நாற்சந்தியில் நாடகம்
சத்தி சக்திதாசன்

நான்குதெருக்கள்
நயமாய் சந்திப்பது இந்த
நாற்சந்தியெனும்
நாடகமேடையே
மூலையிலே ஓர் நெடிய
முழுத் தந்திக் கம்பம்
முழுதாய் படிந்த ரத்தக்கறை
முடிந்த ஓருயிரின்
முகவரி மாற்றியதே
காரில் ஏறியவர்
கடுகதியாய் பறக்கையிலே
காலால் ஏகியவர்
காலம் முடிந்திடவே வாழ்க்கைக்
கணக்கைக்
கார் கணக்காய் கம்பத்துடன்
கறையாக்கியதே !
இது ஓர் நாடகமே !
சந்தியின் மூலையிலே
சருகாய்ப் போன
சரமொன்று
சனமற்ற சாயந்தரத்தினிலே
சண்டாளன் கைபட்டு
சரிந்தவொரு
சாந்தாவின் கதை
சம்பவித்த நிலைகூறும்
இது ஓர் நாடகமே !
***
sathnel.sakthithasan@bt.com