சொர்க்கம்

This entry is part of 47 in the series 20040624_Issue

சு.தேவன் மலர், சிங்கப்பூர்


விடைதேடும் வாழ்க்கையில்

உறவுகளை மறந்து

பொருள்தேடிப் பறந்ததால்

சொந்த பந்த பாசங்கள்

நெஞ்சின் ஓரத்தில்

நினைவுகளாய்…

காலங்கள் கரைந்தோட

தேடிவந்த தேவைகளில்

சிற்சில பூர்த்தியாக

அலைபாய்ந்த மனது

நிலை கொண்டு

நிழலாடும் நினைவுகளைப்

புரட்டிப் பார்க்க…

பூட்டிவைத்த பெட்டிக்குள்

மூடிவைத்த காகிதத்தில்

உறவுகளின் இடம் தேடி

ஒவ்வொன்றாய் கண்டுபிடித்து

தொலைபேசி வழியழைக்க

உண்மையோ, பொய்யோ

அன்பாய் சில வார்த்தைகள்

வந்து விழுந்த வேகத்தில்

ஒலிவாங்கியின் இருமுனையும்

சில நிமிடம் மெளனமாய்..

மகிழ்ச்சியில் திளைத்தமனம்

உரக்கச் சொன்னது

சொந்தங்கள் என்றும்

‘சொர்க்கம் ‘ தான் என்று!


chennai1980@yahoo.com

Series Navigation