி இங்கவாயேன் என்று பூஜை அறையி லிருந்து சங்கரலிங்கம் கத்தும் சத்தம் கேட்டது. ”என்னங்க? என்று பதறி ஓடினாள் மீனாக்ஷி. சங்கர லிங்கம் நெஞ்சைப் பிடித்துக் கொண்டிருந்தான். நெற்றி யெல்லாம் வியர்த்திருந்த்து. “அத்தை, ராஜி இங்க வாருங்களேன். அப்பாவுக்கு உடம்பு முடியல” என்று உரக்கக் கூவினாள். காலைல ஸ்டேஷனுக்கு வந்த போது கூட நல்லாத்தானே யிருந்தான்! அதுக்குள்ள என்ன ஆச்சு?” என்று உள்ளே வந்தவள் மகன் படும் பாட்
டைக் கண்டு என்னையா என்ன செய்யறது?” என்றாள். எதுவானாலும் நாம டாக்டர் கிட்ட காட்டுவோம் என்ற மீனாக்ஷி டாக்டருக்கு போன் செய்தாள். அப்படியே ஆட்டோவையும் வரச்சொன்னாள். “ராஜி நாம இன் னிக்கு செக்கப்புக்குப் போகவேண்டாம். நீ ஆச்சி கூட வீட்ல இரு. இன்னிக்கு அண்ணன்கிட்ட இருந்து கட்டா யம் போன் வரும். நான் அப்பா கூட டாக்டர்கிட்ட போறேன்” என்றாள்.
இதற்குள் ராஜி பீரோவிலிருந்து பணத்தை எடுத்து மீனாக்ஷியின் கைப்பையில் வைத் தாள். மீனாக்ஷி கொடுத்த ஹார்லிக்ஸைக் குடித்த சங்கரலிங்கம் மீனாக்ஷியின் உதவியோடு ஆட்டோவில் ஏறினார். ஆட்டோவில் ஏறும் போதே, ” ராஜி உங்க அத்தைக்குப் போன் பண்ணி விஷயத்தைச் சொல்லு” என்றாள் மீனாக்ஷி. ஆட்டோ போனதும் உள்ளே வந்த ராஜியிடம், ”ஒங்கண்ணிக்கு இது தான் மாசமா?” என்றாள்
“ஆமா ஆச்சி அமெரிக்காவில இருக்கற அண்ணிக்கு இன்னிக்குத்தான் நாள்குறிச்சுக் குடுத்திருக்காங்க. அதான் நல்ல படியா அகணுமேன்னு அம்மா கவலைப் பட்டுக்கிட்டேயிருக்காங்க. ஆச்சிக்குக் கவலை அதி கரித்தது.
எடுத்து வைத்திருந்த மாவை இட்டிலிக்கு ஊற்றும் போதே ஆச்சியின் மனம் அலை பாய்ந்தது.”சங்கரலிங்கம் ஏற்கெனவே பிரஷர் சுகருன்னு மாத்திரைகளை முழுங்கிக்கிட்டே யிருக்கான். இந்தப் பொண்ணு நல்லபடியா பெத்துப் பொழைக்கணுமே!
கோமதியம்மா! நீதான் நல்லபடியா ரெண்டு பாத்திரமா ஆக்கித் தரணும்” என்று வேண்டிக் கொண்டாள் ஆச்சி யின் மனம் அடுத்த வினாடியே அமெரிக்காவில் இருக்கும் பேரனிடம் சென்றது. பேரன் வேறு ஜாதியில் பொண்ணெடுத்து விட்டானே என்ற ஆதங்கம் ஆச்சிக்கு
ரொம்பவே யிருந்தது. ஆனால் இப்பொழுது அதெல்லாம் மறந்தே போய்விட்டது. எங்கோ கண்காணாத தூரத்தில் இருக்கும் பேரன் பெண்டாட்டியிடம் பரிவு மிகுந்தது. தாயுமானவரே! நீதான் அந்தப் பொண்ணுக்குத் தாயாரா இருந்து காப்பாத்தணும் என்று வேண்டினாள்.
”ஆச்சி இட்லி ரெடியாயிடுத்தா?” என்று ராஜி கேட்ட பிறகே சுய உணர்வு வந்தது ஆச்சிக்கு. ராஜி சாப்பிட்டுக் கொண்டிருந்த போது போன் ஒலித்தது.”ஆச்சி அத்தைதான் கூப்பிடறாங்க” மகளிடமிருந்து போன் என்றதும் ஆச்சி காஸ் அடுப்பை அணைத்தாள். “என்னம்மா? அண்ணனுக்கு என்ன ஒடம் புக்கு? எந்த டாக்டர்கிட்ட போயிருக்காங்க?” என்று கேட் டதும் தான் போனவர்கள் இதுவரை போன் பண்ண வில்லையே என்று மனம் தவிக்க ஆரம்பித்தது.
”முருகா! எம்புள்ளைக்கு ஒண்ணும் ஆகாம இருக்கணுமே! ரெண்டு சூலிப் பிள்ளைங்க இருக்கே! எம்பேரப்புள்ளைக்கு நல்ல படியா பிள்ளை பொறக்கட்டும். ஒங்கோவில்ல வந்து முடி எறக்கச் சொல்லறேன்” என்று மஞ்சள் துணியில் காசை முடிந்து வைத்தாள். மீண்டும் போன்!
அமெரிக்காவில் இருக்கும் பேரப் புள்ளைதான் கூப்பிட்டான். ஆச்சிதான் போனை எடுத்தாள். பேரனின் குரலைக் கேட்டதும் ஆச்சியின் குரல் தழுதழுத்தது. சரவணா1 இப்பத்தான் நம்ம திருச்செந்தூர் முருகனுக்கு வேண்டிக்கிட்டேன். அவ எப்படியிருக்கா?” என்றாள். “ஆச்சி இப்பத்தான் மாலாவை உள்ளே கூட்டிக்கிட்டுப் போயிருக்காங்க”
“கடவுளே தாயும் புள்ளையும் நல்லபடியா இருக்கட்டும், என்று வாய் முணுமுணுத்தாலும் மனம் ஆட்டோவில் போன மகனையே சுற்றி வந்தது. “அம்மா! கோமதித் தாயே! உங்க ஊரு சாமி பேரைத்தான் எம்மகனுக்கு வெச்சிருக்கேன். அவனுக்கு நல்ல வழி விடு என்று சொல்லிக் கொண்டே விளக்குமுன் சென்று கும்பிட் டாள். அதற்குள் போன் ஒலிக்கவே ராஜி எடுத்தாள். அவள் முகத்தில் கவலை தெரிந்தது. அவள் பேசிய தொன்றும் புரியவில்லை என்றாலும் ஐ.சி.யு. என்ற வார்த்தை மட்டும் புரிந்தது.
“கடவுளே! இது என்ன சோதனை மேல் சோதனையா இருக்கே! இந்தப் பொண் ணுக்கு வேற வளைகாப்பு அடுக்கணும் பிரசவச் செலவு வேற. அந்தப் பொண்ணு நல்ல படியா பெத்துப்
பொழைக்கணும். அமெரிக்கா என்ன மெட்ராஸா, பம்பாயா? நெனச்சவுடனே ஓடி வர முடியுமா? இப்ப இருக்கற நெலமைல அவளை விட்டுட்டு வர முடியுமா?
இதுக்குத்தான் தூர தொலவுக்குப் போகாதீங்கன்னு சொன்னா இந்தக் காலத்துப் பிள்ளைங்க கேக்கவா செய்யறாங்க?” என்று அலுத்துக் கொண்டாள்.
வாசலில் ஆட்டோ வந்து நிற்கவே ஆவலுடன் பார்த்தார்கள். ராஜியின் அத்தை
பார்வதியும் அவள் கனவரும் இறங்குவதைக் கண்ட ஆச்சிக்கும் ராஜிக்கும் கொஞ்சம் தெம்பு வந்தது. ”சரி, நீங்க போயிட்டு வாங்க, அண்ணி கிட்ட கவலைப் படாதே, நான் பணம் கொண்டு வந்திருக்கேன்னு சொல் லுங்க. நீங்க அங்க போய் அண்ணன் இருக்கற நெல மைக்கு போன் பண்ணுங்க” என்றாள் பார்வதி. அதே ஆட்டோவிலேயே பார்வதியின் கணவர் ஆஸ்பத்திரி சென்றார்.
மூவரும் உள்ளே வரும் போதே போன் மணி கூப்பிட்ட்து. கடவுளே நல்ல சேதியாக இருக்க வேண்டுமே என்று மூவரும் மன சுக்குள் வேண்டிக் கொண்டனர். ஆச்சிக்கு அடி வயிற்றை என்னவோ செய்தது. ரொம்ப சந்தோஷம். கங்க்ராட்ஸ்! என்ற வார்த்தைகளைக் கேட்டதும் வயிற்றில் பால்வார்த்தது போல் இருந்தது. ”என்ன புள்ளை?” ஆச்சிக்கு ஓரளவு விஷயம் விளங்கி விட்டது.
”அம்மா ஒனக்குப் பூட்டன் பொறந்திருக்கான்”. அதன் பிறகு பார்வதி சொன்னதொன்றும் ஆச்சியின் காதில் விழவேயில்லை. “முருகா! எங்க வமிசம் விளங்க ஒரு புள்ளை வந்தாச்சு. எம்புள்ளையும் காப்பாத்தப்பா!” என்று
இரு கைகளையும் உயரே தூக்கிக் கும்பிட்டாள்.
மீண்டும் போன்! பார்வதியின்
கணவர் தான் பேசினார். ”பார்வதி! ஒண்ணும் கவலைப் பட வேண்டாம். நல்ல சமயத்தில கூட்டிக் கிட்டு வந்து அட்மிட் பண்ணினதால தப்பிச்சோம். பெரிய டாக்டர் கிட்ட கேட்டேன். இந்தத் தடவை பரவாயில்லை. கொஞ் சம் மைல்டாகப் போச்சு. ஹார்ட் அட்டாக் தான். ஆனா ரொம்ப சிவியரா இல்லாததால கவலையில்லை.
இனிமே பிரஷர், சுகர், டயட் எல்லாமே கண்ட்ரோல்ல இருக்கும் படியா பாத்துக்க ணும். இன்னிக்கு நைட் நான் இங்க இருக்கேன். நீயும் அங்கேயே இரு. ஆச்சியையும் ராஜியையும் தைரியமா இருக்கச் சொல்லு. அவங்க பாவம் வந்ததும் வராததுமா
இப்படி ஆனதால ரொம்பவே தவிச்சுப் போயிருப்பாங்க. என்றார். ”ஆமாங்க. அம்மா ரொம்பவே தவிச்சுப் போயிட்டாங்க.
”அண்ணிகிட்ட சொல்லுங்க. அவங்களும் ரொம்பவே தவிச்சிருப்பாங்க. சரவணன் கொஞ்ச முன்னாடிதான் போன் பண்ணினான். அண்ண னுக்குப் பேரன் பொறந்திருக்கறதாச் சொல்லுங்க”. என்றள்
*********************************************************
- சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 16
- முள் பயணத்தினிடையே
- பூங்கொடியாய்
- செர்ன் விரைவாக்கி யந்திரத்தில் முதன்முதல் நிகழ்த்திய சிறிய பெரு வெடிப்புகள் (கட்டுரை -8)
- மதுரைக்காஞ்சியில் காஞ்சித்திணை (தொடர்ச்சி-2)
- இவர்களது எழுத்துமுறை – 15 ஆர்.கே.நாராயணன்
- யாப்பு உறுப்பு : கூன்
- படவிமர்சனம் – உறவு
- உடைந்த சூரியனும் நானும்…
- நரகத்தின் வாசல்
- தொலையும் சூட்சுமங்கள்
- மாய வலை
- மரமாக மனித வாழ்க்கை
- ஏவலர்கள் எஜமானர்களாய்
- யாதும் நலம்
- சொல்லத் தயங்கிய ஒன்று…!
- செல்லங்கள்
- துரோகம்…!
- பதிலைத்தேடும் கேள்விகள்..
- காதலுக்கினிய!
- ஞான வாழ்வு நல்கும் சச்சிதானந்த சற்குவருவின் பெருவழிப்பாதை
- பரிமளவல்லி 20. கிருமியின் தாக்குதல்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -4
- பராசக்தி ஏற்பாடு
- குழிவு
- தவிப்பு
- புனிதங்களின் பேரில் கற்பிதங்கள் – ரமீஸ்பிலாலியின் பதிவை முன்வைத்து
- அறிவியல் என்னும் வழிபாடு
- ஓம் ஒபாமா “ திரைப்பட அனுபவம்
- ஓபாம நமஹ!
- முள்பாதை 55
- மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்
- அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 6 Moral Fallout ஒழுக்கவிதிகளின் விளைவுகள்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)என்னை மயக்கியவள் கவிதை -37 பாகம் -1
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) சிறுவரோடு விளையாடும் ஞானி கவிதை -24 பாகம் -3
- எங்கே எடுத்து செல்வேன்?
- மழையே நீ பெண்தான் !!
- பள்ளங்களில் தேங்கும் உரையாடல்..
- கல்லா(ய்) நீ
- காதலனின் எதிர்பார்ப்புகள்