புன்னகை

This entry is part of 36 in the series 20090904_Issue

கருவி பாலகிருஷ்ணன்புன்னகை
பூக்கள்தான் இந்த
பூவுலகை
நிறைக்கிறது

ரோஜாக்களின்
புன்னகைதான் அதன்
முட்க்களை
மறைக்கிறது

மல்லிகையின்
புன்னகைதான் அதன்
மணமாக
இழுக்கிறது

பூக்களின்
புன்னகைதான் தேன்
வண்டுகளை
அழைக்கிறது.

வானத்தின்
புன்னகைதான் அதன்
வானவில்லை
கொடுக்கிறது

மனிதனின்
புன்னகையே அவன்
மகத்துவத்தை
உயர்த்துகிறது.

Series Navigation