முற்றுப் பெறாத….

This entry is part [part not set] of 61 in the series 20040318_Issue

மீ.வசந்த்,டென்மார்க்


ஓரு சில வரிகளோடு
நிறைந்து கிடக்கின்றன
முற்றுப்பெறாத கவிதைகள்.

சந்தோஷத்தில் தெறித்த
சிரிப்புச் சிதறல்கள்
துக்கத்தில் பதிந்த
கண்ணீர் சுவடுகள்,
வெடிக்க காத்திருக்கும்
உள்மனதின் அழுத்தங்கள்,
ஹார்மோன்கள் துரத்திய
காதல் விசாரிப்புகள்,
உறங்காமல் தொடர்ந்த
பேருந்து பயனங்கள்,
சிரித்துவிட்டு மறந்த
விமான சிப்பந்திகள்,
சிக்னலில் பார்த்த
அழகிகளின் நினைவுகள்,
மறக்க முடியாத
இரயில் பயனங்கள்,
மனதை பாதித்த
சமூகத்தின் அவலங்கள்,

எல்லாம் சேர்ந்த கதம்பமாய்,
முடிவு தெரியாமல் காத்திருக்கும்
முற்றுப்பெறாத கவிதைகள்.,
வாழ்க்கையை போலவே….

மீ.வசந்த்,டென்மார்க்
MSV001@MAERSKCREW.COM

Series Navigation