மன்னித்து விடலாம்….

This entry is part [part not set] of 72 in the series 20040415_Issue

புதுவை ஞானம்


****
இன்றைய காலகட்டத்தில்
சில புத்தகங்கள்
மன்னிக்கப்படக் கூடியவை தான்.

ஓவியச் சீலையில் கருமையும்
வெள்ளித் திரையில் மெளனமும்
வெள்ளைக் காகிதத்தில் வெறுமையும்
சாத்தியமானவை தான்.

சமூக யதார்த்தத்துக்கும், உண்மைக்கும்
சிறியதொரு ஒட்டுதல் இருக்கிறது.

உண்மையெனவும், யதார்த்தமெனவும்
அழகானவை என்றும் கூட
பொய்யான சம்பவங்களைக் காண
பழக்கப்பட்டிருக்கிறோம் — நாம்
பொய்யான உள்ளுணர்வால்.

உள்ளதில் அன்றி
இல்லாததில் உறைகிறது உண்மை – இம்
மனிதர்களின் சமூகத்தில்.

அசிங்கமாக இருக்கிறது நம்
சமூக யதார்த்தம் – துரத்தப்பட்ட
உண்மையின் வெளிச்சத்தில்
பார்க்கும்போது.

அழகு என்பது தென்படுவதே இல்லை
பொய்யாக இருந்தாலன்றி.

ஏற்கனவே….
மறையத் தொடங்கி விட்ட நிகழ்வைத் தான்
காணத் தொடங்குகிறோம் நாம் -விரைவாக
மாற்றங்கள் நிகழுமொரு
சரித்திர காலகட்டத்தில்.

கடந்த காலத்தின் பின்புலத்தில்
நிகழ் காலத்தைத் தரிசிக்க
சிரமமாய் இருக்கிறது
நவீன மனிதனுக்கு.

முழுமையாய் வலுவிழந்து
மெல்லத் துடிக்கும்
கலாச்சாரத்தில்
அரை குறையாய் வாழும்
வெள்ளை மனிதனுக்கு – குறிப்பாக
வட அமெரிக்கனுக்கு
புதுப்பிக்கும் உணர்வு இல்லை
இறுதிக் கட்டத்துக்கு வந்துவிட்டதாகவே
கருதுகிறான் அவன்.

சில நேரங்களில்….
நம்மைச் சுற்றியும்
நமக்குள்ளும் நிகழும்
சிதைவுகளைப் பிரதிபலிப்பதன்றி
வேறெதுவும்
செய்யத் தோன்றவில்லை.

விரக்தியையும்
தோல்விகளையும் பற்றிய
கசப்பான பாடல்களைத் தான்
பாட வேண்டியதாய் இருக்கிறது.

(—HERBERT MARCUSE–ONE DIMENSIONAL MAN – உத்வேகத்தில்)

****

Series Navigation

புதுவை ஞானம்

புதுவை ஞானம்

மன்னித்து விடலாம்….

This entry is part [part not set] of 50 in the series 20040408_Issue

புதுவை ஞானம்


****
இன்றைய காலகட்டத்தில்
சில புத்தகங்கள்
மன்னிக்கப்படக் கூடியவை தான்.

ஓவியச் சீலையில் கருமையும்
வெள்ளித் திரையில் மெளனமும்
வெள்ளைக் காகிதத்தில் வெறுமையும்
சாத்தியமானவை தான்.

சமூக யதார்த்தத்துக்கும், உண்மைக்கும்
சிறியதொரு ஒட்டுதல் இருக்கிறது.

உண்மையெனவும், யதார்த்தமெனவும்
அழகானவை என்றும் கூட
பொய்யான சம்பவங்களைக் காண
பழக்கப்பட்டிருக்கிறோம் — நாம்
பொய்யான உள்ளுணர்வால்.

உள்ளதில் அன்றி
இல்லாததில் உறைகிறது உண்மை – இம்
மனிதர்களின் சமூகத்தில்.

அசிங்கமாக இருக்கிறது நம்
சமூக யதார்த்தம் – துரத்தப்பட்ட
உண்மையின் வெளிச்சத்தில்
பார்க்கும்போது.

அழகு என்பது தென்படுவதே இல்லை
பொய்யாக இருந்தாலன்றி.

ஏற்கனவே….
மறையத் தொடங்கி விட்ட நிகழ்வைத் தான்
காணத் தொடங்குகிறோம் நாம் -விரைவாக
மாற்றங்கள் நிகழுமொரு
சரித்திர காலகட்டத்தில்.

கடந்த காலத்தின் பின்புலத்தில்
நிகழ் காலத்தைத் தரிசிக்க
சிரமமாய் இருக்கிறது
நவீன மனிதனுக்கு.

முழுமையாய் வலுவிழந்து
மெல்லத் துடிக்கும்
கலாச்சாரத்தில்
அரை குறையாய் வாழும்
வெள்ளை மனிதனுக்கு – குறிப்பாக
வட அமெரிக்கனுக்கு
புதுப்பிக்கும் உணர்வு இல்லை
இறுதிக் கட்டத்துக்கு வந்துவிட்டதாகவே
கருதுகிறான் அவன்.

சில நேரங்களில்….
நம்மைச் சுற்றியும்
நமக்குள்ளும் நிகழும்
சிதைவுகளைப் பிரதிபலிப்பதன்றி
வேறெதுவும்
செய்யத் தோன்றவில்லை.

விரக்தியையும்
தோல்விகளையும் பற்றிய
கசப்பான பாடல்களைத் தான்
பாட வேண்டியதாய் இருக்கிறது.

(—HERBERT MARCUSE–ONE DIMENSIONAL MAN – உத்வேகத்தில்)

****

Series Navigation

புதுவை ஞானம்

புதுவை ஞானம்