முனைவர்,சி,சேதுராமன்
முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசிரியர்,
மா. மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
E. Mail: Malar.sethu@gmail.com
காஞ்சித்திணையின் பொருண்மைக் கூறுகளான இளமை நிலையாமை, செல்வம் நிலையாமை, யாக்கை நிலையாமை ஆகியன பற்றியும் இம் முப்பற்றுதலையும் விடுத்து உலகில் நிலைத்ததெனக் கருதப்படும் வீடுபேற்றை வலியுறுத்தும் மனப்பாங்கினையும் மாங்குடி மருதனார் வழி நாம் காணலாம்.
இளமை நிலையாமை
“பாங்கருஞ் சிறப்பின் பன்னெறி யானும்’’ என்ற தொல்காப்பியர்; கூறும் நிலையாமைக்கு உரை விளக்கந் தரும் இளம்பூரணர்; இளமை நிலையாமையையே முதற்கண் கூறுகின்றார்;. இளமை நிலையாமை பற்றி நாலடியார்,
“எனக்குத் தாய் ஆகியாள் என்னையீங் கிட்டுத
தனக்குத்தாய் நாடியே சென்றாள்- தனக்குத்தாய்
ஆகியவளும் அதுவானால் தாய்த்தாய்க் கொண்டு
ஏகும் அளித்திவ் வுலகு“ (நாலடியார், பா.எ.,15)
என்று கூறுகின்றார்;. மாங்குடி மருதனார்; இளமை நிலையாமையை,
“இருங்கடல் வான்கோடு புரைய வாருற்றுப்
பெரும்பின் னிட்ட வால்நரைக் கூந்தலர;
நன்னர்; நலத்தர், தொல்முது பெண்டிர்;
செந்நீர்;ப் பசும்பொன் புனைந்த பாவை
செல்சுடர்;ப் பசுவெயில் தோன்றி யன்ன
செய்யர், செயிர்;த்த நோக்கினர், மடக்கண்
ஐஇய கலுழு மாமையர்; வைஎயிற்று
வார்;ந்த, வாயர, வணங்குஇறைப் பணைத்தோள்
சோர்;ந்து உகுவன்ன வயக்குறு வந்திகை,
தொய்யில் பொறித்த சுணங்குஎதிர்; இளமுலை,
மைஉக் கன்ன மொய்இருங் கூந்தல்
மயில்இய லோரும் மடமொழி யோரும்,
கைஇ மெல்லிதின் ஒதுங்கிக் கைஎறிந்து
கல்லா மாந்தரொடு நகுவனர்; திளைப்பப்,
புடைஅமை பொலிந்த வகைஅமை செப்பில்
காமர்; உருவின் தாம்வேண்டு பண்ணியம்
கமழ்நறும் பூவொடு மனைமனை மறுக“
(மதுரைக்கா : 407-423)
என்று மதுரை நகரத்து மக்கள் வாழ்க்கை கொண்டு விளக்குகின்றார்;. திருக்குறள் கூறும்,
“நாளென ஒன்றுபோல் காட்டிஉயிர்; ஈரும்
வாளது உணர்;வார்;ப் பெறின்“
(திருக்குறள், குறள் எண், 334)
என்ற பாடற்கருத்தும் இளமை கழிவதன் கணக்கைக் கூறுவது – இளமை முடிந்து முதுமையாம் தன்மையைச் சுட்டுவது எண்ணிப் பார்;த்தலுக்குரியது.
செல்வம் நிலையாமை
அரசனுக்குக் கூறும் நிலையாமை பற்றிய நூல் மதுரைக்காஞ்சி ஆதலின் செல்வத்தின் நிலையாமையைப் போர்;த் தொழில் கொண்டு விளக்குவர்; நூலாசிரியர்;. தலையாலங்கானத்துப் பாண்டிய நெடுஞ்செழியன் தன் பகை நாட்டுச் செல்வங்களைக் கொள்ளையிட்டு, எரியூட்டி அழிப்பவனாகின்றான். அதனால் அவர்;தம் செல்வங்கள் அழிகின்றன; வளம் குறைகின்றன. இதனை,
“உறுசெறுநர்; புலம்புக்கு அவர்;
கடிகாவின் நிலை தொலைச்சி,
இழிபு அறியாப் பெருந்தண் பணை
குரூஉக் கொடிய எரி மேய,
நாடுஎனும்பேர்; காடுஆக,
ஆசேந்தவழி மாசேப்ப,
ஊர்; இருந்த வழிபாழ் ஆக,
……………………………….
……………………………….
கொழும்பதிய குடி தேம்பச்
செழுங்கேளிர்; நிழல்சேர்
நெடுநகர்; வீழ்ந்தகரி குதிர;ப் பள்ளிக்
குடுமிக் கூகை குராலொடு முரல
……………………………….
……………………………….
பாழ் ஆயின நின்பகைவர்; தேஎம்“
(மதுரைக்கா : 153-176)
“பணிந்தோர்; தேஎம் தம்வழி நடப்ப
பணியார்; தேஎம் பணித்துத் திறை கொண்மார்;’’
(மதுரைக்கா : 229 – 230)
என கூறுவதன் வழி செல்வ வளமை நிலையற்றது, அது அழிவதும் இடம் பெயர்;வதும் உடைய தன்மையது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்;. மேலும் செல்வமானது தீயொழுக்கத்தாலும் நிலையற்றதாவதை,
“மாயப் பொய்பல கூட்டிக் கவவுக் கரந்து
சேயரும் நணியரும் நலன்நயந்து வந்த
இளம்பல் செல்வர்; வளம்தப வாங்கி,
நுண்தாது உண்டு வறும்பூத் துறக்கும்
மென்சிறை வண்டினம் மான, புணர்;ந்தோர்“
(மதுரைக்கா : 570-574)
என்றும்,
“பழம்தேர்; வாழ்க்கைப் பறவை போல,
கொழுங்குடிச் செல்வரும் பிறரும் மோய“
(மதுரைக்கா : 576-577)
என்றுங் கூறுவதன் காரணம் பொருட்பெண்டிராம் பரத்தையர்; வழிச் சேரலிலும் செல்வம் அழிவாகும் தன்மையது என்பதை நன்குணரச் செய்துள்ளார்; மாங்குடிமருதனார்;. ஆசிரியரின் இக்கூற்று,
“துகள்தீர்; பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப் பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க
அகடுற யார்;மாட்டும் நில்லாது செல்வம்
சகடக்கால் போல வரும்“.
என்ற நாலடியார்; பாடற் கருத்துடனும்,
“ஆடலும் பாடலும் அழகுங் காட்டிச்
கருப்புநாண் கருப்புவில் லருப்புக்கணை தூவச்
செருக்கயல் நெடுங்கட் சுருங்குவலைப் படுத்துக்
கண்டோர்; நெஞ்சம் கொண்டகம் புக்குப்
பண்டேர்; மொழியிற் பயன்பல வாங்கி
வண்டிற் றுறக்கும் கொண்டி மகளிரை“
(மணிமே., காதை 18, பா.வரி;104-109)
எனும் மணிமேகலை கருத்துடனும் ஒப்பு நோக்குதற்குரியதாகும்.
யாக்கை நிலையாமை
யாக்கையினது நிலையாமை பற்றிக் கூறிய மாங்குடிமருதனார்,;
“பொய் அறியா வாய்மொழியால்
புகழ்நிறைந்த நல் மாந்தரொடு
நல்ஊழி அடிப்படர
பல்வௌ;ளம் மீக்கூற,
உலகம் ஆண்ட உயர்;ந்தோர்; மருக!“
(மதுரைக்கா: 19 – 23)
என பாண்டியனின் பரம்பரை பற்றி மொழிகிறார்;. பொய் அறியாச் சான்றோர்; சூழக் காலங்காலமாக நல்லாட்சி புரிந்தனர்; உன் முன்னோர்;. அவர்;கள் வழி வந்தவனே! நல்லோனே! எனத் தொடக்கத்திலேயே யாக்கையினது நிலையாமை குறிப்பாக வலியுறுத்தப்பட்டுள்ளது மதுரைக்காஞ்சியில்! காஞ்சித்திணையின் கருவாகக் கொண்டுள்ள,
“பருந்து பறக்கல்லாப் பார;வற் பாசறைப்
படுகண் முரசம் காலை இயம்ப
வெடிபடக் கடந்து வேண்டு புலத்து இறுத்த
பணைகெழு பெருந்திறல் பல்வேல் மன்னர்;
கரைபொருது இரங்கும் கனைஇரு முந்நீர்;த்
திரைஇடு மணலினும் பலரே உரைசெல
மலர்;தலை உலகம் ஆண்டு கழிந்தோரே!“
(மதுரைக்கா : 231-237)
என்ற பாடல்வரிகள் எண்ணாதோரையும் ஒரு கணம் நினைக்கச் செய்கின்றது நிலையாமைப் பொருள்தனை! மதுரைக்காஞ்சிக்கு விளக்கவுரை தந்த பொ.வே. சோமசுந்தரனார், ‘‘மக்கட்பிறப்பினை எய்தினோர்; அதனால் பெறற் பாலதாகிய வீடு பேற்றினை எய்திய வழியன்றி அப்பிறப்பான் உறுபயன் வேறின்றாகவும் நிலையாத இப்பொய்ப் பொருளை மெய்யாகக் கருதிப் பெரிதும் முயன்று அழிந்தனர்; என்று இரங்கியவாறு. எனவே இவையிற்றின் தன்மை இத்தகையதாகலின் நின்றுழி நில்லாது கானல்நீர்; எனத் தோன்றிக் கனவென மாயும் இப்பொருள்களிடத்தே பற்று வைத்து முயலுதல் அவம் செய்தலேயாம். இத்தகைய அவலம் நினக்குக் கெடுவதாக என்பது குறிப்பு. ‘‘இது மாற்றருங் கூற்றம் சாற்றிய பெருமை அன்றிப் பிறவியற் முயலாமையில் கழிந்தமை கூறிற்று’ என்பர்; நச்சினார்;க்கினியர்;. இத்தொடரே இந்நூலின் காஞ்சி கூறியதென்க. இதனால் இப்பனுவல் மதுரைக்காஞ்சி என்னும் பெயர்;த்தாயிற்றென்க’’ (பத்துப்பாட்டு ப.,77) என இதற்கு உரை வகுத்துள்ளார்;. (தொடரும்…..3)
- சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 16
- முள் பயணத்தினிடையே
- பூங்கொடியாய்
- செர்ன் விரைவாக்கி யந்திரத்தில் முதன்முதல் நிகழ்த்திய சிறிய பெரு வெடிப்புகள் (கட்டுரை -8)
- மதுரைக்காஞ்சியில் காஞ்சித்திணை (தொடர்ச்சி-2)
- இவர்களது எழுத்துமுறை – 15 ஆர்.கே.நாராயணன்
- யாப்பு உறுப்பு : கூன்
- படவிமர்சனம் – உறவு
- உடைந்த சூரியனும் நானும்…
- நரகத்தின் வாசல்
- தொலையும் சூட்சுமங்கள்
- மாய வலை
- மரமாக மனித வாழ்க்கை
- ஏவலர்கள் எஜமானர்களாய்
- யாதும் நலம்
- சொல்லத் தயங்கிய ஒன்று…!
- செல்லங்கள்
- துரோகம்…!
- பதிலைத்தேடும் கேள்விகள்..
- காதலுக்கினிய!
- ஞான வாழ்வு நல்கும் சச்சிதானந்த சற்குவருவின் பெருவழிப்பாதை
- பரிமளவல்லி 20. கிருமியின் தாக்குதல்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -4
- பராசக்தி ஏற்பாடு
- குழிவு
- தவிப்பு
- புனிதங்களின் பேரில் கற்பிதங்கள் – ரமீஸ்பிலாலியின் பதிவை முன்வைத்து
- அறிவியல் என்னும் வழிபாடு
- ஓம் ஒபாமா “ திரைப்பட அனுபவம்
- ஓபாம நமஹ!
- முள்பாதை 55
- மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்
- அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 6 Moral Fallout ஒழுக்கவிதிகளின் விளைவுகள்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)என்னை மயக்கியவள் கவிதை -37 பாகம் -1
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) சிறுவரோடு விளையாடும் ஞானி கவிதை -24 பாகம் -3
- எங்கே எடுத்து செல்வேன்?
- மழையே நீ பெண்தான் !!
- பள்ளங்களில் தேங்கும் உரையாடல்..
- கல்லா(ய்) நீ
- காதலனின் எதிர்பார்ப்புகள்