இனி உங்களைத் தூங்க வைக்க முடியாது

This entry is part [part not set] of 48 in the series 20110313_Issue

சக்தி சக்திதாசன்



விழித்துக் கொண்டாயா ?

தோழி

உன்னைத் தொட்டிலிலே போட்டுத்

தாலாட்டுப் பாடி தூக்கத்திலே

வைக்கும் புலன் கெட்ட மாந்தர் மத்தியில்

உன் விழிப்பு அவசியமானதொன்றே !

பெண்ணென்பார் … பாவியர் அவரே உன்னைப்

பேதையென்றும் பழிப்பார்

பூவென்பார் பெண்ணே பின்னர்

பூவுக்குள் புகுந்த நாகம் என்றும்

புண்ணாக்கும் வகையில் பேசிடுவார்

தாயாகச், சேயாக, தங்கையாக, தாரமாக‌

தரைமீது பொறுமை மிக்க பூவையாக‌

பெண்ணே நீ படைக்கும் பாத்திரங்கள்

பாரினில் பரிசுத்தம் ஆனவை

அன்றொரு நாள் முப்பாட்டன் பாரதி

அடுக்களையில் பால்காய்ச்ச முடியாமல்

அண்ணந்து படுத்தபடியே சிந்தித்தான்

அருமையான் பெண்களின் அற்புத சேவைகளை

விடிந்ததும், வானம் வெளுத்ததும்

பிறந்தது அவ்னது பெண்ணடிமை ஒழிக்கும்

பொன்னான கவிதைகள்

சிங்கார வனிதையரின் கால்களில்

சமுதாய வரம்புகள் எனும்

சிறைபிடிக்கும் விலங்குகளை பிணைத்து

சிறுமதிபடைத்தோரே ஏன் கேட்கிறீர் உமக்கோர் விடிதலி ?

சீறினான் எமது சிங்கக் கவிஞன் பாரதி

பாரெங்கும் புகழ் பறக்க எம் தமிழ்ப் பெண்களே !

தேரோடி படைத்திடுவீர் புதுச் சாதனைகள்

பெண்புத்தி பின்புத்தி என்றெல்லாம்

பொய்வார்த்தை சொல்லி உமை ஏய்த்திடும்

புல்லுருவிக் கூட்டத்தின்

முகத்திரையைக் கிழித்திடுவீர்

அரைகுறை ஆடையணிந்து

அவமானச் சின்னங்களாய்

ஆடித் திரியும் சில பெண்களால்

எம் பாரதி சொன்ன புதுமைப் பெண்களின்

எழுச்சியைத் தடுத்து விட முடியாது

எனும் உண்மையை சமுதாய வரம்புகளின்

நியாயமான வரையறையை வகுத்து

முன்னேறி நிரூபிக்கும் திறமை ! தோழியரே,

சோதரியரே உங்கள் கைகளில் தான் உள்ளது

உங்களால் முடியும் …………

படையுங்கள் புது இலக்கியங்களை ……

நிகழ்த்துங்கள் புதிய கண்டு பிடிப்புகளை ……..

வாழுங்கள் விஞ்ஞானத் தாய்களாய் …….

வளருங்கள் புதியதோர் எழுச்சி மிக்க‌

தமிழர் சமுதாயத்தை ……..

ஆம் நீங்கள் விழித்துக் கொண்டு விட்டீர்கள்

இனி உங்களைத் தூங்க வைக்க முடியாது

சக்தி சக்திதாசன்

Series Navigation

சக்தி சக்திதாசன்

சக்தி சக்திதாசன்