யெளவனம்

This entry is part [part not set] of 37 in the series 20100912_Issue

ப மதியழகன்


பால்யம் பறந்து சென்றது
இளமை உடலில் குடிகொண்டது
அதன் நறுமணம்
இளம் பருவத்தினரை
தன்பால் ஈர்த்தது
இயற்கையை மீறியெழும்
சக்தி உடல் முழுவதும்
நிரம்பியது
காண்பவையெல்லாம்
குதூகலமாய் இருந்தது
நடப்பவை எல்லாம்
கேளிக்கையாக இருந்தது
வேதனைகளும், வேடதாரிகளும்
அண்ட முடியாதபடி பெற்றோரின்
பாதுகாப்பு தெம்பைத் தந்தது
மாபெரும் பொக்கிஷம்
யெளவனம் என்பது
அதைக் கடந்த பிறகே தெரிந்தது
இளமையைத் தொலைத்து
துயரச் சுமை தாங்கியோரில்
ஒருவனாய் எனது காலம்
கழிந்தது.

Series Navigation

ப.மதியழகன்

ப.மதியழகன்

யெளவனம்

This entry is part [part not set] of 55 in the series 20031211_Issue

மாலதி


—————–
யாராவது ஒருவர் மீட்டுத்தாருங்கள்.
மீட்டுத்தாருங்கள் என் வெற்றுத்தாள்களை
வீணே நான் பறக்கவிட்ட என்
வெற்றுத்தாள்களை
மையிருந்தால் கோலின்றி கோலிருந்தால்
வெளிச்சமின்றி
இறைத்துப்பறக்கவிட்ட
என் வெள்ளைத்தாள்களை
சில மண்ணில் சில புழுதியில்
சில தண்ணீரில்
என்று வெறிதாய் இறைக்கப்பட்ட
என் வெள்ளைத்தாள்களை
இன்று என்னிடம் கோலுண்டு
மையுண்டு ஒளியுண்டு
படைத்துவிட இதயமுண்டு
எனக்கு என் தாள்கள் வேண்டும்.

யாராவது எனக்கு
மீட்டுத்தாருங்கள்
என்வெள்ளைத்தாள்களை
எழுதாமல் விடப்பட்ட என்
வெள்ளைத்தாள்களை.
=======================================
பெருந்தன்மை
—————-
மே மாத மத்தியில் உன்
பிறந்த நாள் வாழ்த்துக்களை
என் மிச்சங்களோடு
பருந்துகளுக்கிறைத்துவிட்டுக்
காத்திருந்தேன்

உன் பாதம் பருகிய
இந்த உதட்டுச் சாற்றில்
ரத்தம் கசிந்தால்
நான் என்ன செய்வேன் ?
உன் கண்ணிமை பட்டுக்
காம்புகள் நிமிர்ந்த
இந்தப்பெண்மையின்
வீச்சில் உன் கைவிரல்
தடங்கள்
துடைக்கத் துடைக்கக்
கலையாமல்
ரணங்களின் சீழ் நாற்றம் தேடி
உன் குரூரப்பறவையும்
வந்துவிடாதா என்று
காத்திருந்தேன்

தொலைபேசியின்
இருபுறமெளனத்தில்
என் ரத்தப்பிண்டங்கள்
எனக்கும்
உன் பிறந்தநாள்
உனக்கும்

மே மாத மத்தியை
முள் தாண்டிவிட்டது
———————————
(வரிக்குதிரை தொகுப்பிலிருந்து)
malti74@yahoo.com

ி

Series Navigation

மாலதி

மாலதி