சொல்லத் தயங்கிய ஒன்று…!

This entry is part of 40 in the series 20101114_Issue

கலாசுரன்


————————————————————–
அவர்களுக்கான பொழுதுகள்
அவர்களை தீயவர்கள் என்றே
சொல்லவைத்தது

இன்னொருவனின்
சாதூர்யமான பொழுதொன்று
அவனை
நல்லவன் என்று அழைத்தது

முற்றிலும்
அவன் நல்லவனோ
அல்லது
அவர்கள் கெட்டவர்களோ அல்ல
என்றிருக்க

அவர்களது
தியாகத்தில் உருவான
அவனது நல்ல பெயருக்காக
அவர்களுக்கு அவன் கடன் பட்டிருப்பான்

இப்பொழுது
இது போன்ற
இன்னொரு சிந்தனை
தூரிகை நுனியிலிருந்து
மெல்ல.. எட்டிப் பார்க்கிறது…
—————————————————————–
கலாசுரன்..

Series Navigation