பூரண சுதந்திரம் ?

This entry is part of 34 in the series 20070816_Issue

சி. ஜெயபாரதன், கனடாபாரதம் பெற்றது பாருக்குள்ளே
ஓரளவு சுதந்திரம் !
பூரண விடுதலை வேண்டி நின்றோம் !
பூமி இரண்டாய்ப் பிளந்தது !
கட்டுப்பாடுள்ள சுதந்திரம் !
கண்ணிய மானிடருக்கு !
கட்டவிழ்த் தோடும் சுதந்திரம்,
காட்டு மிராண்டிகளுக்கு !
ராவணன் சீதையைத் தூக்கி
ரதத்தில் போவான் !
பூரண சுதந்திரம் போர்க்களம் !
பட்டப் பகலில் பாஞ்சாலி
பட்டுப் புடவையைப்
பலர்முன் இழுப்பான்
துச்சாதனன் !
பூரண சுதந்திரம் குருச்சேத்திரம் !
மொட்டு விடும் சுதந்திரம் !
பட்டு உதிரும் சுதந்திரம் !
ஒட்டு மாங்கனி போல்
நட்டு வளரும் சுதந்திரம் !
சுட்ட கனியா சுதந்திரம் ?
சுடாத கனியா ?
எட்டித் தொடாத
உச்சியில்
ஓங்கி உயரும் சுதந்திரம் !
முழு விடுதலை பெற்றவர்
மோகன்தாஸ் காந்தி !
போதி மரத்தடியில்
பூரண விடுதலைக்குத் தவங்கிடக்கிறார்
போலிச் சாமியார் !

++++++++

jayabarat@tnt21.com [S. Jayabarathan (August 15, 2007)]

Series Navigation