முற்றுமென்றொரு ஆசை

This entry is part of 42 in the series 20030802_Issue

தமிழ்மணவாளன்


அதிகாலை கீழ்வானம்

வெளுக்கத் தொடங்குகிறது.

பாத்தீங்களா.. பாத்தீங்களா..

இத சும்மா விடப்போறதில்லே

நீங்க என்ன சொல்றீங்க

கண்டனம்.. கண்டனம்..

மன்னிப்புக் கேட்கனும்

இல்லாட்டி வருத்தம் சொல்லனும்

திட்டமிட்டு செஞ்சது.

அப்படியெல்லாமில்லே.

நீதான் அப்படி

ஞாபகமில்லியா போனவருஷம்

யாரு பேர் இருந்தாலும்

நீ தான் அது

எப்படி சொல்றே…

நீ தான் .. நீ தான் ..

நீ ஆளை வச்சு செஞ்சே..

யாருன்னே தெரியாது.

ருசுப்படுத்துவேன்

தஸ்தாவேஜு என்கிட்டே இருக்கு

என்கிட்டயுந்தான் இருக்கு

சொல்லட்டுமா

ஆயிரத்தி தொள்ளாயிரத்தி தொண்ணித்தி….

வீண்பேச்சு வேண்டாம்

மெரினா பீச்சுக்கு வர்ரியா

வர்ர சனிக்கிழமை

நான் ரெடி.. நீ ரெடியா

சவாலுக்கு பதிலென்ன

நேருக்கு நேர் விவாதிப்போம்

போனவருஷம் நீ செஞ்சப்ப

நல்லாருந்துச்சா….

அது தப்புன்னு சொன்னப்ப

நான் ஏத்துக்கிட்டேனே

இது தப்புன்னா

நானும் ஏத்துக்கிறேன்….

அப்படான்னா…..

அப்படான்னா…..

அதுக்கு இது சரியாப் போச்சு

இனி எதாச்சும் புதுஷா வந்தா

பார்ப்போம்.

அமைதி நிலவும் அழகான

அந்திப் பொழுது

முற்றும்.

—–தமிழ்மணவாளன்
tamilmanavalan@yahoo.co.in

Series Navigation