துரோகம்…!

This entry is part of 40 in the series 20101114_Issue

தீபா திருமூர்த்தி


ஒவ்வொரு
பேருந்து புகைக்கும்பின்னால்
ஆண்மை கலந்த
உன் வாசம்
வருகிறதா என
எதிர்பார்த்துக்
கழிந்த காலங்களை எல்லாம்
கட்டி இழுத்து வந்து
முட்டி மோதி
ஒட்டிப் பார்க்கிறேன்..,
நீ
வந்த பிறகும்
வழக்கமான
உன் வாசம்
வாடகைக்கு விடப்பட்டதாய்…,
மொத்தமாய்
விற்றுத் தீர்க்கப்பட்டதாய்….
உணர்கிறேன்!
வழி நெடுகிலும்
சவப் பூக்களின்
தூவல்!
கன்பூக்களில்
நேச இதழ்களின் காவல்!
எனக்குத் தெரியும்
மண் மூட்டை சுமக்கும்
நீ
மரகதங்களின்
மகத்துவம் அறியவாப் போகிறாய்?
மனத்துக்குள்
மூத்த ஈரம்…!
மெத்தைக்குப்
புதிய மல்லிகை!

தீபா திருமூர்த்தி

Series Navigation