மீள்தலின் இருப்பு

This entry is part [part not set] of 42 in the series 20110327_Issue

ஷம்மி முத்துவேல்


மறுப்புகள் தாங்கியே இருக்கும்
அவளது விழிகள்
விருப்புகள் போல காட்டிக்கொள்வதில்
மகா பிரயத்தனங்கள் செய்துக்கொள்வாள்

பொம்மலாட்ட கைகள் ஆட்டுவிக்க
ஆடுகிறாள் …நடனங்களை
உக்கிர நடனங்களில் மட்டுமே
தெரியும் அவளது உயிர்ப்பு …

காலக் கோள்கள் அசைத்து பார்த்தில்
அசைய மறுத்த அவள் பாதம்
விலங்கிடப்பட்டது …
புரட்சி பேசிய அவள் நாவு
துண்டிக்கப்பட்டது

இன்னும் இன்னும் என எதிர்ப்புக்கள்
வலுக்க
இப்போதெல்லாம் அவள்
மறுப்புகளை கண்களில் மட்டும்
தேக்கி கொண்டுவிட்டாள்..

மீட்புக்கென
அடைக்கப்பட ரௌத்தரம்
விழுங்கி தீர்த்தாள்..
ஆழிப்பேரலை என பொங்கி
காவு வாங்கியது …எண்ணற்ற மனிதங்களை ..

ஷம்மி முத்துவேல்

Series Navigation

ஷம்மி முத்துவேல்

ஷம்மி முத்துவேல்