காயப்பட்ட அகதியின் கண்ணீர்க் கசிவு….

This entry is part [part not set] of 61 in the series 20040318_Issue

நாவாந்துறை டானியல் ஜீவா


என் உள்ளம்
தூங்குகின்றது…
உடல் அசைகின்றது.
நிசப்தம் கலைய
நிற்கிறேன்.
இயந்திரத்தின்
முன்னால்

பஞ்சுக்கட்டை இரண்டால்
காதைஅடைத்து விட்டு@
என்ன சத்தமடா
யாழ்ப்பாணத்தில்
கெலிவருவது போல்….
என்று நினைத்தபடி

சின்னஞ் சிறுவயது
அண்ணன்மார்
அதிகாித்ததால்
அவ்வப்போது
பொறுப்பற்று@
பொழுதுபோன வாழ்வு….
பிறப்பென்;று சொல்லிக்கொள்ள
என்னைப் போல்
இடிந்து போன
எனது ஊர்….

காலைக்கதிரவன்
கண்விழித்தானோ என்னவோ
பிறப்போடு எனக்கு
இருளானது.

பருவங்கள்
மாறிவிலகிச்செல்ல
ஒவ்வொரு தேசமாய்
என் இருப்பு….
எனக்கேது முகவாி.. ?

இயக்கமின்றி
இயங்கும்
என் வாழ்வின் துயாில்@
ஒவ்வொரு கணமும்
போாிடும் மனவிறுக்கம்

என் மனவீதியில்
பால்நிலாவொன்று
பரவசமாய் விாிகின்றது
அந்தக்கணமே
வண்ணாத்திப்பூச்சி போல்
திசை தொியாமல் மனம்;….

மிதிபடுகின்றது
என் கனவுகள்….
அழுகையோடு
அம்மாவின் நினைவுகள்.

என்னுள் வேரோடி@
என் மனதை
அழுத்திக்கொண்டிக்கின்றது
ஒருவார்த்தை@
மனித நேசிப்பு
இப்பூமியில்
எப்படி சாத்தியப்படும்
என்ற வினாவெழுப்பியபடி

அச்சம் ஊடறுத்து
உயிர்த்தெழுதல்
சாத்தியப்படதா போதும்
பிலாத்துவைப் போல்
கைகழுவ
ஈரமான இதயம்
இடங்கொடுக்க மறுக்கிறது

என்ஜீவனத்திற்குாிய
உயீர்….
எத்தனை
நெருக்குதலுக்குள்

என்னால்
தனித்து வாழமுடியாது
என்பதை@
இந்தக்கணப்பொழுதில்
உணர்கிறேன்….

பகல் முழுவதும்
தூங்குவதே
கடமையாயின@
இரவு வேலையே
என் இருப்பை
அடையாளப்படுத்துகின்றது.

இயந்திரத்தின்
மேலே@
வலப்பக்கமாக….
நிலாபோன்ற
வெள்ளை நிற
மின் விளக்கு@
அந்த வெளிச்சத்தை தேடி
தும்பி போன்ற பறவை
பறந்து கொண்டிருந்தது

என் பார்வையை
விலக்காமல்
பார்த்துக் கொண்டிருந்தேன்
ஒரு நொடிப் பொழுதுதான்
சுருண்டு சுருண்டு
கீழ் நோக்;கி வந்து
என் காலடியில்
விழுந்தது….
சூட்டு காயங்களுடன்
வீதியில் வீசப்பட்ட
என் தோழனின்
உடல் போல்….

***
daniel.jeeva@rogers.com

**

Series Navigation

நாவாந்துறைடானியல்ஜீவா

நாவாந்துறைடானியல்ஜீவா