எங்கே எடுத்து செல்வேன்?

This entry is part of 40 in the series 20101114_Issue

காளி நேசன்


காத தூரத்தில் நீ இருந்தும் காதலை சொல்லாமல்
காலம் பல கடந்து வந்தேன்
கருஞ்ச்சாந்திட்ட உன் கண்இமையில்
ஒளிரும் ஓர் ஓவிய நளினம் பார்க்க!
கோடி வார்தைகள் கோர்த்து வைத்தேன்
உன் குழல் கோதி ஒரு கவிஉச்சாடனம் செய்ய!
ஓடி வந்தேன், ஒரு தோழனாக உன்னை
என் தோளில் சாய்த்துக் கொள்ள!
ஓங்கி உயர்ந்து எரியும் ஒரு தீபத்தின் ஒளி போல்
என் முன் அமர்ந்து இருக்கிறாய்!
உன் கைவிரல்களில் என்ன ஒரு நேர்த்தி!
கார்த்திகை சுட்டிகளில் தெரிக்கும் ஒளிக்கற்றை போன்று
அபிநயம் வழியும் அருவி போல!
எக்காலும் என்னால் பலியிட முடியாது கண்ணே
நற்காதல் எனும் ஒரு ஞான உணர்வினை!
அறிவேன், உன் உயிரை நான் உருவிச்சென்றேன் என!
ஆனால் அறிவாயோ நீ? மெய்யறுத்து என் மெய்மையை
கொண்டவள் நீதான் என!
கடலில் விட்டெறிந்தேன் காசினியில்
உனக்காக சேகரித்த பரிசுகள் சிலவற்றை!
உன் நினைவோடு காடுமலை பலதிரிந்து கற்ற நல்ஞானத்தை
எங்கே நான் எடுத்து செல்வேன்?

Series Navigation