தமிழில்: சிபிச்செல்வன்
பகையில் ஆரம்பம்
மனித இயல்பு இவையெல்லாம்
நீ உட்கார்ந்தால், அவர்கள் சொல்வார்கள் – “உட்காரக் கூடாது”.
நீ நின்றால், “எதற்காக நிற்கிறாய், நட!”
நீ நடந்தால், “இது உனக்கு அவமானம், உட்கார்!”
ஒருவேளை நீ படுத்திருந்தால், அவர்கள் கவலைப்பட்டுக் கூறுவார்கள் – “எழுந்திரு”
கொஞ்சம் ஓய்வின்றி நீ படுக்கைவில்லையென்றால், “கொஞ்சம் படுத்துக்கொள்”.
எழுந்தும், அமர்ந்தும், என் நாட்கள் வீணாகிக் கொண்டிருக்கின்றன
இப்பொழுது நான் இறந்தால், அவர்கள் சொல்வார்கள் – “வாழு”
நான் வாழ்ந்தால், இப்படியும் அவர்கள் கூறுவார்கள் – “அவமானம் சாவு”
இப்பேரச்சத்திலேயே நான் மெளனமாக வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.
சக்கரம்
அவர்கள் சிவப்பு ஆடைகளை அவளுக்குக் கொடுத்தார்கள்
ஏனெனில் சிவப்புதான் கண்ணைப் பறிக்கும் நிறம்,
அவளின் கழுத்தில் தொண்டையில் நெக்லஸ் போட்டிருக்கிறார்கள், கழுத்தில் சுற்றியுள்ள நெக்லஸ் நாயின்
கழுத்தில் போடப்படும் வார்ப்பட்டையைப்போல இருந்தது.
அதை விருந்துகளுக்கும் விழாக்களுக்கும் அணிந்துகொள்கிறார்கள்.
அவளின் காதுகளும், மூக்கும் கூர்மையானவை.
காதிலும், மூக்கிலும் அணிகலன்களைப் போட்டிருக்கிறார்கள்;
ஏனெனில் அவளே சிறிது ஒளிர்கிறாள், அணிகலன்கள் வரை வைடூர்யங்களாலும் இன்னும் ஒளிர்கிறாள்
அவளுடைய மெருகு கூடுதலாகிறது.
அவளுடைய கரங்களுக்கு வளையல் போட்டிருக்கிறார்கள்
அவை விலங்கின் வடிவத்திலமைந்து கைகளை அசைக்க முடியாமல் செய்கின்றன
கணுக்கால்களுக்குக் கிணுகிணுக்கும் காப்புகள் அணிவித்திருக்கிறார்கள்
இதனால் அவள் எங்கேயிருக்கிறாள் என்பதை எளிதில் அறிய முடிகிறது.
முகத்தில் அழகுபடுத்தும் பொருள்களை
வண்ணப்பூச்சுகளைத் தடவிக்கொள்கிறாள்.
கண்களுக்கு, கழுத்திற்கு, உதடுகளுக்குப் போன்ற இடங்களுக்கும்
மேலும் கூடுதலான பூச்சுகளைத் தேவையான அளவிற்குப் போடுகிறாள்.
ஒரு விற்பனைச் சரக்கைப்போல மாறினாள்.
கிராமங்களில், நகரங்களில்
நடைபாதைகளில், தெருக்களில்
சேரிகளில், உயர்குடியினர் வகிக்குமிடங்களில்
உள்நாட்டில், வெளிநாட்டில் எல்லா இடங்களிலும் அவள் விற்பனைச் சரக்கானாள்.
பல்வேறு வழிகளில், பல விலைகளில் அவள் விற்கப்படுகிறாள்.
அவள் தொடர்ந்து விற்கப்படுகிறாள்.
வெளிப்படையாக விற்கப்படுகிறாள்.
சில இடங்களில் விற்பனையை நவீனமயமாக்கியிருக்கிறார்கள்.
பெண்ணின் வளர்ச்சியென்ற போர்வையில் நவீனமயமாக்கப்பட்டதாகப் பாராட்டுவார்கள்.
பெரும்பாலான முட்டாள் பெண்கள் சிக்கலில் சிக்கிக்கொள்கிறார்கள், தங்கள் ஆசைகளை
நிறைவேற்றிக்கொள்வதற்காக விலங்குகளை மாட்டிக்கொள்கிறார்கள்.
இந்த விலங்குகளை உடைப்பதற்குச் சிலர் உருவாகுகிறார்கள்;
அவர்களும்கூட இந்தச் சிக்கல்களில் சில தடவைகள் வந்து வலையில் சிக்கிக்கொள்கிறார்கள் அல்லது சிலர்
வேறு வழியில் இந்தப் பொறியில் சிக்கிக்கொள்கிறார்கள்.
—-
(Courtesy The Game in Reverse Poems by Taslima Nasrin. Translated by Carolyne wright. George Brasiller Inc. Newyork)
- நெடுந்தீவு ஆச்சிக்கு
- நெருக்குவாரம் + சுவாரஸ்யம் = புனிதம்
- கார்ல் பாப்பரின் வெங்காயம்-7
- பிரக்ஞையின் தளங்கள் : மாண்டூக்ய உபநிடதமும் யூத கபாலாவும்
- டென்மார்க்கின் தனிப்பெரும் இலக்கியவாதி கிாிஸ்ாியன் அண்டர்சன்
- தன்னலக் குரலின் எதிரொலி
- சருகுகளோடு கொஞ்ச துாரம்
- சந்திரமுகி க(வ)லையா ? – அறியா விஷயம் ஆயிரம் புரியும்
- மெல்லக் கொல்லும் விஷங்கள் …
- அறிந்தும் அறியாத அண்டார்க்டிகா கண்டம் (9)
- கீதாஞ்சலி (19) பேராசைப் பிடியிலிருந்து விடுவிப்பு! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- தஸ்லிமா நஸ்ரீனின் பெண்ணியக் கவிதைகள் ( வங்கமொழியில்: தஸ்லிமா நஸ்ரீன் ) ஆங்கில மூலம்: கரோலின்ரைட்
- மழைக்குடை மொழி
- சிறுவாயளைந்த அமிர்தம்
- தூங்கலாமா தம்பி தூங்கலாமா… பேருந்தில்
- வாரம் ஒரு குறுங்கதை – ஈசல்கள்
- பெரியபுராணம்-37
- 21 ஆம் நூற்றாண்டு மரபணுவியலும் 18 ஆம் நூற்றாண்டு இனக்கட்டுமானங்களும்
- பாவேந்தரின் பதறல்கள்!
- கடந்த வரலாறும் கண்முன் விரியும் வரலாறும்:பயங்கரவாதம் வரிக்கும் சமாதானப் பாயிற் படுப்பவரெல்லாம் பாடையிற்போவர்! ( பகுதி:4)
- மீனம் போய் மேடம்
- தலைவர்களும் புரட்சியாளர்களும் – யாஸர் அராஃபாட்- பாகம் 1
- அனைத்துப் பிரச்னைகளுக்கும் ஆண்களே காரணம்
- கடப்பாரை
- அவர்கள் வரவில்லை
- மழலைச்சொல் கேளாதவர் ( அறிவியல் சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற கதை)
- கிருஸ்ணபிள்ளை
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா எழுதிய செயின்ட் ஜோன் நாடகத்தைத் தழுவியது)
- மரண வாக்குமூலம்